மக்களவை அல்லது லோக் சபா இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552. இது மாநிலத் தொகுதிகளில் இருந்தும், ஒன்றியப் பிரதேச தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டோரையும், நியமன உறுப்பினர்களான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.
இந்த அவையில் அதிகபட்சமாக இரு ஆங்கிலோ இந்தியர்கள் உறுப்பினராக முடியும். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் 15வது மக்களவையை துவக்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப்பிரகடன காலத்தின் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம்.
2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் பதினாறாவது மக்களவையை துவக்கியுள்ளது
மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.
கூட்டத்தொடர்களும் அலுவல் நேரமும்
மக்களவை ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும்.
மக்களவைப் பொதுத் தேர்தல்கள் [தொகு]
மக்களவை பின்வரும் தேர்தலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டவைகளாகும்
வ.எ | மக்களவை | பொது தேர்தல்கள் |
---|---|---|
1 | முதலாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1951 |
2 | இரண்டாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1957 |
3 | மூன்றாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1962 |
4 | நான்காவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1967 |
5 | ஐந்தாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1971 |
6 | ஆறாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1977 |
7 | ஏழாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1980 |
8 | எட்டாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1984 |
9 | ஒன்பதாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1989 |
10 | பத்தாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1991 |
11 | பதினோராவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1996 |
12 | பனிரெண்டாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1998 |
13 | பதின்மூன்றாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 1999 |
14 | பதினான்காவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 2004 |
15 | பதினைந்தாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 2009 |
16 | பதினாறாவது மக்களவை | இந்தியப் பொதுத் தேர்தல், 2014 |
ஆதாரம் : இந்திய மக்களவை இணையத்தளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 6/21/2020
தேர்தல் குறித்து அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் இ...
தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டியவைகளை பற்றிய தகவல...
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 4(1)ன க...
இந்திய நாடாளுமன்றம் பற்றிய குறிப்புகள்