பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / ஆறுகளை பாதுகாக்க ஒரு படிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆறுகளை பாதுகாக்க ஒரு படிப்பு

ரிவர் கன்சர்வேஷனிஸ்ட் படிப்பு பற்றிய தகவல்.

ரிவர் கன்சர்வேஷனிஸ்ட் படிப்பு

இயற்கை சூழ்நிலைகளை சமமாக வைத்திருக்க ஆறுகளின் பங்கு முக்கியமானது. நதிகளை பாதுகாப்பதன் மூலம் இயற்கை சமநிலையை பேணலாம். அந்த வகையில் ரிவர் கன்சர்வேஷனிஸ்ட் படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நாட்டில் ஓடும் நதிகளை பாதுகாக்க வேண்டியது ரிவர் கன்சர்வேஷனிஸ்டுடைய முக்கியப் பணி. என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா பணியாளராக பொதுமக்களிடம், நதிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அரசாங்கத்தின் கவனத்திற்கு நதிகளின் நிலையை கொண்டு செல்வதும் ரிவர் கன்சர்வேஷனிஸ்டுகள் தான்.

சுற்றுச்சூழல் இன்ஜினியர்கள், தண்ணீர் மற்றும் காற்றில் மாசு ஏற்படும் காரணத்தை கண்டறிந்து தடுக்கும் பணியை செய்கிறார்கள். எனவே ஹைட்ராலஜிஸ்ட், வாட்டர் இன்ஜினியர்களும் ரிவர் கன்சர்வேஷனிஸ்ட் ஆகலாம். அது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் சட்டங்களை பயில்வது முக்கியம்.

ஏனெனில், நதி நீர் மாசுபடுதல் போன்ற பிரச்னைகளில் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க உதவியாக இருக்கும்.

தகுதிகள்

மக்களிடையே நதிகளின் நிலை குறித்து விளக்கி, அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பேச்சாற்றல் தேவை. தலைமை பண்பு, சாதுர்யமாக செயல்படுவதற்கான புத்திகூர்மை ஆகியவை ரிவர் கன்சர்வேஷனிஸ்ட்டுகளுக்கு தேவை. இயற்கை குறித்து, தெளிவான புரிதல் இருத்தலும் அவசியம்.

இந்த துறையில் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையும், என்.ஜி.ஓ., பணியாளர்கள் ரூ.10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையும் மாத வருமானம் பெறலாம்.

கல்வி நிறுவனங்கள்

இந்திய சட்ட மையம், புதுடில்லி (என்விரான்மென்டல் லா அன்டு மேனேஜ்மென்ட்முதுநிலை டிப்ளமோ படிப்பு)

டில்லி பல்கலைகழகம் (எம்.எஸ்.சி., என்விரான்மென்டல் பயாலஜி)

டில்லி தொழில்நுட்ப பல்கலைகழகம் (எம்.டெக்., இன் சிவில் இன்ஜினியரிங்)

ஸ்கூல் ஆப் என்விரான்மென்டல் சயின்ஸ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (எம்.எஸ்.சி., என்விரான்மென்டல் சயின்ஸ்)

ஐ.ஐ.டி., ரூர்க்கி (முதுநிலை டிப்ளமோ மற்றும் எம்.டெக்., புரொகிராம்
இன் ஹைட்ராலஜி)

ஆதாரம் : கல்விமலர்

2.90163934426
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top