பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பசுமை கட்டிடங்கள்

இத்தலைப்பின் கீழ் பசுமை கட்டிடங்களை மதிப்பிடும் முறை மற்றும் அதற்கான எடுத்துக்காட்டுகளை விளக்கியுள்ளனர்.

பசுமை கட்டிடம் என்றால் என்ன ?

பசுமை கட்டிடங்களை உருவாக்கும் போதும் மற்றும் செயல்பாட்டின் போதும், சிறிய அளவே இயற்கை வளங்கள் அழிக்கப்படும். இக்கட்டிங்களின் வடிவமைப்பின் நோக்கமானது

 1. புதுப்பிக்கபடக்கூடாத ஆற்றல் மீதான சார்பு தன்மையை குறைக்கவும் மற்றும் உபயோகிக்கப்படும் புதுப்பிக்கபடக்கூடாத ஆற்றல் திறம்பட பயன்படுத்துவதும் ஆகும்
 2. கிடைக்கும் வளங்களை அதிகப்படியான சுழற்சி மற்றும் மறுசுழற்சி செய்தல்புதுபிக்கவல்ல ஆற்றலை அதிகம் பயன்படுத்துவது ஆகும்

இது, கட்டிடம் கட்டுவதற்கு அதிக திறன் வாய்ந்த இடுபொருட்கள் மற்றும் கட்டுமான முறைகளை பயன்படுத்துகிறது. மேலும், கட்டும் இடத்திலேயே கிடைக்கக்கூடிய ஆதாரங்களை பயன்படுத்தும் வகையில் சிறப்பான இயற்கை சூழலுக்கு தகுந்த கட்டுமான முறைகளை பின்பற்றும். இக்கட்டிடத்தை ஒளியூட்டுவதற்கு குறைந்த ஆற்றலே தேவைப்படும். விளக்கு, குளிர்யூட்டுதல் மற்றும் ஏனைய தேவைகளுக்கு திறன் அதிகம் உள்ள கருவிகளை பயன்படுத்தும். புதுபிக்கவல்ல ஆற்றலை அதிகம் பயன்படுத்தும். சிறந்த கழிவுப்பொருள்களை மற்றும் நீர் மேலாண்மை செயல்பாட்டுகளுடன் இருக்கும். மேலும் சிறப்பான மற்றும் சுகாதாரமான சூழ்நிலையை உட்புறத்தில் ஏற்படுத்தி கொடுக்கும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை ஒருங்கிணைந்த முறையில் பசுமை கட்டிடத்தின் வடிவமைப்பில் பின்பற்ற வேண்டும்.

 1. கட்டுமான இட மேலாண்மை
 2. கட்டிடத்தின் வெளிப்புற தோற்றம் திட்டமிடுதல் மற்றும் வடிவமைத்தல்.
 3. கட்டித்தின் ஒளி, காற்றோட்டம் மற்றும் தட்பவெட்ப நிலை மேலாண்மைக்கான திட்டமிடுதல்
 4. புதுப்பிக்கவல்ல ஆற்றலை பயன்படுத்துவதன் மூலம் கட்டுமான இடத்திலேயே ஆற்றலை உருவாக்குதல்
 5. நீர் மற்றும் கழிவு மேலாண்மை
 6. சூழ்நிலையை ஒத்த நிலையான கட்டிடப் பொருள்களை தேர்வு செய்தல் (அதிக முறை சுழற்சி செய்தல், குறைந்த உமிழ்வு கொண்ட வேகமாக புதுப்பிக்கவல்ல ஆற்றல் )
 7. உட்புற சூழ்நிலை தரம்/ உட்புற வெப்பம், மற்றும் ஒளி அமைப்பு மற்றும் காற்று தரம் ஆகியவற்றிர்க்கான திட்டமிடுதல்

பசுமை கட்டிடங்கள் மதிப்பிடும் முறை என்ன?

GRIHA (கீரின் ரேட்டிங்கு ஃபார் இன்டகிரேடட் ஹபிடேட் அசஸ்மென்ட்) என்பது ஒரு மதிபீட்டு முறையாகும். இதனை TERI என்னும் நிறுவனம், இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்துடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. அது பசுமை கட்டிங்களுக்கான வடிவ மதிப்பீட்டு திட்டம் ஆகும். இது நாட்டில் உள்ள அனைத்து பருவநிலைகளிலும் உள்ள கட்டிடங்களுக்கும் பொருந்தக்கூடிய திட்டமாகும்.

பசுமை கட்டிடங்களுக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளதா?

சில உதாரணங்களாவது

 • டெர்ரி ரெட்டீரிட் கட்டிடம், குர்கான்
 • இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி), கான்பூர், உத்தரபிரதேசத்தில் உள்ள CESE (சென்டர் ஃபார் என்விரான்மென்டல் சயின்ஸ்சச் மற்றும் என்ஜீனியரிங்)
 • சுஸ்லான் ஒன் எர்த், சுஸ்லான் எனர்ஜி லிட். ஒன் எர்த், ஹதஸ்பூர், பூனே 411 028
 • CII சொரஹப்ஜி கோத்ரேஜ் கிரீன் பிஸ்னெஸ் சென்ட்டர், ஹைதராபாத் .

Source : http://www.grihaindia.org

2.94186046512
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top