கண்ணாடியாலோ, விழிவில்லையாலோ (Contact lens) ஒருவரின் இழந்த பார்வையைச் சரிசெய்ய முடியவில்லையானால் அந்நிலையைப் பார்வையிழப்பு என்று கூறுகிறோம்.
தேசியப் பார்வையிழப்புக் கட்டுப்பாட்டுத் திட்டம் (NPCB) பார்வையிழப்பைப் பின்வரும் தலைப்புகளில் வரையறுக்கிறது:
பார்வையிழப்பின் வகைகள்
பல்வேறு காரணங்களால் பார்வை இழப்பு ஏற்படலாம். முக்கியமான காரணங்களாவன:
காரணங்களுக்கு ஏற்ப பகுதிப் பார்வையிழப்பு பல்வேறு வகைகளாக மாறுபடும்
பார்வை இழப்புக்கான காரணங்களில் பின்வருவனவும் அடங்கும்:
ஒருவரின் பார்வைத் திறனை அளக்கும் போது இரு முக்கிய பகுதிகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன:
பார்வைப் புலச் சோதனை
பார்வைப்புலச் சோதனையின் போது ஒருவரை ஒரு பொறியமைப்பை நேராகப் பார்க்கச் செய்கின்றனர். அதே நேரத்தில் பக்கவாட்டுப் பார்வைக்காக ஒரு விளக்கு எரியவிட்டு அணைக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒளியைப் பார்க்கும் போது அவர் ஒரு பொத்தானை அழுத்த வேண்டும். இதன் மூலம் பார்வைப் புலனில் இருக்கும் இடைவெளி கண்டறியப்படுகிறது.
ஸ்நெல்லன் சோதனை
ஸ்நெல்லன் சோதனையின் மூலம் பார்வைக் கூர்மை கண்டறியப்படுகிறது. ஓர் அட்டையில் பெரிதிலிருந்து சிறியது வரை எழுதப்பட்ட எழுத்துக்களைப் படிப்பதே இச்சோதனை. சாதாரணக் கண் சோதனையின் போது இவ்வட்டை பயன்படுத்தப்படுகிறது. சோதனையின் முடிவின் போது இரு எண்களைக் கொண்ட ஒரு மதிப்பெண் தரப்படுகின்றது. முதல் எண், அட்டையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்து வாசிக்க முடிந்தது என்பதைக் காட்டுகிறது. இரண்டாவது எண் ஆரோக்கியமான ஒருவர் எவ்வளவு தூரத்தில் இருந்து வாசிக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. ஆக, உங்களுக்கு பார்வைக் கூர்மை மதிப்பெண் 6/60 கொடுக்கப்பட்டால் ஆரோக்கியமான ஒருவர் 60 மீட்டர் தொலைவில் இருந்து வாசிக்கக் கூடிய ஒன்றை உங்களால் 6 மீட்டர் தூரத்தில் இருந்துதான் வாசிக்க முடியும் என்பது பொருள்.
பகுதிப் பார்வை பாதிப்பு
பகுதிப் பார்வை பாதிப்பு அல்லது பார்வை பாதிப்பு பொதுவாகக் கீழ்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
கடுமையான பார்வை பாதிப்பு (பார்வையிழப்பு)
’பார்வையையின் உதவியால் செய்யக் கூடிய வேலையை ஒருவரால் செய்ய இயலாத போது அவர் பார்வை இழந்தவர் எனக் கருதப்படுவார்’ என்பதே கடுமையான பார்வை பாதிப்புக்கு (பார்வை இழப்பு) சட்டவியல் வரையறை ஆகும்.
இது பொதுவாக மூன்று வகைப்படும்:
பார்வையிழப்புக்கு மருத்துவம் பார்வை இழப்பின் காரணத்தைப் பொறுத்து அமைகிறது.
ஊட்டச்சத்துக் குறைவால் பார்வையிழப்பு : உணவு முறை மாற்றத்தால் சரிசெய்யக் கூடியது.
அழற்சியாலும் தொற்றாலும் ஏற்படும் பார்வையிழப்பு : சொட்டு மருந்தாலும், மாத்திரைகளாலும் சிகிச்சை அளிக்கக் கூடியவை
கண்புரையால் அதிகமானோர் பார்வை இழக்கின்றனர் : இவ்வகை நோயாளிகளில் பெரும்பான்மையானோர் அறுவை சிகிச்சையால் குணம் அடைகின்றனர்.
கண்புரை அல்லது கிட்டப்பார்வை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு வகையான உள்விழி கண்வில்லைகள் ((intraocular lens IOL) கண்ணுக்குள் பொருத்தப்படுகின்றன. கண்புரை நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் உள்விழி வில்லைகள் சூடோபக்கிக் IOL—கள் (Pseudophakic IOL) என்று அழைக்கப்படுகின்றன. கண்புரையால் மூடப்பட்டுள்ள படிகவில்லைகளுக்குப் (Crystalline lens) பதிலாக இவை பணிபுரிகின்றன.
பக்கிக் இண்ட்ராகுலர் வில்லைகள் (phakic intaocular lens- PIOL) என அழைக்கப்படும் இரண்டாவது வகையான உள்விழி வில்லைகள் கிட்டப்பார்வையைச் சரிசெய்ய பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான கண்ணின் இயற்கை வில்லைக்கு மேலாக வைக்கப்படும்போது இது பார்வையாற்றலை மாற்றுகிறது.
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்