பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிர்பொருள் சக்தி

இயற்கை எரிவாயுவின் பல்வேறு விதமான செயல்முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இயற்கை சான எரிவாயு கண்டுபிடிப்பு

அகோலா மாவட்டத்தில் உள்ள சித்தல்வாடி கிராமத்தில் கடந்த வருடம் சான எரிவாயு அமைப்பை நிறுவ முடிவு செய்தபோது அனைவரும் சந்தேகித்தனர். மூன்று சகாப்தங்களாக விடப்ரா கிராமத்தில் அரசு மானியத்துடன் மலிவான எரிபொருளை வழங்கிய போதிலும் யாரும் பயன்படுத்திக்கொள்ளவில்லை.. மேலும் பொதுவாக சாண எரிவாயு அமைப்பை சமையலறைக்கு அருகிலே அமைப்பது வழக்கம்,ஆனால் வீட்டிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் நிறுவப்பட்டது புதிதாக இருந்தது.

எனினும் இரண்டு விவசாயிகளும் அமைத்து செயல்படுத்தியதன் மூலம் நம்பிக்கை இன்றி இருந்த மக்களிடத்தில் நம்பிக்கை ஊட்டியது. இன்று சித்தல்வாடி கிராமத்தில் 15 அமைப்பும், தன்டுல்வாடி கிராமத்தில் 4 அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் பலரும் அரசு மானியத்தை பயன்படுத்தி அமைத்திட திட்டமிட்டுள்ளனர். இதுவரை விதற்பா கிராமத்தில் மானியத்துடன் அமைப்பு வழங்கப்பட்டாலும் அங்கு மாட்டுசாணம் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது. ஆனாலும் அதிக கால்நடைகள் இல்லாத விவசாயிகளும் எரிவாயு கலன்களை அமைக்கின்றனர். அவர்கள் உயிர்வாயு அமைப்பை நிறுவ சவாலாக இருந்த சான பற்றாக்குறையையும் புதுமையான முறையில் தீர்த்துள்ளனர்.

புதுமையான கலன்

ஒரு விவசாயி, அவர் அமைத்த கலன்கள் தூரமாக இருக்கும் சிக்கலை தீர்க்க போராடிய பொழுது தனது அசல் திட்டத்தினை முயற்சி செய்ய முடிவெடுத்தார். பின் அவர் ஏற்கனவே ரூ.9,000 த்தில் இரண்டு கன மீட்டர் அளவுள்ள செரிமான தொட்டியினை கட்டினார்,வாயுவை எடுத்துவர நிலத்தடியில் பிவிசி குழாயினை அமைப்பதற்க்கு பதிலாக ஒரு ரப்பர் குழாயை மரத்தின் கிளைகளின் மேல் பாதுகாப்பாக தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அந்த குழாயில் ஈரத்தை தக்கவைக்க அவர் அக்குழாயினை வட்டமாக அமைத்தார். எரிவாயு கனமாக இருப்பதினால் அக்குழாயில் மறுபடியும் தொட்டியினுள் வாயு தங்கிவிடுகிறது “நான்கு ஆண்டுகளாக ஈரம் தங்கியிருப்பது நல்லதல்ல என பல்கலைக்கழக அதிகாரி எச்சரித்தார். ஆயினும் ஈரத்தினால் எந்த பிரச்சனைகளும் ஏற்ப்பட்டதில்லை. எரிவாயு கலன் மூலம் ஆறு ஆண்டுகளாக தங்கள் குடும்பத்தின் சமையலுக்கு தேவையான எரிபொருள் கிடைத்தது என அவர் கூறினார்.

வாயுவை பிரித்தெடுத்தல் மூலம் பெறும் பயன்

மேற்கூறிய விவசாயியைப் போலவே மற்றொருவர் சொட்டுநீர் குழாயை பயன்படுத்தினார். ஆனால் அதில் அவர் சிறிய மாற்றங்களுடன் டி-வடிவிலான பைப்பை அமைத்து ஒருபகுதியினை வாயுவை வீட்டுக்கு கொண்டு செல்லவும், மற்றொன்றை குழாய்க்கு திருப்பிவிட்டார், அதை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்தார்.

இது தவிர சமயலுக்கு தேவையான அளவு கிடைக்கிறது, மேலும் 22 பேருக்கு சமையல் மற்றும் குளியல் நீரை வெப்பமூட்டவும் பயன்படுகிறது., மேலும் அவருடைய கலன் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை திருவிழாக்களின் போது 100 பேருக்கு மேலாக சமையல் செய்ய போதுமான அளவுக்கு பயன்படுகிறது. தினமும் கால்நடைகொட்டகைக்கு வெளிச்சம் தருவதற்கும், பால் மற்றும் பால் பொருட்கள் 100 லிட்டர் அளவிற்கு ஏற்ப்பாடு செய்ய பயன்படுகிறது. மூன்று மாடுகளில் இருந்து பெறும் சானம் இரண்டு குடும்பங்களுக்கும் போதுமான எரிவாயு உருவாக்கும். “அவர்களுக்கு இன்னும் மின் சப்ளை செய்ய ஜெனரேட்டர் நிறுவ தேவையான எரிவாயு இருப்பதனால் ஜெனரேட்டர் நிறுவ திட்டமிட்டுள்ளார்,” அவர் குடும்பம் எல்.பி.ஜி சிலிண்டரிலிருந்து வருடத்திற்கு 80,000 ரூபாய் மிச்சப்படுத்துகிறது.

வித்தல்வாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி தனது மூன்று மாடுகளிலிடுந்து கிடைக்கும் சானத்திலிருந்து பெறப்படும் எரிபொருள் மூன்று பேர்கொண்ட தன் குடும்பத்திற்கு போதுமானதாக இருப்பது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.”அவர்களது சமையல் மற்றும் குளியல் தண்ணீர் தேவைகளை பூர்த்திசெய்த பிறகு வீட்டின் மற்ற தேவைகளுக்கும் பயன்படுகிறது என்கிறார். அவரின் தாயார் அவருடைய கலனிலிருந்து விவசாயகாட்டிற்கு இனைப்பை கொடுக்க முடிவுசெய்துள்ளார். அருகில் உள்ள கிராமங்களுக்கு கண்டுபிடிப்புகள் மிக வேகமாக பரவிவருகிறது.

ஆனால் பண்ணைவைத்திருப்பவர்களை விட விவசாயம் செய்பவர்கள் எரிவாயு கலன்களை அமைத்தலில் வழிகாட்டுதல் தேவை இனறியமையாதது என நினைக்கின்றார்கள். இதில் முன்னேற்றமாக பெரும்பாலான கிராமங்களில் பெருகிவரும் குடும்பங்கள் காரனமாக கால்நடை கொட்டகைபண்ணைகளை தங்கள் வீடுகளில் இருந்து தூரமாக கலன்களை அமைத்து உபயோகப்படுத்துகின்றனர்.

அவர் கூறுகையில் குழாய் தூரமாக இருப்பதனாலும், வளைந்து அமைத்திருப்பதினாலும் வாயுவின் அழுத்தம் பாதிக்கப்படுகின்றன. ஒருவருக்கு சரிவருவது மற்றொருக்கு சரிவராது, சீராக வாயுவை பராமரிப்பதற்கு தேவையான அளவிற்கு கலனிற்கு சாணத்தை செலுத்த கற்பதற்கே இரண்டு மாதங்கள் ஆகியது. மேலும் எவ்வித குழாய்களை பயன்படுத்தவேண்டும் என எந்த வழிகாட்டுதளும் இல்லை. சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தினாலும் அது கடினமாகும். மேலும் அரசு மாணியமாக வழங்கும் தொகையை உயர்த்த வேண்டும். தற்போது வழங்கிவரும் ரூ.8000 சமயலுக்கு மட்டும் போதுமானதாக உருவாகும் 2 சியு எம் கலனை அளிக்கிறது. ஆனால் ஐந்து முதல் ஏழு நபர்கள் உள்ள குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு தயாரிக்கவேண்டுமெனில் 6 சி யு தொட்டி தேவைப்படும். மர எரிபொருள் தட்டுப்பாடும், எல்பிஜி சிலிண்டர் அதிக செலவாக இருப்பதாலும், எரிவாயு கலன்களை பயன்படுத்த விவசாயிகளின் எண்ணிக்கை விதர்பாகிராமத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.வற்றாத மற்றும் செலவு குறைந்த மூலசக்தியை சரியான இடங்களில் அமைப்பதற்கான சிறு உதவியே தேவைப்படுகிறது.

மூலம் : டவுன் டூ எர்த்

இயற்கை எரிவாயுவை மதிப்பூட்டுதல் மற்றும் குப்பிகளில் நிரப்பும் தொழில்நுட்பம்

காசியாபாத்தில் உள்ள கரேரா கிராமத்தில் அமைந்திருப்பது தான் ஸ்ரீ கிருஷ்ணா கௌஷாலா. டெல்லி, ஐ.ஐ.டி-யின் தொழில்நுட்பத்தோடு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் (இந்திய அரசு) ஒரு முன்னோடி செயல்விளக்கமாக இது இருக்கிறது

கிட்டத்தட்ட 1000 பசுக்களை கொண்ட ஒரு கூடத்தை கௌஷாலா கொண்டுள்ளது. பசுக்கள் (இரண்டு கொட்டகைகள்), கன்று குட்டிகள் (ஒரு கொட்டகை), எருதுகள் (ஒரு கொட்டகை), இயற்கை மற்றும் மண் புழு உரக் கொட்டகை, சிறுநீர் சேகரிக்கும் மையம், மூன்று இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள் (பையோகாஸ்) (85+85+60 கியுபிக் மீட்டர்/நாள் திறன்), சாணக் குழம்பு சேகரிக்கும் கொள்கலம், மற்றும் ஒரு இயற்கை எரிவாயு தூய்மையாக்கும் மற்றும் குப்பிகளில் நிரப்பும் அலகு உள்ளது.

  • பையோகாஸ் உற்பத்திக்கு 5 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது.
  • இயற்கை எரிவாயு தூய்மைபடுத்தப்படுகிறது மற்றும் தூய்மைப்படுத்துதலுடன் இயற்கை எரிவாயு குப்பிகளில் நிரப்பப்படுகிறது ( நீரை அழுத்தி தேய்த்து தூய்மை செய்யும் முறை – கொள்திறன் – 20 கியுபிக் மீட்டர் / மணி நேரம்). குப்பிகளில் நிரம்பும் அலகு வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது – 3)
  • மின் ஆக்கியின் உதவியுடன் மின் ஆக்கி ஆற்றலுக்காக மேலும் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டது.
  • கௌஷாலா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கௌஷாலாவில் பயிரிடுதலுக்கான உரமாக பையோகாஸ் சாணக்குழம்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது மண் புழு உரமாக்கபட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.

தொழில்நுட்ப தகவலுக்காக :
டாக்டர் வி.கே.விஜய்
கிராமப்புற வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திற்கான மையம்
தொழில்நுட்பத்திற்கான இந்திய அமைப்பு ,டெல்லி – 11000016
இந்தியா: vkvijay@rdat.iitd.ernet.in , + 91 9871366611

கௌஷலா அலகு :
திரு. வேத பிரகாஷ் கோயல்
செயலாளர், ஸ்ரீ கிருஷ்ணா கௌஷாலா, காசியாபாத்
அலைபேசி : + 91 9871093284

பசுமை வழி - வாழ்க்கை தரத்தை மேம்படுத்த புதுப்பிக்கவல்ல ஆற்றலின் பயன்பாடு

 

பனோ ஹன்ச்டா, தன்னுடைய சாண எரிவாயு அடுப்பில் தேனீர் தயாரித்துக் கொண்டே பெருமையாக, “நாங்கள் சமைப்பதற்கு இப்பொழுது சாண எரிவாயு அடுப்பை உபயோகிக்கின்றோம். இரவில் சூரிய மின்சாரத்தை பயன்படுத்துகிறோம். இதனால், என்னால் சாயங்கால நேரங்களில், ஏதாவது வேலை செய்ய முடிகிறது” என்று கூறுகிறார். சில மாதங்களுக்கு முன்னர்தான், பனோ ஒரு சாண எரிவாயு உற்பத்தி கலனுக்கு சொந்தகாரர் ஆனார். இந்த கலன், சாணம் மற்றும் இலை சறுகை எரிவாயுவாக மாற்றும் திறன் கொண்டது. ஜார்கண்ட் மாநிலத்தின் சோரோ கிராமத்தின் மக்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்தது போல், புதுப்பிக்கவல்ல ஆற்றலான சாணவாயு மற்றும் சூரிய சக்தியின் பயன்பாடு, பனோவின் அன்றாட வாழ்க்கையையும் மாற்றி அமைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் (UNDP) கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்துக்கான புதுபிக்கவல்ல ஆற்றல் திட்டம் செயல்படும் 34 கிராமங்களில் ஒன்று, சோரா கிராமம். இந்த திட்டமானது ஜார்கண்ட், உத்தர்கண்ட், இராஜஸ்தான் மற்றும் சிக்கீம் ஆகிய மாநிலத்தின் தொலைதூர கிராமங்களில் செயல்பட்டு வருகிறது.

சோரா கிராமங்களின் கூரை மேல் இருக்கும் சூரிய பேனல்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமில்லாமல், வீட்டிற்கு தேவையான மின்சாரத்தையும் அளிக்கும். மேலும் வீதிகளின் விளக்குகளையும் எரிய வைக்கும். இவைகளை நிறுவுவதற்கு முன்னர், இக்கிராமத்தில் மின்சாரம் இல்லையாதலால், கிராம மக்கள் மண்ணெண்ணெய் விளக்குகளை சார்ந்து இருந்தனர். இப்பொழுது சோரா கிராமத்தில் பொழுது சாயும் நேரத்தில் குழந்தைகள் தங்கள் வீட்டு பாடங்களை செய்வதற்கு தெருவிளக்கு அருகே கூடுகின்றனர்.

விமலா என்பவரும் தன்னுடைய சுயஉதவிகுழு மூலம், புதுப்பிக்கவல்ல ஆற்றல் பயன்பாடு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார். விமலா கூறுகையில் “அவர்கள் உயிர்பொருள் எரிவாயுவை, அரிசி அரைப்பதற்கு உபயோகிப்பதாக கூறினார். இதனால் பணமும் சம்பாதிக்க முடிகிறது என்று கூறுகிறார். இந்த உயிர்பொருள் வாயு உற்பத்தி கலனானது உயிர்ப் பொருளை வாயுவாக மாற்றி மின்சாரம் உற்பத்தி செய்ய உதவுகிறது. முன்பெல்லாம் சுய உதவி குழுவில், பெண்கள் அரிசி அரைக்கும் வேலையில் ஈடுபட விருப்பமில்லாமல் இருந்தனர். ஆனால் இப்பொழுது ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர் என்று விமலா கூறுகிறார். விமலாவின் சுய உதவி குழுவில் இருக்கும் பெண்கள் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, தங்கள் மகள்களை படிக்க வைக்க உபயோகிக்கின்றனர். இராஜேஷ் என்னும் விவசாயி இந்த உயிர்பொருள் வாயு உற்பத்தி கலனை வேறொரு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துகிறார். இந்த உயிர்பொருள் எரிவாயு உற்பத்தி கலனின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு தேவையற்ற மரக்கட்டைகளைக் கொண்டு கரித்துண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார். இக்கரித்துண்டுகளை அருகில் உள்ள தொழிற்சாலைக்கு விற்பனை செய்கின்றார். இதனால் இவர் வேலைக்காக வெளீயூர் செல்ல தேவை ஏற்படுவதில்லை. இதனால் தன் கிராமத்திலேயே இருந்து தன்னுடைய நிலங்கள் மற்றம் குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்ள முடிகிறது. இந்த கரித்துண்டுகள், தொழிற்சாலை உலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சரைகேளா-கார்ச்வான் என்றும் மாவட்டத்தில் 110 சாண எரிவாயு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கு முன்னர் சமைப்பதற்கு உபயோகப்படுத்திய 240,900 கிலோ விறகுகள் மிச்சம் ஆகிறது. இது 385, 440 கிலோ கரி அமில வாயு உமிழ்வை கட்டுபடுத்தியுள்ளது. இந்த கரிஅமில வாயுவின் அளவு, ஒருவருடத்தில் 200 இந்திய கார்கள் உமிழும் அளவாகும். இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து, மொத்தத்தில் 39,286 வேலை நாட்களை அளித்துள்ளது.

மூலம்: www.undp.org

தாவர எரிபொருள் காடுகள் வளர்ப்புதாவர எரிபொருள் காடுகள் வளர்ப்பு - ஒரு சிறுதொழில்.

பவர்குடா கிராமம், அதிலாபாத் மாவட்டம், ஆந்திரா மாநிலத்திலிருந்துஒருகுறிப்பு

நம் நாட்டில், புங்கை எண்ணெயை உற்பத்தி செய்வதன் மூலம், பல மில்லியன் டாலர் அண்ணிய செலவானியை சேமிப்பதுடன், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும்.  இப்படிப்பட்ட காடுகள், நிலமற்ற ஆண், பெண் பழங்குடியினர்  சமுதாயம் மற்றும் குறு விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும், பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கு, புங்கை எண்ணெய் மற்றும் புண்ணாக்கை விற்பதன் மூலம், அதிகப்படியான வருமானம் கிடைக்கிறது.

பவர்குடா கிராமம், பழங்குடியினர் அதிகம் வாழும்  ஓரு கிராமமாகும். இந்த கிராமத்தில், பல சமுதாய பொருளாதார மற்றும் குறைவான இயற்கை வளங்கள் போன்ற பிரச்சனைகள் உண்டு. இங்குள்ள விவசாய நிலங்கள், குறைந்த உற்பத்தி திறன் கொண்டதாகும். இதனால், இங்கு வசித்த மக்கள் வேலையை தேடி, பக்கமிருக்கும் நகரங்களுக்கு குடி பெயர்ந்தனர்.

இக் கிராமத்தில் ஒருங்கிணைந்த நீர்பிடி பரப்பு மேளாண்மைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது, வருமானத்தை பெருக்கும் செயலாக, புங்கை நாற்றங்கால் அறிமுகப்படுத்தப்பட்டது. சமுதாயத்தில் வருமானத்தை பெருக்குவதற்காக, ஒரு எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரமும் (விலை ரூ. 3,75,000) நிறுவப்பட்டது.

இந்த இயந்திரம் மூலம், புங்கை, வேம்பு மற்றும் ஏனைய விதைகளிலிருந்து, எண்ணெயை பிரித்தெடுத்து, சந்தையில் விற்கலாம்.

இந்த எண்ணெய் மில்லானது, கிராமத்தின் ஒரு முக்கிய வருமானம் தரக்கூடிய  மில்லாக அமைந்தது. புங்கை விதையிலிருந்து எண்ணெய் எடுப்பதன் முலம், பெண்கள் ஒரு கிலோ விதைக்கு, 2 ரூபாய் பெற்றனர். இந்த எண்ணெய் மில்லானது, ஒரு மணி நேரத்தில் 50 கிலோ விதையை அறைக்கும் திறன் கொண்டது. புங்கை மரங்கள் நட்டதன் மூலம்,  சுற்றுச்சூழலில் 147 டன் கரிம வாயு (கார்பன்டைஆக்ஸைடு) உமிழ்விற்கு நிகரான பணத்தை உலக வங்கியிடமிரற்கு பவர்குடா சுய உதவி குழு பெண்கள் பெற்றனர். வாசிங்டனில், 19-21 அக்டோபர் 2003ல், நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கு கொண்டவர்களின், வான்வழி பயணம் மற்றும் உள்ளுர்  பயணத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு (கார்பன்டை ஆக்ஸைடு உமிழ்வு) ஈடு செய்யும் வகையில், உலக வங்கியானது, 645 டாலரை (ரூ.30,000) பவர்குடாவின் பெண்கள் சுய உதவி குழுவிற்கு அளித்தது. இதுவே, உலக வங்கி, முதன்முதலில் ஒரு இந்திய கிராமத்திற்கு, சுற்றுப்புற சேவைக்காக நேரடியாக அளித்த கட்டணமாகும். பவர்குடா கிராமம், புங்கை மரங்களை நடுவதன் மூலம், சுற்றுபுறம் காப்பதில் மாதிரி கிராமமானது.

இந்த அனுபவம், அந்த கிராம மக்களுக்கு பெருமையை மட்டுமில்லாமல், பவர்குடா கிராமத்தை உலக வரைபடத்தில் இடம் பெறச் செய்தது. பவர்குடா சமுதாயம், சுற்றுப்புற சேவைக்காக கிடைத்த 30,000 ரூபாயை, புங்கை மர நாற்றங்கால் வளர்க்க முதலீடு செய்ய முடிவெடுத்தது. 20,000 மரகன்றுகளைக் கொண்ட நாற்றங்காலை உருவாக்கி, அதில் 10,000 மரகன்றுகளை சமுதாய நிலங்களில் நட்டது. மீதமுள்ளதை அருகாமையில் உள்ள கிராமங்கள் மற்றும் வனத்துறைக்கும் கொடுத்தது. விற்ற மரக்கன்றுகளில் இருந்து வந்தப் பணத்தை, மேலும் நாற்றங்கால் மேம்பாட்டுக்கு செலவிட முடிவு செய்தது.

கிராமங்களில் வனப்பாதுகாப்பு சமுதாயங்களை வனத்துறையானது அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், மரகன்றுகளை வாங்குவதில் வனத்துறை பெறும்பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புங்கை என்ணெய் எடுப்பதில் கிடைத்த, இடை விளைவு பொருளான புண்ணாக்கை, பயிருக்கு  ஊட்டச்சத்தை அளிக்கும் இயற்கை உரமாக உள்ளதி பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. இப்புண்ணாக்கு, 4 % தழைச்சத்து, 1 % மணிச்சத்து மற்றும் 1 % சாம்பல் சத்து  கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள், பெண்கள் சுயஉதவிக் குழவிலிருந்து இந்த புண்ணாக்கை ஒரு கிலோவிற்கு 5 ரூபாய் என்ற விலைக்கு பெருகின்றனர்.

இந்ததிட்டமானது, அதிலாபாத் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மலைவாழ் மேம்பாட்டு நிறுவனத்தினால், இபஃட் திட்டமான ஆந்திர மாநிலம் மலைவாழ்மேம்பாட்டு திட்டத்தின் நிதி உதவி மற்றும் இக்ரிசாட் நிறுவனத்தின் தொழில் நுட்ப உதவியுடனும், அக்டோபர் 2003ல் தொடங்கப்பட்டது.

மூலம் :  http://www.icrisat.org

2.98666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top