பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் / மின் கட்டண திருத்தம் தொடர்பான அடிப்படை விவரங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மின் கட்டண திருத்தம் தொடர்பான அடிப்படை விவரங்கள்

கேள்வி-பதில் வடிவில் மின் கட்டண திருத்தம் தொடர்பான அடிப்படை விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி.1

இந்த மின் கட்டண விகிதப்பட்டியல் உயர்வு மிகவும் அதிகமாக உள்ளது. இதை அனுமதிக்கக் கூடாது.

பதில்

1. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 15.03.2003 அன்று மின் கட்டண உயர்வு குறித்த ஆணை வெளியிட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2010-2011 ஆண்டில் இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டுகளுக்குமேல் உபயோகப்படுத்தும் வீட்டு உபயோகிப்பளர்கள், தொழிற்சாலை மற்றும் வணிகம் மின் இணைப்பகளுக்கு மட்டுமே குறைந்தபட்சமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதர மின் இணைப்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாமல் 2003 ஆம் ஆண்டிலிருந்து அதே மின்கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது.

2. இந்த இடைப்பட்ட காலத்தில் இயக்குதலுக்கான செலவு 68%மும், நிலக்கரி மற்றும் எண்ணெய்க்கான செலவு 229% மும், மின் கொள்முதல் செலவு 235%மும் அளவுக்கு மிக கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், 2003ம் ஆண்டு முதல் தற்போது வரை தொழிற்சாலை நுகர்வோர்களுக்கு மின் கட்டண வீதம் எந்தவித மாற்றமுமில்லாமல் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் உள்ளது.

3. தற்போது உள்ள மின்வெட்டு அளவினை குறைப்பதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மின் உற்பத்தி திட்டங்கள் நிறைவு பெறுவதற்கும், மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஒவ்வொரு நாள் செலவிற்கும் மின் கட்டண உயர்வு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

கேள்வி:2:-

விவசாயம் மற்றும் குடிசைக்கான மின் கட்டணம் மிக அதிகமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த வகைக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்து மின் கட்டணம் அறிமுகப்படுத்துவதற்கான முதல் படியா?

பதில்:-

விவசாயம் மற்றும் குடிசைளுக்கான இலவச மின்சாரத்திற்கு, தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தினை மானியமாக அளிப்பதால் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

கேள்வி.3:-

இரண்டு மாதங்களுக்கு 200 முதல் 500 யூனிட் வரை உபயோகிக்கும் மின் உபயோகிப்பாளர்களுக்கு முதல் 200 யூனிட்க்கான அரசு மானியம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மானியம் தொடருமா?

பதில்:-

வ.எண்

நுகர்வோரின் வகை

விகிதப்பட்டியல் ரூ/யூனிட்

அரசு மானியம் ரூ/யூனிட்

நுகர்வோர்கள் செலுத்த வேண்டியது ரூ/யூனிட்

அரசு மானியம் %

1

வறுமை கோட்டிற்கு கீழே வசிக்கும் பயனீட்டாளர்கள். இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட்டுகள் வரை

3.00

1.50

1.50

50%

2

குறைந்த வருமானம் உள்ள பயனிட்டாளர்கள்

3.00

1.00

2.00

33%

3

நடுத்தர வருமானம் உள்ள பயனிட்டாளர்கள் 200-லிருந்து 500 யூனிட் வரை

0-200 யூனிட் வரை

200-500 யூனிட் வரை

 

 

3.00

4.00

 

 

0

0.50

 

 

3.00

3.50

 

 

இல்லை

12.5%

மேற்கண்ட விவரப்பட்டியலிலிருந்து வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பயனிட்டாளர்களுக்கு அதிக அரசு மானியமும், பிறர்க்கு அவரவர் வருமானம் மற்றும் பணம் செலுத்தும் திறனுக்கேற்ப அரசு மானியம் படிப்படியாகவும் குறைக்கப்பட்டுள்ளது

500 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகிக்கும் அதிக வருமானம் உள்ள நுகர்வோர்கள், தங்களது மின் கட்டணத்தை செலுத்தும் சக்தி படைத்தவர்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் அரசு மானியம் கைவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கேள்வி 4:-

உயர்வழுத்த (HT) தொழிற்சாலை நுகர்வோர்க்கு மின் கட்டணம் உயர்த்தக் கூடாது.

பதில்:-

தேசிய மின்கட்டண விகித கொள்கையின் படி, மின்கட்டணமானது மின் விநியோகத்தின் விலையில் 20% சதவீதம் கூடுதல் அல்லது குறைவு என நிர்ணயிக்க வேண்டும்.

உத்தேசிக்கப்பட்ட உயர்த்தப்படவுள்ள உயர்அழுத்த (HT) தொழிற்சாலைக்கான மின் கட்டண விகிதம் கீழ்கண்டவாறு உள்ளது.

வ.எண்

மின் கட்டண விகிதம்

கணக்கிடப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள விற்பனையிலிருந்து வசூலாகும் தொகை (2012-13) ரூ/யூனிட்

கணக்கிடப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள சராசரி மின்சாரம் வழங்குதற்கான விலை (2012-13) ரூ/யூனிட்

விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் விலை (சதவீதம்)

1

உயர் அழுத்த தொழிற்சாலை (HT)

6.38

5.98

6.69

மேற்கண்ட விவரப்பட்டியலிலிருந்து உயர் அழுத்த (HT) தொழிற்சாலைகளுக்கு நிர்ணயிக்கப்படவுள்ள மின் கட்டண விகிதமானது மின் விநியோகம் செய்யும் மின்விலை 20% சதவீதமே உள்ளது.

கேள்வி 5:-

வணிகம் சார்ந்த பயனிட்டாளர்களுக்கு மின்கட்டணம் அதிகபடியாக உயர்த்தப்பட உள்ளது. அவ்வாறு செய்யக்கூடாது.

பதில்:-

தேசிய மின் கட்டண கொள்கையின் படி, மின் கட்டணமானது, வழங்கப்படும் மின்சாரத்தின் விலையில் 20% சதவீதத்திற்குள்ளே கூடுதல் அல்லது குறைவு என நிர்ணயிக்கப்பட வேண்டும். வணிகம் மின் நுகர்வோர்களுக்கான உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு, கீழே வருமாறு:-

வ.எண்

மின் கட்டண விகிதம்

கணக்கிடப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள விற்பனையிலிருந்து வசூலாகும் தொகை (2012-13) ரூ/யூனிட்

கணக்கிடப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள சராசரி மின்சாரம் வழங்குதற்கான விலை (2012-13) ரூ/யூனிட்

விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் விலை (சதவீதம்)

1

உயர் அழுத்த வணிகம்

7.59

5.98

26.92

2

தாழ்வழுத்த வணிகம்

8.20

5.98

37.07

3

தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு

8.72

5.98

45.82

தற்சமயம் குடிசைகளுக்கான மின் கட்டண உயர்வு 400 சதவீதமும், விவசாயத்திற்கான மின்கட்டண உயர்வு 589 சதவீதமும் உயர்த்தப்படவுள்ளது. அவற்றின் விவரங்களை கீழே காணலாம்.

வ.எண்

மின் கட்டண விகிதம்

கணக்கிடப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள விற்பனையிலிருந்து வசூலாகும் தொகை (2012-13) ரூ/யூனிட்

கணக்கிடப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள சராசரி மின்சாரம் வழங்குதற்கான விலை (2012-13) ரூ/யூனிட்

விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் விலை (சதவீதம்)

1

தாழ்வழுத்த விவசாயம்

1.75

5.98

-53.85

2

தாழ்வழுத்த குடிசை

2.76

5.98

-70.74

மேற்கண்ட விவர பட்டியலிலிருந்து விவசாயம் மற்றும் குடிசை மின் இணைப்புகளுக்கு உத்தேசிக்கப்பட்ட மின் கட்டணமானது 20% மிகவும் கீழே உள்ளது என தெரிகிறது. வருங்காலத்தில் வணிகப்பிரிவு மற்றும் குறைந்த தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோருக்கு மின்கட்டணத்தை படிப்படியாக குறைக்கவும் விவசாயத்திற்கான மின் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கேள்வி 6:

சூரிய சக்தி மற்றும் மின் உற்பத்தி தமிழ்நாட்டில் எவ்வகையில் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது?

பதில்:-

உற்பத்தி நோக்கு ஊக்குவிப்பு திட்டமானது (Generation Based incentive Scheme - GB) மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சகத்தால், மின் தொகுப்போடிணைந்த சூரியசக்தி திட்டங்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2009 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் படி, மின் கொள்முதல் விலையானது ரூ.15/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்-தின் பங்கு ரூ.450/-ம், எரிசக்தி-ன் பங்கு ரூ.10.50/- ஆகவும் சேர்ந்து தொடர்புடைய சூரிய ஆலைகளுக்கு வழங்கப்படும் சபையர் இன்டஸ்டிரியல் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் பிரைவேட் லிட் நிறுவனமானது, சிவகங்கை மாவட்டம், புதுகுளத்தூர் - ரெட்டை பிள்ளை அய்யனார் குளம் கிராமத்தில் 5 மெகாவா திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளனர். நாகப்பட்டினத்தில் முதலாவதாக பி & ஜி சோலார் பிரைவேட் லிட், நிறுவனத்தார் 1 மெகாவா திறன் கொண்ட சூரிய மின் உற்பத்திக்கான ஆலையை நிறுவியுள்ளனர். தமிழ்நாட்டில் சி.சி.சி.எல் இன்பராஸ்டரக்சர்ஸ் லிட் என்ற நிறவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மெ.வா திறன் கொண்ட சூரிய ஆலையை தூத்துக்குடியில் நிறுவி வருகின்றனர்.

கேள்வி 7:-

தாழ்வழுத்த (LT) விகிதப்பட்டியல் IIIA (1) மற்றும் (2)-ன் மின்பளு 10HP-லிருந்து 25 HP-யாக உயர்த்த வேண்டும்.

பதில்:-

சிறு தொழில் மற்றும் பொருளாதார ரீதியில் நலிந்தோரை ஊக்குவிக்கும் பொருட்டு 10HP திறனுக்குள் தாழ்வுஅழுத்த விகிதப்பட்டியல் (LT Tarif III A (1) and (2) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏனைய தொழிற்சார்ந்த நுகர்வோரை விட குறைந்த கட்டண விகிதப்பபட்டியலாகும். இந்த வகை நுகர்வோர் 20HP அல்லது அதற்கு மேலே பயன்படுத்தும் திறன் உள்ள பட்சத்தில், அவர்கள் வழக்கமான தொழிற் நுகர்வோர்களாக கருதப்பட்டு, கூடுதல் கட்டண விகிதப்பட்டியலின் (Industrial Tarif) கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

மின்சார சட்டம் 2003-ன் படி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையமே வகைப்படுத்தி மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் படைத்துள்ளது.

கேள்வி 8:

அனைத்து வித இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து, பயணிட்டாளர் அனைவருக்கும் ஒரு நியாயமான விலையில், வழங்குவது பற்றி.

பதில்:-

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின் படியும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் ஆணை படியும், சில வகை மின் நுகர்வோர்களுக்கு மட்டும் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஏற்படும் வருமான இழப்பை, தமிழ்நாடு அரசானது மானியமாக தந்து ஈடு செய்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வுக்கான மனுவில், குடிசை இணைப்பிற்கான மின் கட்டணம் மாதமொன்றுக்கு ரூ.10-லிருந்து ரூ.60-ஆக உயர்த்த கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதே போல், விவசாய மின் இணைப்பிற்கு ஒரு HP-க்கு ஆண்டிற்கு ரூ.250-லிருந்து ரூ.1750-ஆக உயர்த்த கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் மாற்றங்கள் தேவைப்படுமானால், தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின் படியே முடிவு எடுக்கப்படும்.

கேள்வி 9:-

தெரு விளக்கிற்கான மின் இணைப்புகளை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பதிலாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பராமரிப்பது பற்றி.

பதில்:-

தெரு விளக்கு மின் இணைப்புகள் முன்பு வாரியத்தால் மட்டுமே பராமரிக்கப்ட்டு வந்தது. மாநில அரசின் வழிகாட்டுதலின் பேரில் தற்பொழுது இம்மின்னிணைப்புகள் வழங்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்விஷயத்தில் மாற்றங்கள் தேவைப்படுமானால், தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின் படியே முடிவு எடுக்கப்படும்.

கேள்வி 10:-

மாதத்திற்கொருமுறை பயனிட்டு கட்டணம் கணக்கிடுவது பற்றி.

பதில்:-

மாதம் ஒருமுறைக்கு மற்றும் இருமாதத்திற்கு ஒருமுறைக்கு ஏற்றார்போல் வெவ்வேறு வித மின்கட்டணங்கள் (Slabs) பின்பற்றப்படுவதால், மின் கட்டணத்தில் மாதத்திற்கு ஒரு முறையானலும், இரு மாதத்திற்கொரு முறையானாலும், வேறுபாடு வராது, எனவே, நுகர்வோர்க்கு மின்கட்டணம் கட்டுவதில் வித்தியாசம் இருக்காது.

கேள்வி 11:-

மின் திருட்டினால் ஏராளமான வருமான இழப்பு இருக்கிறதே, இதை தடுக்க, எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

பதில்:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் தமிழகம் முழுக்க மொத்தம் 17 அமலாக்கப் படைப்பிரிவுகளும், சென்னையில் ஒரு பறக்கும் படை பிரிவும் உள்ளது. இவையனைத்தும் காவல்துறை தலைவர்/விழிப்புபணி அவர்களின் நேரடி கவனிப்பில் சிறப்பாக செயல்பட்டு, மின் திருட்டை தடுத்து வருகின்றன.

இதன் செயல்பாடுகள் பின்வருமாறு:-

1) உயர் மின்அழுத்த தொழிற்சாலைகளுக்கு அடிக்கடி சென்று ஆய்வு செய்தல்.

2) சந்தேகம் உள்ள தொழிற்சாலைகளுக்கு, இரவிலும், விடுமுறை நாட்களிலும், சென்று ஆய்வு செய்தல்.

3) மின் பயனிட்டு அளவு திடீரென்று 20% மேல் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அவ்விணைப்பை உடனடியாக ஆய்வு செய்தல்.

4) உயர்அழுத்த (HT) மற்றம் தாழ்வழுத்த (LT) மின் இணைப்புகளை அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்தல்.

5) பெறப்படும் புகார் மனுக்களின் பேரிலும், ரகசிய தகவலின் பேரிலும், மின் இணைப்புகளை ஆய்வு செய்தல்.

6) தனிப்பிரிவு/கோட்ட/உப-கோட்ட அலுவலகங்களில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல்/ஒட்டுதல் மூலமாகவும், பிரபல நாளேடுகளில் விளம்பரம் செய்வதன் மூலமும், மின்திருட்டு, மற்றும் மின் இணைப்பை தவறான முறையில் பயன்படுத்துவது சம்மந்தமான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது.

7) கணக்கில் வராத மின் உபயோகிப்பை கண்டுபிடிப்பது மற்றும் உயர்மின் பாதைகளை ஆய்வு செய்தல்.

இந்த 2011-12 ஆண்டில் ரூ.200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்விலக்கை அடையும் பொருட்டு, தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 31-08-2011 வரையில் 19 உயர்அழுத்த மின் இணைப்பிலும், 3015 தாழ்வழுத்த மின் இணைப்பிலும் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.19.42 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.2.22 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

கேள்வி 12:-

மின்தடை நீக்க வேண்டும் / புதிய மின் திட்டங்கள் விரைந்து முடிக்கப்படுமா?

பதில்:-

புதிய மின் திட்டங்களை விரைந்து முடித்து மின் உற்பத்தியினை செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கேள்வி 13:-

மின் உற்பத்தியை மேம்படுத்தி என்னென்ன நடவடிக்கைகளை மின் கழகம் எடுத்து வருகிறது.

பதில்:-

2011-12-ம் ஆண்டில் 799.5 மெ.வா கூடுதல் திறனையும், 2012-13-ம் ஆண்டில் 3863.5 கூடுதல் மின் திறனை சேர்க்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கேள்வி 14:-

இதற்கு முன் பிரதிமாதம் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் மின் அளவு கணக்கீடு செய்யப்பபட்டு, அடுத்துவரும் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி கால கட்டத்தில் மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இப்பொழுது மாதம் 30 நாட்களும் கணக்கீடு செய்யப்படுகிறது. இதனால் மின் கட்டணம் செலுத்தும் நாட்கள் பற்றி குழப்பமாக உள்ளது.

பதில்:-

தற்பொழுது மாதத்தின் 30 நாட்களும் மின் அளவு கணக்கீடு மற்றும் மின்கட்டணம் வசூல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மின் கணக்கீடு செய்த நாளிலிருந்து 20 நாட்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும், பயணிட்டாளர்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம். கடைசி நாளைய நெருக்கடியை தவிர்த்து, மாதம் முழுமைக்கும் மின் கட்டணம் செலுத்த ஏதுவாக இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி 15:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த கடன் எவ்வளவு?

பதில்:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.45,000 கோடி ஆகும்.

கேள்வி 16:-

இந்த நிதிப்பற்றாக்குறையை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எவ்வாறு சமாளிக்கின்றது?

பதில்:-

கடந்த காலங்களில், நிதிப்பற்றாக்குறை குறைவாக இருக்கும் பொழுது, நிதி நிறுவனங்களிடமிருந்தும்,மாநில அரசின் உத்தரவாதத்தின் பேரில் அளிக்கப்படும் கடன்கள் மூலம் நிதி நிலைமை சமாளிக்கப்பட்டது. ஆனால் வாரியமானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமாகவும் பிரிக்கப்பட்ட பிறகு மேற்படி நிதி நிறுவனங்கள் கடன் தர மறுக்கின்றன. ஏனென்றால் தற்பொழுது வருமான இழப்பின் அளவு மிகப்பெரியதாக உள்ளது. இந்த நிலையில் மின் கழகங்களின் நிதி நிலையை சீராக்கவும், தொடர்ந்து நல்ல முறையில் இயங்கவும், இந்த மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.

கேள்வி 17:-

தமிழ்நாடு மின் கழகங்களுக்கான சொத்து பரிமாற்றங்கள் முடிவடைந்து விட்டதா?

பதில்:-

தமிழ்நாடு அரசானது சொத்து பரிமாற்றங்களை முடிவு செய்ய மேலும் ஒரு ஆண்டு கால அவகாசம் (30-10-2012) வழங்கி உரிய ஆணை வெளியிட்டுள்ளது.

கேள்வி 18:-

வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதலின்போது தகுதிப்பாட்டு அடிப்படை முறை பின்பற்றப்படுகிறதா?

பதில்:-

மின் தேவை பொறுத்து கூடுமான வரையில் தகுதிப்பாட்டு அடிப்படை முறையில் மின்சார கொள்முதல் செய்யப்படுகிறது.

கேள்வி 19:-

குறிப்பிட்ட கால வரையரைக்குள் மின் கட்டணம் செலுத்தாத மின்னிணைப்புகள் துண்டிக்கப்படுவதில்லை. இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்க்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த நடிவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:-

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மின்கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகள், உடனடியாக துண்டிக்கப்பட வேண்டும் என்று கள அலுவலர்கள் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி 20:-

பொதுமக்களிடம் மின் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நட்சத்திர முத்திரையிடப்பட்ட மின்சாதனங்கள், கையடக்க குழல் விளக்குகளை பயன்படுத்த அறிவுறுத்துகிறதா?

பதில்:-

மின் தேவைக்கேற்ப நிர்வகிக்கும் (DSM) முறையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

BEE நட்சத்திர முத்திரையிடப்பட்ட சாதனங்களை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்களிடம், BEE அமைப்பானது பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இந்நட்சத்திர மின் சாதனங்களின் சிறப்பு குறித்து பயிற்சிகள் மற்றும் சிறப்புக் கூட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகிறது.

தமிழ்நாடு அரசு, அரசாணை எண் 126 நாள் 10-11-2008 ன் மூலம் எரிசக்தி சிக்கனம் குறித்து அனைத்து அரசுத்துறைகளும் இவ்வாணையை பின்பற்றவும், இதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கண்காணிக்க வேண்டுமென்றும் இவ்வாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர், சென்னை மாநகராட்சி மற்றும் ஏனைய நகராட்சிகளுடன் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி, மின்தேவையை நிர்வகிக்கும் முறைகள் பற்றி ஆய்வு செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு அரச, மற்றும்மொரு அரசாணை எண்:75/ நாள் 20.8.2010-ன் வாயிலாக, அனைத்து அரசுத்துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், வாரியங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றம் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் குண்டுமின்விளக்குகளை (Incondescent Bulbs) பயன்படுத்த தடை விதித்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும், இவ்வாணையை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களில் பின்பற்றப்படும் மின்சிக்கன முறைகளை அந்தந்த மண்டல/வட்ட அலுவலகங்கள் மூலமாக மின் சிக்கன முறைகளை அறிக்கையாக பெறப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சேமிக்கப்படும் மின்சக்தியின் அளவுகுறித்து தலைமை அலுவலகத்தில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான கட்டிடங்களிலும் மின் சிக்கனத்தை மேற்கொண்டு, அவ்வப்போது சேமிக்கப்படும் மின்சக்தியின் அளவு மற்றும் முறைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பொது மக்களிடம் மின் சிக்கனம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மின் சிக்கன வாரமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பயிற்சி மையங்கள் மூலம், பள்ளி,கல்லூரி மற்றும் பொது மக்களிடமும் அவ்வப்போது சிறப்பு கூட்டங்கள் வாயிலாக மின் சிக்கன விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் மின் அமைச்சகம், BEE மூலமாக பச்சாட் லாம்ப் யோஜனா (Bachat Lamp Yojana) திட்டத்தை பொது குடியிருப்பு பகுதிகளில் அறிமுப்படுத்தியுள்ளது.

மாநில எரிசக்தி துறையும், அரசாணை MS. No.87 Energy (C2) Department, நாள் 14.09.2010-ன் வாயிலாக இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அமலாக்க ஆணையிட்டுள்ளது. இந்த (BLY) திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 500-600 மெ.வா அளவிற்கு உச்சகட்ட மின்பளு தளர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் 22 மின்பகிர்மான வட்டங்களில் BLY திட்டத்தின் வாயிலாக 60% திட்டப் பகுதிக்கான பணி ஒப்பந்தங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் வழங்கப்ட்டுள்ளது. தமிழ்நாடு அரச, அரசாணை எண் 7 / நாள் 04.02.2011-ன் வாயிலாக பழைய சாதாரண விவசாய பம்பு செட்டுகளை மாற்றி, புதிய மின் சிக்கன பம்பு செட்டை நிறுவ அறிவுறித்தியுள்ளது. இதுவரை 242 விவசாயிகள் புதிய மின் சிக்கன பம்பு பெற்று பயனடைந்துள்ளனர்.

ஆதாரம் : தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

3.07142857143
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top