பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / காய்கறிப் பயிர்கள் / பழவகை காய்கறிகள் / முருங்கை / முருங்கையில் உற்பத்தியை அதிகரிக்க உயிர் உரங்களின் பயன்பாடு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முருங்கையில் உற்பத்தியை அதிகரிக்க உயிர் உரங்களின் பயன்பாடு

முருங்கையில் உற்பத்தியை அதிகரிக்க பயன்படுத்தும் உயிர் உரங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

உரங்கள் செடியின் மேற்பரப்பிலோ அல்லது மண்ணிலோ இடும் பொழுது செடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உயிர் உரங்கள் சுற்றுச்சூழலில் உள்ள நைட்ரஜனை, மண்ணில் நிலைப்படுத்துவதன் மூலமாக செடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மண்ணில் அதிகமாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்து போன்ற சத்துக்கள் இருந்தாலும் அவை உடனடியாக செடிகளுக்கு கிடைப்பதில்லை. உரமிட்ட பின், செடிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை எதிர்த்து தழைச்சத்தைப் பெற வேண்டியுள்ளது. உயிர் உரங்கள் வேதியியல் உரங்களின் அளவை குறைத்து, மண்ணின் ஊட்டச்சத்து அளவை பாதுகாத்து, இயற்கை வளத்தை மேம்படுத்துகிறது. உயிர் உரங்கள் செடிகள் மற்றும் மண் வளத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. காற்றில் 80 சதவீதம் தழைச்சத்து உள்ளது. இந்த சத்து முழுவதுமாக செடிகளுக்குக் கிடைப்பதில்லை. ஏனெனில் அவை செடிகளால் உட்கொள்ளப்பட முடியாத நிலையில் இருக்கிறது. சில வகையான பாக்டிரியாக்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணிற்கு கொண்டு வரும் வல்லமையைப் பெற்றுள்ளது. இவை சுற்றுச்சூழலைப் பொருத்தும் மற்றும் அங்குள்ள நுண்ணுயிரிகளைப் பொருத்தும் அமையும். உயிர் உரங்கள் தழைச்சத்து ஆவியாவதைத் தடுக்கிறது. அசோஸ்பைரில்லம் இவற்றிற்கு உறுதுணையாக இருக்கிறது. ஒரு கிராம் உயிர் உரத்தில் 109 செல்கள் உள்ளன. இது தழைச்சத்தை மண்ணில் நிர்ணயித்து, மகசூலை 30 சதவீதம் வரை அதிகரிக்க உதவி செய்கிறது. பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டிரியா தழைச்சத்துக்கு அடுத்தபடியாக மணிச்சத்து ஊட்டச்சத்துக்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மணிச்சத்து இயற்கையிலேயே மண்ணில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் செடிகளுக்கு இவை நேரடியாகக் கிடைப்பதில்லை. மணிச்சத்தைக் கரைத்து, செடிக்கு கிடைக்கும் படி செய்து மேலும் இவற்றை அதிகப்படுத்துவது இந்த வகையான பாக்டிரியாக்களின் முக்கிய செயலாகும். பொதுவாக இவ்வகையான அனைத்து பாக்டிரியாக்களும் பேசில்லஸ் மற்றும் சூடோமோனாஸ் வகையைச் சார்ந்தது. இவை ஒரு கிராமில் 109 செல்களைப் பெற்றுள்ளன. இதன் மூலம் 25 சதவீதம் மணிச்சத்து, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே உபயோகிக்கப்படுகிறது.

அர்பஸ்குலார் மைக்கோரைசல்

பூஞ்சை முருங்கையில் அதிக மகதலைத் தரும் மற்றொரு உயிர் உரம் அர்பஸ்குலார் மைக்கோரைசல் ஆகும். இதன் மூலம் பாஸ்பரஸ் சத்து கிடைக்கிறது. செடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இது மண் வளத்தை நல்ல காற்றோட்டத்தின் மூலமாகவும், தண்ணீரின் மூலமாகவும் அதிகப்படுத்துகிறது. இவற்றை வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு உரமாக இடலாம்.

ஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

3.01526717557
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top