பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாநில வேளாண்மை விற்பனை வாரியம்

மாநில வேளாண்மை விற்பனை வாரியம்

வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

 • விற்பனைக்குழுக்களின் செயல்களும், அபிவிருத்தி பணிகளுக்கும் உதவி புரிதல்.
 • மாநில அளவில் விளைபொருட்கள் விற்பனையை அபிவிருத்தி செய்ய திட்டம் தீட்டுதல்.
 • அனைத்து விற்பனைக்குழுக்கள் அல்லது தேவைப்படும் விற்பனைக்குழுக்களுக்கு பணிகளை மேம்படுத்த உதவிகள் புரிந்திடல்.
 • விற்பனைக்குழுக்கள் மேற்கொள்ளும் கட்டிட பணிகளுக்கு வரை படங்கள் மற்றும் மதிப்பீடு தயாரித்து கட்டிடம் கட்டுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வகுத்து தருதல்.
 • வாரிய விற்பனை நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் செயல்படுத்துதல்.
 • ஆண்டு முடிய நிதிநிலை அறிக்கை தயாரித்து அதில் சொத்துக்கள் விவரம், செலவின விபரம் இவைகளை குறிப்பிட்டு வாரிய உறுப்பினர்களும், அரசிற்கும் தெரிவித்தல்.
 • ஓழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயன் பெறும் பொருட்டு அனைத்து விளம்பரம் மற்றும் பிரச்சார பணிகளை மேற்கொள்ளுதல்.
 • மாநில அளவில் விற்பனைக்குழு பணியாளர்கள், வாரிய பணியாளர்கள், வேளாண்மை விற்பனைத்துறை பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் முதலியவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்க வழிவகைகள் செய்து தருதல்.
 • வாரிய விதிகளின்படி விற்பனைக்குழுக்களுக்கு கடன் மற்றும் மான்யங்கள் தீர்மானித்து வழங்குதல்.
 • வேளாண்மை விற்பனை சம்மந்தமாக கருத்தரங்குகள், விழாக்கள், கருத்துக் காட்சிகள் முதலியவைகளை ஏற்பாடு செய்து நடத்துதல்.
 • விளை பொருட்களை பதப்படுத்தவும், தரம் பிரிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • அங்காடி விலை விபரங்களை பெற்று பின் அனைவருக்கும் தெரியப்படுத்துதல்.
 • விற்பனை புள்ளி விவரங்கள் மற்றும் அறிக்கைகள் வெளியிடுதல்.
 • விளைபொருள் விற்பனை புள்ளி விவரங்கள் சேகரிக்கவும், வெளியிடவும் சந்தா தொகை வசூலித்தல்.
 • வேளாண்மை விற்பனை சம்மந்தமான ஆராய்ச்சிகள் மற்றும் விற்பனை முன்னேற்ற தரத்தினை கணக்கெடுத்தல்.
 • விற்பனை குழுக்கள் மற்றும் வாரிய சம்பந்தமான முக்கியமான பொதுப்படையான முன்னேற்ற பணிகளை மேற்கொள்ளுதல்.
 • சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இதர பணிகளை மேற்கொள்ளுதல்.
 • இது தவிர அரசு வாரியத்திற்கு இடும் இதர பணிகளை மேற்கொள்ளுதல்.

செயல்பாடுகள்

பயிற்சி:

பணியாளார்களுக்கும் விவசாயிகளுக்கும் பயிற்சி அளித்தல்

சேலத்தை மையமாகக் கொண்டு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. விற்பனைத் துறைப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பயிற்சி மையத்தின் மூலம் தரம்பிரிப்பாளர் பயிற்சி, விற்பனைக்குழ பணியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் விவசாயிகள் நேரடித் தொடர்புத் திட்டம் என மூன்று வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இப்பயிற்சி மையத்திலிருந்து தரம்பிரிப்பாளர் பயிற்சி ஆண்டு ஓன்றுக்கு 1 அணி வீதம் விற்பனைக்குழுவில் பணிபுரியும் பணியாளர் 20 நபர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோன்று விற்பனைக்குழு பணியாளர்களுக்கான புத்தூட்டப் பயிற்சி ஆண்டு ஒன்றுக்கு 1 அணி வீதம் 20 நபர்களுக்கு 28 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கான நேரடித் தொடர்புத் திட்டம் குறித்த பயிற்சி ஆண்டு ஓன்றுக்கு 5 அணிக்கு 20 விவசாயிகள் வீதம் மொத்தம் 100 விவசாயிகளுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தவிர, வேளாண்மை உதவி இயக்குநர் (விளம்பரம் மற்றும் பிரச்சாரம்) சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் மையங்கள் மூலமாக அறுவடைக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்பகள் குறித்து விவசாயிகளுக்கு ஓழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலேயே வைத்து நேரிடையாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தையறிவுத்திறம்

தகவல் சேகரிப்பு மற்றம் வழிகாட்டுதல் பிரிவு ஏற்படுத்துதல்

இந்தியாவில் முக்கியமான வேளான் விளைபொருட்கள் உற்பத்தித்திறனில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது. கரும்பு உற்பத்தியில் முதல் இடமும், நெல் உற்பத்தியில் இரண்டாம் இடமும் மற்றும் பல காய்கறி வகைகளில் முதலிடமும், இரண்டாம் இடத்தையும் தமிழ்நாடு வகிக்கிறது. அதே சமயம் வேளான் விளைபொருளின் விற்பனை அதிக சிறப்புடையதாக இல்லை. விளைச்சல் அதிகமாக இருப்பதால் அனைத்து விவசாயிகளுக்கும் சரியான இலாபம் கிடைப்பதில்லை. எந்த சந்தையில் எந்த விளைபொருளிற்கு அதிக விலை, அடுத்த காலத்தில் எந்த பயிர் வித்திட்டலாம், விளைந்த பொருளை உடனே விற்பனை செய்யலாமா அல்லது கிடங்கில் பாதுகாத்து பிறகு விற்பனை செய்யலாமா என்ற மாதிரியான தகவல்கள் விவசாயிகளை சென்றடையும் வாய்புகள் குறைவாகவே இருக்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்கை சில நேரங்களில் பாதிப்படைவதுடன் வேளாண் பொருளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் பாதிக்கின்றது.

ஆகையால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.20.00 இலட்சத்தில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் பங்களிப்புடன் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தையறிவுத்திறம், தகவல் சேகரிப்பு மற்றும் வழிகாட்டுதல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் ஏற்றுமதிச்சந்தையறிவுத்திறம் தகவல் சேகரிப்பு பிரிவின் முக்கிய குறிக்கோள்கள் பின் வருமாறு.

 1. தமிழ்நாட்டில் வேளாண் விளைபொருளின் தேவைகளை முன்னறிவிப்பு செய்தல்.
 2. வேளாண் விளைபொருளின் எதிர்கால விலையை முன்னறிவிப்பு செய்தல்.
 3. மாநில மற்றும் தேசிய சந்தை அளவில் முக்கிய விளைபொருளை ஆராய்தல்.
 4. விளைபொருளின் விலைபட்டியல் மற்றும் சந்தை நிலவரங்களை விவசாயிகளிக்கு தெரியப்படுத்துதல்.
 5. தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கொள்கை அளவீடுகளை பரிந்துரைப்பது

தமிழ்நாட்டில் விளைபொருட்களின் வருகைகள், விலைகள் மற்றும் பரிவர்த்தனை போன்ற தகவல்களை 277 ஓழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கும் தெரிவித்தல் மற்றும் அந்த தகவலை இணையத்தலம், தொலைக்காட்சி, பத்திரிக்கை மற்றும் அகில இந்திய வானொலி மூலம் முன்னறிவிப்பு செய்தல் ஆகியவை உள்நாடு மற்றும் ஏற்றுமதிச்சந்தையறிவுத்திறம் தகவல் சேகரிப்பு பிரிவின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.

விலை தகவல்கள் மற்றும் இன்றி ஏற்றுமதி விதிமுறைகள், விளைபொருளிற்கான ஏற்றுமதி தரங்கள், வேளாண் ஏற்றுமதி மண்டலம், உணவு பதப்படுத்தும் முறை போன்ற பல பயனுள்ள தகவல்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளன.

இதர செயல்பாடுகள்

விளம்பரம் மற்றம் பிரச்சாரம்

தமிழ்நாடு மாநில வேளாணமை விற்பனை வாரியம் தனது கட்டுப்பாட்டிலுள்ள சென்னை, மதுரை, கோவை மற்றம் திருச்சிராப்பள்ளியிலுள்ள மையங்கள் மூலமாக வேளாண் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்வதால் கிடைக்கும் ஆதாயங்கள் குறித்த விளம்பரம் மற்றும் பிரச்சாரப் பணிகனைச் செய்து வருகிறது. மேலும் 3 மையங்களில் இந்த பணி விரிவு படுத்தப்படும்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விற்பனை அறக்கட்டலை அறிவுப்பீடம் அமைத்தல்

தமிழ்நாடு மாநில வேளாண்மைப் விற்பனை வாரியம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்திலுள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக் கல்வி மையத்திற்கு ரூ.50.00 இலட்சம் வைப்பு நிதியாக அளித்து ஒரு அறக்கட்டளை அறிவுப்பீடம் எற்படுத்தியுள்ளது. இந்த நிதியிலிருந்து பெறப்படும் வட்டியின் மூலம் பல ஆராய்ச்சிகளும், பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.

கட்டுமானப் பணிகள்

வாரியத்தின் பொறியல் பிரிவு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் அடிப்படை வசிதிகளான அலுவலகக் கட்டடங்கள், ஊரகக் கிட்டங்கிகள், ஏலக் கொட்டகைகள், வணிக வளாங்கள், இடுபொருள் கடைகள், பணம் வழங்கல் அறைகள், குடிநீர் வசிதிகள், கழிப்பறை வசதிகள், உட்புறச் சாலை வசதிகள், அலுவலகத்துடன் இணைந்த கிட்டங்கிகள், சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வறுகிறது. மேலும் உழவர் சந்தைகளின் மராமத்துப் பணிகலை ரூ.42.00 இலட்சம் செலவில் மேற்கோள்ள அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட பராமரிப்பு பணிகள் முடிவுற்று புதுப்பொலிவுடன் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.

விற்பனை மேம்பாட்டு நிதி

தமிழ் மாநில வேளாண்மை விற்பனை வாரியம் தமக்குத் தேவையான நிதியை விற்பனைக் குழுக்க்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. விற்பனைக் குழுக்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது, விற்பனைக் குழுக்கள் தங்களது மொத்த வருவாயில் 15 விழுக்காடு தொகையை வாரியத்திற்குப் பங்குத் தொகையை வாரித்திற்குப் பங்குத் தொகையாக அளிக்கின்றன. இவ்வாறாகப் பெறப்படும் மொத்தத் தொகையில் 50 விழுக்காடு, சந்தை மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிலிருந்து விற்பனை மேம்பாடுகளுக்கான விளம்பரம் மற்றும் பிரச்சாரம், பயிற்சி போன்றவை மேற் கொள்ளப்படுகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம்
3.04347826087
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top