பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதன் காரணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஓசோன்

சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள 'அடுக்கு வாயு மண்டலத்தில்' தான் ஓசோன் உள்ளது.

1840ல் ஜெர்மன் அறிஞர் பிரடரிக் ஸ்கான் பெயின், ஓசோனைக் கண்டறிந்தார். ஓசோனின் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதை அறிஞர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் 'மான்ட்ரீல் ஒப்பந்தம்' எனும் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் பின் ஓசோன் துளை அளவு குறைந்திருந்தது. எனினும் இதே நிலை நீடித்தால் 2050வது ஆண்டுக்குள் ஓசோன் துளை மறைந்துவிடும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். மான்ட்ரீல் ஒப்பந்தத்தை குறிக்கும் வகையில், செப்.16ல் 'சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது. ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இத்தினத்தின் நோக்கம்.

காரணம்

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு, நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் தான் முக்கியக் காரணம். குறிப்பாக, குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி.,) எனும் குளிரூட்டிப் பொருளே ஓசோனைச் சிதைத்து, அதன் அளவைக் குறைப்பதில் முதல் இடத்தில் உள்ளது. ஏ.சி., நெயில் பாலிஸ், லிப்ஸ்டிக், தீயணைப்புக் கருவி, 'ஸ்பிரேஸ்' போன்றவற்றில் இக்கார்பன், குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சி.எப்.சி., ஓசோன் பகுதியை அடைந்ததும், புறஊதாக் கதிர்களால் தாக்கப்பட்டு, குளோரினைத் தோற்றுவிக்கிறது. இந்தக் குளோரினே, ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது. ஒரு சி.எப்.சி., மூலக்கூறு, ஆயிரம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியது. அதனால் இதை 'ஓசோன் கொல்லி' என்கின்றனர்.

பாதிப்பு

 • ஓசோன் அளவு குறைந்தால், பூமியின் வெப்பம் உயரும்.
 • துருவப்பகுதிகளில் பனி உருகி, கடலின் நீர் மட்டம் உயரும்.
 • தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும்.
 • ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
 • இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
 • இக்கதிர்கள், கடல் உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ள பிளாங்டான் எனும் மிதவை உயிரினங்களை, எளிதில் கொல்லும்.
 • இவை அழிவதால், மற்ற கடல் உயிரிகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகும்.

கேள்வி பதில்

1. ஒசோன் படலத்தில் தெரியக்கூடிய செறிதளர்வு என்பது என்ன?

இது 1970ல் கண்டறியப்பட்ட குளோரோஃபுளோரோ கார்பன் ஆகும். இது ஒசோன் படலத்தை தாக்குகிறது. இந்த குளோரோஃபுளோரோ கார்பன் (CFC) குளிர்சாதனப்பெட்டி குளிர்விப்பான் மற்றும் காற்றில் மிதக்கும் தின்ம துகள்கள் தெளிப்பான் போன்றவற்றில் இருக்கிறது. நாம் இந்த சாதனங்களை அதிகமாக பயன்படுத்தும்போது புவியின் ஒசோன் படலத்தில் செறிதளர்வு  ஏற்படுகிறது. எனினும் தற்போது வரும் பொருள்களில் CFC ஆனது இருப்பதில்லை. மேலும் இது மட்டுமல்லாமல் மற்ற பொருட்களான புரோமைன் ஹேலோகார்பன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள் போன்றவையும் தாக்குகிறது.

2. ஓசோன் படல செறிதளர்வின் விளைவு என்ன?

 • அதிக புறஊதாகதிர்கள் புவியை வந்தடைதல் (இதனால் புவி சமையல் அடுப்பினை போல் இருக்கும்)
 • அதிக வெப்பத்தால் உலக வெப்பமயமாக்கலின் அபாயம் அதிகரிக்கிறது

3. ஒசோன் படலத்தை CFC எப்படி செறிதளர்த்துகிறது?

 • மூலக்கூறில் ஒரு புளோரைன் அணு ஒரு கார்பன் அணு மற்றும் 3 குளோரின் அணுக்கள் உள்ளது. இது புறஊதா கதிரால் தாக்கப்படுகிறது.
 • இதில் ஒரு குளோரின் அணு உடைந்து ஒசோனை (O3) தாக்குகிறது. ஒரு ஆக்ஸிஜன் அணு வெளியேறி குளோரின் மோனாக்ஸைடை உருவாக்கிறது. இந்த குளோரின் மோனாக்ஸைடு ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறினை வெளியேற்றுகிறது.
 • மற்றொரு ஆக்ஸிஜன் அணு குளோரின் குளோரின் மோனாக்ஸைடை உடைத்து ஆக்ஸிஜன் அணுவை வெளியேற்றுகிறது. மேலும் குளோரின் அணுவையும் வெளிதள்ளுகிறது. இதனால் ஒசோன் மூலக்கூறுகள் நீக்கப்படுகிறது. இந்த இயக்கமுறையானது தொடர்ந்து நடத்தப்படுகிறது.

ஆதாரம் : சுற்றுச்சூழல் - தகவல் தளம்

3.04285714286
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
சே. பானு ரேகா. Aug 14, 2020 01:05 PM

மிகவும் நல்லத் தகவல்கள்.

...... Jul 22, 2020 08:38 PM

Very good content

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top