பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய சுகாதார திட்டம்

இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டம் மற்றும் அதன் பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

குறிக்கோள்கள்

 • குழந்தைகள் மற்றும் கர்ப்பவதிகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்தல்;
 • பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், நீர், கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதி, தடுப்பூசி மற்றும் சத்துணவு ஆகியன போன்ற மக்களுக்குத் தேவைப்படும் சுகாதார வசதிகளை எளிதில் கிடைக்குமாறு செய்தல்;
 • உள்ளூரிலேயே பரவக்கூடிய நோய்கள் உட்பட அனத்து விதமான தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களை முன்னரே தடுப்பதுடன் அவைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்;
 • ஒருங்கிணைந்த, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார வசதிகள் அனைவருக்கும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளுதல்;
 • மக்கள்தொகை நிலைப்பாடு, பாலின மற்றும் அமைவிடச் சமன்பாடு;
 • உள்ளூர் சுகாதாரப் பண்பாடுகளைப் புதுப்பிப்பதுடன் "ஆயுஷ்' திட்டத்தை நெறிப்படுத்துதல்;
 • சுகாதாரமான வாழ்க்கை முறைகளை மேம்படுத்துதல்

திட்ட அணுகுமுறைகள்

(அ) முக்கியத் திட்டங்கள்

 • பொது சுகாதாரச் சேவைகளைத் தாங்களாகவே கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் அளவுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்குப் பயிற்சி அளித்து அவைகளின் திறனை மேம்படுத்துதல்;
 • "ஆஷா" எனப்படும் கிராம சுகாதாரச் சேவகிகள் மூலம் மேம்படுத்தப்பட்ட சுகாதாரநலம் வீடுதோறும் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்தல்;
 • அனைத்துப் பஞ்சாயத்து யூனியன்களிலும் உள்ள கிராம சுகாதாரக் குழுக்கள் மூலம் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஏற்ற 'சுகாதாரத் திட்டம்" வரைதல்;
 • பொதுநல நிதியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளூர் திட்டங்கள் மற்றும் செயால்படுகளை நெறிப்படுத்தி, அதன் மூலம் உதவி மையங்களைப் பலப்படுத்துதல்; மேலும், அதிக அளவு பல்நோக்குப் பணியாளர்களை உருவாக்குதல்;
 • ஏற்கனவே இருக்கும் ஆரம்ப மற்றும் பொது சுகாதார மையங்களைப் பலப்படுத்துதல்; ஒரு லட்சம் மக்கள்தொகை இருக்கும் இடங்களிலெல்லாம் 30-50 படுக்கை வசதி கொண்ட பொது சுகாதார மையங்களை அமைத்து மேம்பட்ட சிகிச்சை அளிக்கும் தரத்திற்கு அவற்றைக் கொண்டு வருதல் (தேவையான சுகாதாரப் பணியாளர்கள், கருவிகள் மற்றும் நிர்வகிக்கும் தரம் ஆகியவற்றை வரையறுக்கும் இந்தியப் பொதுசுகாதார தரங்கள் இவைகள்தான்);
 • நீர், கழிப்பிடம், சுகாதார வசதி மற்றும் சத்துணவு ஆகிய வசதிகளை அளிக்கவல்ல மற்றும் அனைத்துப் பகுதிகளுக்குமான 'மாவட்ட சுகாதாரத் திட்டம்' ஒன்றை மாவட்டச் சுகாதார மையங்கள் தயாரித்து அதனைச் சரிவர அமல்படுத்துதல்;
 • மாவட்ட/மண்டல/மாநில மற்றும் தேசிய அளவிலான அனைத்து சுகாதார மற்றும் குடும்பநலத் திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைத்தல்;
 • பொதுச் சுகாதார நிர்வாகத்திற்கென மாவட்ட/மாநில மற்றும் தேசியச் சுகாதார மையங்களுக்கு அவற்றிற்குத் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை அளித்தல்;
 • தகவல்களைச் சேகரித்தல், மதிப்பீடு மற்றும் மறுஆய்வு செய்யும் திறன்களைப் பலப்படுத்தி அதன்மூலம் ஆதாரபூர்வ திட்டமிடுதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுதல்;
 • வெளிப்படையான கொள்கைகளை உருவாக்கி, சுகாதாரத்திற்கான மனித ஆற்றல்களுக்கு வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை அளித்தல்;
 • அனைத்து மட்டங்களிலும் முன்னெச்சரிக்கையான சுகாதார வசதிகளை அளிக்கும் திறனை மேம்படுத்தி, அதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், புகையிலை உட்கொள்ளும் மற்றும் மது அருந்தும் பழக்கங்களைக் குறைத்துக்கொள்ள ஊக்கம் அளித்தல்;
 • மக்கள் சேவை அவ்வளவாகச் சென்றடையாத இடங்களில் இலாபம் வராத துறைகளுக்கு முன்னுரிமை தருதல்.

(ஆ) துணைத் திட்டங்கள்

 • கிராமங்களிலிருக்கும் உள்ளூர் 'மருத்துவர்கள்' உட்பட்ட தனியார் துறையை நெறிப்படுத்தி, மக்களுக்குத் தரமான சேவையைக் குறைந்த செலவில் வழங்குதல்;
 • பொதுச்சு சுகாதாரக் குறிக்கோள்களை எட்டும் நோக்கத்துடன் அரசு-தனியார் ஒத்துழைப்பை வளர்த்தல்;
 • உள்ளூர் சுகாதாரப் பண்பாடுகளைப் புதுப்பிப்பதுடன் "ஆயுஷ்' திட்டத்தை நெறிப்படுத்துதல்;
 • மருத்துவ வசதி மற்றும் மருத்துவக் கோட்பாடுகளை நெறிப்படுத்துதல் உள்ளிட்ட கிராம சுகாதார விஷயங்களுக்கு உதவும் விதமாக மருத்துவக் கல்வியை மறுசீரமைத்தல்.

உதவிசெய்யும் அமைப்புகள்

 • கிராம சுகாதார மற்றும் கழிப்பிட சமிதி (ஒவ்வொரு கிராம அளவிலும் பஞ்சாயத்து பிரதிநிதி, ஏ.என்.எம்./ பல்நோக்குப் பணியாளர், ஆங்கன்வாடி பணியாளர், ஆசிரியர், 'ஆஷா' பணியாளர் மற்றும் சமூகச் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கியது);
 • பொது மருத்துவமனைகளை அந்தந்த ஊரிலுள்ளவர்களே பராமரிக்கும் 'ரோகி கல்யாண் சமிதி' (அல்லது அதற்குச் ஈடான ஒன்று);
 • மாவட்ட சுகாதார அதிகாரியை அமைப்பாளராகக் கொண்டுள்ள மாவட்டக் குழுவின் (ஜில்லா பரிஷத்) கீழ் வரும்படியான மாவட்ட சுகாதார மையங்கள்; அரசின் பல துறைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்களைச் சேர்ந்த பணியாளர்கள், ஆகியோர் இதில் அடங்குவர்;
 • மாநில முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் தலைமையிலும் மாநில சுகாதாரத்துறைச் செயலாளரை அமைப்பாளராகவும் கொண்டு இயங்கும் மாநில சுகாதார மையங்கள் (சம்பந்தப்பட துறைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்களைச் சேர்ந்த பணியாளர்கள், ஆகியோர் இதில் அடங்குவர்)
 • தேசிய மற்றும் மாநில அளவில் சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்;
 • மத்திய அரசின் சுகாதார மற்றும் குடுமபநலத்துறை அமைச்சரைத் தலைவராகவும், திட்டக் கமிஷனின் துணைத்தலைவர், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர், பொதுசுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட "தேசிய மைய வழிகாட்டும் குழு"வை அமைத்து, தேசிய சுகாதார மையத்திற்கு கொள்கை அளவில் உதவி அளித்தல் மற்றும் வழிநடத்துதல்;
 • மத்திய சுகாதார மற்றும் குடுமபநலத்துறைச் செயலாளரின் தலைமையில் அமையவிருக்கும் 'மேம்படுத்தப்பட்ட திட்டக் குழு'வானது, தேசிய சுகாதார மையத்தின் நிர்வாக அமைப்பாக விளங்கும்;
 • 'ஆஷா' திட்டத்தை வழிநடத்தி மேற்பார்வை செய்யும் நிபுணர்களடங்கிய அறிவுரைக்குழு;
 • (காலவரையறைக்குட்பட்டு) தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளைச் செய்வதற்கான பணிக்குழுக்கள்

நிதி உதவி ஏற்பாடுகள்

 • தே.ந.சு.மை.-க்கான நிதி ஒதுக்கீடு, அந்தந்த வருடத்திற்கேற்றார்போல், ஒவ்வொரு ஆண்டும் வருடாந்தர பட்ஜெட்டில் செய்யப்படும்;
 • தே.ந.சு.மை.-ன் செயல்பாடுகளுக்கு உதவிபுரியும் வண்ணம் மாநிலங்களனைத்தும் பொதுநல பட்ஜெட்டுக்கான தத்தம் பங்குகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;

திட்டத்தின் விளைவுகள்

சமுதாய/வட்டார அளவில்:

 • சாதாரண நோய்களுக்கு மருந்தளிக்கும் மருந்துப்பைகளுடன் பணியாற்றும் பயிற்சி பெற்ற வட்டார அளவிலான பணியாளர்கள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்;
 • ஆங்கன்வாடி அளவில் குறிப்பிட்ட ஒரு நாளில்/மாதத்தில் 'சுகாதார தினம்' அனுசரித்து தடுப்பூசி அளித்தல், பிரசவத்திற்கு முன்/பின் தாய்/சேய்க்குத் தேவையான, சத்துணவுடன் கூடிய சிகிச்சைகளை அளித்தல்;
 • உப மையம் மற்றும் மருத்துவமனை அளவில் பொதுவாக மக்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவல்ல மருந்துகள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்;
 • ஆரம்ப/மைய சுகாதார மையங்கள் அளவில் மருத்துவர்கள், மருந்துகள் மற்றும் தரமான சேவைகள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுவதல் மற்றும் வரும் நோயாளிகளை அக்கறையோடு பார்த்து சிகிச்சையளித்தல்;
 • 'ஆட்டோ டிஸேபில்ட்" முறை சிரிஞ்சுகளை உபயோகிப்பதன் மூலம் அனைத்து நோய்களுக்குமான தடுப்பூசி போடுதலை அனைவருக்கும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்; மாற்றுத் தடுப்பூசி போடுதல் மற்றும் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்ட சேவைகள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்;
 • வறுமைக்கோட்டின் கீழே உள்ள குடும்பங்களுக்கு "ஜனனி சுரக்ஷா யோஜனா" திட்டத்தின் கீழ் மலிவான மருத்துவமனைச் சிகிச்சைமுறைகள், பாதுகாப்பு, பயண வசதி மற்றும் வேறு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை ஆகியன அளிப்பத்ன் மூலம் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்;
 • மையத்தின்கீழ் வட்டார சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்திற்குட்பட்டு உத்தரவாதமான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் நிதி ஆபத்து ஏற்படும் வாய்ப்பு குறைதல்
 • ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை வசதி செய்துகொடுத்தல்;
 • மாவட்ட அளவில் 'நகரும் மருத்துவக் குழுக்கள்' மூலமாக அனைவரையும் சென்றடைதல்.

ஜனனி சுரக்ஷா யோஜனா

இந்திய அரசின் தேசிய ஊரக நல இயக்கத்தின் பகுதி-அ வின் கீழ்,  இனப்பெருக்க மற்றும் குழந்தை நல திட்டம்-II செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பான தாய்மை மற்றும் பாதுகாப்பான குழந்தை பிறப்பை மேம்படுத்த ஜனனி சுரக்ஷா யோஜனா என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மாநில அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது நல மையங்களில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கர்பிணி  பெண்களுக்கு ரூபாய்.700 ஊக்கத்தொகையாக அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் என்னவெனில் கிராமப்பகுதியில் உள்ள ஏழை எளிய கர்பிணிப்பெண்கள் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றெடுப்பதை ஊக்குவிப்பதே ஆகும்.  கர்பிணிப்பெண்கள் மருத்துவமனைக்கு வர ஆகும் செலவுகள்,  கர்பிணிப்பெண்ணுடன் வருபவரின் இரண்டு அல்லது மூன்று நாள் வருமான இழப்பு, உணவு மற்றும் பிற குடும்ப தேவைகளை சந்திக்க ஊக்கத்தொகை அளிப்பதன் மூலம் இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது.

3.0
அம்மா May 29, 2018 09:32 PM

ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் மூலம் மார்பக புற்றுநோய் க்கு இலவச மருத்துவ உதவி எங்கே பெறுவது

anandh May 26, 2015 10:13 AM

General knowledge please insert

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top