பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / முன்பள்ளிக் கல்வி / முன்பள்ளிக் குழந்தைகளை நடித்தல் மற்றும் நடனத்தில் ஈடுபடுத்துதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முன்பள்ளிக் குழந்தைகளை நடித்தல் மற்றும் நடனத்தில் ஈடுபடுத்துதல்

முன்பள்ளிக் குழந்தைகளை நடித்தல் மற்றும் நடனத்தில் ஈடுபடுத்துதலினால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நாடகம் நடித்தல்

குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பல செயல்களில் பங்கேற்கவும் இது உதவுகிறது. நாடகம், சங்கம், கூட்டம், நாடகம் நடித்துப் பார்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் போது குழந்தைகளின் ஆர்வத்தை திரும்பப் பெறவும் மற்றும் தங்கள் சுய மரியாதையை வளர்க்கவும் உதவுகிறது. ஒரு செயலைப் பற்றி விவாதிப்பதற்கு நாடகம் ஆரம்பப் புள்ளியாக உள்ளது. குழந்தைகள் நாடகத்திலிருந்து அதன் அடிப்படை மற்றும் கதாபாத்திரங்களிலிருந்து புதிய நாடகங்களை உருவாக்குகிறார்கள். எடுத்துக்காட்டாக பூனையும் எலியும் பற்றிய நாடகத்தில், சில மாணவர்கள் ஒன்றாக வட்டமாக நின்று ஒரு குழுவினை உருவாக்குகிறார்கள். அந்த வட்டத்தின் நடுவில் ஒருவர் எலியாக நடித்து நடுவில் நிற்பர். குழுவில், வட்டத்தின் வெளியே நிற்கும் ஒருவரை பூனை போல் பாவித்து விளையாடும் போது, பூனை எலியை துரத்திச் செல்வதைப் போல் நடித்து விளையாடுகிறார்கள். குழு உறுப்பினர்கள் பூனை எலியை பிடிப்பதைத் தடுக்கிறார்கள். இவ்வாறு நடித்து விளையாடும் போது எலியைப் பற்றியும் பூனையைப் பற்றியும் அறிவதோடு குழு விளையாட்டுப் பற்றியும் கற்க வாய்ப்பளிக்கிறது.

முன்பள்ளிக் குழந்தைகளுக்கு நாடக வகுப்பு ஏற்பாடு செய்தல்

 • முன்பள்ளிக் குழந்தைகள் சிரத்தையுடன் உற்று நோக்கும் குணம் உடையவர்கள். அனைத்து புலன்களையும் பயன்படுத்தி எந்த செயலையும், எல்லாச் செயலையும் பற்றிய செய்திகளையும் சேகரிப்பர். அவர்கள் பல செயல்களை விளையாட்டுக்கள் மூலமும் மற்றும் நாடகத்தின் மூலமும் கற்கின்றனர். முன் பள்ளிக் குழந்தைகள் பிறரைப் போல பாசாங்கு செய்து விளையாடுவதை அதிகம் விரும்புகிறார்கள். இது அவர்களின் ஆர்வத்தை நிறைவேற்றுவதுடன் கற்பிப்பதன் நோக்கத்தையும் நிறைவேற்ற முடிகிறது.
 • நாடக வகுப்பு முன் பள்ளிக் குழந்தைகளுக்குப் பின்வரும் வழியில் உதவுகிறது
 • ஆக்கபூர்வமாக அறிய ஆவலுடைய குழந்தைகளின் மனதிற்கு நாடகத்தின் வழியாகத் தங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பற்றியும் வெளிப்படுத்த முடிகிறது.
 • நாடகத்தின் மூலம் குழந்தைகள் ஆசிரியர்களோடு கலந்துரையாடி வேலை செய்யவும், தங்கள் வயதை ஒத்தவர்களுடனும் எளிதாக ஒன்றிப் போகவும் உதவுகிறது.

நாட்டியம்

ஒவ்வொரு மனிதனும் நாட்டியத்தின் மூலம் கற்கலாம். ஒவ்வொரு குழந்தையும் நடிப்பதற்கான சந்தர்ப்பத்திற்குத் தகுதியுடையவர்கள். சிறுகுழந்தைகள் மற்றும் குறுநடை போடும் குழந்தைகளுக்கு முறையான ஆக்கபூர்வமான நடன அசைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் போது இயற்கையாகவும், எளிதாகவும், தசை மற்றும் இயக்க ஒருங்கிணைப்புக்கள் ஏற்படுகிறது.

அடிப்படை நடன ஏற்பாடு ஒரு நல்ல பாடம் சார்ந்த அனுபவத்தைக் கொடுக்க முடியும். அசைவுகள், பாடல்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றின் மூலம் குழந்தைகள் தசை வளர்ச்சி, சகிப்பு திறன், அறிவு வளர்ச்சி மற்றும் மன எழுச்சி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

புதுமையான ஆக்கபூர்வமான நடனம்

ஆக்கபூர்வமான நடனம் குழந்தைகளுக்கு ஒட, விளையாட, சாய, குதிக்க, திரும்ப போன்ற பல செயல்கள் செய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கிறது.

 • புதுமையான நடனம் வாய்மொழியாக பாடல்கள் மற்றும் விளையாட்டுக்கள் மூலமும் நடைபெறுவதால் புதிய மொழியினைக் கற்கவும் மொழி வளர்ச்சிக்கும் உதவுவதோடு, உற்சாகத்திற்கும் வழிவகுக்கும்.
 • பத்து வாரம் நடன வகுப்பிற்குச் சென்ற முன்பள்ளிக் குழந்தைகள் கற்றலுக்குத் தேவையான அடிப்படை அனைத்தையும் கற்பதால் ஆரம்பப்பள்ளிக் கல்விக்கு எளிதில் தயாராகிறார்கள்.
 • குழந்தைகளுக்குப் புதுமையான எண்ணங்களைப் புகுத்தி சமுதாய முன்னேற்றத்திற்கு உதவவும் கற்க முடிகிறது.
 • எந்த ஒரு கல்வி முன்னேற்பாட்டு செயல்களிலும் உறுதியான நிலை என்பது ஒரு முக்கிய சாவியாக உள்ளது. எனவே, குழந்தைகள் புதுமையான நடனத்தில் நிலையாகக் கவனம் செலுத்துவார்களேயானால் கருத்தை புரிந்துகொண்டு சொற்களை உருவாக்குதலுக்கு போதுமான சந்தர்ப்பம் அளிப்பதால் செயல்களை எளிதாக புரிந்துக் கொள்கிறார்கள்.

முன்பள்ளிக் குழந்தைகளுக்கு ஆக்கபூர்வமான நடனத்தினால் ஏற்படும் நன்மைகள்

 • தன் உடலைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுவதால் எதனையும் எளிதாக, இயற்கையான ரசனையோடு ஏற்கிறார்கள்.
 • இயக்க ஒருங்கிணைப்பிற்கும், நரம்புகளின் இயக்கத்திறனுக்கும், எளிதாக வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையையும் பெறுகிறார்கள்.
 • சமுதாய மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவுகிறது.
 • தன்னைப் பற்றிய உயர்ந்த மதிப்பையும் கண்ணியத்தையும் வளர்க்க முடிகிறது.
 • மொழி வளர்ச்சியும், கவனித்து உற்று நோக்கும் திறனும் மேம்படுத்த உதவுகிறது.
 • பாடப்புத்தகங்களில் கணிதம், போன்றவற்றை கற்கவும், போட்டுப் பார்க்கவும், எழுத்துக்களைப் பிரித்துக் கூறவும், அறிவியலையும் புரிந்து கொள்ள வழி செய்கிறது.
 • பள்ளிக்குத் தேவையான வகுப்பறைத் திறமைகளான, குறிப்புக்களைப் பின்பற்றுதல், கவனித்தல், பகிர்ந்து கொள்ளுதல், மற்றவர்களுடன் இணக்கமாக இருத்தல், அவர்களின் தேவைகள் மற்றும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
 • தனிநபரிடமும், குழுவினரிடமும் ஆக்கபூர்வமான பொறியினை உருவாக்க ஆரம்பநிலையிலேயே உதவுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

3.0625
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top