பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி தொழில்நுட்பங்கள் / ஊட்டசத்தினை உறுதிப்படுத்தும் சிறுதானிய சாகுபடி தொழிற்நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊட்டசத்தினை உறுதிப்படுத்தும் சிறுதானிய சாகுபடி தொழிற்நுட்பங்கள்

ஊட்டசத்தினை உறுதிப்படுத்தும் சிறுதானிய சாகுபடி தொழிற்நுட்பங்களை பற்றிய இங்கே காண்போம்.

அறிமுகம்

சிறுதானிய பயிர்களான கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு மற்றும் குதிரைவாலி ஆகியவை வறட்சி மற்றும் மாறிவரும் தட்ப வெப்ப நிலைகளைத் தாங்கி வளரக்கூடியவை. மேலும், இவை குறைந்த மண் வளம் உள்ள பகுதிகளிலும் வளர்ந்து, அதிக ஊட்டச் சத்துமிக்க உணவு பொருட்களை வழங்கக் கூடிய பயிர்களாகும். தமிழகத்தில் சிறுதானியங்கள் பயிரிடும் பரப்பளவு சமீப காலங்களில் குறைந்து வருகிறது. உதாரணமாக 1960-ஆம் ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் எக்டராக இருந்த சிறுதானிய உற்பத்தி பரப்பளவு தற்போது 7.73 லட்ச எக்டராக குறைந்துள்ளது.

பசுமைப் புரட்சியின் விளைவால் அரிசியும் கோதுமையும் பிரதான உணவாக மாறியதால் ஏற்பட்ட உணவு பழக்க வழக்க மாற்றம், விவசாயிகளின் நாட்டம் பணப்பயிர்களை நோக்கி திரும்பியது. குறைந்த விளைச்சல், குறைந்த விலை மற்றும் தானியங்களை பதப்படுத்தலில் உள்ள சிரமம் போன்ற காரணங்களினால் சிறுதானியங்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தேசிய அளவில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகமும், மாநில அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும் இணைந்து சிறுதானியப் பயிர்களில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளின் விளைவாக பல சிறந்த புதிய இரகங்களையும், சாகுபடித் தொழில் நுட்பங்களையும் உழவரின் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது. இத்தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதின் மூலம் சிறுதானியங்களின் விளைச்சல் திறனை அதிகரிக்க முடியும்.

கேழ்வரகு

பருவம்

இறவையாக மார்கழி (டிசம்பர்- ஜனவரி), சித்திரை (ஏப்ரல் - மே) பட்டங்களிலும் மானாவாரியாக ஆடி (ஜூன் - ஜூலை). புரட்டாசி பட்டங்களிலும் பயிரிடலாம்.

உயர் விளைச்சல் இரகங்கள்

  • கோ (ரா) 14
  • பையூர் 2
  • கோ 15

விதையளவு மற்றும் இடைவெளி

நாற்றாங்கால் முறையில் பயிரிட எக்டருக்கு ஐந்து கிலோ விதையளவும் நேரடி விதைப்பிற்கு பத்து முதல் பதினைந்து கிலோ விதையளவும் தேவைப்படுகிறது. நாற்றங்கால் பாசனத்திற்கு ஏற்ப பாத்திகளின் அளவு 10 முதல் 20 அடி வரையும், பாத்திகளின் இடைவெளி 30 செ.மீ. வரையும் இருக்கலாம்.

விதை நேர்த்தி

குலை நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கலவையை கலந்து விதைக்க வேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சத பொட்டாசியம் குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎய்எம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

பொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை எக்டருக்கு முறையே 60 - 30 - 30 கிலோ இட வேண்டும். விதைக்கும் போதே அடியுரமாக மணி, சாம்பல் சத்துக்களை முழுவதுமாக இட வேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதி அளவு இட்டு, மீதமுள்ளதை சரிபாதியாகப் பிரித்து மேலுரமாக இருமுறை இட வேண்டும். பருவ மழை சரியாக இல்லாத காலங்களில் தழைச்சத்து 50 விழுக்காட்டையும் மேலுரமாக இடலாம்.

களை மேலாண்மை

விதைத்த அல்லது நாற்று நட்ட 18-ஆம் நாள் ஒரு களையும், 45-ஆம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும் அல்லது ஒரு எக்டருக்கு இரண்டு லிட்டர் பூட்டாகுலோரலின் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணிருடன் கலந்து நாற்று நட்ட மூன்றாம் நாள் கை தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

குலை நோயைக் கட்டுப்படுத்த ட்ரைகிளசோல் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். தண்டுத் துளைய்பானைக் கட்டுப்படுத்த 4 - 1 என்ற விகிதத்தில் தட்டை பயறை ஊடு பயிராக விதைத்தல் வேண்டும்.

சாமை

உயர் விளைச்சல் இரகங்கள் - கோ (சாமை) 4

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் சாமையை பயிரிடலாம்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 7.5 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 15 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

விதை நேர்த்தி

ஒரு எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 எக்டருக்கு 2கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சத பொட்டாசியம் குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎய்எம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் நுண்ணுரட்டக் கலவை 12.5 கிலோவை அடியுரமாக இட வேண்டும். மேலும், விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி 20 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இடவேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

பெரும்பாலும் சாமை பயிரை பூச்சிகள் தாக்குவதில்லை என்றாலும் சில சமயங்களில் குருத்து ஈ சாமையைத் தாக்கி அழிக்கின்றது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த விதைப்பை தள்ளிப்போடாது பருவ மழை தொடங்கிய உடனே விதைக்கலாம்.

தினை

உயர் விளைச்சல் இரகம் - கோ (தி) 7

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் தினையை பயிரிடலாம்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 15 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

விதை நேர்த்தி

எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 எக்டருக்கு 2கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சதவிகித குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎய்எம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

விதைப்பின் போது 20 தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் நுண்ணுரட்டக் கலவை 12.5 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்து விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

பெரும்பாலும் இந்த பயிரை பூச்சிகள் தாக்குவதில்லை.

குதிரைவாலி

உயர் விளைச்சல் இரகம் - கோ (கேவி) 2

பருவம்

இறவையாக சித்திரை, ஆடி, மார்கழிப் பட்டங்களிலும், மானாவாரியாக ஆடி, புரட்டாசி பட்டங்களிலும் குதிரைவாலியை பயிரிடலாம்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 15 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

விதை நேர்த்தி

ஒரு எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 எக்டருக்கு 2கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சத குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎய்எம் பொட்டாசியம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

விதைப்பின் போது 20 கிலோ மணிச்சத்து, 20 கிலோ தழைச்சத்து மற்றும் நுண்ணுட்டக் கலவை 12.5 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

இந்த பயிரை பொதுவாக பூச்சிகளும், நோய்களும் தாக்குவதில்லை. ஆதலால் பயிர்ப் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை

வரகு

உயர் விளைச்சல் இரகம்

கோ 3.

பருவம்

ஆடி, புரட்டாசி பட்டங்களில் வரகை மானாவாரி பயிராக பயிரிடலாம்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 15 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

விதைநேர்த்தி

ஒரு எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 எக்டருக்கு 2கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சதவிகித பொட்டாசியம் குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎய்எம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

விதைப்பின் போது 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் நுண்ணுட்டக் கலவை 12.5 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகளும் நோய்களும் தாக்குவதில்லை. ஆதலால் பயிர்ப் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பனிவரகு

உயர் விளைச்சல் இரகம் - கோ (பிவி) 5

பருவம்

ஆடி மற்றும் புரட்டாசி பட்டம் ஏற்ற பருவமாகும்.

வறட்சி மேலாண்மை

வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் ஒரு சதவிகித பொட்டாசியம் குளோரைடு அல்லது 1 சதவிகித பிபிஎய்எம் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

விதைப்பின் போது 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் நுண்ணுட்டக் கலவை 12.5 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 நாட்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகளும், நோய்களும் தாக்குவதில்லை. ஆதலால் பயிர்ப் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 7.5 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம்.

விதையளவு

வரிசை விதைப்பிற்கு ஒரு எக்டருக்கு 10 கிலோ விதையும், தூவுவதற்கு ஒரு எக்டருக்கு 12.5 கிலோ விதையும் தேவைப்படுகிறது.

விதைநேர்த்தி

ஒரு எக்டருக்கு 600 கிராம் அஸோபாஸை தேவையான அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு கிலோ அஸோபாஸை 25 கிலோ மணல் மற்றும் 25 எக்டருக்கு 2கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

தற்போது சிறுதானியங்களில் உள்ள சத்துப் பொருள்கள் பற்றியும் அவற்றின் நன்மைகள பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் இனிவரும் காலங்களில் இவற்றின் தேவை மேலும் அதிகரிப்பதோடு அவற்றின் விலை உயரக்கூடிய வாய்ப்பு உள்ளதால் சிறுதானிய பயிர்களை உழவர் பெருமக்கள் சாகுபடி செய்து பயன் பெறலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.95454545455
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top