பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்குதல்

உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்குதல் பற்றிய பல குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று உதட்டிற்கு மேல் உள்ள முடியை பிடுங்கி நீக்குவார்கள்.

பொதுவாக முடியை பிடுங்கினால் அவ்விடத்தில் முடி அதிக அளவில் வளர ஆரம்பிக்கும். எனவே உதட்டிற்கு மேல் வளரும் முடியை பிடுங்காமல், வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, உதட்டிற்கு மேல் மாஸ்க் போட்டு வந்தால், அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும்.

முக்கியமாக எந்த ஒரு பொருளை முகத்தில் பயன்படுத்தும் முன்பும், கையில் பயன்படுத்தி எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் பின் பயன்படுத்த வேண்டும். சரி, இப்போது உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போம்

தயிர்

தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேல் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கையில் தண்ணீரை நனைத்து உதட்டின் மேல் சிறிது நேரம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால் உதட்டின் மேல் வளரும் முடியை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியையும் தடுக்கலாம்.

சர்க்கரை

எலுமிச்சை சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாணலியில் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கி குளிர வைத்து, காட்டன் பயன்படுத்தி உதட்டின் மேல் தடவி வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இதனாலும் முடியை நீக்கலாம்.

மைதா/கோதுமை மாவு

உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க மஞ்சள் மிகவும் சிறப்பான பொருள். அதற்கு 1 சிட்டிகை மஞ்சள் பொடியை மைதா/கோதுமை மாவுடன் சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, உதட்டின் மேல் பகுதியில் தடவி 1/2 மணிநேரம் வறட்சியடையும் வரை ஊற வைக்க வேண்டும். பின் கையை நீரில் நனைத்து, காய்ந்த பகுதியை வட்ட வடிவில் தேய்த்து கழுவ வேண்டும்.

பால்

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து, பின் அதனை மேலும் கீழுமாக தேய்த்து கழுவ வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கரு

உதட்டிற்கு மேல் மீசை போன்று வருவதை நீக்க முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் மைதாவுடன், சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேல் தடவி 30 நிமிடம் ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சையை சாறு எடுத்து, அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, அதனை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.

ஆதாரம் : போல்ட் ஸ்கை

3.05194805195
அபிநயா Dec 15, 2016 04:24 PM

என் கை கால்களில் நிறைய முடி இருக்கிறது அது மிகவும் அசிங்கமாக உள்ளது என்ன செய்வது

மஹதி Aug 10, 2016 12:11 AM

என் வலது கண் புருவத்துக்கு மேல் மரு உள்ளது.தவிர இடது புருவத்துக்கு மேலும் உதட்டிற்கு மேலும் சிறியதாக மச்சம் உள்ளது. இஞ்சித்துண்டை தினமும் இரவில் தூங்க போகும் முன் தேய்த்தும் மரு போகவில்லை. என்ன செய்வது?

TASNA Apr 29, 2016 11:50 AM

இது போன்ற பிரச்சனைகளுக்கு தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். நன்றி

USHA Apr 29, 2016 11:33 AM

என் மகளுக்கு 22வயது ஆகிறது . அவள் உடல் முழுவதும் முடி அதிகமாக உள்ளது. அதனால் அவள் தோற்றம் கருப்பாக தெரிகிறது. என்ன செய்வதென்று விளக்குங்கள்.

TASNA Jan 19, 2016 02:09 PM

11 மாதக் குழந்தை என்பதால் மருத்துவரை அணுகுதல் சிறந்தது. நன்றி

கீதாஞ்சலி Jan 19, 2016 12:05 PM

என் குழந்தை பிறந்து 11 மாதம் ஆகிறது .அவளுக்கு உதட்டின் மேல் பகுதியில் முடி உள்ளது. உதடு மிக கருப்பாக உள்ளது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top