অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மின் அணுத் தீர்வு முறை - வரவு

மின் அணுத் தீர்வு முறை - வரவு

(1) மின் அணுத் தீர்வு (வரவு) முறை என்றாலென்ன?

இது ஒரு கொடுப்பு முறை. நிறைய பேருக்குக் கொடுக்க வேண்டிய (வட்டி, பங்குத் தீர்வு போன்றவை) பெரிய நிறுவனங்கள் காகிதக் காசோலைகள் போன்றவற்றை அச்சிட்டு வழங்காமல், மின் அணு மூலம் எளிதாக, துரிதமாகத், துல்லியமாக தங்களது வாடிக்கையாளர்கள் / முதலீட்டாலர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் முறையே மின் அணுத் தீர்வு (வரவு) முறை எனப்படும்.

(2) தற்போது நடைமுறையிலுள்ள முறை என்ன? அதில் உள்ள கஷ்டங்கள் என்ன?

அடிக்கடி செய்யப்பட வேண்டிய மொத்த கொடுப்புகள் எண்ணிக்கையில் ஏராளமாக இருக்கும் வட்டி / பங்குத் தீர்வு காசோலைகள் / ஆணைகள் ஏராளம் அச்சிடப்பட்டு (விலை உயர்ந்த காந்தமை காசோலைகளில்), தபாலில் (அநேகம் கூடுதல் செலவாகும் பதிவுத் தபாலில்) அனுப்பப்படும். பின்னர் நிறுவனத்தின் வங்கியும், வாடிக்கையாளர்களின் வங்கிகளும் தங்கள் தங்கள் கணக்குகளையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இதில் உண்டாகும் இன்னல்கள்:

  • அச்சிடுதல், அனுப்புதல், கணக்குகளைச் சரிபார்த்து பொருத்துதல் போன்ற நிர்வாகச் செலவுகள் கூடுதலாகும்.
  • காசோலைப் பரிவர்த்தனையில் ஏராளமான காசோலைகளை ஒரே சமயத்தில் நுழைத்து நடைமுறைச் சிக்கல் ஏற்பட வாய்ப்பு
  • போக்குவரத்தில் காசோலைகள் தொலைதல், மோசடியாகப் பணம் பெறல்
  • வாடிக்கையாளரும் காசோலைகள் வந்ததா இல்லையா என்று வரவு வைக்க அதைச் செலுத்த வேண்டும்.
  • நிறைய காசோலை போன்ற உபகரணங்கள் இல்லாததால், பிழை ஏற்பட பெரும் வாய்ப்பு அலுப்பூட்டும் பணி, பரிவர்த்தனையில் சிரமங்கள் என்று பல இன்னல்கள்

(3) பெரிய நிறுவனங்களுக்கு இம்முறை எங்கனம் உதவுகிறது?

  • அச்சிடலும் அனுப்பலும் இல்லாததால் ஏற்படும் குறைவான நிர்வாகச் செலவு
  • அனுப்புதலில் தொலைதலும் மோசடி பயன்பாடும் இல்லதிருத்தல்
  • குறிப்பிட்ட ஒரு தேதியில் மொத்தப் பணமும் அளிக்கப்படுவதால் பண நிர்வாகம் எளிதாகிறது
  • நல்ல வாடிக்கையாளர் / முதலீட்டாளர் சேவை உறுதியாகிறது
  • உலதத்தரம் வாய்ந்த பெரிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் / முதலீட்டாளர்களுக்கு வழங்குவது போல் தரமான வழங்குதலை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்துவது.

(4) பயன்பெறும் வாடிக்கையாளருக்கு என்ன நன்மைகள்?

  • குறிப்பிட்ட தேதியில் பணவரவு
  • சிரமமே இல்லாத வரவு – காசோலை உபகரணங்களைச் செலுத்த வங்கிக்கு வரவேண்டிய அவசியமில்லாமல் வரவு
  • காசோலை உபகரணங்கள் அனுப்புதலில் தொலையாமல் இருத்தலும் மோசடிப் பயன்படுத்தல் இல்லாமலிருத்தல்

(5) முதலீட்டாளர் / வாடிக்கையாளர் யாரால் தன் கணக்கு வரவு வைக்கப்பட்டது என்பதை எப்படித் தெரிந்து கொள்வார்?

உபயோகிக்கும் நிறுவனம் எவ்வளவு தொகை தங்கள் வாடிக்கையாளர் / முதலீட்டாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பது அவர்களது பொறுப்பு. வரவு கணக்குகளில் வைக்கப்பட்ட பின் பயன்பெறும் வாடிக்கையாளர் / முதலீட்டாளர் கணக்கு புத்தகத்தில் ECS  என்று எழுதி நிறுவனத்தின் பெயரையும் எழுதி வரவுத் தொகை குறிப்பிடப் பட்டிருக்கும்.

(6) தனிநபருக்கான நடவடிக்கையில் வழங்கப்படும் தொகைக்கு ஏதேனும் வரையறை உண்டா?

இல்லை. தனி நபருக்கான நடவடிக்கையில் எந்தவித மதிப்பு-வரையறையும் கிடையாது.

(7) ஒரு நிறுவனம் 10 இடங்களில் கொடுக்க வேண்டியிருந்தால் 10 இடங்களிலுள்ள பரிவர்த்தனை மையங்களிலும் கொடுக்க வேண்டுமா?

பல இடங்களில் கொடுக்க வேண்டியிருந்தாலும், ஒரு இடத்தில் உரிய ஆவணங்களைச் செலுத்தினால் போதும். மின் அணுத் தீர்வு (வரவு)க்கு இது பொருந்தும்.

(8) முதலீட்டாளர்கள் / பயன்பெறுவோர் சேருமிடம் வங்கி / கிளைகளுக்குக் கட்டணம் ஏதேனும் செலுத்த வேண்டுமா?

சேருமிடம் வங்கியின் கிளைகள், முதலீட்டாளர்கள் / வாடிக்கையாளர்கள் / பயன் பெறுவோர் கணக்கில் வரவு வைக்க எக்கட்டணமும் வசூலிக்க மாட்டார்கள்.

(9) முதலீட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவது அவசியமா?

ஆம். இதற்காக மாதிரி ஒப்புதல் கடிதம் தயாரிக்கப் பட்திருக்கிறது. இது ஒரு பெரிய வேலை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒருமுறை விபரங்கள் சேகரிக்கப்பட்டு பட்டியலிட்ட பிறகு, இது சுலபமாகிவிடுகிறது. இந்தியப் பத்திர பங்குப் பரிவர்த்தனை குழுமத்தின் வழிகாட்டுதல்களில், முதலீட்டாளர் தனது வங்கிக் கணக்கு விபரங்களை விண்ணப்பங்களில் தெரிவிக்கிறார். அவர்கள் அளிக்கும் கணக்கு எண், வங்கி / கிளை பெயர் வட்டி / பங்குவீத ஆணை / காசோலைகளில் அச்சிடப்படுகிறது. இந்த நிலையில் ஒப்புதல் பெறுவது என்பது இவ்வளவு தொல்லைகளைத் தராது.

(10) எப்போது நிறுவனங்கள் மின் அணுத் தீர்வு (வரவு) முறையில் சேர வேண்டும்?

அடிக்கடி கொடுக்கப்பட வேண்டிய தொகை அதிக அளவில் ஒரு நிறுவனத்திற்கு இருக்குமானால் மற்றும் பயன்பெறுவோரில் அநேகம் பேர் நான்கு பெரிய நகரங்களில் வசிக்கிறார்கள் என்றால், இதுவே மின் அணுத் தீர்வு (வரவு) முறையில் சேரும் தருணம் ஆகும்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/19/2022



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate