பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல் / காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுக்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுக்கள்

காய்ச்சலின் அடிப்படையான காரணங்களைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல்

காய்ச்சல் என்றாலே சிரமம் தான். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து காய்ச்சலின் அளவு மாறுபடும். சிலரால் அதை தாங்கி கொள்ள முடியும், ஆனால் பலரை அது பாடாய் படுத்தி விடும். காய்ச்சல் என்றால் அதில் பல வகைகள் உள்ளது. இரவு நேரத்தில் மட்டும் காய்ச்சலை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? சிலர் அதனை அனுபவித்திருக்கலாம். பகல் நேரத்தில் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, பல நேரங்களில் நமக்கு இரவில் மட்டுமே காய்ச்சல் அடிக்கும். இதனால் அமைதியற்ற இரவை கழிக்க வேண்டியிருக்கும். அதன் விளைவாக காலையில் சோர்வுடன் காணப்படுவீர்கள். உங்கள் உடலுக்கு தேவையான தூக்கமும் ஓய்வும் உங்களுக்கு கிடைக்காமல் போகும். இது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். இரவில் மட்டும் காய்ச்சல் வருவது பெரிய குறையாகவே உள்ளது. ஒரு வேளை, நீங்கள் இரவில் மட்டும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தால், முதலில் அதற்கான அறிகுறிகளை கவனிக்க வேண்டும். ஒரு வேளை, அதற்கான அறிகுறிகள் ஒத்துப்போனால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இரவில் ஏற்படும் காய்ச்சலை ஒழித்து கட்ட அது ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டாமா? ஏன் இரவில் காய்ச்சல் உண்டாகிறது.

வெளிப்புற காய்ச்சலூட்டி

காய்ச்சலூட்டிகள் வெளியில் இருந்து பயணித்து உங்களின் உடலுக்குள் நுழைய முற்படும். இதனால் இரவில் மட்டும் அதிகமான காய்ச்சல் அடிக்கும். இவ்வகையான காய்ச்சலூட்டிகள் உடலில் நச்சுத் தன்மையை உண்டாக்கும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். ஒற்றைக்ககுழிக்கலம் (மோனோசைட்ஸ்) மற்றும் இரத்த விழுங்கணுக்கள் (மேக்ரோஃபேஜஸ்) ஆகியவற்றினால் இந்த காய்ச்சலூட்டிகள் உடலுக்குள்ளேயே உற்பத்தியாகும். வெளிப்புறத்தில் இருந்து காய்ச்சலூட்டிகள் உடலுக்குள் நுழையும் போது, மேலும் காய்ச்சலூட்டிகள் உற்பத்தியாக அது தூண்டும். இதனால் காய்ச்சல் அதிகரிக்கும். இரவு நேரத்தில் மட்டும் காய்ச்சல் அடிப்பதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாகும்.

மேல் சுவாசக்குழாய் தொற்றுக்கள்

சளி மற்றும் இதர சுவாசக்குழாய்தொற்றுக்கள் இருந்தாலும் கூட இரவு நேரங்களில் காய்ச்சலை உண்டாக்கும். சில நேரங்களில், சாதாரண சளியினால் கூட உங்கள் உடல் பாதிக்கப்பட்டு, அதனால் இரவில் காய்ச்சல் ஏற்படும். சில நேரம் குரல்வளை மற்றும் மூச்சுக் குழாய்களில் சுவாச குழாய் தொற்றுக்கள் ஏற்படுவதன் விளைவாக கூட இரவு நேரத்தில் காய்ச்சல் உண்டாகலாம். சாதாரண சளி சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால் மற்ற தொற்றுக்கள் நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து நீடிக்கும்.

சிறுநீரக குழாய் தொற்றுக்கள்

சிறுநீரக குழாய் தொற்றுக்கள் இருக்கும் போதும் கூட இரவு நேரத்தில் காய்ச்சல் உண்டாகும். சிறுநீரக குழாயில் அதிகமான வலி இருந்து அதனுடன் நச்சுத் தன்மை கலந்திருந்தால் காய்ச்சல் உண்டாகும். இந்த நேரத்தில் மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும். உங்களுக்கு சிறுநீரக குழாய் தொற்றுக்கள் இருந்தால், சரியான மருந்துகளை உட்கொண்டு போதிய இடைவேளையில் மருத்துவரை அணுகுங்கள்.

சரும தொற்றுக்கள்

பல நேரங்களில் இரவு நேரத்தில் காய்ச்சல் அடிப்பதற்கு சரும தொற்றுக்கள் முக்கிய காரணமாக உள்ளது. தொற்றுக்கள் அதிகமாக இருந்து, அது உங்களுக்கு தொந்தரவை அளித்து வந்தால், அதனை என்னவென்று சோதிக்க வேண்டும். இரவு நேரத்தில் காய்ச்சல் ஏற்படுவதற்கு இதுவும் கூட முக்கிய காரணமாகும்.

அலர்ஜிகள்

மருந்துகள் உண்ணுவதால் அலர்ஜி உண்டாகி, அதனால் உடலில் அழற்சிகள் ஏற்பட்டால், இரவு நேரத்தில் காய்ச்சல் அடிக்கும். சாதாரண அலர்ஜி பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதனால் அதனை சரிவர கவனித்து விட வேண்டும்.

ஆதாரம் : போல்ட் ஸ்கை

3.06153846154
சோபனா Nov 25, 2016 12:46 PM

எனக்கு வயது 27 தலையில் நீர்கோர்தல் மற்றும் தும்மல் ஒரு மாதம் இருந்தது அதற்கு இரண்டு மாதம் வரை தொடர்ந்து மருந்து சாப்பிட்டேன் மருந்தை நிருத்திய பின்பு மீண்டும் தும்மல் வந்து விட்டது அது மட்டும் இல்லாமல் உள் காய்ச்சல் உள்ளது போல எப்போதும் தோன்றும் குழித்து விட்டு வந்தால் காய்ச்சல் உணர்வு மறைந்து விடும் பின்பு 2 மணி நேரம் கழித்து மீண்டும் அதே போல தோன்றும் எனக்கு ஒரு தீர்உ கூருங்களேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top