பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு / சுற்றுச்சூழல் மாசும் - பாதிப்புகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச்சூழல் மாசும் - பாதிப்புகளும்

சுற்றுச்சூழல் மாசுபடுதலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் முக்கிய அங்கங்களாகிய இயற்கை வளங்கள் (நிலம்,நீர்,காற்று) பாதிக்கப்பட்டன. இப்பாதிப்பாதிப்புக்குப் பெயர் தான் ‘சுற்றுச்சூழல் மாசு’ என்கிறோம். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசிற்கு உள்ளாகியுள்ளனர்.

மண் மாசு

‘பொருள். கழிவு நீர் வாயுக்கள், தனிமங்களின் சிதைவு, வாகனக் கழிவுகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைக் கழிவுகள், மரத்தூள் போன்றவை மண்ணில் மாசுக்கள் படிந்து நச்சுக்களாக மாறுகின்றன. இது உணவுச் சங்கிலியில் பல்வேறு உயிரினங்களுக்கு உணவாக உட்கொள்ளப்படுவதால் நம்மால் அறியமுடியாத பல அபாயங்களை சந்திக்க நேரிடுகிறது.

கடல் மாசு

உலகின் முக்கால் பகுதி நீரால் சூழப்பட்டது. இக்கடலால் நாம் பல வளங்களைப் பெற்று வந்தாலும் இதற்கு ஆபத்தை தொடர்ந்து நாம் விளைவித்தே வருகிறோம். ஆறுகளில் பல மாசுகள் ஏற்பட்டு இறுதியில் கடலில் கலக்கின்றன.

வீட்டு கழிவுகள், குப்பை கூலங்கள், வேளாண் கழிவுகள், தீங்குயிர் கொல்லிகள், பாதரசம் போன்ற கன உலோகங்கள், பெட்ரோலியக் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகளின் குவிப்பு இவைகளின் கலப்பால் கடல் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்திற்குள்ளாகின்றன. இதனை நம்பி வாழும் மக்களின் வாழ்வும் கேள்விக்குறியாகிவிடுகிறது.

ஆதாரம் : சென்னைநலத்தகவல்கள்

2.95
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top