பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கி

 1. கிரிஷி அட்டை

கிராமப்புற வளர்ச்சிக்கும் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த துறைக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி நிறைய பங்கு வகித்துள்ளது. விவசாயத் துறைக்கு என்றே விவசாயிகளுக்கு கடன் வழங்க நிறைய கடனுதவிகளை வழங்கியுள்ளது.

தேவை

1. விவசாயத் தேவைகள், வீட்டுத் தேவைகளான கல்வி, உணவுப் பொருட்கள், மருத்துவச் செலவுகள் ஆகியவற்றிற்கு சிறுதவனை முதலீட்டுப் பணம் வழங்குதல்.

2. விவசாயிகளுக்கு தவணைக் கடன் தேவைகள் மற்றும் நிறுவணம் அல்லாதோரிடம் கடன் வாங்கியிருப்பின் அவர்களுக்கும் வழங்கப்படும்

தகுதி

படித்த அல்லது படிக்காத முற்போக்கு விவசாயிகள் மற்றும் சொந்த நிலம் வைத்திருப்போர், நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள், அதற்கு ஏற்ற பதிவுகள் மற்றும் பாரம்பரிய சொத்து அதில் விவசாயம் செய்ய தகுதியுடையவர்கள், வாய்வழியே பேசி குத்தகைக்கு நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அந்த நில உரிமையாளரின் ஒத்துழைப்புடன் பெறலாம். அவ்வாறு வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் சுய உதவிக்குழுக்களாக இருப்பின் அவர்களுக்கும் கிசான் கடன் அட்டை பெற தகுதியுடையவர்.

விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி செய்வதற்கு கடன் வழங்கும் திட்டம் - பயிர்கடன்

தேவை

பயிர் உற்பத்திக்கு இடுபொருள் வாங்குவது

தகுதி

சுயமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள், உரிமையுடன் நிலம் வழங்கப்பட்ட விவசாயிகள், மற்றும் பரம்பரைச் சொத்து / உரிமை உள்ள விவசாயிகள்

கடன் அளவு

தேவைக்கு ஏற்ப மற்றும் நிதியின் அளவைப் பொருத்து.

PNB கிரிஷி அட்டை கீழ் நிதியளித்தல் திட்டம்

இசான் கிரெடிட் கார்டு:

தேவை

விவசாய வேலைகளுக்கு சிறுதவணை முதலீட்டுப் பணத் தேவைகளுக்கு நிதியளித்தல்

தகுதி

படித்த மற்றும் படிப்பறிவு இல்லாத முற்போக்கு விவசாயிகள்

கடன் அளவு

அதிகபட்சமாக ரூ.10 லட்சம

விவசாயிகளுக்கு ஒட்டுமொத்த கடன் அளவு திட்டம்

தேவை

பண்ணை இடுபொருட்கள் தேவைகளை வாங்குவதற்கு

தகுதி

விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும்

குணாதிசயம் மற்றும் அதன் வசதிகளின் அளவு

தேவைகளுக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.5000

கடனைத் திருப்பிச் செலுத்துதல்

வருட திறனாய்வுடன் அதிகபட்ச அளவு 3 வருடம் விற்பனை செய்யும் பொருட்கள் அனைத்தும் ஒட்டுமொத்த கடன் கணக்கில் சேர்க்கப்படும். வரவு நிலுவையில் வாடிக்கையாளர் வருடத்திற்கு ஒருடமுறை ஒட்டுமொத்த கடன் அளவுகளின் கீழ் அனைத்தையும் திருப்பி செலுத்துதல் வேண்டும். 3 வருடத்திற்கு ஒருமுறை செய்யும் பகுதிக்கு இது பொருந்தாது.

விவசாயிகளுக்கு பேக்கேஜ் கடன் திட்டம் (PNB கிசன் சம்பூரன் ரின் யோஜனா)

தேவை

விவசாயம் மற்றும் இதர வேலைகள் செய்யும் விவசாயிகள், சேமிப்பு, பின்செய் நேர்த்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருள் ஆகியவற்றிற்கும் கடன் வழங்கப்படுகிறது.

தகுதி

சொந்த விவசாயம் செய்யும் விவசாயிகள், நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள விவசாயிகள், பாரம்பரிய சொத்து உரிமை உடைய விவசாயிகள் இதற்குத் தகுதியானவர்கள்.

கடன் அளவு

தேவையைப் பொருத்து விவசாயி அனைத்து வேலைகளையும் உள்ளடக்கிய ஒரு வரை திட்டத்தை கொண்டு வருதல் வேண்டும்

PNB கிசான் இச்சா புரீடி யோஜனா

தேவை

உற்பத்தி மற்றும் முதலீட்டுக் கடன் தேவைகளுக்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வேலைக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

தகுதி

விவசாய நிலத்தின் மீது அடகு வைத்து தொடர்ந்து பண்ணைத் தேவைகளுக்கு கடன் பெறும் விவசாய சொந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும்

கடன் அளவு

கடன் அளவு மிக குறைவான அளவிலான

50% - அடமானம் வைக்கும் நிலத்தின் மதிப்பு

அல்லது

விவசாயத்திலிருந்து வரும் வருவாயில் 5 மடங்கு சராசரி 2 ஆண்டு வருவாய்.

தங்க ஆபரணங்களுக்கு நகைக்கடன், தேசிய சேமிப்புச் சான்றிதழ், நிலையான வைப்புத் தொகை இரசீதுகள், விவசதயிகளுக்கு கிசான் விகாஸ் பத்திரம்

தேவை

விவசாயிகளுக்கு தங்க நகைகள், ஆரணங்கள், வைப்புத் தொகை, தேசிய சேமிப்புச் சான்றிதழ், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றை வங்கி ஏற்றுக் கொள்ளும்.

தகுதி

விண்ணப்பதாரர் விவசாயியாக இருத்தல் வேண்டும்

கடன் அளவு

கடன் அளவு விவசாய கடன் அளவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவைப் பொருத்து வழங்கப்படும்

பழம் / உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு குளிர்பதன கிடங்கில் சேமித்த இரசீது வைத்து நிதியளிக்கும் திட்டம்

தகுதி

உருளைக்கிழங்கு மற்றும் பழப்பயிர் விவசாயிகள் சொந்தமாகவோ அல்லது நிதி உதவி வங்கியில் பெற்று செய்து வரும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

கடன் அளவு

அதிகபட்சமாக ரூ.25000

பொருட்களை விற்பதற்கான கடன் திட்டம்

தேவை

சிறு கடன் தவணை தேவைகளை சரி செய்யவும், நிலுவையில் உள்ள பயிர்க்கடன் திருப்பிச் செலுத்தும் / KCC அளவை வங்கியில் இருந்து பெற்றுள்ள விவசாயிகள், மற்றும் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்க செய்வது மற்றும் அதை நல்ல விலைக்கு விற்று லாபம் அடைவது.

தகுதி

பயிர்கடன் பெற்றுள்ள விவசாயிகள் / KCC வசதிகள் / வங்கியில் இருந்து பெறப்படும் ஒட்டுமொத்த கடன் அளவு அந்த பயிருக்கு மட்டும் அந்தப் பருவத்தில் பெறுமாறு செய்வது மற்றும் திருப்பிச் செலுத்தும் கடன் தவணை காலாவதி அடைய கூடாது.

பண்ணை இயந்திரமாக்கல் திட்டம்

பண்ணை இயந்திரம் வாங்குவதற்கு நிதி அளிக்கும் திட்டம் மற்றும் உழவு உந்து பவர் டில்லர்கள் பழுது பார்த்தல் / புறணமைத்தல்

தேவை

புதிய உழவு உந்து மற்றும் அதன் உபகரணங்கள், புதிய பவர் டில்லர்கள், இரண்டாம் தர உழவு உந்து மற்றும் உபகரணங்கள், விவசாய இயந்திரங்கள் பழுது பார்த்தல் / புறணமைத்தல்.

தகுதி

உழவு உந்து

குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் வருடம் முழுவதும் பாசன விவசாய நிலம் சொந்தமாகவோ அல்லது குழுவாக வவிசாயிகள் இணைந்து வாங்குவோர் அல்லது குத்தகைக்கு எடுத்தல்.

கடன் அளவு

தேவைக்கேற்ப கடன்

விவசாயிகளுக்கு இரண்டாம் தர / பயன்படுத்திய உழவு உந்து வண்டி வாங்க நிதியளித்தல் திட்டம்

தேவை

தகுதியான விவசாயிகளுக்கு இரண்டாம் தர உழவு உந்து வண்டி வாங்க நிதியளித்தல்.

தகுதி

குறைந்த பட்சம் 2.5 ஏக்கர் வருடம் முழுவதும் நீர் பாசனம் கொண்ட நிலம் மற்றும் சொந்த நிலம் அல்லது கூட்டு நிலம் மற்றும் பொருளாதார சூழல் ஆராய்ந்து பார்த்து பின் அது வழங்க வேண்டும்.

கடன் அளவு

இரண்டாம் தர உழவு உந்து வண்டி மற்றும் மூன்று உபகரணங்கள் அதில் டிரெய்லர் சேர்த்து ரூ.1,50,000 - க்குள் வருமாறு இருத்தல் வேண்டும்.

சுய இழுவை மற்றும் அறுவடை செய்யும் இயந்திரம் வாங்க நிதியளித்தல் திட்டம்

தேவை

அறுவடை மற்றும் நெல் அடித்தல் இரண்டிற்கும் சேர்த்து நிதியளிக்கும் திட்டம்

தகுதி

விவசாயிகள் விண்ணப்பதாரர் கூட்டு அறுவடை இயந்திரத்தை பராமரித்து அதை ஓடச்செய்தல் வேண்டும் அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் அளவிற்கு திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.

கடன் அளவு

தேவைக்கு ஏற்ப.

டிரக் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் வாங்க விவசாயிகளுக்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

புதிய டிரக் மற்றும் புதிய மோட்டர் இலகு / மிதமான வாகனங்கள் வாங்க கடனளித்தல்.

தகுதி

 • சுயமாக நிலம் வைத்திருப்போர், நிலத்தை வாடகைக்கு எடுத்து செய்யும் விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் விவசாய இடுபொருள், பண்ணைப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கு நிதியளித்தல்
 • 5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே டிரக் வாங்குவதற்கு நிதியளிக்கப்படும்

கடனின் குணாதிசயம்

தவணைக் கடன்

நுண்ணீர் பாசனத்திற்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

பம்புசெட் வாங்குதல், கிணறு வெட்டுதல், ஆழப்படுத்துதல், பழுதுபார்த்தல், ஆழ்குழாய் கிணறுகள், ஆழமான குழாய் கிணறுகள், பெர்சியன் சக்கரம் நிறுவுதல், தெளிப்பான்கள், சொட்டுநீர் பாசனம், தண்ணீர் தொட்டி, பண்ணை வாய்க்கால் அமைத்தல், பைப்லைன்கள் பி.வி.சி.பைப், MS பைப்புகள், GI வளைவுகள், எண்ணெய் விசைப்பொறி, டிராலியில் பம்புசெட்கள் அமைப்பது, சைக்கிளில் டீசல் பம்புசெட், உறிஞ்சும் உபகரணத்தை மாற்றியமைத்தல், பம்புசெட்டுகளுக்கு ஜெனரேட்டர், விவசாய தேவைகளுக்காக, உறிஞ்ச நீர் பாசனம் மற்றும் இதர வேலைகள்.

தகுதி

1. நுண்ணீர் பாசன நீர் திட்டத்தை ஒரு விவசாயி தொடங்க குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் நிலம் வேண்டும். திட்டம் தொழில்நுட்ப வகையிலும் பொருளாதார வகையிலும் லாபகரமாக இருத்தல் வேண்டும்.

2. குழு நிதியகம் - சமுதாய திட்டம்: சிறு மற்றும் குறு விவசாயிகள் குழுவாக அல்லது சமுதாய சிறு பாசன திட்டங்கள் ஆகியவற்றிற்கும் நிதியளிக்கப்படும்.

கடன் அளவு

தேவைக்கேற்ப.

தோட்டக்கலை மேம்படுத்துவதற்கு நிதியளிக்கும் திட்டம் (பழம், பூ, மற்றும் காய்கறி) மற்றும் மலைப்பயிர்கள்

தேவை

புதிய பழத்தோட்டம், மலைப்பயிர்கள், மருத்துவப்பயிர்கள், அழுகுப் பயிர்கள், நறுமணப் பயிர்கள், காய்கறிகள், தோட்டக்கலைப் பயிர்களில் ஊடுபயிர், வர்த்தக கடன்களான தரம்பிரித்தல், அனுப்புதல் மற்றும் போக்குவரத்துச் செலவுகள்.

தகுதி

தனிப்பட்ட விவசாயி / குழுவாக விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட நில அளவு வைத்திருத்தல் வேண்டும்.

கடன் அளவு

நிதியின் அளவைப் பொருத்து முதலீட்டுத் தொகையின் கடன் வேறுபடும். விற்பனைக் கடன் இதில் எடுத்துக் கொண்டால் இதற்கு கணக்கிடப்பட்ட பயிர் மதிப்பில் 20% அதிகரிக்கக் கூடாது.

வன மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

தவனை கடன் வழங்கி நாற்றாங்கல் மேம்பாடு, மலைப் பயிர்கள் மற்றும் வன மரங்கள் ஆகியவற்றை அறுவடை வரை மேம்படுத்த வேண்டும்.

தகுதி

விவசாயிகள்

கடன் அளவு

தேவைக்கு ஏற்ப

தரிசுநில மேம்பாட்டுக்கு நிதியளிக்கும் திட்டம் (மரபட்டா திட்டமும் சேர்ந்தது)

தகுதி

விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், பஞ்சாயத்து / மற்ற துறைகள் சமுதாய நிலம் போன்றதொரு அமைப்புகள்.

தரிசு நில மேம்பாட்டுக்கு அளவு உதவி தொகை திட்டம்

தகுதி

மாநில அரசு கழகங்கள், நகர மேம்பாட்டு அமைப்புகள், பொதுத்துறை சார்ந்த நிறுவனம், மற்றும் பாதி அரசு நிறுவனம்.

முதலீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வனம் இல்லாத வறண்ட நிலங்களை மேம்படுத்துதல்

தகுதி

தனிப்பட்ட சுயதொழில் முனைவோர் மற்றும் தனி / விவசாயிகள் குழு, மாநில மற்றும் மத்திய அரசு எடுத்து நடத்தும் நிறுவனம், கூட்டுறவு நிறுவனம், பொது அறக்கட்டளை மற்றும் சங்கங்கள், சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பொது நிறுவன அமைப்புகள் நிறுவன விதியின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

விவசாய மருந்தகம் மற்றும் விவசாய தொழில்துறை நிலையம் (ACABC) அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

வேளாண் பட்டதாரிகள் கொடுக்கும் பொருளாதார ரீதியிலான மேம்பாடு அடையும் திட்டங்களுக்கு வங்கி நிதியுதவி அளிக்கும்.

 1. மண் மற்றும் நீர் தரம் மற்றும் கட்டுப்பாட்டு சேவைகள்
 2. பூச்சி இருப்பு ஆராய்தல் மற்றும் கட்டுப்பாட்டு சேவைகள்
 3. விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள், தெளிப்புநீர், சொட்டு நீர் உபகரணம் ஆகியவற்றை பராமரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் வாடகைக்கு எடுத்தல்
 4. வேளாண் சேவை நிலையம் - மேற்குறிப்பிட்ட மூன்றும் சேர்த்து (குழு செயற்பாடு)
 5. விதை செய்நேர்த்தி செயலகம்
 6. நுண்பெருக்கம் மூலம் செடி உற்பத்தியை திசு வளர்ப்பு கூடம் மற்றும் பதனிடும் கூடம் மூலம் பெருக்குதல்
 7. மண்புழு வளர்ப்பு கூடம் அமைத்தல், உயிர் உரம், உயிர் பூச்சிக்கொல்லி, உயிர் கட்டுப்பாட்டு முறைகள் உற்பத்தி செய்தல்
 8. தேனீ வளர்ப்பு கூடம் அமைத்தல், தேன் மற்றும் தேனீ பொருட்களை பதப்டுத்தல் செயலகம்
 9. விரிவாக்க ஆலோசனை சேவைகள் ஏற்படுத்துதல்
 10. வேளாண் / காப்பீடு சேவைகள் மூலம் பணிமனை மற்றும் சிறப்பு செய்தல்
 11. மீன் வளர்ப்புக்கு - மீன்குஞ்சு பொறிப்பகம் மற்றும் உற்பத்தி
 12. கால்நடை உடல் நலம் பேணல், கால்நடை மருந்தகம் அமைத்தல் மற்றும் இதர சேவைகளை உரைபனி விந்து வங்கி, திரவ நைட்ரஜன் வழங்குதல்
 13. கிராமப்புரங்களில் தொழில்நுட்ப கியோஸ்க்ஸ் ஏற்படுத்தி வேளாண் சார்ந்த இணையதளங்கள் பார்க்க வழிவகை செய்தல்
 14. தீவண செய்நேர்த்தி மற்றும் சோதனைச் செயலகம்
 15. மதிப்புக் கூட்டப்பட்ட நிலையம்
 16. பண்ணையிலிருந்து குளிர் தொடர் சங்கிலியை ஏற்படுத்துதல் (குழு செயல்)
 17. தரம் பிரித்தல், நியமித்தல், சேமித்தல் மற்றும் பொதி கட்டுதல் ஆகியவற்றிற்கு அறுவடைக்கு பின் மேம்பாட்டு நிலையங்களை அமைத்தல்
 18. உலோகம் அல்லது / உலோகம் அல்லாத சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் (குழு செயல்)
 19. பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்களுக்கு சில்லரை வர்த்தக நிலையங்களை ஏற்படுத்துதல்
 20. பண்ணை இடுபொருள் மற்றும் வெளிபொருள்களுக்கு கிராமப்புற விற்பனை முகமையை எடுத்தல்
 21. இணையதள கியோஸ்க்ஸ் தனியாகவோ அல்லது கூட்டாவோ தொழில் தொடங்க முனைவோர் திட்டத்தை தேர்வு செய்தல்

தகுதி:

 • விண்ணப்பதாரர் வேளாண் பட்டதாரி / அதன் சார்ந்த படிப்புகளான தோட்டக்கலை, கால்நடை, பால் பண்ணை, வனவியல், கோழிப் பண்ணை, மீன் வயர்ப்பு மற்றும் அதன் சார்ந்தவை
 • தனிநபர் அல்லது 5 பேர் கூட்டமாக இணைந்து செய்வது மற்றும் இதில் ஒருவர் மேலாண்மை பட்டதாரியாகவும் மற்றும் தொழில் வளர்ச்சி மற்றும் மேலாண்மையில் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

விவசாய நிலம் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

வறண்ட நிலத்தை விவசாயிகள் வாங்கி மேம்படுத்தி விவசாயம் செய்வது.

தகுதி

சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் / நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில் நில உரிமையாளருக்கு பங்கீடு கொடுப்பது.

கடன் அளவு

அதிகபட்சம் ரூ.5 லட்சம்

வேளாண் பட்டதாரிகளுக்கு விவசாய நிலம் வாங்கி விவசாய வேலைகள் செய்வதற்கு நிதி உதவி அளிக்கும் திட்டம்

தேவை

நிலம் வாங்குதல், மேம்படுத்துதல், பயிர் கடன் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான மற்ற கடன்கள்

தகுதி

விண்ணப்பதாரர் விவசாய குடும்பத்தை சோர்ந்தவராக இருத்தல் வேண்டும் மற்றும் அவருக்கு விவசாய நிலம் இருத்தல் கூடாது. வேளாண் பட்டதாரி அல்லது கால்நடை அல்லது வேளாண் பொறியியல் பட்டதாரியாகவும் மற்றும் வேலையில்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.

காளான் உற்பத்தி செய்ய நிதியளிக்கும் திட்டம்

தேவை

முதலீட்டுக் கடன் மற்றும் முதலீட்டு பணம் ஆகியவற்றிற்கு கடன் அளிக்கப்படும். (முதல் ஒரு பயிர்க்கு மட்டும்)

தகுதி

காளான் உற்பத்தியில் தேவையான முன் அனுபவம் மற்றும் பெரிய அளவிலான குடில்கள் தனிநபர் அமைத்ததற்கு கடன் வழங்கப்படும்.

கடன் அளவு

தேவைக்கு ஏற்ப

காளான் விதை / வித்து தயாரிப்பதற்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

விதை உற்பத்தியில் நிதி உதவி என்பது முதலீடு மற்றும் செலவுகளாக எடுத்துக் கொள்ளப்படும்.

தகுதி

தனிநபர் மற்றும் பெரிய அளவிலான செயலகம் உள்ளவர்கள் பயிர் பாதுகாப்பு துறையில் பட்டதாரியாகவும் அல்லது தகுதியான பின்பலமும் மற்றும் விதை உற்பத்திக்கு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

கடன் அளவு

தேவைக்கு ஏற்ப

சாணஎரிவாயு கலன் அமைக்க நிதியளிக்கும் திட்டம்

தகுதி

கடன் வாங்குபவர், எரிவாயு களன் அமைக்கும் திட்டத்திற்கு, அதன் அளவிற்கு ஏற்ப கால்நடைகள் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடன் அளவு

தேவைக்கு ஏற்ப அதன் அளவு மற்றும் மாதிரியைப் பொருத்து வழங்கப்படும்

திருப்பிச் செலுத்தல்

5-7 வருடங்கள்

கமிஷன் ஏஜெண்ட்கள் / முகவர்களுக்கு நிதியளிக்கும் திட்டம், கால்நடை தீவணங்கள், கோழித் தீவணம் விற்பனை செய்யும் கமிஷன் ஏஜெண்ட்கள் மற்றும் முகவர்கள், அனைத்து நிதி வழங்கிய இருப்பு நிதியளிக்கும் திட்டம்

இத்திட்டத்தின் கமிஷன் ஏஜென்ட்கள், டீலர்கள் ஆகியோருக்கு பண்ணை இடுபொருளுக்கு நிதியளிப்பதற்கு இரு பகுதிகளாக குறிப்படப்பட்டுள்ளது. பகுதி I மற்றும்

பகுதி II

பகுதி I

கமிஷன் ஏஜென்ட்கள் / டீலர்கள் வேளாண் இடுபொருட்களாக விதை, பூச்சிக்கொல்லி, உரம் ஆகிய கடன்பாக்கிக்கு நிதியளித்தல் மற்றும் கமிஷன் ஏஜென்ட்கள் விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்கு கடனாக விவசாயிகளுக்கு அளித்தல் மற்றும் இவர்கள் அந்த பொருளுக்கு குறிப்பிட்ட டீலர்களாக இருக்க வேண்டியது இல்லை.

பகுதி II

கால்நடை தீவனம், கோழித் தீவனம், பால் பொருள் தீவனம், மீன் தீவனம், ஆகியவற்றை விற்கும் விற்பனையாளர்களுக்கு நிதியளித்தல் இதற்கு அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வழங்கப்படும்.

கோழிப் பண்ணைகளுக்கு நிதியளிக்கும் திட்டம்

முதலீட்டுக் கடன் தேவைகளான பண்ணை கட்டிடம் கட்டுதல், உபகரணங்கள் வாங்குதல், மற்றும் உற்பத்தி கடன் தேவைகளான ஒருநாளான கோழிக் குஞ்சுகள் வாங்குதல், தீவனம் மருந்துகள் ஆகியவற்றிற்குத் தேவையான நிதி உதவிளுக்கு கடன் வசதிகள் செய்து தரப்படும்.

தேவை

மானியத் தேவைகளுக்கு

முதலீட்டுக் கடன் தேவைகளுக்கு நடுத்தர தவணை கடன் மூலம் நிலையான அசையா சொத்துகளுக்கும் மற்றும் உற்பத்திக் கடன் வேலை செய்வதற்குத் தேவையான கடன்களை சிறு தவணைக் கடன் மூலமாக வழங்கப்படும்.

முக்கியத் தேவைகளுக்கு

முதலீட்டுக் கடன் தேவைகளுக்கு நடுத்தர தவணை கடனாகவும் மற்றும் உற்பத்திக் கடனை பணக் கடன் அளவு மூலமாக அல்லது முதலீட்டுக் கடன்களின் ஒரு அங்கமாக வைத்தோ வழங்கப்படும்.

தகுதி

மானியத் தேவைகளுக்கு

சிறு விவசாயிகள், நிலமற்ற விவசாய வேலையாட்கள் மற்றும் சரியான வேலை இல்லாதவர்களுக்கு மற்றும் கோழிப் பண்ணை மூலம் வருவாயை பூர்த்தி செய்ய முனைவோர் மற்றும் அந்த நபர் தேவையான நிலம் / கொட்டகையை கோழிப் பண்ணை ஆரம்பிப்பதற்குத் தேவையானதை வைத்திருத்தல் வேண்டும்.

முக்கியத் தேவைகளுக்கு

விண்ணப்பதாரர் கோழிப் பண்ணை நடத்துவதில் நல்ல முன் அனுபவம் பெற்றவராகவும் மற்றும் வணிக ரீதியில் அவர் தானே இறங்கி அந்த வேலைகளில் ஈடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும். கோழிப் பண்ணை அமைப்பதற்குத் தேவையான நிலம் அல்லது கொட்டகைகளை அவர் தானே சுயமாக பெற்றிருக்க வேண்டும்.

பால் பண்ணை மேம்பாட்டு திட்டத்திற்கு நிதியளித்தல்

பால் பண்ணை திட்டங்கள் கீழே உள்ள செயல்களுக்கு நிதியளிக்கப்படுகின்றது.

 1. நல்ல தரமான அதிகம் பால் கொடுக்கும் மாடு / எருமைகள் அல்லது கலப்பினங்கள் வாற்குவதற்கு தனிநபருக்கு நிதியளிக்கும் திட்டம்
 2. கன்றுக் குட்டிகளை வாங்கி அதை முதல் கன்று ஈன்றி பால் கொடுக்கும் வரை தேவையானதற்கு நிதியளித்தல்
 3. கால்நடைப் பண்ணைகளில் புதுமையான செயல்களுக்கு நிதியளித்தல் மற்றும் கால்நடை இனவிருத்தி சினைப்பருவத்தில் உள்ள கால்நடைகளை காப்பாற்றுதல், பால் கறக்கும் கால்நடைகளுக்கு வீடு கட்டுதல் பால் பதப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்துதல்

பால் உற்பத்திக்குத் தேவையான பால் மாடுகள் / எருமைகள் வாங்குவதற்கு நிதியளித்தல்

தேவை

வங்கி கீழ்கண்ட தேவைகளுக்கு நிதியளிக்கின்றது

 • நல்ல தரமான அதிக பால் கொடுக்கும் மாடுகள் / எருமைகள் வாங்குவதற்கு நிதி
 • கால்நடைகளை வைப்பதற்கு கொட்டகை அமைத்தல்
 • பால் வியாபாரத்திற்குத் தேவையான பால் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி
 • கால்நடைகளுக்குத் தீவனங்கள் அளித்தல்
 • கால்நடை சந்தைகளிலிருந்து மாடுகளைக் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவுகள்
 • பால் தரும் கால்நடைகள் மற்றும் ஒரு மாதத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க தீவனம் மற்றும் தீவனப்பயிர்கள் சாகுபடி செய்வதற்குத் தேவையான அனைத்துச் செலவுகளுக்கும் ஒட்டுமொத்த வங்கிக் கடன் வழங்கப்படும்.

நல்ல தரமான கிடரிகள் வளர்ப்பதற்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

நல்ல ஆரோக்கிமான பெற்றோர்களிடமிருந்து வந்த 4 மாத வயது பெட்டைக் கன்றுகள் எடுத்து முதல் முறை கன்று ஈன்றும் வரை வளர்த்தல்

மற்ற புதுமையான கால்நடை வேலைகளுக்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

செயற்கைக் கருவூட்டல் மூலம் கால்நடை இனவிருத்தி சினைக் கால்நடைகளை பாதுகாத்தல், பால் பதனிடும் வசதிகளுக்கு நிதியளித்தல், கிராம பால் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் மாடுகளுக்கு கொட்டகை அமைப்பதற்கு நிதியளித்தல், புல்வெளிகள் அமைப்பதற்கு நிதியளித்தல்.

பால் பண்ணை விகாஸ் அட்டை திட்டம் (ஒரு சில மாநிலத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்டது)

தேவை

நல்ல தரமான பால் கொடுக்கும் மாடுகள் / எருமைகள் அல்லது கலப்பினங்கள், கால்நடைகள் இருப்பதற்கு கொட்டகை கட்டுதல், தீவனங்கள், கால்நடை மருந்துகள், தீவனப் பயிர்கள், பால் பண்ணை இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் ஆகியவை வாங்குவதற்று நிதியளித்தல்.

தகுதி

நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் / விவசாயிகள் / தனிநபர் பால் மாடுகள் வைத்து பராமரிக்கும் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

புதிய எருமை வாங்குதல் / இருப்பதை மாற்றுவதற்கு நிதியளித்தல்

தேவை

விண்ணப்பதாரர்களுக்கு புதிய எருமை வாங்குதல் / இருப்பதை மாற்றுவதற்கு நிதியளித்தல் அந்த நபரின் வங்கி கணக்கு ஒரு வருடமாக நன்றாக வரவு செலவு இருத்தல் வேண்டும். இதுபோன்ற வசதிகள் மூன்று வருடம் வரை பெறுவதற்கு அனுமதியளிக்கப்படும்.

மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்கு நிதியளிக்கும் திட்டம்

உள்நாட்டு மீன் வளர்ப்பு மேம்பாடு மற்றும் உப்புநீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு

தேவை

குளம் / தொட்டி கட்டுதல் / புதுப்பித்தல், இறால் வாங்குதல், மீன் விதை / இறால் விதை. இடுபொருட்களான புண்ணாக்கு, உரம், கரிம உரங்கள் மற்றும் முதல் அறுவடை வரை இதர உணவு வகைகள், வலைகள் வாங்குதல், பெட்டிகள், கூடைகள், கையிறுகள், தூண்டில், கடப்பாறை, மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்குத் தேவையான நிதி உதவி அளிப்பது.

தகுதி

கடன் உதவிகள் விவசாயிகள், தனிநபர், கூட்டுறவு சங்கங்கள், நிறுவனங்கள், கூட்டமைப்பு ஆகியோர் தேவையின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கு இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகின்றது.

கடன் அளவு

தேவைக்கு ஏற்ப

கடன் திருப்பிச் செலுத்துதல்

குறிப்பிட்ட காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்

கடல் மீன் வளர்ப்புக்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

இயந்திரம் / இயந்திரம் இல்லாத படகுகள் வாங்குதல், ஆழ்கடல் மீன்பிடிகள், வலைகள் வாங்குதல், போக்குவரத்து வலைகள், கிரில் வலைகள், மற்ற போக்குவரத்து உபகரணங்கள் வாங்குதல், கம்பி கயிறுகள், வலைபிடிகள், வழிகாட்டும் விளக்குகள், உயிர் பாதுகாப்பு சாதனங்கள், உயிர் படகுகள், பிடிப்புகள், திசை கண்டுபிடிப்புகள், மீன் தேடுபவைகள் மற்றும் கடல் எஞ்ஜின்கள் வாங்குதல்.

தகுதி

தனிநபர்/கூட்டுநிறுவனம், கூட்டுறவு சங்கங்கள், லிமிடெட் நிறுவனம் ஆகியோர் தொழில்நுட்ப ரீதியில் தகுதியும் தேவையான முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கடன் அளவு

திட்ட அறிக்கையைப் பொருத்து கடன் தேவைகளின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழங்கப்படும்.

செம்மறி ஆடு / வெள்ளாடு இனப்பெருக்கம் / வளர்ப்புக்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

தேர்வு செய்யப்பட்ட / பதிவு செய்யப்பட்ட இன செம்மறி / வெள்ளாடு வகைகள் வாங்குவதற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் அதை இனவிருத்தி / அதன் தோல், கறி, பால் உற்பத்திக்காக வளர்ப்பு தேவைப்பட்டால் கொட்டகை அமைத்தல் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் அடர் தீவனம் வாங்குதல்.

தகுதி

சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் விவசாய வேலையாட்கள் செம்மறி / வெள்ளாடு இனவிருத்தி / வளர்ப்பை மானியத்தின் மூலம் பெற்று அல்லது பயிற்சி பெற்ற நபர்கள், வர்த்தக ரீதியில் கொண்டு செல்ல நிதியுதவி வழங்கப்படும்.

கடன் அளவு

தேவைக்கு ஏற்ப

பன்றி வளர்ப்பு மேம்பாட்டிற்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

பன்றிகள் இனவிருத்தி / வளர்ப்பு

தகுதி

விவசாயிகள் / விவசாய வேலையாட்கள் மற்றும் தனிநபர் பன்றி வளர்ப்பை மானியம் பெற்று அல்லது வர்த்தக ரீதியில் கொண்டு செல்லும் நபர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

கடன் அளவு

தேவைக்கு ஏற்ப

கால்நடைகள் மூலம் இழுக்கும் வண்டிகள் வாங்குவதற்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

கால்நடைகள் வண்டிகள் இழுப்பதற்கும் மற்றும் விவசாய இடுபொருட்கள் பண்ணை பொருட்களை எடுத்துச் செல்லவும் மற்ற தேவைகளுக்கும் வாங்க கடனுதவி அளித்தல்.

தகுதி

குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் 2 ஏக்கருக்கு விவசாயம் செய்யும் வசதியும் உரிமையும் பெற்றிருக்க வேண்டும். நிலமற்ற விவசாய வேலையாட்களும் கால்நடைகள் மற்றும் வண்டிகள் வாங்கி சுயதொழில் செய்வதற்கு வங்கி மூலம் கடனுதவி அளிக்கப்படும்.

தேனீ வளர்ப்புக்கு நிதியளிக்கும் திட்டம்

தேவை

 • தேனீ வளர்ப்பு வீடுகள் கட்டுவதற்கு மற்றும் தேன் கூடுகள் வாங்குவதல், தேன் பெட்டிகள், தேன் பிரித்தெடுக்கும் இயந்திரம், புகைப்பான் மற்றும் முகத்திரை கத்தி, தேன் கூடு உபகரணம், ராணித் தேனீ கதவு, உணவுகள், சூரிய ஒளி மூலம் மெழுகு பிரித்தெடுத்தல், பிளாஸ்டிக் கூடை மூலம் தேன் சேகரித்தல், இரப்பர் உரை ஆகிய பொருட்கள் வாங்கதல்
 • அடித்தள அட்டைகள், சர்க்கரை, மருந்துகள், கை உரைகள் போன்ற பொருட்களுக்கான செலவுகள்

தகுதி

சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய வேலையாட்கள், தேனீ வளர்ப்பில் பயிற்சி பெற்றோர், தனிநபர் / கூட்டமைப்பு / நிறுவனம் ஆகியவை தேனீ வளர்ப்பில் தேவையான முன் அனுபவம் பெற்று அதை வணிக ரீதியில் எடுத்துச் செல்ல முனைவோருக்கு வழங்கப்படும்.

வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைக்க நிதியளிக்கும் திட்டம்

தேவை

வேலிகள்அமைத்தல், விதை, உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் வாங்குதல், நில மேம்பாடு, சிறிய தோட்ட உபகரணங்கள் ஆகிய முதல் செலவினங்களுக்கு கடன் வழங்கப்படும்.

தகுதி

விண்ணப்பதாரர் அரசு / அரசு சார்ந்த செயலகம் / கூட்டுறவு / தனியார் துறை அமைப்புகளில் வேலை செய்பவராக இருத்தல் வேண்டும். அவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக எடுக்கப்பட்டவராக இருத்தல் கூடாது. சுயதொழில் முனைவோர் அல்லது தொழில் நெறிஞர் அந்த வங்கி கிளையில் முன்பு நிதி பறிமாற்றம் செய்தவராகவும் இருக்கலாம். மத்திய, மாநில அரசுகளில் ஓய்வூதியம் பெறுபவராகவும் மற்றும் அந்த வங்கியின் கீழ் அந்த கணக்கு வைத்திருத்தல் வேண்டும். இந்த மேற்கூறிய ஊழியர்களின் மனைவிகளுக்கும் இது பொருந்தும்.

விண்ணப்பதாரருக்கு காலி இடம் வீட்டை சுற்றியும் உபயோகப்படுத்தும் படி இருத்தல் வேண்டும். குறைந்தது 6 மாதத்திற்கு அந்த வங்கியில் வைப்பு நிதி கணக்கு இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் கடனை திருப்பச் செலுத்த தேவையான வருவாய் இருத்தல் வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்

3.00934579439
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top