பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிதல்

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிவதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டதா என்பதை கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க் : http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிய நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும். குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும். அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

ஆதாரம் : கல்விச்சோலை

2.95652173913
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top