பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பொழுதுகண்டிரங்கல்

பொழுதுகண்டிரங்கல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கற்பியல்

பொழுதுகண்டிரங்கல்

1221 பொழுதொடு புலந்து சொல்லியது. பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய்.

விளக்கம்

(முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். 'வாழி' என்பது குறிப்புச் சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை" (கலித். நெய்தல். 2 ) என்றார்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். 'வேலை' என்பதற்கு வேலாயிருந்தாய் 'என்பாரும்' உளர்.) ---

1222. தன்னுட்கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது. மருள் வாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை - நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம் கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணைபோல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக.

விளக்கம்

(மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை,' என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.) ---

1223. ஆற்றல்வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்துவந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்து பாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒருகாலைக்கு ஒரு கால் மிக வாரா நின்றது.

விளக்கம்

(குளிர்ச்சி தோன்ற மயங்கிவரு மாலை என்னுஞ் செம்பொருள் இக் குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை?' என்பது குறிப்பெச்சம்.) ---

1224. இதுவும் அது. மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது.

விளக்கம்

(ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனியான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.) ---

1225. இதுவும் அது. காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள், யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது?

விளக்கம்

(கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்?' என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.) ---

1226. இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை?' என்றாட்குச் சொல்லியது.

விளக்கம்

மாலை நோய் செய்தல் - முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ் செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ் செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் - காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். 'இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்; அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்;' என்பதாம்.) ---

1227. மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை?' என்றாட்குச் சொல்லியது. இந்நோய் - இக்காம நோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து, மாலை மலரும் - மாலைப் பொழுதின் கண் மலராநிற்கும்.

விளக்கம்

(துயிலெழுந்த பொழுதாகலின் கனவின் கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும், தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகா நின்றது,' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.) ---

1228. இதுவும் அது. ஆயன் குழல் - முன்னெல்லாம் இனிதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும் படை - அது வந்து என்னைக் கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று.

விளக்கம்

(பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது?' என்பதாம்.) ---

1229. பதிமருண்டு பைத லுழக்கு

விளக்கம்

('மதி மருள' என்பது, 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலைகலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.) ---

1230. இதுவும் அது. மாயா என் உயிர் - காதலர் பிரிவைப் பொறுத்த இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருண்மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது.

விளக்கம்

('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார்; காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை,' என்பதாம்.) ---

ஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

Filed under:
3.26315789474
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top