பிரிவு 1
18 வயது நிரம்பிய அனைவரும் இச்சங்கத்தில் எல்லா உரிமைகளையும் பெற தகுதியுடையவர்களாவார்.
பிரிவு 2
இந்த சங்கத்தில் இனம், மொழி, மதம், திறமைகள், நினைப்பு, சொல் மற்றும் குடும்பம் பற்றிய வேறுபாடின்றி அனைவரும் சேரலாம்
பிரிவு 3
குழந்தைகள் பற்றிய அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு குழந்தையின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படலாம்
பிரிவு 4
இந்த உரிமைகளை குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும்
பிரிவு 6
உங்கள் வாழ்க்கைக்கு உங்களுக்கு உரிமையுள்ளது. நீங்கள் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்திற்கும் அரசாங்கம் உறுதியளிக்கவேண்டியது அவசியமாகும்
பிரிவு 12
என்ன நடக்கவேண்டும் என்பதை கூறுவதற்கு உங்களுக்கு உரிமையுள்ளது. அதாவது பெரியவர்கள் எடுக்கும் முடிவுகள் உங்களை பாதிக்கும்போது உங்கள் கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும
பிரிவு 7
உங்களுக்கு பதிவு செய்யக்கூடிய பெயரும், ஒரு நாட்டின் குடிமகனுக்கான உரிமையும் உண்டு. உங்களுடைய பெற்றோர்களால் முடிந்தவரையில் உங்களை கவனித்துக்கொள்ளப்படவேண்டிய உரிமையும், பெற்றோரைப் பற்றிய அறிந்துகொள்ளவேண்டிய உரிமையும் உண்டு
பிரிவு 9
உங்களுடைய நலனை பாதிக்காதவரையில் நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து பிரித்துவைக்கப்படக்கூடாது. உதாரணமாக ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளை தவறாக நடத்தும்போதும் அல்லது புறக்கணிக்கும்போதும். நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அவர்கள் உங்களை புண்படுத்தாதவரை அவர்களுடன் அதாவது தந்தை அல்லது தாயுடன் தொடர்பு வைத்துக்கொள்ள உங்களுக்கு உரிமையுண்டு.
பிரிவு 20
உங்கள் குடும்பத்தால் நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளப்படவில்லை என்றால் உங்கள் மதத்தினை, கலாச்சாரத்தை அல்லது மொழியினை மதிப்பவர்களால் நீங்கள் கவனித்துக்கொள்ளப்படவேண்டும்.
பிரிவு 22
ஒரு நாட்டிற்கு அகதியாக நீங்கள் வந்தால் அந்த நாட்டில் பிறந்த குழந்தைகளுக்குள்ள அனைத்து உரிமையும் உங்களுக்கு உண்டு
பிரிவு 23
உங்களுக்கு எதாவது உடல் குறைபாடிருப்பின் நீங்கள் யாரையும் சாராமல் தனியாக வாழ்வதற்கு உங்களுக்கு தனிக்கவனிப்பு அல்லது உதவி அளிக்கப்படவேண்டும்.
பிரிவு 24
உங்கள் பெற்றோரால் கவனிக்கப்படாமல் இதர உள்ளூர் பொறுப்பு வகிப்பவர்களால் நீங்கள் பராமரிக்கப்பட்டு வந்தால் இந்த நிலையினை முறையாக கவனிக்கப்படவேண்டும
பிரிவு 26
நீங்கள் ஏழ்மையாக இருந்தாலோ அல்லது எதாவது உதவி தேவைப்பட்டாலோ நீங்களோ அல்லது உங்களுடைய பாதுகாவலரோ அரசாங்கத்திடமிருந்து உதவி கேட்க உரிமையுள்ளது.
பிரிவு 27
உங்களுடைய உடற் மற்றும் மனரீதியான தேவைகளுக்கேற்ப தரமான நல்ல வாழ்க்கை வாழ உங்களுக்கு உரிமையுள்ளது. உங்கள் குடும்பம் இந்த வசதிகளை அளிக்கமுடியாத போது அரசாங்கம் உங்களுடைய குடும்பத்திற்கு உதவி செய்யவேண்டும
பிரிவு 28
உங்களுக்கு கல்வி கற்க உரிமையுள்ளது. தொடக்கக்கல்வி இலவசமாக அளிக்கப்படவேண்டும்.
பிரிவு 29
கல்வியானது உங்களுடைய திறமைகளையும், உங்களுடைய ஆளுமைத்திறனையும் முழுமையாக வளர்க்கவேண்டும். இக்கல்வி முறைய உங்களுடைய பெற்றோர், கலாச்சாரம் போன்றவற்றை மதிக்க ஊக்குவிக்கவேண்டும்
பிரிவு 30
உங்கள் குடும்பத்தின் மொழி, பழக்கங்களை உங்கள் நாட்டின் பெரும்பாலான மக்கள் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் நீங்கள் கற்றுக்கொள்ள உங்களுக்கு உரிமையுள்ளது.
பிரிவு 311
பல்வேறு விதமான செயல்களில் ஈடுபடவும், விளையாடவும், ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் உங்களுக்கு உரிமையுள்ளது
பிரிவு 42
அரசாங்கம் இந்த சங்கத்தினை அனைத்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளும் அறிய வழிவகை செய்யவேண்டும்
பிரிவு 19
நீங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறீர்களா என்பதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் அதாவது பெற்றோரின் அல்லது உங்கள் பாதுகாவலர் அல்லது கவனிப்போரின் வன்முறைகள், முறையற்ற உபயோகம், அவர்களின் புறக்கணிப்பு.
பிரிவு 32
உங்களை அபாயகரமான வேலைகளிலிருந்து உங்களை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் அல்லது உங்களுடைய உடல்நலத்தினை பாதிக்கும் அல்லது கல்வியினை பாதுகாக்கும் வேலைகளிலிருந்து அரசாங்கம் பாதிக்கவேண்டும்.
பிரிவு 36
உங்களுடைய முன்னேற்றத்தினை பாதிக்கும் எந்த செயலிலிருமிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
பிரிவு 35
குழந்தைகள் கடத்தப்படுவதையும் அல்லது விற்கப்படுவதையும் அரசாங்கம் நடக்காமல் தடுக்கவேண்டும்
பிரிவு 11
உங்கள் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்
பிரிவு 34
உங்களை பாலியல் பலாத்காரங்களிலிருந்து அரசாங்கம் பாதுகாக்கவேண்டும்
பிரிவு 37
நீங்கள் கொடுமை, மனிதத்தன்மையற்ற செயல்பாடுகள், அல்லது தரக்குறைவான நடவடிக்கை மற்றும் தண்டனைகளை பெறக்கூடாது
பிரிவு 40
சட்டத்திற்கு புறம்பான செயல்களை நீங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் உங்களுக்கு சட்ட உதவி அளிக்கப்படவேண்டும். உங்களை பெரியவர்களுடன் சேர்த்து சிறையில் அடைக்கக்கூடாது. உங்கள் குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் வகையில் நீங்கள் வைக்கப்படவேண்டும். மிக அதிகமான குற்றங்களுக்காக மட்டுமே குழந்தைகளுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்படவேண்டும்.
பிரிவு 13
உங்களுக்கு தகவல்களை பெறுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், சந்திப்பதற்கும், குழுக்களாக இணைவதற்கும், மற்றவர்களையும் உங்களையும் கெடுக்காமல் நிறுவனங்களை உருவாக்குதற்கும் உரிமையுண்டு
பிரிவு 14
உங்கள் விருப்பதற்கேற்ப சிந்திப்பதற்கும், நம்புவதற்கும், உங்கள் மதத்தினை பின்பற்றவும், மற்றவர்கள் இந்த உரிமைகளை அனுபவிப்பதை தடுக்காத வரையில் பின்பற்ற உரிமையுண்டு. இந்த விசயங்களில் உங்கள் பெற்றோர் உங்களை வழிநடத்தலாம்.
பிரிவு 15
குழுக்களாக இணைவதற்கும் சந்திப்பதற்கும் மற்ற மக்களை இந்த உரிமைகளை அனுபவிப்பதை தடுக்காதவரையில் உங்களுக்கு உரிமையுண்டு
பிரிவு 16
உங்களுடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு உரிமையுண்டு. உங்களுடைய வாழ்க்கையில், உங்கள் பெயரை, உங்கள் குடும்பத்தை மற்றும் வீட்டை பாதிக்கும் நடவடிக்கைகளிடமிருந்து பாதுகாக்க சட்டமுண்டு
பிரிவு 17
பெரிய தொலைத்தொடர்பு விசயங்களிலிருந்து தகவல்களை பெற உங்களுக்கு உரிமையுண்டு. தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் போன்றவை நீங்கள் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகள் வெளியிடவேண்டும். மேலும் இவை உங்களை காயப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது.
ஆதாரம்: UNICEF