பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / தேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம்
பகிருங்கள்

தேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம்

தேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

எட்டு முதல் பன்னிரண்டு வயதுள்ளவர்களிடையே பொதிந்துள்ள விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து அவர்களைச் சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகளாக வளர்த்தெடுக்கும் திட்டமே தேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம். மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

சிறப்பு அம்சங்கள்

மானுடவியல் சார்ந்த, இயற்கையிலேயே அமைந்த உடல்திறன் வாய்க்கப் பெற்றவர்களையும், விளையாட்டு திறன் இயல்பாகவே அமைய பெற்றவர்களையும், 8-12 வயதுள்ள பிரிவினரிடையே கண்டறிந்து (நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் சேர்த்துக்கொள்ளத் தகுதியானவர்கள்) பயிற்சியைத் தொடங்குதல்.

மாவட்ட விளையாட்டுப் பள்ளிகள், மத்திய விளையாட்டுப் பள்ளிகள், தேசிய விளையாட்டுப் பள்ளிகள்/ அகடமிகள் ஆகியவற்றில் சேர்ந்து பயிலும் இளம் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துச் சாதனைகள் புரிய வைத்தல்.

பயன்கள்

இந்த நடவடிக்கைகளால், நம்நாட்டின் இளம் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இந்தியாவிற்க்கேயான விளையாட்டுகள் அதிலும் குறிப்பாக கிராமப்புற விளையாட்டுகள் ஊக்கம் பெற்று வளர்ச்சி அடையும். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நமது விளையாட்டு வீரர்கள் வெற்றிகளை ஈட்டிவரும் போது, அவர்களுடைய மாநிலமும், இந்த நாடும் பெருமை பெறும்.

திட்ட காலம்

நம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் எல்லாப் பள்ளிகளிலும் 2015-16 ஆம் ஆண்டு முதல் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தேசிய விளையாட்டுத் திறன் தெரிவு நுழைதளம்

நம் நாட்டின் இளம் தலைமுறையினரிடையே பொதிந்து கிடக்கும் விளையாட்டுத் திறனைக் கண்டறிவதற்காக, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இணைய நுழைவுதளம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையகத்தின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெற விரும்புகிற இந்தியக் குடிமக்கள் யாவரும் இந்த தளத்தின் வழியாகத் தமது விண்ணப்பங்களை அனுப்பலாம். தகுதியுள்ள இளைஞர்கள், தெரிவுப் போட்டிகளுக்கு அழைக்கப்படுவார்கள். அந்தப் போட்டிகளின் அடிப்படையில் திட்டங்களின் பயனாளிகள் தெரிவு செய்யப் படுவார்கள்.

மூன்று எளிய நிலையில் பதிவு செய்யலாம்.

முதல்நிலை - ஆன்லைன் பதிவு

மாணவர்/மாணவி 18 நிரம்பாதவராக இருந்தால் பெற்றோரே பதிவு செய்யலாம்.

இரண்டாம்நிலை - தன்விவரப்பதிவை உருவாக்குதல்

இதுமுக்கியமான சட்டமாகும். ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் பல்வேறு திட்டங்களில் சேர்வதற்காக விண்ணப்பிக்கிறார்கள். அவர்களில் இருந்து கழித்துக்கட்டிய பிறகு ஒரு பட்டியல் தயாரிக்கப்படும். எனவே கழித்து கட்டப்படாதவாறு, தம்மிடம் உள்ள எல்லா விவரங்களையும் பதிவிடவேண்டும் குறிப்பாக ஏற்கனவே பங்கேற்றுள்ள எல்லாப் போட்டிகளின் விவரங்களையும் தவறாமல் பதிவிடவேண்டும்.

மூன்றாம்நிலை - திட்டத்தில் சேர விண்ணப்பித்தால்

தன்விவரப்பதிவை உருவாக்கிய பின்னர், இந்திய விளையாட்டு ஆணையகம் செயல்படுத்துகின்ற,  அவரவருக்குத் தகுதியுடைய திட்டத்தில் சேர விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம் : விளையாட்டுத்திறன் தெரிவு வலைத்தளம்

3.07142857143
நெவிகடிஒன்
Back to top