অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இருமலை குணப்படுத்த குறிப்புகள்

இருமலை குணப்படுத்த குறிப்புகள்
  • சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் குணமாகும்.
  • மிளகை தூள் செய்து, சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட, சூட்டினால் உண்டாகும் இருமல் குணமாகும்.
  • விஷ்ணு கிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் குணமாகும்.
  • எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேனை கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.
  • இரவு வேளையில் மிளகு, மஞ்சள் கலந்த பாலை அருந்தி வந்தால் சளியும் இருமலும் பறந்தோடி விடும். இதனை குறைந்தது ஒரு வாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
  • மாதுளம் பழத்துடன் பாதாம் எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
  • துளசிப்பூ, திப்பிலி, வசம்புப் பொடி இவைகளில் சர்க்கரை மற்றும் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல் குறையும்.
  • பாலுடன் கிராம்புப் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.
  • தேனுடன் அதே அளவு இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • தேனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
  • சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.
  • நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.

ஆதாரம்: சிறகு இதழ்



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate