பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழல் மாசுபட்டுவரும் இன்றைய சூழலில் மாற்றுப்பொருட்களின் தேவை அவசியமான ஒன்று. அத்தகைய மாற்று பொருள்தான் ‘செல்லுலர் கான்கிரீட் ப்ளாக்’. இது செங்கலுக்கான மாற்றுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் தயாரிப்பில் பயன்படும் பிரதான இயந்திரங்கள் போம் ஜெனரேட்டர் ப்ளே ஆஷ், சிமெண்ட், போமிங் ஏஜண்ட் ஆகியவை.
இதில் சிமெண்ட் போமிங் ஏஜெண்ட் தாவர எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். போமிங் ஜெனரேட்டரில் உருவாக்கப்பட்ட போமிங் உடன் ப்ளே ஆஷ், சிமெண்ட் ஆகியவற்றை நன்றாக அரைக்க வேண்டும். சில மணி நேரங்களுக்குப் பிறகு கடினமான இந்த கலவை உருவாகும். அப்படி உருவாகும் கலவையை அச்சுகளில் ஊற்றி உலரவிட வேண்டும்.
போதுமான நேரம் உலர்ந்த பிறகு கற்களை அச்சுகளில் இருந்து பிரிக்க வேண்டும். பெரிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், செல்லுலர் கான்கிரீட் ப்ளாக் உற்பத்தி இயந்திரங்களை தனியாக வாங்கி தயாரிக்கும். இவை இல்லாமல் சிறு சிறு கட்டிடப் பணிகளுக்காக இவ்வகை கற்கள் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இம்முறையில் தயாரிக்கப்படும் கற்கள் அதிக எடை தாங்கும் திறன் கொண்டது. அதுபோல வெப்பத்தை கடத்தும் திறனும் மிக குறைவு. அதனால் வீட்டுக்கு கோடைக் காலத்திலும் குளுமையை தரும். தீயை கடத்தும் தன்மையும் மற்ற மாற்று கட்டுமான கற்களுடன் ஒப்பிடும்போது குறைவு.
ஆதாரம் : தினத்தந்தி