பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிளாஸ்டிக் ஆதார் அட்டை

பிளாஸ்டிக் ஆதார் அட்டை குறிப்புகள்

இணைய சேவை மையங்கள்

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் பொது இணைய சேவை மையங்கள் மூலமாக பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டு விவரங்கள் பதிவு செய்யப்படாது எனவும், ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்களுக்கு மட்டுமே பிளாஸ்டிக் அட்டை வழங்கப்படும்.

அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 333 பொது இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  1. தலைமைச் செயலகத்தில் ஒரு மையமும்,
  2. தமிழகத்திலுள்ள 264 வட்டாட்சியர் அலுவலகங்களில் தலா ஒரு மையமும்
  3. சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள்,
  4. 50 கோட்ட அலுவலகங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  5. மதுரை, சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்களிலும் ஒரு மையம்
  6. அரசு பொது இ சேவை மையம் ( மக்கள் கணினி மையம் )

செயல்பாடுகள்

  1. ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பம் செய்து, கருவிழி-கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இணைய சேவை மையங்களுக்குச் செல்லலாம்.
  2. ஆதார் எண் தயாராக இருக்கும் பட்சத்தில், ஒப்புகைச் சீட்டில் உள்ள பதிவு எண்ணைத் தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். ஒப்புகைச் சீட்டு பதிவு எண்ணைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  3. ஏற்கெனவே, ஆதார் எண்ணை வைத்துள்ளவர்கள் ரூ.30 கட்டணம் செலுத்தி, பிளாஸ்டிக் அட்டையைப் பெறலாம். தமிழகத்தில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு பொது இணைய சேவை மையத்துக்குச் சென்று பிளாஸ்டிக் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

குறைந்த கட்டணம்

இந்த மையத்தில் பொதுமக்களுக்கு தேவையான வருவாய் துறையால் வழங்கப்படும் வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்று, குடும்பத்தில் முதல் பட்டதாரிசான்று, கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்கும், சமூகநல துறை சார்பில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கும் முதற்கட்டமாக சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சேவைகள் அனைத்தும் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சான்றுகள் பெறுவதற்கு பதிவு கட்டணமாக ரூ.50-ம், சமூக நலத்துறை சார்பிலான திட்டங்களில் பயன்பெறுவதற்கு பதிவு கட்டணமாக ரூ.100-ம் என குறைந்த கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது.

ஒப்புகை சீட்டு

பொது சேவை மையத்தில் சான்றுகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தேவையான அனைத்து அசல் ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். நாகை மாவட்டத்தில் செயல்படும் பொது சேவை மையங்களில் இதுவரை 32 ஆயிரத்து 955 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) தொடங்கப்படும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து, ஒப்புகை சீட்டு பெற்றவர்கள் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

ஒப்புகை சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கனவே ஆதார் எண் கிடைக்க பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறவிரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்று கொள்ளலாம் இதற்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படும்.


பிளாஸ்டிக் ஆதார் அட்டை

ஆதாரம் : தமிழ்நாடு கேபில் டீவி கார்ப்பரேசன் (இ- பொது சேவை மையம்)

3.0
சுசிந்திரன் Jan 18, 2017 12:42 PM

எம் குடும்பத்திற்கு நிரந்தர வீடு இல்லை வாடகையில் இருக்கிறோம் சில நேரங்களில் வீடு விலாசம் மாற்ற முடியவில்லை இதற்கு நான் என்ன பன்ன வேண்டும்

abdul Dec 22, 2016 10:37 AM

நான் பொது சேவை மையம் தனியாக நடத்தமுடியுமா? 99*****34

Bharathi Oct 22, 2016 11:50 AM

ஆதார் அட்டை தொலைந்து விட்டது! ஒப்புகை சீட்டும் இல்லை!

https://www.youtube.com/watch?v=VlpHQy0HVBc

ராஜ Sep 09, 2016 07:47 PM

நான் பொது சேவை மையம் தனியாக நடத்தமுடியும? 78*****26

Sign kathir Sep 08, 2016 04:31 PM

அட்டையை முகவரி மாற்றம் செய்ய போன் நம்பர் பதிவு செய்யவில்லை, இதற்கு என்ன செய்ய. வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top