பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆதார் கார்டில் பிழைகளை திருத்துவது எப்படி?

ஆதார் கார்டில் பிழைகள் இருந்தால் அதை திருத்துவதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

 1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
 2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
 3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.


ஆதார் அட்டையை ஆன்லைனில் அப்டேட் செய்தல்

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

 1. ஆதார்கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
 2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவுசெய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒரு வேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
 3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
 4. எந்தெந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
 5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும். அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும். பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றிதழ் மற்றும் உங்கள் புகைப் படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும். பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லோட் செய்ய வேண்டும்.
 6. முகவரியை அப்டேட் செய்யும்போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்யவேண்டும்.
 7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்யமுடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.


ஆதார் கார்டில் பிழைகளை ஆன்லைன் மூலம் திருத்துதல்

ஆதாரம் :மாநில ஆதார் மையம். தமிழ்நாடு அரசு

3.15384615385
குணா Sep 28, 2020 02:54 PM

ஆதார் கார்டில் என்னுடைய பழைய மொபைல் நம்பர் தொலைந்து விட்டது புதிய மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும்

Jagadesa Jul 23, 2020 09:28 PM

ஐயா எனது மனைவி ஆதார் அட்டை முகவரி மாற்ற முடியவில்லை 3 முறை பதிவு செய்தேன் வரவில்லைபிறந்த தேதி இல்லை வருடம் மட்டும் இரிகிறது என்ன செய்வது என்று சொல்லுங்கள்

பாண்டியன்.S Jun 01, 2020 02:44 PM

என்னுடைய ஆதார் அட்டையில் எப்படி பிறந்த தேதி செல்போன் நம்பர் செய்வது

Karuppusamy Apr 18, 2020 04:44 PM

பழைய மொபைல் நம்பர் தொலைந்து விட்டது புதிய மொபைல் நம்பர் மாற்ற வேண்டும்

S.praphu Oct 18, 2019 08:39 AM

அதார் கார் update செய்வது எப்படி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top