অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பிராவிடண்ட் பண்ட் இருப்பை (UAN) யுஏஎன் நம்பர் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

பிராவிடண்ட் பண்ட் இருப்பை (UAN) யுஏஎன் நம்பர் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

பொதுக் கணக்கு எண் என்றால் என்ன

  • பி எப் கணக்கு வைத்திருக்கும் நம்மில் பெரும்பாலானோர் தற்போது யுனிவெர்சல் அக்கவுண்ட நம்பர் அல்லது பொதுக் கணக்கு எண் என்றால் என்ன என்பதை நாம் பணி செய்யும் நிறுவனத்தின் மூலம் தெரிந்து கொண்டிருப்போம்.
  • பிஎப் சட்டத்திற்குட்பட்ட அல்லது பி எப் கணக்கு வைத்துள்ள உறுப்பினர்களைக் கொண்டுள்ள தங்களது பணியாளர்களுக்கு யுஏஎன் எனப்படும் பொதுக் கணக்கு எண்  ஒதுக்கப்பட்டது.
  • பி எப் கணக்கு வைத்துள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தங்களது கணக்கு இருப்பைச் சுலபமாக அறிந்துகொள்ள இந்தப் பொதுக் கணக்கு எண் ஒன்று ஒதுக்கப்படும்.
  • இந்தக் கணக்கு உங்களுக்குத் தரும் வசதி என்னவென்றால், நீங்கள் எத்தனை முறை உங்கள் வேலை செய்யும் இடத்தை மாற்றினாலும் இந்தக் கணக்கு எண்ணை நிரந்தரமாக வைத்துக்கொள்ளலாம்.
  • நீங்கள் பி எப் கணக்கு வைத்துள்ள வரை அல்லது நீங்கள் பணி செய்யும் காலம் வரை அது உபயோகப்படும். பெருமளவிலான தொழிலாளர்கள் தற்போது இந்த எண்ணைப் பெற்றுவிட்டனர். நாம் இப்போது இந்த எண்ணைக் கொண்டு கணக்கிலுள்ள இருப்பை அறிந்து கொள்ளலாம்.
  • இ-பிஎப் கணக்கு இருப்பை எவ்வாறு தெரிந்து கொள்வது? இதைச் செய்ய நாம் முதலில் இந்த இணைய முகவரிக்குச் செல்லவேண்டும். பின்னர் அந்தத் தளத்தில் வலதுபுறத்தில் உள்ள உள்நுழை (லாகின்) பகுதியைக் காணலாம்.
  • அதன் கீழ் உங்களுடைய கணக்கை செயல்படவைக்கும் தொடர்பு இருப்பதைக் காணலாம். "activate your login" என்ற இந்தத் தொடர்பை அழுத்திய பின் "நான் அனைத்து அறிவுறுத்தல்களையும் புரிதுள்ளேன்" என்பதைக் குறிக்கும் "I have understood the instructions" என்ற தகவல் தேர்வு செய்யும் வசதியோடு (டிக் செய்தல்) திரையில் வருவதைக் காணலாம்.

பூர்த்தி செய்வதற்கான சில அறிவுறுத்தல்கள்

  1. உங்கள் பொதுக்கணக்கு எண்ணை பதிவு செய்யவும் Enter the Universal Account Number or UAN
  2. உங்கள் அலைபேசி எண்ணை பதிவு செய்யவும் Enter Your Mobile Number
  3. மாநிலம் மற்றும் அலுவலகத்தைத் தேர்வு செய்யவும் Select the state and the office.
  4. இங்கே தரப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் பதிவு செய்யவும் Please type the characters shown in the box அதன் பின்னர் உங்களுடைய அலைபேசியில் (மொபைலில்) உங்களுக்கான கடவு எண் (பின் நம்பர்) அனுப்பப்பட்டுக் கிடைக்கும். அதனைக் கொண்டு நீங்கள் உங்களுக்கு விருப்பமான புதிய கடவுச்சொல்லை (password) தேர்வு செய்து உங்கள் யுஏஎன் குறியீட்டை அல்லது எண்ணை உபயோகிப்புப் பெயராக (லாகின் நேம்) பயன்படுத்தி உங்களுடைய யுஏஎன் கார்டையும் பி எப் கணக்குப் புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்யவும் பி எப் கணக்குப் பரிமாற்ற விவரங்களைக் காணவும் செய்யலாம். கடைசியாக, நீங்கள் உங்கள் கணக்கின் இருப்பைத் தெரிந்து கொள்வதற்கு முன் இந்த யுஏஎன்-எண் மற்றும் பி எப் விவரங்கள் பெறுவது மிகவும் முக்கியம். நீங்கள் பணிசெய்யும் நிறுவனம் உங்களுக்கு இந்த எண்ணைப் பெறுவதற்கான முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றால் நீங்கள் அவர்களை உடனடியாக அதனைச் செய்யச் சொல்லலாம்.

ஆதாரம் : வருங்கால வைப்புநதி ஆணையம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate