பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நுண்ணுயிரிகளின் கட்டுப்பாடு

நுண்ணுயிரிகளின் கட்டுப்பாடு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

எல்லா இடங்களிலும் நன்மை பயக்கக்கூடிய மற்றும் தீமை விளைவிக்கக்கூடிய நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. மனிதன் நன்மை பயக்கக்கூடிய நுண்ணுயிரிகளை விரும்பி வளர் ஊடகத்தில் வளர்க்க விரும்புகிறான். அதே நேரத்தில் விரும்பத்தகாத, தீமை பயக்கின்ற, நோய்க்கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த விரும்புகிறான். நன்மை பயக்கின்ற நுண்ணுயிரியை வளர்க்கின்ற போதும் வேறு நன்மை பயக்கும் நுண்ணுயிரி இதனுடன் சேர்ந்து வளர்வதைக் கட்டுப்படுத்தாவிட்டால், இரண்டாவது நுண்ணுயிரி முதலாவதை மாசு படுத்துகிறது. நுண்ணியிரி கட்டுப்பாடு நோய் பரவுவதைத் தடுப்பதற்கும், கலப்படம் ஏற்படாமலிருக்கவும், பொருட்கள் சிதையாமல் தடுக்கவும், உணவு கெடாமலிருக்கவும் மிகவும் உதவுகிறது. நோய் நுண்ம ஒழிப்பு நுண்ணியிரிகளை முற்றிலும் நீக்குகிறது அல்லது கொல்கிறது. ஆனால், கட்டுப்படுத்துதல் (control) மொத்த நுண்ணுயிரிகள் மற்றும் நுண்ணுயிரிகள் செயல்பாடுகளைக் குறைக்கிறது.

இயற்பியல், வேதியியல் காரணிகளைக் கொண்டு நுண்ணுயிரிகள், நீக்குதல், குறைத்தல் அல்லது கொல்லுதல் மூலமாகத் தடுக்கப்படுகின்றன. இயற்பியல் காரணிகள் உலர் வெப்பம், நீராவி (ஈரப்பதமான வெப்பம்), சுவாலை, கதிர்வீச்சு, வடிகட்டுதல் போன்றவை ஆகும். ஆன்டிசெப்டிக், டிஸ் இன்பெக்டன்ட்ஸ், சோப்புகள், ஆல்கஹால் மற்றும் எடை அதிகமான உலோகங்கள் முதலியன வேதியியல் காரணிகளாகப் பயன்படுகின்றன. நுண்ணுயிரிகள் வெளியேற்றமானது வடிகட்டுதல், அல்ட்ரா சென்டிரிஃபிகேஷன் என்ற இரு செயல்களைப் பெற்றுள்ளது. செல்லானது எதிர் நுண்ணுயிரி காரணிகளினால் வளர்ச்சி மற்றும் பெருக்கம் அடையாத நிலையாக வைத்திருத்தல் தடை செய்தல் (iruhibition) எனப்படுகிறது. கொல்லுதல் அல்லது இறத்தல் என்பது வெப்பம், கதிர்வீச்சு, அல்லது வேதிப்பொருட்கள் உண்டாக்கும் திரும்பமுடியாத ஆற்றல் இழப்பாகும்.

கதிர்வீச்சு

கதிர்வீச்சு என்பது இடைவெளி மூலமாக சக்தி (ஆற்றல்) பரவுதல் ஆகும். சூரிய கதிர்வீச்சு ஒளிச் சேர்க்கைக்கான ஒளி ஆற்றலைத் தந்து, உலருவதற்கும், பொருட்கள் சிதைவதற்கும் பயன்படும் வெப்பத்தை தருகின்றது. இதன் மூலம், நுண்ணுயிரிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன, ஒளிக்கதிர், X- கதிர்கள், U.V. கதிர்கள், காமாக்கதிர்கள் முதலியவை உள்ளடங்கிய எலக்ரோமேக்னடிக் கதிர்வீச்சு நுண்ணியிரிகளைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமானதாகும். கதிர்வீச்சு அதனுடைய அலை நீளத்தில் விளக்கப்படுகிறது, ஆங்ஸ்ட்ராம் (A) என்பது இதனை அளக்க உதவும் அலகாகும். (1:mm = 10,000A E; =inmn = 10 A) அதனுடைய ஆற்றல் எலக்ட்ரான் வோல்ட்டுகளில் (ev) அளக்கப்படுகிறது.

எலக்ட்ரோமேக்னடிக் ஸ்பெக்ட்ரம்

பொருட்களின் செல்களுக்கிடையே சேதத்தை ஏற்படுத்துவதால் இவை தனித் தன்மை உடையதாக (non-specific) இல்லை. மேலும் குறைவான வெப்பத்தை இத்தகைய பொருட்களில் உண்டாக்குவதால் குளிர் நுண்ம நீக்கம் என்று அழைக்கப்படுகிறது. மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் வெப்பம் தாங்காத பொருட்களிலும் நுண்ம நீக்கம் செய்ய இம்முறை பயன்படுகிறது. X- கதிர்கள் அவற்றின் ஊடுருவும் தன்மையால் அனைத்து உயிர்களுக்கும் தீங்கிழைக்கின்றன. ஆனால் நுண்ணுயிரிகள் கட்டுப்பாட்டில் இவற்றின் உபயோகம் மிகவும் வரைமுறைப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. இதற்குக் காரணம் இக்கதிர்களின் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதும், ஆதாரத்திலிருந்து எல்லா திசைகளிலும் வெளிப்படும் தன்மையுள்ளதாக இருப்பதும் ஆகும். ஆனால் இக்கதிர்கள் மைக்ரோபியல் திடீர் மாற்றிகளை (mutants) தோற்றுவிக்கப் பயன்படுகின்றன.

அல்ட்ரா வைலட் (U.V) கதிரியக்கம்

150-3900A அலைநீளமுள்ள கதிர்களைப் பெற்றுள்ளது. ஆனால் 2650A ஒளி அலை நீளமுள்ள U.V. கதிர்கள் அதிக அளவு பாக்டீரியாவை கொல்லும் தன்மை (bactericidal) பெற்றுள்ளன. 2600-2700A உள்ள கதிர்களை பெருமளவு U.V. விளக்குகள் (germicidal lamps) வெளிப்படுத்துகின்றன. இவை நுண்ணுயிர் ஆய்வகத்திலும், அறுவை சிகிச்சை அறைகளிலும், நிரப்பும் அறைகளிலும், பாக்டீரியா நீக்கப்பட்ட மருந்துகள் சிறு குழாய்களில் அடைக்கப்படும் மருந்து தொழிற்சாலையிலும், மற்றும் உணவு மற்றும் பால் தொழிற்சாலைகளில் மேற்பரப்பில் பாக்டீரியாவைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. குறைந்த அளவு ஆற்றல் மற்றும் மிகக் குறைந்த அளவு ஊடுருவும் ஆற்றல் பெற்ற U.V. கதிர்கள் அயனியாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் உட்கிரகிப்படுகின்றன. வெளிப் பரப்பிலுள்ள நுண்ணுயிரிகள் மட்டும் U.V. கதிர்களால் அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அதிக அளவு UV கதிர்கள் ஒரு மெலிவான கண்ணாடியினால் கூட தடுக்கப்பட்டுவிடும். ஆனால் அலை நீளம் குறைந்த U.V. கதிர்கள் மேகங்களாலும் புகையாலும் வடிகட்டப்படுகின்றன. எனவே 2670-3500A அலைநீளமுள்ள கதிர்கள் மட்டுமே புவிப்பரப்பை அடைகின்றன. இதனால் சூரிய ஒளியின் நோய்க்கிருமி தாக்கும் தன்மை ஒரு குறிப்பிட்ட அளவுதான் என விளங்குகிறது.  10 (ev) ஆற்றலுள்ள கதிர்வீச்சு பெற்ற காமாக் கதிர்களும் Xகதிர்களும் எலக்ட்ரான் களைத் துரத்தி மூலக் கூறுகளை அயனியாக்குகின்றன. (அயனியாக்கும் கதிர்வீச்சு). இத்தகைய கதிர்களால் கதிர்வீச்சுப் பெற்ற செல்கள் ஹைடிரஜன், ஹைடிராக் சைல் மூலக்கூறுகள் மற்றும் பெராக்ஸைடையும் வெளிப்படுத்தி பல வேதியியல் காரணிகள் எதிர் நுண்ணியிர் வேதியியல் காரணிகள் அநேகம் உள்ளன.

ஒருவகை வேதிப்பொருட்கள் உயிரிகளின் வளர்ச்சி மற்றும் வளர் சிதை மாற்றத்தைத் தடுக்கின்றன அல்லது அவற்றைக் கொல்கின்றன. ஒரு சிலவகைக் காரணிகள் ஆன்டிசெப்டிக்குகளாகப் பயன்படுகின்றன. வேறு சில வகை டிஸ்இன்ஃபெக்ட்டன்களாகப் பயன்படுகின்றன,

ஆன்டிசெப்டிக் காரணி

நுண் உயிரிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டினை அழிப்பதன் மூலம் அல்லது வளர்ச்சி, வளர் சிதை மாற்றத்தைக் குறைப்பதின் மூலமாகவும் கட்டுப் படுத்துகின்றது, (ஆன்டிசெப்சிஸ்). உடலின்மீது பயன்படுத்தப்படுபவை ஈதைல் ஆல்கஹால், ஸ்பிரிட், டிங்சர் அயோடின் மற்றும் ஹெக்சைல் ரிசார்சினால்ஸ் ஆகும்.

டிஸ் இன்ஃபெக்ட்டன்ட்ஸ் நோய்க்கிருமிகளைக் கொல்கின்றன, ஆனால் அவை தடுப்பாற்றல் கொண்ட ஸ்போர் வகைகளை அழிக்காது. தொற்றும் காரணிகளையும் டிஸ்இன்ஃபெக்டன்ஸ் அழிக்கின்றன. இந்த வேதிப் பொருட்கள் உயிரற்ற பொருட்களான தரை, மரச்சாமான்களின் மீது பயன்படுத்தப்படுகின்றன. ஃபீனால், மெர்குரிக் குளோரைடு, ஹைபோ குளோரைட் குளோரோமைன்கள் போன்றவை டிஸ் இன்பெக்டன்ஸ் ஆகும். ஃபீனால் மற்றும் ஹைபோ குளோரைட்கள் உயிரினங்களின் காயங்களில் பயன்படுத்தப்படும்போது குறைவான வீரியத்திலும், உயிரற்றப் பொருட்களில் பயன்படுத்தும் போது அதிக அளவு வீரியத்திலும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதில் முன்னது ஆன்டிசெப்டிக் காரணி போலவும், பின்னது உண்மையான ஆன்டிசெப்டிக்காகவும் செயலாற்றுகிறது.

பயன்படுத்தப்படும் வகையைப் பொருத்தும், வேறு வேறு நுண்ணுயிரிகளில் அவற்றின் செயல்பாடுகளின் தன்மை பொருத்தும் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்தும் வேதிப் பொருட்கள் தூய்மையாக்குபவை கிருமி கொல்லி, பாக்டீரியா கொல்லி பாக்டீரியா கட்டுப்படுத்துபவை என்றும் அழைக்கப்படுகின்றன. தூய்மையாக்கும் காரணிகள் மக்களின் சுகாதாரத்தைக் காப்பதற்காக நுண்ணுயிரிகளின் உற்பத்தியைக் குறைக்கின்றன. இவை அன்றாடம் பாத்திரங்களின் சுத்தத்திற்கும், பால் பண்ணைகளிலும், உணவு உற்பத்தி தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. கிருமி கொல்லி என்பது தடுப்பாற்றல் பெற்ற கிருமிகளின் ஸ்போர்களைத் தவிர மற்ற வளர்கின்ற வகைகளை மட்டும் கொல்லக் கூடிய காரணிகளாகும். பாக்டீரியா கொல்லி பாக்டீரியங்களைக் கொல்லும் காரணி. பூஞ்சை கொல்லி பூஞ்சைகளைக் கொல்லக்கூடியது. வைரஸ்களையும் ஸ்போர்களையும் கொல்லக் கூடிய காரணிகள் முறையே வைரஸ் கொல்லி, ஸ்போர் கொல்லி எனப்படுகின்றன. எந்தக் காரணி பாக்டீரியங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறதோ அதற்கு பாக்டீரியா கொல்லி என்று பெயர். அதே போன்று பூஞ்சை கொல்லி பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

ஃபீனால்கள்

19 ஆம் நூற்றாண்டில் டிஸ் இன்பெக்டன்ட்ஸ் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் காயங்களில் ஏற்படும் தொற்றின் காரணமாக மரணம் சம்பவித்தல் மிகச் சாதாரணமாக இருந்தது. ஜோசப் லிஸ்டர் என்ற ஆங்கில மருத்துவர் முதல்முதலாக பாக்டீரியங்களைக் கொல்லக்கூடிய நீர்த்த கார்பாலிக் அமிலத்தை (ஃபீனால்} அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தினார். இந்த கரைசலின் மூலம் காயங்கள் விரைவில் குணமடைந்தன. எனவே அவர் தொற்றுவதைத் தடுப்பதற்காக ஃபீனால் கரைசலை அறுவை சிகிச்சைக் கருவிகளிலும், காயங்களிலும் பயன்படுத்தினார். மேலும் அறுவை சிகிச்சை அறையில் ஃபீனாலைத் தெளித்து தொற்று ஏற்படாமல் இருக்கச் செய்தார். ஆன்டிசெப்டிக் காரணியைத் தோற்றுவித்த பெருமை ஜோசப் லிஸ்டரையேச் சாரும். ஃபீனாலை நிலையானதாகக் கொண்டு எந்த ஒரு கூட்டுப் பொருளின் எதிர் நுண்ணுயிரி செயலினை மதிப்பிட முடியும். இம்முறைக்கு ஃபீனால் கோ-எஃபிசியன்ட் டெக்னீக் என்று பெயர். ஃபீனால், கிரஸால், ஃபீனைல் ஃபீனோ, ஹெக்ஸைல் ரெஸார்சினோல் டிஸ் இன்பெக்ட்டாகப் பயன்படும் ஃபீனாலிக் கூட்டுப் பொருட்கள் ஆகும். 2-5% நீர்த்த (Aqueous) ஃபீனால் கரைசல் எச்சில், சிறுநீர், மலம் மற்றும் தொற்று சேர்ந்த பாத்திரங்களை சுத்திகரிக்கப் பயன்படுகிறது. நீர்த்த பீனால் சோப்புகளில் கிருமி நீக்கத்தைத் துரிதப்படுத்த (அதிகரிக்க) பயன்படுகிறது. வீரியமான மேற்பரப்புப் இழுப்பு விசை குறைப்பானான ஹெக்ஸைல் ரெஸார்ஸினால் கிளசரினுடன் சேர்ந்து ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது. பீனாலிக் சேர்மங்களின் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை செல்களின் பிளவு மற்றும் கசிதல் நிகழ்வுகளிலும், செல் புரோட்டீன் வீழ்ப்படிவுகள் மற்றும் நொதிகளின் செயல் இழத்திலிலும் காணப்படுகிறது. அதன் கொல்லும் சக்தி சவ்வுகளில் ஏற்படும் பாதிப்பினைப் பொருத்துள்ளது.

ஆல்கஹால்

ஆல்கஹால்கள் பொதுவாக நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. மூலக்கூறு எடை அதிகரித்தலுக்கேற்ப அவற்றின் நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் அதிகரிக்கின்றது. ஈத்தைல் ஆல்கஹால் பெருமளவு பயன்படுகிறது. மீதைல் ஆல்கஹால் குறைவான பாக்டீரியா அழிப்பானாகவும், நச்சுள்ளதாகவும் உள்ளது. புரோபைல் ஆல்கஹாலைத் தவிர புயுட்டைல், அமைல் போன்ற மற்ற  செயல்படுகிறது. நீச்சல் குளங்களில் 2ppm நிலைகளில் இந்த காப்பர் சல்பேட் ஆல்காக்களைக் கட்டுப்படுத்த பயன் படுகிறது.

பளுவான உலோகங்களின் எதிர் நுண்ணுயிரி செயல்பாடு அவை புரோட்டினுடன் சேரும் தன்மையையும், செயலிழக்கச் செய்தலையும் சார்ந்துள்ளது. அதிக அளவு அடர்வுள்ளவை, சைட்டோபிளாஸ புரோட்டீனுடன் உறைந்து செல்களை சேதப்படுத்துகின்றன அல்லது கொல்கின்றன. மெர்க்குரி நொதிகளின் சல்பஹைடிரைல் தொகுதியுடன் செயல்பட்டு அவற்றை செயலிழக்கச் செய்கின்றன. டிஸ்இன்பெக்டன்டுகள் திறன்படச் செயலாற்ற கரிமப் பொருட்களை நன்கு சுத்தம் செய்த பின்னர் பயன்படுத்த வேண்டும். காப்பர் உயர் அடர்வில் நச்சாக இருக்கும் தன்மை கொண்டது. ஆயினும் காப்பர் தனிமத்தைக் கொண்ட சில நொதிகளின் செயல்பாட்டிற்கு மிகச் சிறிய அளவு காப்பர் தேவை என்பதை கவனிக்க வேண்டும். பாக்டீரியா மீது சில உலோகங்களின் மிகச்சிறிய அளவில் கொல்லும் தன்மை ஒலிகோ டைனமிக் செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது. ஆல்கஹால்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் இவை நீருடன் கலக்கின்ற தன்மையற்றவை. ஈத்தைல் ஆல்கஹால் (எத்தனால்) 50 முதல் 90% வரை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது (70%) ஆய்வுக்கூடங்களில் மேற்பரப்பு பாக்டீரியா நீக்கியாகவும், தோலில் தொற்று ஏற்படுவதைத் தடுக்க முன்னர் ஆன்டிசெப்டிக்காவும் மேலும் தெர்மாமீட்டர்களில் டிஸ் இன்பெக்டன்டாகவும் பயன்படுகிறது. வைரஸ்களுக்கு எதிராக 60% அடர்வுள்ள ஆல்கஹால்கள் பயன்படுகிறன.

ஆல்கஹாலின் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மையால் புரோட்டீன்கள் இயல்பு நிலையிலிருந்து மாறுவது, செல் சவ்வுகளின் கொழுப்பு நீர்மமாதல் (கரைவது) மேலும் செல்களின் நீர் வெளியேற்றப்படுதல் ஆகியவை நடக்கும். நீரற்ற ஆல்கஹால் (Absotute Alcohol) உலர்ந்த செல்களில் எந்த பாதிப்பையும் உண்டாக்க முடியாது. ஏனென்றால் நீர் சேர்ந்த ஆல்கஹாலைக் காட்டிலும் நீரற்ற ஆல்கஹால் ஊடுருவிச் செல்லும் திறனை இழந்து விடுகின்றது.

பளுவான உலோகங்கள்(Heavy Metals)

மெர்க்குரி, வெள்ளி, செம்பு போன்ற பளுவான (எடை அதிகமான) உலோகங்களும் அவற்றின் உப்புக்களும் சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு காரணிகள். 01% அடர்வுள்ள மெர்க்குரிக் குளோரைடு (bichloro mercury) ஆய்வுகூடங்களில் மேற்புர தூய்மையாக்குதலுக்குப் பயன்படுகிறது. ஆனால் இதன் அரிக்கும் தன்மையாலும், இது விலங்குகளைப் பாதிப்பதாலும் இதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது. கரிம சேர்மங்களான மெர்குரோகுரோம், மெர்தையோலேட் ஆகியவை குறைவான நச்சு தன்மை கொண்டுள்ளதால், இவை ஆன்டிசெப்டிக்காக தோல் மற்றும் சளிச்சவ்வு பரப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

பிறந்த குழந்தைகளின் கண்களில் கோனோகாக்கல் தொற்று ஏற்படாமலிருக்க சில துளிகள் 0.1% சில்வர் நைட்ரேட் கரைசல் செலுத்துதல் வழக்கமாக உள்ளது. பெரும்பாலான பாக்டீரியாக 01% சில்வர் நைட்ரேட்டால் கொல்லப்படுகின்றன. சில்வர் ஆக்ஸைடு அல்லது சில்வர் உலோகத்துடன் புரோட்டீன் சேர்ந்த கூழ் போன்ற கரைசலும் ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது. முதல் முதலில் அறியப்பட்ட பூஞ்சை கொல்லியான போர்டியாக்ஸ் கலவை, திராட்சையைத் தாக்குகின்ற 'டவுனி மில்டீயு' என்ற நோயைக் கட்டுப்படுத்த, காப்பர் சல்பேட்டுடன், சுண்ணாம்பை சேர்த்து தயாரிக்கப்பட்டது. தற்போது கூட கடைகளில் காப்பர் ஆக்ஸிகுளோரைட் போன்ற காப்பர் பூஞ்சை கொல்லிகள் கிடைக்கின்றன. ஆல்காக்கள், பூஞ்சைகள் (காளான்கள்), பாக்டீரியாக்கள் போன்றவற்றிற்கு எதிராக காப்பர் சல்பேட் சிறப்பாக செயலாற்றுகின்றன.

ஹாலோ ஜென்கள்

ஃபுளோரின், குளோரின், புரோமின், அஸ்டடீன் போன்ற ஹாலோஜென்களில் குளோரின், ஆயோடின் ஆகியவை ஆன்டிசெப்டிக்காகவும், டிஸ் இன்பெக்டன்டாகவும் பெருமளவு பயன்படுகின்றன. அதிக அழுத்தத்திற்குட்பட்ட குளோரின் வாயு (திரவ நிலை) குடிநீரை சுத்தம் செய்யப்பயன்படுகிறது. வாயுக்களைக் கையாளுவதில் சிரமம் இருப்பதாலும், அதற்குரிய கருவிகள் தேவை இருப்பதாலும், குளோரின் சேர்மங்கள் நடைமுறைப் பயன்பாட்டிற்கு விரும்பப்படுகிறது. பழங்காலம் முதல் காலரா பரவ வாய்ப்புள்ள இடங்களிலுள்ள கிணற்று நீரிலும், கழிவறைகளிலும், சுகாராரமற்ற இடங்களிலும் நுண்ணுயிரிகளைக் கொல்வதற்கு பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தப்படுகிறது. ஹைப்போகுளோரைட்டுகளான கால்சியம் ஹைப்போ குளோரைட் (Ca(001), குளோரின் கலந்த சுண்ணாம்பு சோடியம் ஹைப்போடுகுளோரைட் (Na001} மற்றும் குளோரோ அமைன்களான குளோரோமைன் T, அசோகுளோரோமைடு ஆகியவை டிஸ் இன்பெக்டன்டுகளாகவும், ஆன்டிசெப்டிக்காகவும், சுத்திகரிப்பு செய்யும் காரணிகளாகவும் பயன்படுகின்றன.

செம்மல்வீஸ் என்ற ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவத்தில் குழந்தை ஜுரம் குறைவதற்காக ஹைபோ குளோரைட்டுகளை ஆன்டிசெப்டிக்காக பயன்படுத்தினார். நோயாளிகளை சிகிச்சை செய்கின்றபோது அவர்களின் கைகளை ஹைபோகுளோரைட்டு கரைசலில் கழுவுவதால், நோய் பரவுதல்  தடுக்கப்பட்டது. குளோரின் சேர்மங்கள் காயங்களை நோய் தொற்றாதிருக்கவும், விளையாட்டு வீரர்களின் பாதங்களைக் காக்கவும் பயன்படுத்தப்பட்டன. 1% அடர்வுள்ள சோடியம் ஹைபோகுளோரைட்டு சுய ஆரோக்கியத்திற்காகவும், 5-12% அடர்வுள்ளது வீட்டுப் பொருட்களை சுத்தம் செய்யும், டிஸ் இன்பெக்ட்ன்டாகவும், பால் பண்ணை சுகாதாரத்திற்கும், உணவுப் பொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கருவிகளைத் தூய்மை செய்யவும் பயன்படுகின்றன. பயன்படுத்தப்படும் ஹைபோகுளோரைட்டின் அடர்வு குறைந்தபட்சம் 1ppm அளவு குளோரின் வீழ்ப்படிவை உண்டாக்க வேண்டும்.

குளோரின் மற்றும் அதன் கூட்டுப் பொருட்கள் நுண்ணுயிர் எதிரியாக (HClO) செயல்படுவது ஹைபோகுளோரஸ் அமிலம் ஏற்படுவதைப் பொறுத்தும் மேலும் குளோரின் நீருடன் சேர்க்கப்படும் போது ஹைபோகுளோரைட்டுகள், குளோரமைன்களின் நீரணு சிதைவுறுவதைப் பொறுத்தும் உள்ளது. ஹைபோகுளோரஸ் அமிலம் சிதையும்போது தோன்றுகின்ற நேசன்ட் ஆக்ஸிஜன் செல் உறுப்புக்களை ஆக்ஸிகரணம் செய்து செல்களை சேதப்படுத்துகிறது. குளோரின் புரோட்டீனுடனும் நொதிகளுடனும் நேரடியாக செயல் புரிவதால் கொல்லும் பண்பைப் பெறுகிறது.

மிகப்பழமையான பாக்டீரியா கொல்லியான அயோடின், டிங்க்சர் அயோடின் வடிவில் பயன்படுகிறது. 2% அயோடின் 2% சோடியம் அயோடைடில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அயோடின் ஆல்கஹாலிலும், பொட்டாசியம் அயோடைடு கரைசலிலும் கரையக்கூடியது. ஆனால் நீரில் மிகச் சிறிதளவே கரையும். அயோடோஃபோர்ஸ் (பாலிவினைல் பைரோலிடோன்) என்பது அயோடினும் மேற்பரப்பு காரணிகளும் கலந்த கலவை. இது அயோடின் தாங்கியாகவும் கரைப்பானாகவும் இருந்து பாக்டீரியா கொல்லியாகவும் பயன்படுகிறது. இவை அயோடினைப் போலன்றி, சாயமேற்காதவை ஆகும். மேலும் டிங்க்சர் அயோடினைவிட குறைவான அரிக்கும் தன்மையுடையவை.

அயோடின் அனைத்துவகை பாக்டீரியங்களுக்கு எதிரான சிறந்த பாக்டீரியா கொல்லியாக இருப்பது மட்டுமின்றி, ஸ்போர்கள், பூஞ்சைகள், ஓரளவிற்கு வைரஸ் கொல்லியாகவும் உள்ளது. தோலில் டிஸ் இன்பெக்டன்டாக அயோடின் கரைசல்கள் உபயோகப்படுகின்றன. மேலும், தண்ணீர், காற்று, பாத்திரங்கள் போன்றவற்றின் டிஸ் இன்பெக்டன்டாகப் பயன்படுகிறது. இதனுடைய வீரியமான ஆக்ஸிகரணமாக்கும் திறன், சல்பைட்ரைலுடன் புரோட்டீனை செயலழக்கச் செய்வது மற்றும் நொதிகளிலும் செல் புரதத்திலுமுள்ள டைரோசினுடன் ஹாலஜன்கள் சேர்வதும் இதன் நுண்ணயிர் எதிர்க்கும் செயலுக்குக் காரணம்.

மேலே விளக்கப்பட்ட வேதியியல் காரணிகள் மட்டுமின்றி அநேக இடங்களில் ஏராளமான பாக்டீரியா எதிர்ப்புக் காரணிகள் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகின்றன். மாலகைட் கிரீன் மற்றும் கிரிஸ்டல் வைலட் போன்ற ட்ரைஃபீனைல்மீதேன் சாயம் ஊடகங்களில் கிராம் பாஸிடிவ் பாக்டீரியாக்களைக் குறைக்கப் பயன்படுகின்றன. அக்ரிபிளேவின் மற்றும் டிரிப்டோ பிளேவின் போன்ற அக்ரிடின் சாயம் ஸ்டெபைலோகாக்கை மற்றும் கோனோகாக்கை போன்றவற்றை பாதிக்கின்றன. ஆன்டிபயாடிக் கண்டு பிடிப்புக்கு முன்னர் இவை காயங்கள், மற்றும் தீக்காயங்களைக் குணமாக்கவும் பயன்படுத்தப்பட்டன. மேற்பரப்பை சுத்தம் செய்யப் பயன்படும் சோப்பு போன்ற டிடர்ஜென்டுகள் ஈரப்படுத்துவதன் மூலமும், மேற்பரப்பு விசையைக் குறைத்தலின் மூலமும் செயல்படுகின்றன, குவார்டர்னரி அம்மோனியம் உப்புகள் (செட்ரிமைடு, சீப்ரின் போன்றவை) டிடர்ஜென்டுகளில் பயன்படுகின்றன. மேலும் டிஸ்இன்பெக்டன்டாகவும், சுத்தப்படுத்தும் காரணிகளாகவும் கண் சொட்டு மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்களில் பாதுகாக்கும் பொருளாகவும் பயன்படுகின்றன.

ஆல்டிஹைடுகள் (ஃபார்மால்டீஹைடு, குளுடாரால்டிஹைடு) பாக்டீரியா கொல்லியாகவும், ஸ்போர் கொல்லியாகவும் உள்ளன. ஃபார்மால்டிஹைடு (ஃபார்மலின்) மூடிய பரப்பை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. சாதாரண அறை வெப்பநிலையில் வாயுவாக மாறக்கூடியதால் வாயு நிலையிலும் செயல்புரியக் கூடியது. குளுடரால்டீஹைடு மருத்துவக் கருவிகள், லென்சுள்ள கருவிகள், மூச்சுப்பயிற்சி கருவிகளைச் சுத்தகரிக்கப் பயன்படுகிறது. எத்திலின் ஆக்ஸைடு, பீட்டா புரோபியோலாக்டோன் போன்ற சில வாயுநிலையிலுள்ள காரணிகள் உள்ளன. சூடு மற்றும் ஈரத்தால் பாதிக்கப்படும் பொருட்களை நுண்ணுயிர் நீக்கம் செய்யும் காரணியாக எத்திலின் ஆக்ஸைடு உள்ளது. மிளகு போன்ற வாசனைப் பொருட்கள், உயிரியல் தயாரிப்புகள், மண், பிளாஸ்டிக், சிரிஞ்சுகள், இடுக்கிகள் இரத்த மாற்றக் கருவிகள் மற்றும் காதீடிரைசேஷன் கருவிகள் அனைத்தும் சுத்தம் செய்ய எத்திலின் ஆக்ஸைடு புகையூட்டி சுத்தம் செய்யும் முறையில் பயன்படுகிறது.

நுண்ணுயிரி எதிர்க்கும் செயலின் மதிப்பீடு (antimicrobial)

குறிப்பிட்ட நுண்ணுயிரிக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் வேதிக்காரணி குழாயில் நீர் கலத்தல் (Tube Dilution) அல்லது (Agar Plate Technique) அகர் பிளேட் முறையில் சோதிக்கப்படுகிறது. மேலும் வளர்ச்சியில் குறைவு, அல்லது வளர்ச்சி இன்மை குறிக்கப்படுகிறது.

டெஸ்ட் வேதிப்பொருளின் கரைசல் உறிஞ்சக்கூடிய ஒரு வடிதாளில் சேர்க்கப்படுகிறது அல்லது உள் ஊடகமில்லாத சிலிண்டரில் ஊற்றப்படுகிறது அல்லது அகர் கிணறுகளில் ஊற்றப்படுகிறது. இதற்கு ஒரு கார் துளைப்பான் பயன்படுகிறது. வாயுநிலைப் பொருட்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில் பாக்டீரியல் ஸ்போர்களுடன் சேர்ந்த காகிததாட்களில் வெளிப்படுத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதன் பிறகு உயிருள்ள ஸ்போர்கள் கணக்கிடப்படுகின்றன.

பீனால் கோஎபிஷின்ட் முறை

உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையான இது சோதனைக் குழாயில் நீர்கலத்தல் முறையில் செய்வது ஆகும். பீனால் கோஎபிஷியன்ட் என்பது 5 நிமிடங்களில் இல்லாமல் 10 நிமிடங்களில் சோதனை நுண்ணுயிரியைக் கொல்லக்கூடிய டிஸ்இன்பெக்டன்ட்டின் மிக அதிகமான நீர்கலத்தலுக்கும், 5 நிமிடங்களில் இல்லாமல் 10 நிமிடங்களில் சோதனை நுண்ணுயிரியைக் கொல்லக் கூடிய பீனாலின் மிக அதிகமான நீர்கலத்தலுக்கும் உள்ள விகிதம் ஆகும்.

பீனால் ஒப்புநோக்கும் ஒரு தரச்சான்றுள்ள (Standard) கரைசலாகப் பயன்படுவதால் இதற்கு பீனால் கோஎபிஷியண்ட் முறை என்று பெயர். இம்முறை நீருடன் கலக்கக்கூடிய பீனாலைப் போன்றே நுண்ணயிரியை எதிர்க்கும் தன்மையைக் கொண்டிருக்கும் டிஸ் இன்பெக்டன்டுக்கும் பொருந்தும். சோதிக்கப்பட வேண்டிய டிஸ் இன்பெக்டன்ட்டை தொடர் நீர்கரைசல் தயாரித்து சோதனைக் குழாய்களில் 5ml அளவுகளாக பிரித்து ஊற்றி அவற்றில் 0.5ml, 24 மணி நேரம் வளர்ந்த சால்மொனெல்லா டைd அல்லது ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் சேர்க்கப்படுகிறது. அதுபோலவே ஃபீனாலை தொடர் நீர்க்கரைசல் தயாரித்து, அதே அளவு சால்மோனெல்லா டைபீ அல்லது ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் சேர்க்க வேண்டும்.

இரண்டு செட் சோதனைக் குழாய்களும் அதாவது டிஸ் இன்பெக்டன்டுடன், சோதனை நுண்ணுயிரிகள் உள்ளவை, மற்றும் பீனாலுடன் சோதனை நுண்ணயிரி உள்ளவை, 20°C சூடான நீர்த் தொட்டியில் பீனால், டிஸ் இன்பெக்டன்ட் உள்ள குழாய்களிலிருந்து, ஊசியின் மூலம் 5, 10, மற்றும் 15 நிமிட இடை வெளியில், பாக்டீரியா நீக்கப்பட்ட வளர் ஊடகம் உள்ள வேறு குழாய்களில் செலுத்தப்பட்டு, இன்குபெட் செய்யப்பட்டு வளர்ச்சி நோக்கப்பட வேண்டும். 5 நிமிடம் வைக்கப்படுகின்றன். இல்லாமல் 10 நிமிடத்தில், எந்த நீர்க்கலவை விகிதத்தில் சோதனை நுண்ணுயிரி கொல்லப்பட்டுள்ளதோ அதை, எந்த நீர்க் கலவை விகிதத்தில் 10 நிமிடத்தில் ஃபீனால் கொல்கிறதோ அதைக் கொண்டு வகுக்க வேண்டும். அவ்வாற கிடைக்கும் விடை 1 என்றால் அந்த டிஸ் இன்பெக்டன்ட் பீனாலுக்கு சமம் என்பது பொருளாகும். அட்டவணை 1ல் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையானது சோதிக்கப்படும் டிஸ் இன்பெக்டன்ட் செய்முறையில் எவ்வாறு பயன்படும் என்னும் நம்பத்தக்க தகவலைக் கொடுக்கிறது.

நினைவில் கொள்ள வேண்டியவை

 1. இடைவெளி மூலம் ஆற்றல் பரவுவதை ரேடியேஷன் என்கிறோம்,
 2. 150-3900 A அலை நீளமுள்ள கதிர்கள் அல்ட்ரா வைலட் கதிர்வீச்சு எனப்படும். காமா மற்றும் X-கதிர்களால் அயனைசிங் கதிர்வீச்சு உண்டாகிறது. கிருமி கொல்லி விளக்குகள் 2500-2700 A அலை நீளம் கொண்ட UV கதிர்களை வெளிப்படுத்துகின்றன, சூரிய கதிர்வீச்சு UV கதிர்களைப் பெற்றிருந்தாலும் அவை பெரும்பாலும் வாயுமண்டலத்தால் வடிகட்டப்படும்.
 3. ஆன்டிசெப்டிக் காரணிகள் தோல் மற்றும் காயங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
 4. உயிரற்ற பொருட்களில் நோய்க்கிருமிகளின் வளர்கின்ற வகைகளைக் கொல்வதற்கு டிஸ்இன்பெக்டன்டுகள் பயன்படுகின்றன.  ஜோசப் லிஸ்டர் ஆன்டிசெப்டிக் காரணியாக பீனாலை முதன்முதலாகப் பயன்படுத்தினார்.
 5. ஆல்கஹால் புரோட்டீனை அதன் இயற்கையான தன்மையினின்று மாற்றக் கூடியது. மேலும் கொழுப்பை கரைக்கக் கூடியது. பளுவான உலோகங்களின் (எடை அதிகமான) மிகச்சிறிய அளவின் பாக்டீரியா எதிர்க்கும் செயல்பாடு ஓலிகோடைனாமிக் செயல்பாடு எனப்படும்.
 6. காப்பர் சல்பேட்டு பூஞ்சை கொல்லி, பாக்டீரியா கொல்லி மற்றும் ஆல்கா கொல்லியாக பயன்படுகிறது. நீர் சுத்திகரிப்பில், குளோரின் டிஸ் இன்பெக்டன்டாகப் பயன்படுகிறது.
 7. அனைத்து வகையான பாக்டீரியாக்களுக்கும், ஸ்போர்களுக்கும் எதிராக அயோடின் செயல்படுகிறது.
 8. குவார்டர்னரி அம்மோனியம் கார உப்புகள் போன்ற பாக்டீரியா எதிர்ப்பு சேர்மங்களை டிடர்ஜென்ட் பெற்றுள்ளது. ஃபார்மலின் புரோட்டீன் தன்மையை மாற்றுகிறது.
 9. ஆவி நிலையில் செயல்படுகிறது. எத்திலின் ஆக்ஸைடு வாசனைப் பொருட்களை புகையூட்டி சுத்தம் செய்யவும், உயிரியல் தயாரிப்பிலும் பயன்படுகின்றது.
 10. மெர்குரிக் ஆக்ஸைடு கரைசல்கள் உலோகப் பரப்புகளை டிஸ் இன்பெக்ட் செய்ய பயன்படுவதில்லை .
 11. பீனால் கோஎபிஷியண்ட் முறை  பீனாலுடன் ஒப்பிட்டு நோக்கி பாக்டீரியா எதிர்ப்பு சேர்மங்களை மதிப்பீடு செய்ய பயன்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு  ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.03571428571
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top