பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தோட்டக்கலைப் பயிர் உற்பத்தி சாகுபடி

தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை பெருக்க வேண்டிய நடைமுறைகள்

நடைமுறைகள்

 1. தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்கவும் தினசரி மற்றும் நிலையான வருமானத்தை பெறவும் தோட்டக்கலைத்துறை மூலம் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்து உற்பத்தியை பெருக்கி அதிக வருமானம் பெறலாம்.
 2. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத் திட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மாநில, மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்
 3. இத்திட்டத்தின் மூலம் மா அடர் நடவுக்கு ஹெக்டேருக்கு ரூ. 9840, மா தீவிர அடர் நடவுக்கு ஹெக்டேருக்கு ரூ. 26,880.
 4. கொய்யா அடர் நடவு ஹெக்டேருக்கு ரூ. 17,592. முந்திரி இயல்பான நடவு ஹெக்டேருக்கு ரூ. 12,000.
 5. திசு வளர்ப்பு வாழை சாகுபடிக்கு முதலாண்டில் ரூ. 30,750. வீரிய ஒட்டு ரக காய்கறிகள் ஹெக்டேருக்கு ரூ. 20,000.
 6. மிளகாய் பரப்பு விரிவாக்கம் ஹெக்டேருக்கு ரூ. 12,000. தென்னையில் ஊடு பயிராகக் கோகோ நடவு ஹெக்டேருக்கு மானியம் ரூ. 12,000.
 7. மா பழைய தோப்புகளை புனரமைக்க ஹெக்டேருக்கு மானியம் ரூ. 20,000.
 8. நிழல் வலை கூடம் அமைக்க மானியம் ரூ. 355 சதுர மீட்டர், பசுமைக் குடில் அமைக்க ரூ. 468 சதுர மீட்டர் முதல் 1000 சதுர மீட்டர் வரை, நிலப் போர்வை - பாலித்தீன் விரிப்புகள் அமைக்க ஹெக்டேருக்கு ரூ. 16,000. இயந்திரமயமாக்குதல் இனத்தில் 20 எச்பி குதிரை திறனுக்கு குறைவு மற்றும் பவர் டில்லர் 20 எச்பி -க்கு குறைவாக உள்ளதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய நீடித்த வேளாண் இயக்கம் - பண்ணை சார்ந்த நீர் மேலாண்மை

நுண்ணிய நீர்ப்பாசனம் அமைக்க குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும், நுண்ணீர் பாசனம் அமைக்க நிலம், நீர் ஆதாரம், அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். ஒரு விவசாயி அதிகபட்சமாக 5 ஹெக்டேர் வரை மானியம் பெற முடியும்.

மானாவாரிப் பகுதி மேம்பாடு

விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களுடன் தோட்டக்கலைச் சார்ந்த பண்ணையம் அமைக்க 50 சத மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 2 ஹெக்டேர் வரை மானியம் பெறலாம். ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25,000 மானியத்தில், நடவுப் பொருள்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், காய்கறி விதைகள், உரங்கள் இடைநிலைச் செலவுகள் ஆகியவைகள் வழங்கப்படுகிறது.

தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கத் திட்டம்

அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 2 ஹெக்டேர் வரை மானியம் அளிக்கப்படும். கண்வலிக் கிழங்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 68,750. மருந்து கூர்க்கன் கிழங்கு (கோலியஸ்) ஒரு ஹெக்டேருக்கு ரூ. 8,600. பெருநெல்லி ஒரு ஹெக்டேருக்கு ரூ. 8,600 மானியம், பின்னேற்பு மானியம் அதாவது விவசாயி சாகுபடி செய்தவுடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

தேசிய மூங்கில் இயக்கம்

முள்ளில்லா மூங்கில் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் முள்ளில்லா மூங்கில் தோட்டங்கள் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ. 5,260 மானியம் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு 2 ஹெக்டேர் வரை மானியத் தொகை, பின்னேற்பு மானியமாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

பெருநகர காய்கறி வளர்ச்சிக் குழுமத் திட்டம்

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் உற்பத்திக் குழுக்கள் அமைத்தல், குழுக்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல், திறந்தவெளி காய்கறி சாகுபடி செய்தல், பசுமைக்குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்தல், நிழல் வலைக் கூடம் அமைத்து காய்கறி சாகுபடி செய்தல், உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளைச் சேகரித்து வைக்க சேமிப்புக் கூடம் வாடகைக்கு அமர்த்துதல், சேமித்து வைத்த காய்கறிகளை வெளிச்சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்திட குளிரூட்டப்பட்ட வாகனங்கள் போன்ற இனங்கள் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளன.

தேசிய நீடித்த வேளாண்மை இயக்கத் திட்டம்

 1. தோட்டக்கலைப் பயிர்களில் அங்கக வேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் நன்மை பயக்கும் வகையில் குறைந்த செலவில் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து நஞ்சில்லா கிராமம் அல்லது அங்கக கிராமத்தை தொகுப்பு முறையில் தேர்வு செய்து ஒரு கிராமத்துக்கு 50 ஏக்கர் (20 ஹெக்டேர்) பரப்பளவுக்கு மாவட்டத்திலிருந்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
 2. இத்திட்டத்தின் மூலம், பயிர் தேர்வு, பயனாளிகள் தேர்வு, குழுக்களாகப் பிரித்தல், கூட்டங்கள் நடத்துதல், இயற்கை அங்கக வேளாண்மை செய்துள்ள வயல்களுக்கு கற்றறிவுப் பயணம் மேற்கொள்ளுதல், அங்கக வேளாண்மையில் பயிற்சி அளித்தல், மண் ஆய்வு செய்தல், பயிர் சாகுபடிக்கான இயற்கை சார்ந்த இடுபொருள்கள் வழங்குதல், அதனை அந்த சூழலில் உள்ள அனைத்து விவசாயிகளும் கடைப்பிடிக்கச் செய்தல், செயல்பாடுகள் அனைத்தையும் பதிவு செய்து அங்ககச் சான்று பெறுதல், விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் முதலியவற்றை மக்கள் பங்கேற்பு இயக்கமாக மாற்றி சான்றிதழ் பெறும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
 3. தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிக்கு உகந்த மாவட்டமாகத் திகழ்கிறது.
 4. மொத்த சாகுபடி பரப்பில் சுமார் 27 சதவீதப் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அதில் பழப் பயிர்கள் 5,221 ஹெக்டேரிலும், காய்கறிப் பயிர்கள் சுமார் 2,049 ஹெக்டேரிலும், மலர் வகைப் பயிர்கள் 750 ஹெக்டேரிலும், வாசனைத் திரவியப் பயிர்கள் 634 ஹெக்டேர் பரப்பிலும், மலைத் தோட்டப் பயிர்களான முந்திரி 15,283 ஹெக்டேர் பரப்பிலும் மற்றும் மூலிகை வகைப் பயிர்கள் சுமார் 42 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை

2.89830508475
devaraaaj Jul 16, 2019 02:46 PM

தேவையான விபரங்கள் . நன்றி

வெங்கடேஷ் Mar 11, 2017 01:00 PM

வணக்கம் நான் எனது வீடு மாடியில் வீடுக்கு தேவயான காய் கறிகளை உற்பத்தி செய்ய வலி முறைகள் சொலுங்கள் எனது [ ஈமெயில் id : *****@gamil.com ]

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top