பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திரவ பெட்ரோலிய வாயு

திரவ பெட்ரோலிய வாயு பற்றிய தகவல்

திரவ பெட்ரோலிய வாயு

திரவ பெட்ரோலிய வாயு(எல்பிஜி, ஜிபிஎல், எல்பி வாயு, அல்லது தானியங்கி எந்திர வாயு எனவும் கூறப்படும்) என்பது ஒரு எரியக்கூடிய ஹைட்ரோகார்பன் வாயுக்கள் கலந்த ஒரு எரிபொருளாக வெப்பக் கருவிகளிலும் வண்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு க்ளோரோஃப்ளோரோகார்பன்களுக்குப்பதில் ஓசோன் படலம் பாழ்படுதலைக் குறைக்க ஒருதூவாண உந்துபொருள் மற்றும் ஒரு குளிர்ப்பானாக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகும்.

வாங்கி விற்கப்படும் பலவகையான எல்பிஜியில் ப்ரொபேன் கலவைகள், ப்யூடேன் கலவைகள் மற்றும் பரவலாகவுள்ள ப்ரொபேன் C3H8 (60%), ப்யூடேன் C4H10 (40%) எனும் இரண்டையும் கலந்த கலவை ஆகிய கலவைகள் அடிப்படையாக உள்ளன, காலநிலைக்கேற்ப – குளிர்காலத்தில் ப்ரொபேன் அதிகமாகவும், கோடை காலத்தில் ப்யூடேன் அதிகமாகவும் உள்ளவை பயன்படுத்தப்படுகின்றன. ப்ரொபைலின் மற்றும் ப்யுடைலின்களும் பொதுவாக சிறிய அளவில் உள்ளன. ஒரு சக்திவாய்ந்த மணம் வீசும் பொருள், ஈதேன்தியால், கசிவுகளை எளிதில் கண்டறிவதற்காக சேர்க்கப்படுகிறது. EN 589 என்பதே உலகத்தரநிலையாகும். அமெரிக்காவில், தியோஃபீன் அல்லது அமில் மெர்கேப்டன் ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்ட மணம் வீசும் பொருள்கள் ஆகும்.

எல்பிஜி என்பது கிராமப் பகுதிகளில் கிடைக்கும், எண்ணெயைவிட kWhக்கு 19 சதவீதம் குறைவாகவும், CO2 நிலக்கரியைவிட 30 சதவீதம் குறைவாகவும், க்ரிட் மூலம் விநியோகிக்கப்படுகின்ற நிலக்கரிமூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தைவிட 50 சதவீதத்திற்கும்மேலாக குறைவுபடும், குறைவான அளவு கரியை வெளிவிடுகின்ற ஒரு ஹைட்ரோகார்பன் எரிபொருள் ஆகும்.[சான்று தேவை] ப்ரொபேனும் ப்யூடேனும் கலந்த ஒன்றாக இருப்பதால், ஜூல் ஒன்றுக்கு ப்யூடேனைவிட குறைவான கரியையும் ஆனால் ப்ரொபேனைவிட அதிகமான கரியையும் எல்பிஜி வெளிவிடுகிறது.

உற்பத்தியும் சேமிப்பும்

பெட்ரோலியம் அல்லது 'ஈரமான' இயற்கை வாயுவை சுத்திகரிப்புச் செய்வதன்மூலம் எல்பிஜி தொகுக்கப்படுகிறது, மேலும் பொதுவாக கச்சா எண்ணெயை சுத்திகரிப்புச் செய்யும்போது அல்லது பூமியிலிருந்து பீரிட்டு வரும் எண்ணெய் அல்லது வாயுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும்போது தயரிக்கப்படும் தொல்படிவ எரிபொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அது முதன்முதலில் 1910ஆம் ஆண்டில் டாக்டர் வால்டர் ஸ்நெல்லிங் என்பவரால் தயாரிக்கப்பட்டது. 1912ஆம் ஆண்டில் முதல் வணிக உற்பத்திப் பொருளாக வந்தது. தற்போது அது, உபயோகிக்கப்படும் சக்தியில் 3%ஐ கொடுக்கிறது, பூமி அல்லது தண்ணீர் மாசுபடுதல் இன்றி புகையின்றி மிகக்குறைவான கந்தக வெளிப்பாட்டுடன் தெளிவாக எரிகிறது. டீசலின் கலோரிக் எண்42.5 எம்ஜே/கிகி (MJ/kg) மற்றும் ப்ரீமியம் க்ரேட் பெட்ரோல் (கேஸோலின்)[1] கலோரிக் எண் 43.5 எம்ஜே/கிகி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, அதே வகையான கலோரிக் மதிப்பை எல்பிஜி பெற்றுள்ளது. இருப்பினும், அதனுடைய சக்தி அடர்த்தி 26 MJ/l கன அளவுக்கு பெட்ரோல் அல்லது டீசலளவினைவிட குறைவாக உள்ளது.

சாதாரண வெப்பம் மற்றும் அழுத்தத்தில், எல்பிஜி ஆவியாகும். இதனால், எல்பிஜி அழுத்தமுள்ள ஸ்டீல் பாட்டில்களில் விநியோகிக்கப்படுகின்றன. உள்ள திரவத்தின் வெப்ப விரிவுக்கு ஈடுகொடுக்கும்பொருட்டு, இந்த பாட்டில்கள் முழுவதுமாக நிரப்பப்படுவதில்லை; வழக்கமாக, அவற்றின் கொள்ளளவில் 80% முதல் 85% வரை அவை நிரப்பப்படுகின்றன. ஆவியாக்கப்பட்ட வாயுவின் கன அளவுக்கும் திரவமாக்கப்பட்ட வாயுவின் கன அளவுக்கும் உள்ள விகிதம் உட்பொருள், அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றைச் சார்ந்து மாறுபடுகிறது; ஆனால் 250:1 எனும் விகிதத்தையொட்டி இருக்கிறது. எல்பிஜி திரவமாக மாறும் ஆவி அழுத்தம் எனப்படும் அழுத்தம் உட்பொருள் மற்றும் வெப்பநிலையைச் சார்ந்து மாறுபடுகிறது; உதாரணத்திற்கு, அது சுத்தமான ப்யூடேனுக்கு 20°C (68°F) தோராயமாகவும்220 கிலோபாசுக்கல்கள் (2.2 bar) சுத்தமான ப்ரொபேனுக்கு 55°C (131°F) தோராயமாகவும் 2.2 மெகாபாசுக்கல்கள் (22 bar) உள்ளது. எல்பிஜி காற்றைவிட கனமானது, எனவே அது தரையில் ஓடி தரைக்குக்கீழ் உள்ள தாழ்வுப் பகுதிகளில் நின்றுவிடும். சரியான முறைப்படி கையாளப்படவில்லையெனில் இது தீ மூட்டம் அல்லது மூச்சுத்திணறல் இடையூறுகளுக்கான காரணமாக அமையும்.

அதிக அளவிலான எல்பிஜி பெரிய தேக்கிகளில் தேக்கிவைக்கப்படலாம், தேவைப்பட்டால் பூமியிலும் புதைத்து வைக்கப்படலாம். மாற்றாக, வாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படலாம்.

பயன்கள்

எந்திர எரிபொருள்

அக தகன எந்திரங்களில் எல்பிஜி எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்போது அது தானியங்கி வாயு அல்லது தானியங்கி ப்ரொபேன் எனப்படுகிறது. சில நாடுகளில், 1940ஆம் ஆண்டுகளிலிருந்து தீப்பொறி தீமூட்டல் எந்திரங்களில் பெட்ரோலுக்குப் பதிலாக அது பயன்படுத்தப்படுகிறது. இரண்டு சமீப ஆய்வுகள் எல்பிஜி-டீசல் கலவயை பரிசோதித்து, புகை வெளியீடும் எரிபொருள் செலவும் குறைகிறது ஆனால் ஹெச்ஸி (HC) வெளியீடு அதிகரிக்கிறது என கண்டுபிடித்துள்ளது. கார்பன் ஆக்சைடு(CO) வெளியீடு மீதான ஆய்வு பிரிக்கப்பட்டு, ஒன்றில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினையும் மற்றொன்றில் குறைவான எந்திர சுமை இருக்கும்போது ஓரளவு அதிகரிப்பினையும் ஆனால் அதிக எந்திர சுமை இருக்கும்போது ஓரளவு குறைவையும் கண்டறியப்பட்டது. அது நச்சுத் தன்மையற்றது, அரிக்கும் தன்மையற்றது, டெட்ரா-எதில் ஈயம் அல்லது ஏதேனும் கூட்டுப்பொருள் இல்லாதது, அதிக ஆக்டேன் தரம் (108 RON) கொண்டது என்பன அதன் நன்மைகளாகும். பெட்ரோல் அல்லது டீசலைவிட அதிக சுத்தமாக அது எரிகிறது, குறிப்பாக இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டதின் துகள்கள் இல்லாதது.

எல்பிஜியில் ஈதர் பெட்ரோல் அல்லது டீசலில் உள்ளதைவிட குறைவான சக்தி அடர்த்தி இருப்பதால், சமமான எரிபொருள் செலவு அதிகமாக உள்ளது. பல அரசுகள் பெட்ரோல் அல்லது டீசல் மீது விதிக்கும் வரியைவிட குறைவான வரியை எல்பிஜி மீது விதிக்கிறது, பெட்ரோல் அல்லது டீசலைவிட கூடுதலான எல்பிஜி பயன்பாட்டு அளவுக்கு அது உதவுகிறது. உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது இடத்தில் இருக்கும் எந்திர எரிபொருள் ப்ரொபேன் ஆகும். 2008ஆம் ஆண்டின் யூகத்தின்படி, உலகளவில் 13 மில்லியனுக்கும் அதிகமான வண்டிகள் ப்ரொபேன் எரிபொருள் வண்டிகளாக உள்ளன. வண்டியின் எரிபொருளாக ஆண்டுக்கு 20 மில்லியன் டன்னுக்கு (7 பில்லியன் யுஎஸ் கேலன்கள்) அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

குளிரேற்றல்

வழக்கமாக, ஒரு வாயுவை ஈர்த்துக்கொள்ளும் குளிர் பதனி மூலமாக க்ரிட் பயன்பாடற்ற குளிர் பதனம் வழங்கலில், எல்பிஜி கருவியாக உள்ளது.

சுத்தமான, உலர்ந்த "ஐசோப்ரொபேன்" கூட்டு (குளிர்பதனி அமைப்பு R-290a ) மற்றும் ஐசோப்யூடேன் (R-600a) தள்ளுபடி செய்யும்படியான ஓசோன் குறையும் ஆற்றல் மற்றும் மிகக் குறைவான உலக வெப்பமயமாதல் ஆகியவற்றை கொண்டுள்ளன; மேலும் வழக்கமாகவுள்ள நிலையான குளிர்பதனி மற்றும் காற்றை ஒருநிலைப்படுத்தும் கருவிகளில் உள்ள R-12, R-22, R-134a, மற்ற க்ளோரப்ளுரோகார்பன் அல்லது ஹைட்ரோஃப்ளுரோகார்பன் குளிர்பதனிகளுக்கான பதிலியாக செயல்படக்கூடும்.

தீப்பற்றக்கூடிய ஹைட்ரோகார்பன்களை தீப்பற்றாத குளிர்பதனப் பொருள்களை எடுத்துச் செல்ல முன்பு வடிவமைக்கப்பட்ட கருவிகளில் பயன்படுத்தியதில் குறிப்பிடத்தக்க தீ அல்லது வெடிக்கும் ஆபத்து உள்ளது என்ற அடிப்படையில், இப்பேற்பட்ட பதிலி மோட்டார் வாகன குளிரூட்டும் கருவிகளில் பரவலாக தடுக்கப்படுகிறது அல்லது ஊக்குவிக்கப்படுவதில்லை.

ஹைட்ரோகார்பன்களால் நிரப்பப்பட்டு குளிரூட்டப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இவ்வகை நிகழ்வுகள் மிகக் குறைவு எனும் அடிப்படையில், வணிகர்களும் ஹைட்ரோகார்பன் குளிர்பதனிகளை வரவேற்பவர்களும் இவ்வாறான தடைகளுக்கு எதிராக வாதிடுகின்றனர். நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரால் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட சோதனையால் எதிர்பாராதவிதமாக பயணிகள் பெட்டியில் திடீரென முழுமையான குளிர்பதன இழப்பு ஏற்பட்டு அதனால் தீப்பிடித்த மோசமான நிகழ்வு ஏற்பட்டது. அவருக்கும் பெட்டியில் இருந்த பலருக்கும் இலேசான தீக்காயங்கள் அவர்களது முகம், காதுகள் மற்றும் கைகளில் ஏற்பட்டது, மேலும் பல பார்வையாளர்களுக்கு முன்பக்கமிருந்த பயணிகளின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சிதறியதால் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. யாரும் கடுமையாக காயப்படவில்லை.

சமையல்

இந்தியாவின் 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியக் குடியிருப்பில் 17.5% அல்லது 33.6 மில்லியன் குடியிருப்புகள் 2001ஆம் ஆண்டில் எல்பிஜியை சமையல் எரிவாயுவாகப் பயன்படுத்தின. இதைப் பயன்படுத்துவதில் 5.7% மட்டுமே பங்களிக்கும் இந்திய கிராமப்புறக் குடியிருப்புடன் ஒப்பிடும்போது பயன்பாட்டில் 48% சதவீதத்தைப் பங்களிக்கும் இந்தியக் குடியிருப்பினரில் 76.64% நகர்ப்புறக் குடியிருப்புகளே ஆகும். எல்பிஜிக்கு அரசு ஆதரவுநிதி அளிக்கிறது. எல்பிஜியின் விலை உயர்வு, நகர்புர இடைப்பட்ட வகுப்பினர் வாக்களிப்பினைப் பாதிப்பதால், அது இந்தியாவில் அரசியல் பாதிப்பு விஷயமாகும்.

ஆதாரம் : கேஸ் அத்ராட்டி ஆப் இந்தியா

3.10256410256
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top