பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / வாய் / உதடு மற்றும் அண்ணப் பிளவிற்கான சிகிச்சை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உதடு மற்றும் அண்ணப் பிளவிற்கான சிகிச்சை

உதடு மற்றும் அண்ணப் பிளவிற்கான சிகிச்சை பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அண்ணப் பிளவிற்கான சிகிச்சை

பரம்பரையான காரணிகளுள் சில நோய்த் தொகுதிகள் இதற்கு காரணம் ஆகின்றன. உதாரணமாக வன் – டர் வூடே நோய்த் தொகுதி, சிடரியஸ் மூளைப் பாதிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

சுற்றாடல் காரணிகளுள் ஒட்சிசன் வழங்கலானது இந்தப் பிளவை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிகள் மதுபானம் அருந்துதல், புகைத்தல் மற்றும் உயர் குருதி அழுத்தச் சிகிச்சை ஆகியவற்றால் இது ஏற்படலாம். அத்துடன் விற்றமின்-'ஏ'ன் நஞ்சாதல், வலிப்பு மருந்துகள் நைட்ரேட்டுக்கள், கொகெய்ன் போன்றவையும் இதனை ஏற்படுத்தலாம்.

இந் நோயானது குழந்தையின் உருவத்தை பிறப்பில் அவதானிப்பதால் கண்டறியப்படுகிறது. தற்போதைய ஆய்வுகளின் முடிவில் இருந்து போலிக் அமிலத்தை ஒழுங்காக உட்கொள்வதால் இத்தகைய அசாதாரண நிலைமைகள் தவிர்க்கப்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உதடு மற்றும் அண்ணப் பிளவானது கர்ப்பத்தில் சிசு இருக்கும் காலத்தில் கழி ஒலி ஸ்கான் பரிசோதனை மூலம் கண்டறியப்படலாம்.

குழந்தை பிறந்த உடன் இக் குழந்தைகள் இந் நோய் தொடர்பான நிபுணர் குழுவினால் பரிசோதிக்கப்படுவார்கள்

உதட்டுப் பிளவிற்கான சிகிச்சைகள்

இது குழந்தை பிறந்து 2-3 மாதங்களுள் சத்திர சிகிச்சை மூலம் உதடுகள் தைக்கப்பட்டு திருத்தி அமைக்கப்படும்.பொதுவாக குழந்தைக்கு 10 வாரங்கள் ஆகும் போது சத்திர சிகிச்சையானது மேற்கொள்ளப்படும். இதன் போது குழந்தை குறைந்தது 10 இறாத்தல்கள் ஆயினும் இருக்க வேண்டும். அத்துடன் குருதியில் ஈமோகுளோபின் தேவையான அளவு காணப்படலும் அவசியம். பொதுவாக “மிலர்ட் செயன்முறை” ஆல் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். சத்திர சிகிச்சையின் பின்னர் உதடானது வீக்கம் அடைந்து காணப்படலாம். எனினும் இது சில வாரங்களில் மறைந்து உதடானது சாதாரன தோற்றத்தைப் பெறும்.

அண்ணப் பிளவிற்கான சிகிச்சை

இதனை திருத்தி அமைப்பதற்கான சத்திர சிகிச்சையானது 6-12 மாத வயதுள்ள குழந்தைகளில் மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் பாரிய அளவிலான அண்ணப் பிளவுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம்.

இந்த சிகிச்சைகளுக்கு மேலதிகமாக பெற்றோருக்கான ஆலோசனைகள், அடுத்த குழந்தையானது இதே நிலைமையால் பாதிக்கப்படும் அளவு, அந்தச் சந்தர்ப்பத்தை குறைப்பதற்கான வழி முறைகள், குழந்தைக்கு புரை ஏறாமல் பால் ஊட்டும் முறை மற்றும் பேச்சுப்பயிற்சி ஆகிய தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும்.

அத்துடன் இந்தக் குழந்தைகளுக்கு வேறு ஏதும் அவயவப் பாதிப்பு உள்ளதா என்பதும் உடற் பரிசோதனை மற்றும் ஸ்கான் பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படல் வேண்டும்.

ஆதாரம் : ஆரோக்கியத் தளம்

3.01204819277
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top