பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரிய ஒளி அடுப்புகள்

சூரிய ஒளி அடுப்புகளின் பல்வேறு அம்சங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சூரிய ஒளி அடுப்புகள், சூரிய ஒளியைப் பயன்படுத்தி சமைப்பதற்கான சாதனமாகும்.

சூரிய ஒளி அடுப்பின் அனுகூலங்கள் / நன்மைகள்

 • சமைப்பதற்கு தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய், எரிவாயு, மின்சாரம், கரி, விறகு போன்ற எரிபொருள் தேவை இருக்காது.
 • எரிபொருள்களுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
 • சூரிய ஒளியை பயன்படுத்தி சமைக்கப்படும் உணவில் சத்துக்கள் அதிகமிருக்கும். சுமார் 10-20 சதவிகிதம் புரதச்சத்து வீணாகாமல் நிலை நிறுத்தப்படுகிறது. தையாமின் வைட்டமின், 20-30 சதவிகிதமும், வைட்டமின் ஏ 5-10 சதவிகிதமும் சூரிய ஒளியை பயன்படுத்தி சமையல் செய்யும் போது நிலைநிறுத்தப்படுகிறது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது.
 • சூரிய ஒளி சமையல் என்பது சுற்று சூழலுக்கு பாதுகாப்பானது.
 • சூரிய ஒளி அடுப்புகள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறியதாகவோ, பெரியதாகவோ இந்த அடுபுகளை வாங்கிக் கொள்ளலாம்.
 • எல்லாவிதமான சமையல் பணிகளும் அதாவது வேகவைத்தல், வறுத்தல் போன்ற சமையல் பணிகளையும் சூரிய ஒளி அடுப்புகள் மூலம் செய்யலாம்.
 • சூரிய ஒளி அடுப்புகளை அரசு மான்ய உதவியுடள் பெற்றுக் கொள்ளவும் திட்டங்கள் உள்ளன.

சூரிய ஒளி அடுப்பின் குறைகள்

 • போதுமான அளவு சூரிய ஒளி தேவைப்படும்
 • சமைப்பதற்கு, சாதாரண அடுப்புகளைவிட இது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

சூரிய ஒளி அடுப்புகளின் வகைகள்

 1. வீட்டில் சமைப்பதற்கு : பெட்டி வடிவிளான சூரிய ஒளி அடுப்பு.
 2. பெரியளவில் சமைப்பதற்கு : ஒருங்கிணைந்த சூரிய ஒளி அடுப்பு -ஷெஃப்லர்ஸ் அடுப்பு என்றும் அழைக்கலாம்.

பெட்டி வடிவிளான சூரிய ஒளி அடுப்பு

ஒரு பெட்டியை போன்றிருக்கும். இதில் சமையல் செய்யலாம். கிராமங்களில், வீட்டில் சமைப்பதற்கு ஏற்றது. பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கருவி.

சூரிய ஒளி அடுப்பில் உள்ள முக்கியமான பாகங்கள்

 • வெளிப்புறப் பெட்டி : சூரிய ஒளி அடுப்பின் வெளிப்புற பெட்டி ஜி.ஐ. அல்லது அலுமினியம் தகடு அல்லது ஒரு வகை ப்ளாஸ்டிக்கினால் ஆன பொருளில் செய்யப்படுகிறது.
 • உள்பக்க சமைக்கும் பெட்டி (தட்டு) : இது அலுமினியத் தகடால் செய்யப்படுகிறது. வெளிப்புற பெட்டியை விட உள்பக்க சமைக்கும் பெட்டி சிறியதாக இருக்கும். கருப்பு நிற வண்ண பெயிண்ட்டால் பூசப்பட்டிருக்கும். கருப்பு நிறம் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மையுடையது. இப்படி ஈர்க்கும் சூரிய ஒளியை / சூட்டை, சமையல் பானைக்கு அனுப்பும்.
 • இரு கண்ணாடி இழை : இந்த இரு கண்ணாடி இழை உள்பக்க சமைக்கும் பெட்டிக்கு மூடி போன்று இருக்கும். இந்த கண்ணாடி இழை உள்பக்க சமைக்கும் பெட்டியை விட சற்று பெரியதாக இருக்கும். இரண்டு கண்ணாடி இழைகள் அலுமினிய ஃப்ரேமில் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டு கண்ணாடி இழைகளுக்கும் இடையில் 2 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் காற்று இருக்கும். இதனால் உள் பக்கமுள்ள சூடு வெளியேறுவது தடுக்கப்படுகிறது. சூடு வெளியேறுவதை தடுக்க, கண்ணடி மூடியின் ஓரப் பகுதிகளில், ரப்பர் பட்டி பொருத்தப்பட்டிருக்கும்.
 • சூடு காப்பான் : வெளிப்புற பெட்டி உள்பக்க சமைக்கும் பெட்டிக்கு இடையிலும், தட்டின் கீழ்புறமு சூடு காப்பான் வைக்கப்படுகிறது. கிளாஸ் உல் (ஒரு வகை கண்ணாடி) துகள்கள் சூடு காப்பானாக பயன்படுகிறது. சூடு காப்பான் பொருள்கள் சுத்தமானவையாகவும், ரசாயனப் பொருட்கள் கலப்பு இல்லாதவையாகவும் இருக்க வேண்டும்.
 • கண்ணாடி : கதிர்வீச்சை அதிகரிப்பதற்காக, சூரிய ஒளி அடுப்பில், கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது. சூரிய ஒளி அடுப்பு மூடியின் உள்புறம் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். சூரியனில் இருந்து வரும் கதிர்கள் கண்ணாடியில் பட்டு பிரதிபலிக்கும். இந்த சூரிய ஒளி கதிர்கள், கண்ணாடி இழைவழியாக சமைக்கும் பெட்டியை சேர்கிறது. இதுபோல் பிரதிபலித்து வரும் சூரிய ஒளிக்கதிர்கள், சமையலை விரைவுபடுத்தும். எவ்வாறு என்றால், சமையல் செய்யும் பாத்திரத்தில் உஷ்ணத்தை அதிகப்படுத்தி, சமையலை விரைவாக முடிக்க முடியும்.
 • பாத்திரங்கள் : மூடியுள்ள பாத்திரங்கள் பெரும்பாலும் அலுமினியம் அல்லது எவர்சில்வரில் செய்யப்பட்டவை. இந்த பாத்திரங்களின் வெளிப்புறத்தில் கருப்பு நிற வண்ணம் பூசப்பட்டிருக்கும்.

பெட்டி வடிவ சூரிய ஒளி அடுப்பு, மின்சாரம் மூலம் இயங்கும் அமைப்போடும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

சூரிய ஒளி அடுப்பில் உணவு எப்படி சமைக்கப்படுகிறது?

 • சூரிய ஒளி அடுப்பை, நிழல் படாதவாறு, நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டும். சமையல் செய்யும் பாத்திரத்தை அதில் இணைப்பதற்கு முன் 45 நிமிடம் வெயிலில் வைக்க வேண்டும். இவ்வாரு செய்வதால், சூரிய ஒளி அடுப்பு சமைக்க தயாராவதோடு, சமைக்கும் நேரத்தை குறைப்பதற்கும் உதவும்.
 • அடுப்பிலுள்ள கண்ணாடியில் சூரிய ஒளி நேரடியாக படும்படி சரியாக வைக்க வேண்டும். மேலும், அக்கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கும் சூரிய ஒளி சமைக்கும் பெட்டியின் கண்ணாடி மூடியில் படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சரியான முறையில் கண்ணாடி பொருத்தப்பட்ட பின், அது அசைவதை தடுக்க அதில் இருக்கும் ஸ்ரூக்களை டைட் செய்யவும்.
 • சூரிய ஒளி அடுப்பிலுள்ள கண்ணாடி இழைகளை திறந்து அதில் சமைக்கும் பாத்திரங்களை வைத்து சரியாக மூட வேண்டும். சமையல் செய்யும் பாத்திரங்களை உள்ளே வைத்த பின் இழைகள் திறக்கப்படக்கூடாது.
 • உணவு முழுமையாக சமைக்கப்ட்ட பின்தான் இழைகளை திறக்க வேண்டும். இழைகளை திறப்பதற்கும், சமையல் பாத்திரங்களை கையாளுவதற்கும் கைத்துணியை பயன்படுத்த வேண்டும். ஏனெனன்றால் சூடு கடுமையாக இருக்கும்.

விலை

சூரிய ஒளி அடுப்பின் விலை 2500 முதல் 4000 ரூபாய் வரை இருக்கும். அளவு மறறும் வகைகளுக்கேற்ப விலை மாறுபடும்.

பெரிய அளவில் சமைப்பதற்கான சூரிய ஒளி அடுப்புகள்

சூரிய ஒளியை ஒருங்கிணைக்கும் பாராபோலிக் பிரதிபலிப்பான் மூலம் இவ்வகை அடுப்பு செயல்படுகிறது.

சூரிய ஒளி அடுப்பில் உள்ள முக்கியமான பாகங்கள்

 • பாகம் அ - சூரிய ஒளியை ஒருங்கிணைக்கும் தகடு (பிரதம பிரதிபலிப்பான்)-இந்த தகடு சூரிய ஒளியை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒருங்கிணைக்க உதவுகிறது.
 • பாகம் ஆ - தானியங்கி முறை:சூரியனின் இடமாற்றத்திற்கு ஏற்ப, சூரிய ஒளியை ஒருங்கிணைக்கும் தகடை சுற்றுச் செய்து, சூரிய ஒளியை தடையில்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருங்கிணைக்க, இந்த பாகம் உதவுகிறது.
 • பாகம் இ - இரண்டாம் நிலை பிரதிபலிப்பான்: இது சமையலறையில் வடக்கு பக்கம் இருக்குமாறு வைக்கப்பட வேண்டும். இதன் மேல் சமையல் பாத்திரம் வைக்கப்படும். இந்த பிரதிபலிப்பான்கள், ஒருங்கிணைக்கப்ட்ட சூரிய ஒளியை ஈர்த்து பாத்திரத்தின் அடிபாகத்தில் படும்படி செய்கிறது.
 • பாகம் ஈ - சமையல் பாத்திரங்கள்

சூரிய ஒளி அடுப்பை பயன்படுத்தி எவ்வாறு சமையல் செய்வது?

1. வடிவமைத்தல்

 • சூரிய ஒளியை ஒருங்கிணைக்கும் தகடு (பாகம் அ) நிழல் இல்லாத வெயில் படும் இடம் அல்லது கூரைப்பகுதியின் தெற்கு பக்கம் பார்க்குமாறு வடிவமைக்க வேண்டும்.
 • சமையல் செய்யும் இடம், பாத்திரங்கள் வடக்கு பக்கம் தரைமட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.சூரிய ஒளியின் பிரதிபலிப்பு இரண்டாம் நிலை பிரதிபலிப்பான் (பாகம் இ) மேல் பட வேண்டும். இது சமையலறையின் வடக்கு பக்கத்தில் ஒரு துவாரம் இடப்பட்டு வைக்கப்பட வேண்டும்.

2. சமுதாய / பெரிய அளவில் சமைப்பதற்கான சூரிய ஒளி அடுப்புகள் செயல்படும் விதம்

 • தினமும் காலையில் சூரிய ஒளியை ஒருங்கிணைக்கும் தகடு கிழக்கு பக்கம் பார்க்குமாறு அல்லது காலை வெயில் ஈர்க்கும் வகையில் திருப்பி வைக்க வேண்டும்.
 • கடிகாரம் போன்ற அமைப்பு நாள் முழுக்க ஒளித்தகடு, சூரியனின் அசைவுக்கு தக்கபடி திரும்பும் வகையில் செயல்படுகிறது.
 • சமைப்பதற்கு தேவையான அளவு சூடு ஒருங்கிணைந்து கிடைக்கப்பெற்றவுடன், சமைக்கும் கருவி தானாகவே இயங்கத்துவங்கும். சூடும், சமையல் பாத்திரத்தில் நேரடியாக விழும்.பிரதான ஒருங்கிணைக்கப்பட்ட பிரதிபலிப்பான்களில் விழுந்த ஒளி, இரண்டாம் நிலை பிரதிபலிப்பான் மூலம் சமையல் பாத்திரங்கள் மீது விழுந்து சூட்டை அளிக்கத் துவங்கும்.
 • பிரதான ஒருங்கிணைக்கப்பட்ட பிரதிபலிப்பான்களில் விழுந்த ஒளி, இரண்டாம் நிலை பிரதிபலிப்பான் மூலம் சமையல் பாத்திரங்கள் மீது விழுந்து சூட்டை அளிக்கத் துவங்கும்.
 • பருவகாலத்திற்கு ஏற்ப, 6 மாதத்திற்கு ஒரு முறை, சூரியனின் இடத்தை பொறுத்து, ஒருங்கிணைக்கும் தகடு அமையமிடத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

விலை

பெரிய அளவில் சமைப்பதற்கான சூரிய ஒளி அடுப்புகளின் விலை 7000 ரூபாயிலிருந்து 50000 ரூபாய் வரை இருக்கும். இவ்விலை, அளவு மற்றும் வகைகளுக்கு ஏற்ப மாறுபடும்.

உங்கள் சொந்த சூரிய அடுப்பைத் தயாரித்தல்

வீட்டில் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய எளியப் பொருட்களைக் கொண்டு சூரிய அடுப்பைத் தயாரிக்க முடியும். இந்த “நீங்களே தயாரிக்கக் கூடிய” சூரிய அடுப்பைக் கொண்டு சுவையான சாப்பாட்டை தீப்பெட்டி கொண்டு பற்ற வைக்காமலே தயாரிக்கலாம்.

தேவையானப் பொருட்கள்

 • இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகள்- இரண்டு பெரிய கிண்ணங்கள் வைத்தது போக இடம் இருக்கும் அளவிற்கு. ஒரு பெட்டி மற்றொரு பெட்டிக்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும்.
 • வைக்கோல் / பழைய செய்தித்தாள்கள் - பழைய செய்தித்தாள்களை எடுத்து கசக்கவும். வைக்கோல் கிடைத்தால் அடைத்து வைக்க உபயோகப்படும்.
 • அலுமினிய பாயில்
 • கருப்பு நிற அக்ரிலிக் பெயிண்ட்
 • பேகிங் டேப்
 • கத்தரிக் கோல்
 • கண்ணாடி மூடி
 • இரண்டு அலுமினிய கிண்ணங்கள் உலோக மூடியுடன்
 • அரை கிண்ணம் அரிசி, தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள்

செய்முறை

 • உட்புற பெட்டி: Cபெட்டியை நன்றாக சுத்தம் செய்து, மேற்புற பகுதி தவிர மற்ற எல்லா பக்கங்களையும் டேப் வைத்து ஒட்ட வேண்டும். பெட்டி நல்ல திடமான நிலையில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும். நல்ல கூர்மையான கத்தரிக்கோல் கொண்டு உட்புற பெட்டியின் மேல் மூடியை வெட்ட வேண்டும். கரடு முரடான பகுதிகளை ஒட்டும் டேப் கொண்டு மூடவும். இப்பொழுது பெட்டியின் உட்புறத்தை நல்ல கருப்பு நிற அக்ரிலிக் வர்ணம் கொண்டு நன்றாக வர்ணம் பூசவும். பின்பு பெட்டியை காய வைக்கவும்.
 • வெளிப்புற பெட்டி: Cபெட்டியை நன்றாக சுத்தம் செய்து, மேற்புற பகுதி தவிர மற்ற எல்லா பக்கங்களையும் டேப் வைத்து ஒட்ட வேண்டும். பெட்டி நல்ல திடமான நிலையில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும். உணவுப் பொருட்களை மூடி வைக்க பயன்படுத்தப்படும் அலுமினிய காகிதத்தை பெரிய பெரிய் துண்டுகளாக கத்தரிக்கோல் கொண்டு வெட்ட வேண்டும். அந்த காகிதங்களைக், பெட்டியின் மேல் மூடியின் உட்புறத்தில் ஒட்ட வேணடும். பின்பு பெட்டியை காய வைக்கவும்.
 • அடைப்பு பொருட்கள் : வெப்பத்தை மெதுவாக கடத்த வல்ல பொருட்களாகிய சுருட்டி வைக்கப்பட்ட செய்தித்தாள், வைக்கோல், தவிடு போன்றவற்றை உபயோகிக்கவும். பெரிய பெட்டியின் அடிப்புறத்தில் இந்த பொருட்களை கொண்ட ஒரு அடுக்கை வைத்து அதன் மீது சிறிய பெட்டியை வைக்கவும். இரு பெட்டிகளின் இடையே நான்கு புறங்களிலும் இடைவெளி இல்லாதவாறு இப்பொருட்களைக் கொண்டு அடைக்கவும். இவ்வாறு செய்த பிறகு இரண்டு பெட்டிகளும் ஓர் அமைப்பாக மாறிவிடும்.
 • கண்ணாடி மூடி : கண்ணாடி மூடியை உட்புறப் பெட்டியின் மேற்புறம் மீது வைக்கவும்.
 • சாப்பாடு : Sஇரண்டு ஒளி பிரதிபலிக்காத கிண்ணங்களை மூடியுடன் எடுத்துக் கொள்ளவும். ரு கிண்ணத்தில் அரை கப் கழுவிய அரிசியைப் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். இன்னொரு கிண்ணத்தில் உங்களுக்கு பிடித்த காய்களை ஓர் கரண்டி எண்ணெய், சுவைக்கேற்ற அளவு உப்பு, ஓர் துளி மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாயுடன் கலந்து எடுத்துக் கொள்ளவும் இரண்டு கிண்ணங்களையும் ஜாக்கிரதையாக உங்களுடைய சூரிய அடுப்பின் உள் வைத்து சூரிய ஒளி படும் படி வைக்கவும். இரண்டு மணி நேரத்திற்கு பின் இயற்கையின் தூய்மையான நன்மையினால் சுவையான சாப்பாடு தயாராகி விடும்.

தகவல் : அக்ஷை ஊர்ஜா, வரிசை 4, எண் 4

2.81081081081
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top