பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பற்றிய தகவல்.

பிளாஸ்டிக் பொருட்களை மிகுதியாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதனால், இந்திய அரசு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ல், தற்போது நடைமுறையில் உள்ள விதிகளை திருத்தியமைத்து, 50 மைக்ரான் தடிமனுக்குட்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளை தேசிய அளவில் தடைசெய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மட்டுமே பெருமளவு சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இதனை கடுமையாக கையாளும் விதமாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து, 01.01.2019 முதல் அமல்படுத்தப்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் என்பது பெட்ரோலியம் சார்ந்த பாலிமரால் செய்யப்பட்ட பொருள் ஆகும். இது ஹைட்ரோ கார்பன்களின் எண்முகச்சேர்ம சங்கலியாக அமைந்துள்ளது .

பிளாஸ்டிக் பொருட்கள் எந்த வகையான இரசாயண கலவைகளால் தயாரிக்கப்படுகிறது என்பதற்கிணங்க 7 வகையாக பிரிக்கப்படுகின்றது. PETE, HDPE, LDPE, PP, PS, PV மற்றும் பல.

பிளாஸ்டிக்கினை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவை, தெர்மோ பிளாஸ்டிக் மற்றும் தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக். இதில் தெர்மோ பிளாஸ்டிக் மட்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம். தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக் மறுசுழற்ச்சிக்கு உட்படுத்த முடியாது.

பிளாஸ்டிக் பொருட்கள் மக்கும் தன்மை அற்றதாகும். பிளாஸ்டிக் இயற்கையாக சிதைவடைவதற்கு 200 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். எனவே பயன்படுத்திப்பட்ட பிளாஸ்ட்டிக் கழிவுகள் கரிவர கையாளப்படவில்லை எனில் அது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்குவிளைவிக்கும். ஒரு முறை பயன் படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தை, நீர் ஆதாரங்களை, வடிகால்களை அடைத்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் உட்புகாமல் மீள் நிரப்பு தடுக்கப்படுகிறது. மேலும் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறாமல் நிலத்தின் மேல் தங்கி, தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை திறந்தவெளியில் எரிக்கக்கூடாது. நகராட்சி திடக்கழிவுடன் பிளாஸ்டிக் சேர்த்து எரிக்கப்படும்போது, அதிலிருந்து டையாக்ஸின், பியூரான் போன்ற நச்சுவாயுக்கள் வெளியேற்றப்படுகிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதாகும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைத்தல், திரும்பப்பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் மற்றும் மீட்பு செய்தல் பிளாஸ்டிக் மேலாண்மைக்கு ஆரோக்கியமான வழிகள் ஆகம்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவையாவன

 1. உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்
 2. உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக்/பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள்
 3. தெர்மக்கோல் தட்டுகள்
 4. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள்
 5. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள்
 6. பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்
 7. பிளாஸ்டிக் குவளைகள்
 8. தெர்மோக்கோல் குவளைகள்
 9. நீர் நிரப்ப பயன்படும் பைகள்/பொட்டலங்கள்
 10. பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள்
 11. பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்)
 12. பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதப் பைகள்
 13. பிளாஸ்டிக் கொடிகள்
 14. நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள்

 1. வாழை இலை, பாக்குமர தட்டு
 2. அலுமினியத்தாள்
 3. காகித சுருள்
 4. தாமரை இலை
 5. கண்ணாடி/ உலோகத்தால் ஆனை குவளைகள்
 6. மூங்கில் / மரம் / மண்பொருட்கள்
 7. காகித உறிஞ்சு குழாய்கள்
 8. துணி / காகிதம் / சணல் பைகள்
 9. காகிதம் / துணி கொடிகள்
 10. பீங்கான் பாத்திரங்கள்
 11. உண்ணக்கூடிய தேக்கரண்டிகள்
 12. மண் பாத்திரங்கள்

விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்

 1. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
 2. மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என்பது நுண்ணுயிரிகள் மூலம் சிதைக்கப்பட்டு கரியமிலவாயு, நீர், கனிம சேர்மங்கள் மற்றும் உரமாக மாறக்கூடியது ஆகும். மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் ஸ்டார்ச் அல்லது புரோட்டீன் ஆகியவை கலந்த கலவை பொருட்களால் தயாரிக்கப்படுகின்றது. இவை இந்திய தரநிர்ணயம் IS: 17088:2008-ன் படி தயாரிக்கப்பட வேண்டும். மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சான்று பெறவேண்டும்.

 3. உணவு பாதுகாப்பு தரம் மற்றும் இந்திய தர நிர்ணயம் படி உள்ள உணவுதர பிளாஸ்டிக் ஐ பயன்படுத்தலாம். FSSAI தயாரிப்பு/உற்பத்தி தொழிற்சாலைகளில் ஒருங்கிணைந்த முறையில் பொருட்களை அடைத்து வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைக்களுக்கு தடை இல்லை.
 4. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பெட் பாட்டில்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இல்லை.
 5. பொருட்களை சப்பமிட பயன் படுத்தப்படும் அனைத்து வகை பாலி பைகளுக்கும் தடை இல்லை.
 6. பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டு மற்றும் பாட புத்தக அட்டைகளில் பிளாஸ்டிக் சீட் மூலம் லேமினேசன் செய்வதற்கும் மற்றும் அலுவலகங்களில் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்புறைகளுக்கும் தடை இல்லை.
 7. பிளாஸ்டிக் குடம், வாலி மற்றும் குவளை

பிளாஸ்டிக் தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை

சுற்றுச்சூழல் மற்றும் வன துறை அரசாணை எண் 84 நாள் 25.06.2018-ன்படி

 • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தாலோ, வழங்கினாலோ போக்குவரத்து செய்தாலோ விற்பனை செய்தாலோ விநியோகித்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையர்களுக்கும் இதர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடை உத்தரவினை மீறுபவர்கள் மீது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

2.55555555556
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top