பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வெப்ப ஒத்தடம்

வெப்ப ஒத்தடம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வரையறை

வெப்பம் அளித்தல் என்பது தோலை வெப்பப்படுத்துவதற்காக உலர் அல்லது ஈரத்தன்மையில் உடலின் மேற்பரப்பில் சூடான பொருளை செலுத்துவதாகும். இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்க, அழற்சியினால் உண்டான வீக்கத்துக்கு நிவாரணம், சீழ் போன்றவற்றை ஒரு இடத்தில் திரளச் செய்வதற்கும், காயங்கள் ஆறுவதற்கும் தசைப்பிடிப்புகளை குறைக்கவும் மற்றும் கழிவுகளை மென்மையாக்கவும் பயன்படுகிறது.

நோக்கங்கள்

• இரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு

• சீழை ஒரு இடத்தில் திரளச் செய்வதற்கு

• குணமடைவதை தூண்டுவதற்கு

• வலியிலிருந்து நிவாரணம் பெற

• வலியை குறைக்க

• அழற்சியினால் உண்டான வீக்கத்துக்கு நிவாரணமாக.

• வெதுவெதுப்பையும் வசதியையும் அளிக்க

• தசைப்பிடிப்பிலிருந்து நிவாரணம் பெற

• சிறுநீர் தேங்கியிருத்தலில் இருந்து நிவாரணம் பெற.

தேவைப்படுபவர்கள்

• குறிப்பிட்ட இடத்தில் அழற்சி உள்ளவர்கள்

• தசைபிடிப்பு உள்ளவர்கள்

• சோர்வு உள்ளவர்கள்

• வலி உள்ளவர்கள்

தேவைப்படாதவர்கள்

• புற்றுநோயாளிகளுக்கு வெப்பம் உதவி புரியாது. ஏனென்றால் வெப்பம் சாதாரண மற்றும் அசாதாரண செல்களின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

• சிறுநீரகம், இருதயம் மற்றும் நுரையீரல் பாதிப்படைந்தவர்களுக்கு வெப்பம் பயன்படாது. நுண்ணிய இரத்த குழாய்கள் விரிவடைவதால் ஏற்படும் வெப்பம் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும். இரத்த ஓட்டத்தை குறைத்து மற்றும் அதன் வேலைகளை பாதிப்படையச் செய்யலாம்.

• நேரிடையாக அழற்சி பகுதிகளில் வெப்பம் அளிக்கப்படக் கூடாது. எ.டு. பற்களில் சீழ் சேர்ந்து இருந்தால் வெப்பம் அளிக்கப்படும் பொழுது சுற்றியுள்ள பகுதிகளில் வெடிப்பு ஏற்படலாம்.

• பக்கவாதம், பலவீனம் மற்றும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு வெப்பம் அளிக்கக்கூடாது. ஏனெனில் அவர்களின் உணர்ச்சிதன்மை குறைவாக இருப்பதால் வெப்பத்தை உணராத நிலையில் தீ கொப்புளங்கள் ஏற்படலாம்.

• சிரை அல்லது நிணநீர் நோயினால் ஏற்படும் வீக்கத்துக்கு வெப்பம் அளிக்கக்கூடாது. இது வீக்கத்தை அதிகரிக்கும்.

• தலைவலியின்போது வெப்பம் அளித்தால் இரத்தக்குழாய்கள் விரிவடைந்து வசதியின்மையை உண்டாக்கும்.

• மெட்டபாலிக் பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு வெப்பம் அளிக்கக்கூடாது. ஏனென்றால் திசுக்கள் சிதைந்துவிடுவது அதிகமாகும். (எ.டு) சர்க்கரை நோயாளிகள், மற்றும் ஆர்த்திரோஸ்கிரோசிஸ் (Arteriosclerosis).

• அதிக வெப்பநிலையில், காய்ச்சலில் இருக்கும் நோயாளிகளுக்கு வெப்பம் அளிக்கக்கூடாது.

• சிறிய குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் வெப்பம் அளிக்கக்கூடாது. ஏனென்றால் திசுக்கள் எரிந்துவிடலாம்.

தேவையான பொருட்கள்

பொருட்கள்

நோக்கங்கள்

வெந்நீர்பை

ஜாடி 1

துடைப்பான் (Duster) 1

டவல் 1 (துவாலை)

வாசலின் (அ) எண்ணெய்

கரைசல் வெப்பமானி

தண்ணீர் எடுப்பதற்கு

தண்ணீர் எடுப்பதற்கு

வெந்நீர் பையை சுற்றி வைப்பதற்கு

தோலை துடைக்க

தோல் சிவந்து காணப்பட்டால் தடவ.

தண்ணீரின் வெப்பநிலையை கணக்கிட

செய்முறை

செய்முறையின் படிகள்

காரணம்

கைகளை கழுவவும்

குறுக்கு தொற்றை தடுக்க

சிறிது வெந்நீரை வெந்நீர் பையில் ஊற்றி பின் அதை காலி செய்யவும்.

வெந்நீர்பையை வெதுவெதுப்பாக வைக்க. ஏனென்றால் மிகச்சிறிய அளவு வெப்பம் மட்டும் வீணாகும் மற்றும் நோயாளி வெப்பம் அளிப்பதால் உண்டாகும் முழு பயனையும் பெறுவார்.

தண்ணீரின் வெப்பநிலையை கவனி (அ) நீராவி மறையும் வரை உள்ள கொதித்த நீரை வைத்திருக்கவும்.

தண்ணீர் மிகவும் சூடாக இருக்கக்கூடாது. பையிலிருந்து கசிந்தாலோ அல்லது வெடித்தாலோ கொப்புளங்கள் ஏற்படலாம். தண்ணீரின் வெப்பநிலை 120-140F ஆக இருக்க வேண்டும்

வெந்நீர்பையில் 3ல் 1 பங்கு நீரை ஊற்றவும்.

தேவையில்லாமல், முக்கியமாக உடலின் மீது வயிற்றுப்பகுதியில் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக பை முழுவதும் நீரால் நிரப்பப்பட்டால் உடல் உறுப்புகளில் அது வளையாது.

பையை ஒரு சமதள பரப்பில் வைத்து காற்றை வெளியேற்றி இரப்பர் கார்க்கை கொண்டு இறுக்கமாக மூடவும்.

பையில் காற்று இருந்தால் வெப்பம் கடத்தல் சரியாக நடைபெறாது.

வெந்நீர்பையை தலைகீழாக கவிழ்த்தி கசிவு இருக்கிறதா என்பதை பரிசோதித்து வெளிப் புறத்தை உலர்ந்த நிலையில் வைக்கவும்.

கொப்புளங்கள் ஏற்படுவதை தடுக்க.

வெந்நீர்ப் பையை உறையனுள் போட்டு, படுக்கையருகே கொண்டு வரவும்

உறை எந்த ஈரத்தன்மையையும் உறிஞ்சக்கூடியது. ஏனென்றால் தண்ணீர் ஒரு சிறந்த வெப்பக்கடத்தியாக இருப்பதால் வெந்நீர் பைக்கும், நோயாளியின் தோலுக்கும் இடையே உள்ள ஈரத்தினால் கொப்புளங்கள் ஏற்படலாம்.

வெந்நீர்பையை துவாலை அல்லது துணியைக் கொண்டு சுற்றிவைக்கப்பட வேண்டும்.

துவாலை அல்லது துணி பையிலிருந்து வெப்பம் இழக்கப்படுவதை தடுக்கும்.

வெந்நீர் பாட்டிலை ஒரு குறிப்பிட்ட இடத்தில் 20 - 30 நிமிடங்கள் தேவைப்பட்டால் நிலையை மாற்றலாம். அந்த பகுதியை கவனி. தேவைப்பட்டால் பையை திரும்ப நிரப்பு.

30 நிமிடங்களுக்கு மேல் வைப்பதால் பக்க விளைவுகள் ஏற்படலாம். பகுதியை கவனித்து நிலையை மாற்றுவதால் கொப்புளங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

நோயாளி மற்றும் பொருட்களின் பின்கவனிப்பு

• சிகிச்சை முடிந்தவுடன் வெந்நீர்பையை நீக்கவும்.

• வியர்வையினால் அந்தப்பகுதி ஈரமாக இருந்தால் துவாலையால் துடைக்கவும்.

• தோல் சிவந்து காணப்படுகிறதா என்பதை கவனி. தோல் சிவந்து காணப்பட்டால் வாசலைன் அல்லது எண்ணெய் தடவவும்.

• படுக்கை துணிகளால் நோயாளியை மூடு. தேவையற்ற துணிகள் ஏதாவது இருந்தால் அவைகளை நீக்கிவிடு.

• நோயாளியை படுக்கையின் மேல் அமைதியாக இருக்கச்செய்.

• எல்லா பொருட்களையும் பயன்படுத்தும் அறைக்கு (utility room) கொண்டு செல்லவும். வெந்நீர் பாட்டிலின் உறையை நீக்கி அதை சலவைக்கு அனுப்பவும். வெந்நீர் பையை காலிசெய்து அதன் வெளிப்புறத்தை சோப்புநீர் கொண்டு கழுவவும். பையை தலைகீழாக தொங்கவிடுவதன் மூலம் பையின் உட்பகுதியை உலரச்செய். உலர்ந்த பிறகு காற்றினால் நிரப்பி, கார்க்கொண்டு மூடி அதற்குரிய இடத்தில் வைக்கவும். மற்ற பொருட்களையும் அந்தந்த இடத்திற்கு மாற்றிவிடவும்.

• கைகளைக் கழுவவும்

• நேரம், தேதி, எந்த பகுதியில் அளிக்கப்பட்டது, வெப்பம் அளித்தலின் நோக்கங்கள் மற்றும் எதிர்வினைகள் ஏதாவது இருந்தால் பதிவேட்டில் பதிவு செய்யவும்

அகச்சிவப்பு கதிர்கள் (அகச்சிவப்பு விளக்கு) :

அகச்சிவப்பு விளக்குகள், அகச்சிவப்பு கதிர்களை கடத்தும். அவைகள் பார்க்க முடியாத சூடான கதிர்கள், சிவப்புக்கு பின்னால் உள்ள நிறமாலை.

புறஊதாக்கதிர்கள் (புறஊதா விளக்கு) :

புறஊதா விளக்குகள் புறஊதாக் கதிர்களை கடத்தும். இவைகள் பார்க்கக்கூடிய நிறமாலையில் ஊதாவின் கடைசியில் உள்ள கண்ணுக்கு புலப்படாத வெப்பக்கதிர்கள்.

இந்த இரண்டு கதிர்களும் சிகிச்சையில் திசுக்களில் வெப்பத்தை உண்டாக்கப் பயன்படுகிறது.

சிகிச்சை பலன்கள்

1. படுக்கை புண் விரைவாக குணமடைய

2. இணைப்புத் திசுக்களை மென்மையாக்க

3. நீட்டப்பட்ட தசைகளால் தசைபிடிப்புகளுக்கு நிவாரணம் அளிக்க

வேதியியல் வெப்ப பாட்டில்கள்

பல அளவுகளில் உள்ள மூடப்பட்ட பிளாஸ்டிக் கலன்களில் இரண்டு வகையான வேதியியல் கூட்டுப் பொருட்கள் தனித்தனி பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.

வெப்ப சிகிச்சை தேவைப்படும் பொழுது செவிலியர் அந்த பாட்டில்களை நன்றாக கசக்கி பிழிய வேண்டும். இரண்டு வேதிக்கூட்டுப்பொருளும் நிலையான வெப்பம் 40-46C ஐ 30-60 நிமிடங்கள் நிலைப்படுத்தும்.

சூடுபடுத்தப்பட்ட விளக்குகளில் இருந்து பெறப்படும் வெப்பத்தைவிட அகச்சிவப்பு மற்றும் புறஊதா விளக்குகளிலிருந்து பெறப்படும் கதிர்கள் தீவிரமானவை.

புறஊதா விளக்குகளினால் ஏற்படும் விளைவுகள்

• தோலின் நிறம்

• வைட்டமின் D உற்பத்தி

• பாக்டீரியாக்களை அழித்தலின் விளைவு

• சிகிச்சையின் கால அளவு 20 - 30 நிமிடங்கள்

மின்தொட்டில் (Electric Cradle)

1. மின்தொட்டில்கள் எனப்படுபவை படுக்கை தொட்டில்கள். இவற்றின் உட்புறத்தில் ஒளி ஆதாரம் மற்றும் வெப்பநிலைமானி பொருத்தப்பட்டிருக்கும்.

2. இது அதிகப்படியாக உடல் உறுப்புகளின் சிகிச்சைக்கு பயன்படுகிறது. இதனால் உடம்பில் சுற்றப்பட்ட பெரிய பிளாஸ்திரி மாவுக்கட்டுகளையும் உடனே உலர வைக்க முடியும்.

3. இது ஆடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளுடன் பயன்படுத்தப்படலாம்.

4. தேவையான அளவில் வெப்பத்தை நிலைநிறுத்த கம்பளிகள் தொட்டில்களுடன் சேர்ந்து பயன்படுத்தப்படலாம்.

5. வெப்பதொட்டில் சிகிச்சையின் கால அளவு 20 - 30 நிமிடங்கள். பின் அந்த இடம் வெதுவெதுப்பாக வைக்கப்பட்டு அல்லது குறைந்த வெப்பநிலையில் தொடர்ந்து பயன்படுத்தப்படலாம்.

சூடுபடுத்தும் விளக்குகள் (Heating Lamps)

வளைந்த கழுத்துகளையுடைய விளக்குகள் உடலின் பகுதிகளுக்கு வெப்பத்தை அளிக்கப் பயன்படுகின்றன. வெளியாக்கப்பட்ட பகுதிக்கும் விளக்குக்கும் இடைப்பட்ட தூரம் விளக்கு வெளிச்சத்தின் வாட்டேஜ் தோலின் நிறம் மற்றும் நோயாளி வெப்பத்தை தாங்கிக் கொள்ளக்கூடியதை பொறுத்தது.

பரிந்துரைக்கப்பட்ட தூரம் பின்வருமாறு

1. 25 வாட் மின்விளக்கு (பல்ப்) = உடல்பகுதியிலிருந்து 35 செ.மீ.

2. 40 வாட் மின்விளக்கு (பல்ப்) = உடல் பகுதியிலிருந்து 45 செ.மீ

3. 60 வாட் மின்விளக்கு (பல்ப்) = உடல்பகுதியிலிருந்து 60- 75செ.மீ

மின்திண்டுகள் (Electric heating pads)

மின்திண்டுகள் நீர்புகாத இரப்பரினால் ஆக்கப்பட்ட உறையினுள் மின்சார கம்பிச்சுருள், இதனுடன் ஸ்விட்ச் ஒன்று தேவையான அளவு வெப்பத்தை நிலைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் இருக்கும்.

மின் திண்டுகளைப் பயன்படுத்தும்போது கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

1. வியர்வையினால் வரும் ஈரத்தை உறிஞ்சவும், வெப்பத்தை சரியான முறையில் கடத்தவும், பிளானல் துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.

2. மின் திண்டுகளைப் பயன்படுத்தும்போது ஈரமான கட்டுகளை போடக்கூடாது.

3. வெப்பதிண்டுகளை பயன்படுத்தும் போது அழுத்தம் கொடுக்கக்கூடாது.

ஏனென்றால் அழுத்தம் நோயாளிக்கும் திண்டுக்கும் இடைப்பட்ட வாயு இடைவெளியை குறைத்துவிடும். இது எரிச்சல் அடையும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம்.

4. மின் திண்டுக்கு எதிராக படுக்கவோ, குனியவோ கூடாது என்று நோயாளிக்கு அறிவுறுத்து.

தொகுப்பு

1. வெப்பம் அளித்தல் என்பது தோலை வெப்பப்படுத்துவதற்காக உலர் அல்லது ஈரத்தன்மையில் உடலின் மேற்பரப்பில் சூடான பொருளை செலுத்துவதாகும்.

2. வெப்பம் அளித்தலை குறிப்பிட்ட இடங்களில் மற்றும் பொதுவாக அளிப்பவை எனஇரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

3. குறிப்பிட்ட இடங்கள் மற்றும் பொதுவான இடங்களில் வெப்பம் அளிப்பவற்றைமேலும் உலர்வெப்பம், ஈரவெப்பம் என இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

2.90909090909
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top