பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒரே சிறுநீரகத்தோடு வாழ்தல்

ஒரே சிறுநீரகத்தோடு வாழ்வது எப்படி என்று இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஒரே சிறுநீரகத்தோடு வாழ்வது ஒரு பிரச்னை மிகுந்த வாழ்க்கையே. ஆனால் ஒரு சில எச்சரிக்கைகளுடனும் ஆரோக்கியமான வாழ்க்கை வழி முறைகளையும் கையாண்டு எவரும் சாதாரண வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலாம்.

அத்தகைய ஒருவர் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் யாவை? ஏன்?

அனேகமாக இந்த உலகில் எந்த ஒரு மனிதரும் இரண்டு சிறுநீரகங்களுடன்தான் பிறக்கிறார்கள். ஆனால் இதே உபரியான சக்தி இருப்பதால், ஒரே ஒரு சிறுநீரகமே தன் முழு சக்தியால் உடலுக்கு வேண்டிய செயல்பாடுகளை தானே செய்யலாம். அதாவது இரண்டு சிறுநீரகங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளைச் செய்யலாம். ஆகவே ஒரே ஒரு சிறுநீரகமே தனக்கு இருப்பதைப் பற்றி எவரும் கவலைப் பட வேண்டியதில்லை. சாதாரண வாழ்க்கையையே மேற்கொண்டு, பாலியல் இன்பங்களையும் உணர்ந்து கொண்டு அல்லது கடுமையான வேலைகளில் ஈடுபட்டு வாழ்ந்து வரலாம்

சாதாரண வாழ்க்கைக்கு ஒரே ஒரு சிறுநீரகமே போதும். வாழ்க்கை முழுவதையும் மிகுந்த உடலுழைப்புடனும் கூட வாழ்ந்து வரலாம். வேறு ஏதோ காரணத்திற்காக எடுக்கப்படும் கதிரியக்க சோதனைகளினால் ஒரே ஒரு சிறுநீரகமே இருப்பது தெரிய வரலாம்.

ஒரே ஒரு சிறுநீரகத்தோடு வாழ்பவர் ஒரு சிலருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு, வரக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள சில குறைகளாவன - அவை உயர்இரத்த அழுத்தம், சிறுநீற்றில் புரோட்டீன் குறைதல், போன்றவை தோன்றும். சிறுநீரகத்தின் செயல்பாடு குறைவது மிகவும் அரிதான ஒன்றாகும்.

ஒரே ஒரு சிறுநீரகம் மட்டும் உருவாவதின் காரணங்கள் யாவை?

மூன்று சாதாரண அல்லது பொதுவான சூழல்களில் அப்படி ஏற்படலாம். அவை -

1. பிறப்பிலேயே அப்படி ஏற்படலாம்.

2. அடுத்த சிறுநீரகம் அறுவை சிகிச்சையால் என்றைக்கோ அகற்றப்பட்டிருக்கலாம். கற்கள் உருவானதோ அல்லது புற்று நோயோ அல்லது தடைகளோ அல்லது சீழ் கோர்த்துக் கொள்வதோ அல்லது வலி மிகுந்த காயமோ - இவற்றால் ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

3. ஒரு சிறுநீரகத்தை அவர்தானம் செய்திருக்கலாம்.

பிறப்பிலிருந்தே ஒரே ஒரு சிறுநீரகத்தோடு வாழவேண்டிய நிர்ப்பந்தம் எப்படி ஏற்படுகிறது?

எத்தனையோ நபர்களுக்கு ஒரே ஒரு சிறுநீரகத்தோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. 750 க்கு 1 என்ற விகிதத்தில் பிறப்பிலிருந்தே இப்படிவாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்த ஒரு விளைவு ஆண்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. பொதுவாகவே இடதுபுற சிறுநீரகமே இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.

ஒரே ஒரு சிறுநீரகத்தோடு வாழ்பவர்கள் என்னென்ன முன்னெச்சரிக்கைகளைக் கைக்கொள்ளுதல் வேண்டும்?

 • தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்
 • இரண்டாவது சிறுநீரகத்தை மிகுந்த சிரமத்துடன் எந்தவித காயமும் விபத்தும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். பாக்சிங், ஹாக்கி, கால்ப்பந்து, மல்லயுத்தப் போட்டிகள் மற்றும் குத்துச் சண்டைகள் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபாடு கூடவே கூடாது.
 • கற்கள் உருவாகும் நோயை முறையான சிகிச்சைகள் மூலம் தடுத்தோ அல்லது கட்டுப்படுத்தவோ வேண்டும். அதே போல் சிறுநீர் செல்லும் வழியில் ஏற்படும் நோயைக் கட்டுப் படுத்தல் வேண்டும்.
 • எந்த ஒரு புது சிகிச்சையையும் ஆரம்பிக்கும் முன் அல்லது அடிவயிற்றில் எந்த அறுவை சிகிச்சையை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் வெளிப்படையாக உங்களுக்கு ஒரே ஒரு சிறுநீரகமே உள்ளது என்பதைச் சொல்லிவிடுங்கள்.
 • இரத்த அழுத்தத்தின் மீது ஒரு கட்டுப்பாடு, முறையானதும் இடைவிடாததுமாக தேகப் பயிற்சி, ஆரோக்கியமான சமச்சீரான உணவு, மற்றும் வலிநிவாரணிகளை தவிர்த்து வாழும் வாழ்க்கை புரோட்டின் மிக அதிகமாக உள்ள உணவை தவிர்க்கவும். அப்படி மருத்துவர் அறிவுரை சொன்னால், அன்றாடம் சேரும் உப்பைத் குறைக்கவும்
 • முறையாக அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும். ஒரே சிறுநீரகத்தை வைத்துக் கொண்டு வாழும் ஒருவருக்கு முதல் முதலானதும் தலையாய அறிவுரை இதுதான் - அடிக்கடி மருத்துவ பரிசோதனையைச் செய்து கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதித்துப் பார்த்து சிறுநீரகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கண்டு வாருங்கள். அதே போல் வருடத்திற்கு ஒரு முறை சிறுநீரையும் இரத்தத்தையும் சோதித்து வாருங்கள். முறையான மருத்துவ சோதனைகளே சிறுநீரக பிரச்னைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டறிய உதவும். அல்லது சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்தால், அதை காட்டிக் கொடுக்கும். ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பிரச்னைகளைக் கண்டு பிடித்துக் கொள்வது, சரியான சமயத்தில் சிகிச்சைக்கு உதவுகிறது. மற்றும் சிறுநீரகத்தின் மீது நோயின் ஆரம்ப நிலையிலேயே கவனம் கொள்ள வைக்கிறது.

ஒரே சிறுநீரகத்தை வைத்துக்கொண்டு இருக்கும் நோயாளி மருத்துவரை எப்பொழுது தொடர்பு கொள்ள வேண்டும்?

கீழ்க்கண்ட நிலைகளில் அவர் தொடர்பு கொள்ளுதல் அவசியம்

 • திடீரென்றும் முழுவதுமாகவும் சிறுநீர்கழிப்பது நின்று போதல்
 • சிறுநீரகத்திற்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால்
 • வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது சோதனைக்கு எக்ஸ்-ரே சோதனை மூலம் முடிவுகள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் என்றால்
 • காய்ச்சல், சிறுநீர்கழிக்கும்பொழுது எரிச்சல் அல்லது சிவப்பாக சிறுநீர் கழித்தல்

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil

3.05128205128
ஜா.ஜா.ராஜ் Mar 27, 2017 10:45 AM

என்னுடைய பெண் குழந்தை ஒரு சிறுநீரகத்துடன் பிறந்தது உள்ளது ,நான் என் குழந்தைக்கு செய்ய வேண்டிய மருத்துவ உதவி என்ன .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top