பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / ஆஃப்லைன் சேவைகள் / பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

ஸ்டெப் 1

இந்த அவசர உலகத்தில் நாம் அடிக்கடி நமது இருப்பிடங்களை மாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமது பணியின் நிமித்தமாக நமது குடும்பங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் நம்முடைய பொது வருங்கால வைப்பு நிதி (பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) கணக்கை புதிய இடத்திற்கு மாற்றவில்லை என்றால் பழைய இடத்தில் இருக்கும் நம்முடைய வங்கி அல்லது அஞ்சலகத்திற்கு சென்று அலைய வேண்டி இருக்கும். எனவே நம்முடைய பிபிஎஃப் கணக்கை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டியதாக இருக்கிறது. அவ்வாறு பிபிஎஃப் கணக்கை மாற்றுவது மிகவும் எளிது.

 1. வெள்ளைத் தாளில் நமது பிபிஎஃப் கணக்கை மாற்றக் கோரி விண்ணப்பத்தை எழுத வேண்டும்.
 2. ஒருவேளை அஞ்சலகத்தில் இருந்து வங்கிக்கு உங்கள் கணக்கை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான ட்ரான்ஸ்பர் பார்மை (எஸ்பி 10 பார்ம்) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
 3. எந்த இடத்திற்கு உங்கள் கணக்கை மாற்ற வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
 4. பின் அவற்றை பாஸ்புக்கோடு இணைத்து சமர்பிக்க வேண்டும்.
 5. அடையாளத்திற்காக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.

ஸ்டெப் 2

 • நீங்கள் சமர்பித்தவுடன் உங்கள் கணக்கு முடிக்கப்பட்டு உரிய ஆவணங்கள் மற்றும் இருப்புத் தொகை டிடி அல்லது காசோலையாக நீங்கள் கேட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.
 • பின் உரிய வங்கியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். 3. பின்னர் உங்களுக்கு புதிய பாஸ் புக் வழங்கப்படும். பிபிஎஃப் கணக்கு இடமாற்றம் பெற 3 முதல் 4 வாரங்கள் ஆகும். ஆனால் அதற்காக கட்டணங்கள் வசூலிக்கப்படாது.

நினைவில் கொள்க

 1. பிபிஎஃப் கணக்கை மாற்றுவதற்கு முன் உங்கள் பாஸ்புக்கில் எல்லா நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 2. பழைய பாஸ்புக்கை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 3. புதிய பாஸ்புக்கில் பழைய வங்கி நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட மாட்டாது.
 4. மாற்றம் செய்யப்பட்ட கணக்கு தொடர் கணக்காகவே கருதப்பட வேண்டும்.
 5. கணக்கை மாற்றும் போது நாமினியையும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆதாரம் : வருங்கால வைப்புநிதி ஆணையம்

3.09433962264
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top