பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான நிபந்தனைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான நிபந்தனைகள்

பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறையின் உரிய முன் அனுமதி பெற வேண்டும். சுற்றுலாவின் போது ஏற்படும் உயிரிழப்பிற்குப் பள்ளி தாளாளர் அல்லது முதல்வரே முழுப் பொறுப்பாவார்.

 • சுற்றுலா செல்ல உத்தேசித்துள்ள நாளுக்கு 2 மாதங்களுக்கு முன்னதாகவே அதற்கான திட்டமிடல் பணி தொடங்கப்பட வேண்டும். சுற்றுலா செல்லவுள்ள இடம் மற்றும் நாட்கள் குறித்த அட்டவணை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் திட்டமிடப்பட வேண்டும். சுற்றுலாவின் கால அளவு எக்காரணம் கொண்டும் 4 நாட்களுக்கு மிகக்கூடாது.
 • பருவநிலை மற்றும் வானிலை அறிக்கை ஆகியவற்றைக் கொண்டு சுற்றுலாவிற்கான இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். சுற்றுலா செல்லவுள்ள நாள், இடம் மற்றும் வாகனம் முடிவு செய்யப்பட்டவுடன் அதுகுறித்து சுற்றுலாவிற்கு வரும் அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரிடமும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
 • சுற்றுலா செல்லவுள்ள இடம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அந்த இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து வகுப்பு எடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அன்று செல்லவுள்ள இடம், அங்கு எவ்வாறு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதையும், அங்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் தற்கொத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்.
 • சுற்றுலா செல்லவுள்ள இடத்தில் ஏதேனும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படின் அதை ஒவ்வொரு மாணவரும் எடுத்துச் செல்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
 • 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பாதுகாப்பாளராகச் செல்ல வேண்டும். மாணவிகள் சுற்றுலாவில் பங்குபெற்றால் 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை வீதம் உடன் செல்ல வேண்டும்.
 • ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி மற்றும் கடல் போன்ற நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது.
 • மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பேருந்து மூலம் சுற்றுலா செல்லும் போது பேருந்து முறையாகத் தரச்சான்று பெற்ற வாகனமா என்பதையும், போதிய அனுபவமுள்ள ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
 • பேருந்து மூலம் செல்லும் போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துப் பயணம் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
 • சுற்றுலா செல்லும் மாணவர்களுடன் முதலுதவி பயிற்சி பெற்ற ஒரு ஆசிரியர் உடன் செல்ல வேண்டும். முதலுதவிக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் உடன் கொண்டு செல்லப்பட வேண்டும்.
 • சுற்றுலா சென்ற இடத்தில் எந்தச் சூழ்நிலையிலும் மாணவர்களைத் தனியே செல்லவோ அல்லது ஆசிரியரின் துணையின்றி விளையாடவோ அனுமதிக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.
 • சுற்றுலாவின் ஒருபகுதியாக மலையேற்றம் இருப்பின் அதற்கு உரிய வனத்துறை அனுமதியுடன், அதற்கு உரிய வழிகாட்டியுடன் செல்ல வேண்டும். சுற்றுலா நாட்களில் மாணவர்களுடன் செல்லும் ஆசிரியர்கள், பள்ளி முதல்வருக்கு செல்போன் மூலம் அவ்வப்போது சென்றுள்ள இடம், உணவு மற்றும் தங்கும் வசதி குறித்து உடனுக்குடன் தெரிவித்திட வேண்டும்.
 • சுற்றுலாவின் போது சுகாதாரமான உணவை வழங்க வேண்டும். தெருவோரங்களிலும் நடைபாதைகளிலும் விற்கப்படும் சிற்றுண்டிகளை மாணவர்கள் சாப்பிடாமல் இருக்க அறிவுரை வழங்க வேண்டும்.
 • சுற்றுலா நாட்களில் இரவில் தங்கும் இடம் பாதுகாப்பானதாகவும், விலங்குகள், விஷ ஜந்துக்கள் ஆகியவற்றால் பாதிப்பில்லாதவாறும், மருத்துவ வசதி அருகில் உள்ளவாறும் இருக்க வேண்டும்.
 • சுற்றுலா செல்லும் போது பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு அவர்களுடைய பெயர், பெற்றோர் பெயர், இல்ல முகவரி, பள்ள முகவரி, பெற்றோர் செல்போன் எண், ரத்த வகை போன்ற விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை வழங்கி அதை மாணவர்கள் அணிந்துள்ளதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
 • துறையின் முன் அனுமதியின்றி சுற்றுலா அழைத்துச் செல்லக்கூடாது. சுற்றுலா செல்வதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்னதாகவே அனுமதி வேண்டி துறை அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 • மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவரும் மாணவர் உரிய மருத்துவரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது.
 • சுற்றுலாவின் நோக்கம் கல்வி சார்பானதாக இருக்க வேண்டும். சுற்றுலா செல்வதால் கற்றல் கற்பித்தல் பணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது.
 • சுற்றுலா லாப நோக்குடன் இருக்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் பெற்றோர்களையோ மாணவர்களையோ கண்டிப்பாக சுற்றுலாவிற்கு வர வேண்டும் என்று நிர்பந்தம் செய்யக்கூடாது.

இந்த அறிவுரைகளை அனைத்துத் தனியார் உதவி பெறும், சுயநிதி பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆதாரம் : தி இந்து நாளிதழ்

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top