অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய புவி அமைப்பியல் ஆராய்ச்சி நிறுவனம், CSIR -ன் ஒரு சட்டப்பூர்வ ஆய்வகமாகும். புவி அறிவியலின் பலவித அம்சங்களை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில், கடந்த 1961ம் ஆண்டு இந்த நிறுவனம் ஐதராபாத்தில்  ஏற்படுத்தப்பட்டது. ஹைட்ரோ கார்பன்கள், மினரல்கள், நிலத்தடி நீர் ஆகிய துறைகளில் இந்த நிறுவனம் முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்கிறது. இதைத்தவிர, ஜியோபிசிக்ஸ் பொறியியல், நிலநடுக்கவியல்(Seismology), ஜியோ-டைனமிக்ஸ் மற்றும் ஜியோ-என்வைரன்மென்ட்(Geo-Environment) ஆகிய படிப்புகளிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

இந்நிறுவனத்தில்(National Geophysical Research Institute - NGRI) மொத்தம் 550 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 150 பேர் உயர்தரமிக்க விஞ்ஞானிகள். இந்த விஞ்ஞானிகளுக்கு உதவிபுரிய, தகுதிபெற்ற மற்றும் போதுமான உதவியாளர்கள் இருக்கிறார்கள்.

இந்நிறுவனத்தின் சாதனைகள்

 • வான்வழியாக பயணம் செய்து, 2,50,000 வரிசை கிலோ மீட்டர்கள் புவிஅமைப்பியல் ஆய்வை முடித்துள்ளது.
 • 1500க்கும் மேற்பட்ட கிராமங்களில், தொழில்நுட்பத்தின் மூலம், நிலத்தடி நீர் இருப்பதற்கான இடத்தை பரிந்துரைத்துள்ளது.
 • எண்ணெய் வளத்தைக் கண்டறியும் பொருட்டு, குஜராத்தின் செளராஷ்டிரா மற்றும் கட்ச் படுகைகளில் ஒருங்கிணைந்த புவி அமைப்பியல் ஆய்வை நடத்தியுள்ளது இந்நிறுவனம்.
 • படுக்கைப் பாறை(Bed Rock) மற்றும் தொல்பொருள் ஆய்வுகளை நடத்தியுள்ளது.
 • புவிஅமைப்பியல் உபகரணங்களை, வணிகரீதியான உற்பத்திக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்துகொள்வதற்கான உதவிகள்.
 • வாயு ஹைட்ரேட்டுகள் பற்றிய ஆரம்பநிலை ஆய்வுகள்
 • ராஜஸ்தான் மாநிலத்தில் துத்தநாகம் கண்டுபிடிப்பதற்கான, புவிஅமைப்பியல் மற்றும் புவிரசாயனம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொண்டது.

இந்த நிறுவனத்தின் அறிவியல் பங்களிப்புகள், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பத்மஸ்ரீ போன்ற தேசிய அளவிலான விருதுகள் உட்பட, பலவித அறிவியல் சார்ந்த விருதுகளையும், உதவித்தொகைகளையும் பெற்றுள்ளார்கள். மேலும், வேறு ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்தும் NGRI விஞ்ஞானிகள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இவைத்தவிர, வெளிநாடுகள் வழங்கும் விருதுகளையும் பெற்றுள்ளனர்.

இந்நிறுவனத்திலுள்ள வசதிகள்

 • பலகூறு ஐசோடோப் ஆய்விற்கான வசதி இங்குள்ளது.
 • எலக்ட்ரோ மீட்டர்(Electro meter), சென்சார், சர்வதேச சோதனை இயந்திரம்(Universal Testing Machine) போன்ற பலவித வசதிகளைக் கொண்ட உயர் அழுத்த ஆய்வகம் இங்குள்ளது.
 • ஹைட்ராலிக்(Hydraulic) சாதனத்துடன் கூடிய அளவீட்டு வசதிகள் உள்ளன.
 • பலவித வசதிகளுடன் கூடிய பாறை காந்த ஆய்வகம்(Rock Magnetism Laboratory) உள்ளது.
 • இந்திய தீவுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பவளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் உயர் தீர்வு பாலியோகிளைமேடிக் ஆய்வுகள் இங்குண்டு.
 • புவியீர்ப்பு தொடர்பான ஆய்வகம்

இவைத்தவிர, மேலும் பலவிதமான ஆய்வுகளை மேற்கொள்ளத்தக்க ஆய்வகங்கள் இங்கே உள்ளன. இவைத்தவிர, புவி அமைப்பியல் தொடர்பான பலவிதமான ஆய்வுகளை நடத்தக்கூடிய வசதிகளும் இங்கு உள்ளன.

பிஎச்.டி படிப்புகள்

 • இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன.
 • புவி அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி பட்டம்(முதல் வகுப்பில்) பெற்று, CSRI-UGC நடத்தும் NET தேர்விலும் தேர்ச்சிப் பெற்ற ஒருவர், இந்நிறுவனத்தின் பிஎச்.டி. ஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம். DST INSPIRE உள்ளிட்ட ஏஜென்சிகளில் உதவித்தொகை பெற்று வருபவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். CSIR ஆய்வகங்களில் பணிபுரியும் ப்ராஜெக்ட் உதவியாளர்கள், குறைந்தபட்சம் 1 வருடம் ஆராய்ச்சி அனுபவம் இருந்தால், இதற்கு விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்பத்தினை, csir-phd.csio.res.in என்ற இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் அனுப்ப வேண்டும். CSIR ஆய்வகங்களில் திட்ட உதவியாளர்களாக பணிபுரிபவர்கள், தங்களுடைய ஆராய்ச்சி நோக்கங்கள் மற்றும் திட்ட தலைவரின் பரிந்துரைகள் போன்றவைகளை Dr R.K. Tiwari, Coordinator-AcSIR, (CSIR-NGRI) Email: tiwari_rk@ngri.res.in, acsir@ngri.res.in Tel.040-23434648, 23434624 Fax 040-23434651 என்பவருக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்.
 • விண்ணப்பங்கள் வடிகட்டப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், நேர்காணல் மூலமாக இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு சென்று வருவதற்கான பயணப்படி மற்றும் தினப்படி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
 • ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள், ஜியோபிசிக்ஸ், ஜியாலஜி, ஜியோகெமிஸ்ட்ரி மற்றும் ஜியோக்ரோனாலஜி(Geochronology) உள்ளிட்ட பல துறைகளை சார்ந்ததாக இருக்கலாம்.
 • இந்நிறுவனம் வழங்கும் பிஎச்.டி. ஆய்வைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள www.ngri.org.in என்ற இணையதளம் செல்லவும்.


© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate