பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு

சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உலக வங்கி தமிழக அரசுடன் இணைந்து சென்னையை முதன்மையாகக் கொண்ட சென்னை நகர்ப்புற வளர்ச்சி நிதித் திட்டம் I மற்றும் II மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதித் திட்டம் II மற்றும் III வாயிலாக நகர்புர உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்திவருகிறது. இத்திட்டங்கள் வாயிலாக உள்கட்டமைப்புச் சொத்துக்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் நகர்ப்புறத் துறையில் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டது. தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியினை வழங்கும் முகமாக இந்த கூட்டு முயற்சி சென்னையை முதன்மையாக கொண்டு செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு நகர்புர வளர்ச்சி நிதி என்ற புதியதொரு அறக்கட்டளை நிறுவனத்தினை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்ட நிதி மேலாண்மை அமைப்பாக தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் நகர்புர வளர்ச்சியின் சீர்திருதங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுடன் இவைகளில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கின்றது. இத்திட்டங்களின் தொடர்ச்சியாக நகர்புற உள்கட்டமைப்பு வளர்ச்சியைத் தொடர்ந்து எடுத்துச் செல்லு வண்ணம் "தமிழ்நாடு நீடித்த நகர்புற வளர்ச்சித்திட்டம்" என்ற ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின் உத்தேச மதிப்பீடு 600 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

திட்ட குறிக்கோள்

மேம்படுத்தப்பட்ட நகர்புற மேலாண்மை நடைமுறைகளில் நிகழச்செய்வது மற்றும் பங்கேற்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களில் ஒரு நிதி நிலையான முறையில் நகர்புற சேவைகளை மேம்படுத்துதல் ஆகிய இவ்விரண்டு குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.

இத்திட்டம் கீழ்க்கண்ட மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.

 1. முன் மாதிரி நகரங்களை உருவாக்குதல்
 2. நகரக முதலீடு
 3. நகரத்துறைகளுக்கு தொழில்நுட்ப உதவி (T.A.) வழங்குதல்

மாதிரி நகரங்கள் உருவாக்கக் கூறின் முக்கிய நோக்கம், பங்கேற்கும் நகர்புற உள்ளாட்சி அமைப்புக்களில் நகர்ப்புர அளவில் வலுவான ஆளுமை, நீடித்த நிதி நிலைமை மற்றும் நகர்புற மேலாண்மையில் புதிய முன்மாதிரியை உருவாக்குதல் ஆகும்.

நகர்ப்புற முதலீட்டு கூறின் முக்கிய நோக்கமானது பங்கேற்கும் நகராட்சிகளுக்கும் நகர்ப்புற சூழலில் முக்கியமான நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த உதவுதல் ஆகும். நகர்புற முதலீட்டு கூறு, நகர்புற உள்ளாட்சி அமைப்புக்களில் கடன் விரிவாக்கம் மற்றும் மானியங்கள், வரவு மேம்படுத்தல் மற்றும் நகரத்துறைகளுக்கு தொழில்நுட்ப உதவி (TA) ஆகிய மூன்று துணை கூறுகளை உள்ளடக்கியது ஆகும்.

நகரக துறை தொழில்நுட்ப உதவி (TA.) கூற்றின் முக்கிய நோக்கங்கள் பங்கேற்கும் நிறுவனங்களை வலுப்படுத்துதல், நகராட்சி மின் ஆளுமையில் திட்டம் தயாரித்தல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதியத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக கொள்கை:

நிதியுதவி பெறும் திட்டங்களில் சுற்றுச்சூழல் பேண்தகைமை மற்றும் சமுக இயைபு மேம்பாடு ஆகியவை தமிழ்நாடு நகர்புர வளர்ச்சி நிதியத்தின் கொள்கைகள் ஆகும்.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு (ESMF)

தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியின் கீழ் 2006 ஆம் ஆண்டு ஒப்பளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக இயைபு கோட்பாட்டுக் கொள்கைகளை தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி மற்றும் சேவை நிறுவனம் தான் நிதியுதவி வழங்கும் அனைத்து திட்டங்களிலும் செயல்படுத்திவருகிறது. இந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக இயைபு கோட்பாட்டுக் கொள்கைகள் தற்போது மேம்டுதப்பட்ட சட்டங்கள், புதிய சட்டங்கள், கொள்கைகள், விதிகள் மற்றும் உலக வங்கியின் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டு கொள்கைகள் அடிப்படையிலும் TNUDP -III செயலாக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை அடிப்படையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்பு (ESMF) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புக் கொள்கைகள் தற்போது முன்மொழியப்பட்டுள்ள தமிழ்நாடு நீடித்த நகர்புற வளர்ச்சித்திட்டத்திற்கு (TNSUDP) தனித்தன்மையுடன் பொருந்தும்.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்பு (ESMF) இரண்டு தொகுதிகளை உள்ளடக்கியதாகும். மேலும் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களில் எழுகின்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளின் மதிப்பீடு மற்றும் மேலாண்மை சார்ந்த முக்கியக்கூறுகள், பொதுக்கோட்பாடுகள், கொள்கைகள், மற்றும் நடைமுறைகளையும் கொண்டுள்ளது. தமிழ்நாடு நீடித்த நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் (TNSUDP) கீழ் நிதியுதவி பெறும் திட்டங்கள் இந்த கட்டமைப்பின் அடிப்படையில் தயாரிக்கவும் மற்றும் தொடர்புடைய தாக்கங்களில் இருந்து பாதுகாப்பதை உறுதி செய்கிறது. மேலும் ESME ஆனது TNSUDP நிதி உதவி பெறும் திட்டங்களை சார்ந்த பயனாளிகளுக்கு சுற்றுப்புற சூழல் மற்றும் சமூகம் சார்ந்த இடர்பாடுகள் மதிப்பீடு பற்றி அறிய உதவும் மற்றும் அவற்றை மேலாண்மை செய்வதற்கு உதவும் நடைமுறைகளை உள்ளடக்கியது.

சுற்று சூழல் பாதுகாப்பு கட்டமைப்பு

ஒழுங்குவிதிகள் கட்டமைப்பு

தேசிய மற்றும் மாநில அளவில் சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் உலக வங்கியின் செயல்பாட்டு கொள்கைகள் அனைத்தும் TNUIFSL நிதியுதவி பெரும் திட்டங்களுக்கு பொருந்தும்.

மிக முக்கியமான பொருந்தும் சட்டங்கள்

 • நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974,
 • தமிழ்நாடு குடிநீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 1974,
 • நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) வரி விதி சட்டம், 1977,
 • வன (இருக்கின்றன பாதுகாப்பு) சட்டம், 1980,
 • காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981,

சுற்றுச்சூழல் அடிப்படையில் திட்டங்களின் வகைப்பாடு

நகர்புர உள்கட்டமைப்பு திட்டங்கள் அந்த நகரத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்ற இடம் மற்றும் திட்ட நடவடிக்கைக்களின் தன்மையை பொறுத்து, இத்தகைய திட்டங்கள், நகர்ப்புற சூழலில் மாறுபட்ட பாதிப்புகள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, மழை நீர் வடிகால் திட்டமானது அது சேரும் நீர்நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், சங்கமமாகும் இடங்களில் வெள்ளபெருக்கினை ஏற்படுத்தலாம். இதே போலவே ஒரு சாக்கடைத்திட்டம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் கசடு வெளியேற்றத்தினால் பாதிப்பினை ஏற்படுத்தலாம். மேலும் நிலத்தடி நீரில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். குடிநீர் வழங்கல் திட்டம் குடிநீர் ஆதாரத்தில் இருந்து அதிகப்படியான நீர் எடுத்தல் நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பு மற்றும் கசடு வெளியேற்றம் முதலிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே உள்கட்டமைப்பு திட்டங்களினால் ஏற்படும் இத்தகைய தாக்கங்களை அடிப்படையாக கொண்டு TNUIFSL நிறுவனம் கட்டமைப்புத் திட்டங்களை திட்டங்களின் தன்மைகள் மற்றும் பாதிப்புகள் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளின் அடிப்படையில் E1, E2 மற்றும் En என்று மூன்று வகைகளாக வகைப்படுத்தியுள்ளது.

E1 வகைப்பாடு திட்டங்கள்

இந்த வகைப்பாட்டிற்குள் வரும் திட்டங்களுக்கு திட்டம் சார்ந்த சுற்றுப்புற சூழல் மதிப்பிடு ஒரு தன்னியலான நிறுவனம் மூலம் தயாரிக்கப்படவேண்டும்:

E2 வகைப்பாடு திட்டங்கள்:

இந்த வகைப்பாட்டிற்குள் வரும் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை (DPR)யின் பகுதியாக திட்டத்தை சார்ந்த சூழல் அறிக்கை தேவைப்படும்

En வகைப்பாடு திட்டங்கள்: இந்த வகைப்பாட்டிற்குள் வரும் திட்டங்களுக்கு பொதுவான சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தேவைப்படும்.

சமூக பாதுகாப்பு கட்டமைப்பு

சமூக பாதுகாப்பு கட்டமைப்பின் தலையாய கொள்கைகள் : சமூக பாதுகாப்பு கொள்கையின் அடிப்படை நோக்கமானது, திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக பாதகமான தாக்கத்தை குறைக்கும் முறைகளை உள்ளடக்கியது. இந்த கொள்கை, கட்டாய மீள்குடியேற்றத்தினை தவிர்த்தல் மற்றும் மீள்குடியேற்றதினை குறைப்பதற்கும் தேவையான பல்வேறு வழிவகைகளை ஆராய்வதற்கும் வலியுறுத்துகிறது.

இந்த சமூக பாதுகாப்பு கட்டமைப்பின் மூலம் நிலம் மற்றும் சொத்துக்கள் இழப்பு, வீடு சார்ந்த நிலங்களின் இழப்பு, வருவாய் அல்லது வாழ்வாதாரங்கள் இழப்பு, சமூக பொது சொத்துக்கள் இழப்பு போன்ற பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றது.

ஒழுங்குவிதிகள் கட்டமைப்பு

8.0 தேசிய மற்றும் மாநில அளவில் சமூக பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உலக வங்கியின் செயல்பாட்டு கொள்கைகள் அனைத்தும் TNUIFSL நிதியுதவி பெரும் திட்டங்களுக்கு பொருந்தும். மிக முக்கியமான பொருந்தும் சட்டங்கள் - வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் (2013), தெரு வியாபாரிகள் வாழ்வாதாரம் மற்றும் ஒழுங்குமுறை பாதுகாப்பு சட்டம் (2014), பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகள் அங்கீகரித்தல்) சட்டம் (2006), தகவல் அறியும் உரிமைச்சட்டம் (2005), உலக வங்கியின் சுயமாக மீள்குடியேற்றம் மற்றும் தகவல் மற்றும் வெளிப்படுத்தல் கொள்கை.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்பு ஏற்புடைமை

ESMF தொழில்நுட்ப உதவியுடன் திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துதல் ஆகியவற்றில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்பு செயல்முறைகள் கடைபிடிக்கப்படும்.

திட்டங்கள் தயாரித்தல்

விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் போதே சுற்றுப்புற சூழல் மதிப்பிடு மற்றும் சமூக தாக்க மதிப்பிடு அறிக்கைகள், தயாரிக்கப்படும். வரைவு அறிக்கை உலக வங்கிக்கு அனுப்பப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னர் இறுதியாக்கப்படும். சுற்றுப்புற சூழல் மதிப்பிடு மற்றும் சமூக தாக்க மதிப்பிடு குறித்த இறுதி அறிக்கைகள், இவற்றின் தமிழ் சுருக்கம் சம்பந்தப்பட்ட நகராட்சிகள், துறைகள் மற்றும் TNUIFSL ஆகியவற்றின் இணையதளங்களில் வெளியிடப்படும்.

திட்டங்கள் செயலாக்க ஆய்வு:

 1. திட்டங்களினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களின் அடிப்படையில் நிதியுதவி செய்யும் திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக வகையை TNUIFSL ஆல் தீர்மானிக்கப்படும். அந்தந்த வகைப்பாட்டுக்குரிய சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீடு அறிக்கை, நிலம் கையகப்படுத்துதல், மீள்குடியேற்ற அறிக்கை போன்ற ESMF இணக்க அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் செயல்பாடுகள் கடன் பெறுவோரின் பொறுப்பாகும்.
 2. திட்ட செயலாக்க ஒப்பந்தப்புள்ளிகள் வழங்குவதற்க்கு முன்னதாகவே சமூக பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றிய அல்லது தயார்நிலை சான்றிதழ் ஒன்றினை கடன் பெறுவோர் சமர்ப்பிக்கவேண்டும்.
 3. திட்ட செயலாக்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்புப் பணிகள் செவ்வனே செயல்படுத்தப்படுகின்றனவா என்று கடன் பெறுவோர் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
 4. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் நேரடி களப்பணி ஆய்வு மூலம் TNUIFSL கண்காணிக்கும்.

ESMF இணக்க தணிக்கை

ESMF இணக்க நிலையை ஆய்வு செய்ய TNUIFSL ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை மேற்கொள்ளும். இந்த தணிக்கைக்கு அனைத்து E-1 | S1 திட்டங்கள் மற்றும் மாதிரிக்காக சில E 2 / S2 திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன்-ஜூலை மாதத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு முந்தைய நிதி ஆண்டு வரை நிறைவு பெற்ற நடவடிக்கைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். வரைவு தணிக்கை அறிக்கை செப்டம்பர் மாதம் 30 நாளுக்குள் உலக வங்கிக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்ற பின் இறுதி தணிக்கை அறிக்கை வெளியிடப்படும்.

நிறுவன கட்டமைப்பு

சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இரண்டு மேலாளர்கள் TNUIFSL நிறுவனத்தில் உள்ளனர் (ஒருவர் சுற்றுச்கூழல் பாதுகாப்பு மற்றொருவர் சமூக பாதுகாப்பு). இவர்களுக்கான பணிகள் ESMF-ன் இரண்டாம் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது (ஆவணம்-8). நிறைவேற்றப்படும் திட்டங்களின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த மேலாளர்களைக்கொண்டு TNUIFSL கண்காணிக்கும்.

கடன் பெறுவோர் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தும் துறைகள் (PIA)

ESMF இணக்கத்தை உறுதி செய்ய நகராட்சி நிர்வாக ஆணையம் (CMA) மற்றும் திட்ட செயலாக்கத் துறைகளில் (PIA) பொருத்தமான கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் கடன் பெறும் நகராட்சிகள் அல்லது துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து ESMF இணக்கத்தை இறுதி செய்து, இதுகுறித்த மாத அறிக்கைகள், தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவற்றை TNUIFSL இடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதே போன்று சென்னை மாநகராட்சியிலும் (COC) மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனமும் (PMC) திட்டச் செயலாக்கத்தில் ESME இணக்கத்தை உறுதி செய்ய அதற்கான தகுதியும் அனுபவமும் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிபுணர்களை நியமிக்கும். மேலும் இந்த நிபுணர்களைக்கொண்டு உரிய ஆவணங்கள் மற்றும் மாதாந்திர அறிக்கைகளை TNUIFSL இடம் சமர்ப்பிக்க வேண்டும்.

திறன் மேம்பாடு

சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையம் போன்ற கடன் பெறும் நகராட்சிகளிலும், திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனங்களிலும் ESME இணக்கத்தினை உறுதி செய்ய அனுபவமும் தகுதியும் வாய்ந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிபுணர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், இந்த அலுவலகங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு திறன் மேம்பாட்டிற்காக பயிற்சி நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு ஆண்டும் பயிலரங்குகள், பயிற்சி திட்டங்கள், பயிற்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளவும் TNUIFSL திட்டமிட்டுள்ளது.

TNUIFSL தனது சுற்றுசூழல் மற்றும் சமூக மேலாளர்களுக்கும் பிற மேலாளர்களுக்கும் திறன் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சிகள், தேசிய மற்றும் சர்வதேச பயிற்சி, கருத்தரங்குகள் பயிலரங்குகள், முதலியன TNSUDP யை ஒத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களில் நேரடி பயிற்சி, தொடர்பான படிப்புகள் ஆகியவற்றை முன்மொழிகிறது. மேற்படி முன்மொழியப்பட்ட திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் TNSUDP யில் தொழில்நுட்ப உதவி நிதியில் மேற்கொள்ளும்.

சம்பந்தப்பட்ட அலுவலகங்களுடன் கலந்தாலோசனை

வரைவு ESMF மீது சம்பந்தப்பட்ட அலுவலகங்களுடன் கருத்தறிவு கலந்தாலோசனை ஒன்றினை TNUIFSL ஏற்பாடு செய்தது. இந்த கலந்தாலோசனையில் பங்கெடுத்த அலுவலர்கள் ESMF இன் உரிம அட்டவணையில், உரிமையின்றி வசிப்போருக்கும் வழங்குவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள இழப்பீடுகள் மற்றும் ESMF ஆவணத்தின் ஒட்டுமொத்த விதிகள் குறித்து தங்கள் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.

ESMF வெளியிடல்

பொது மக்கள் கருத்தறிய வரைவு ESMF TNUIFSL மற்றும் CMA வின், இணையதளங்களில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் எந்த கருத்தும் பெறப்படவில்லை .

ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, சென்னை

2.8
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top