பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

எலும்புப்புரை நோய்

எலும்புப்புரை நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இரட்டையாற்றல் எக்ஸ்-கதிர் உறிஞ்சளவியல் (dual-energy X-ray absorptiometry) முறைப்படி அளக்கும்போது, நிகர உயர் எலும்பு நிறையைவிட [(mean peak bone mass) ஆரோக்கியமான இளம் வயதுவந்தோரின் சராசரி)] எலும்புத் தாது அடர்த்தி 2.5 அல்லது அதிகமான நிலைவிலகல் அடைவதே எலும்புப் புரை நோய் என உலக சுகாதார அமைப்பு அறுதியிடுகிறது. “நிறுவப்பட்ட எலும்புப்புரை” என்ற சொல்லில் வலுவிழந்து எலும்பு முறிந்து இருப்பதும் அடங்கும். எலும்புகள் வலுவிழந்து, பலவீனமாகி, உடையக்கூடிய தன்மையை அடையும் நிலையை எலும்புப்புரை நோய் என அழைக்கிறோம்.

எலும்புப்புரையின் பரவலான வகைகள்:

முதன்மை எலும்புப்புரை:

வகை I : மாதவிடாய்க்குப் பின்னான எலும்புப்புரை என்றும் இது அழைக்கப்படுகிறது.

வகை II : முதுமைக்குரிய எலும்புப்புரை, 75 வயதுக்கு மேற்பட்டப் பெண்களிலும் ஆண்களிலும் 2:1 என்ற விகிதத்தில் ஏற்படுகிறது.

இரண்டாம்நிலை எலும்புப்புரை:

இரண்டாம்நிலை எலும்புப்புரை எந்த வயதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படலாம்.

இது நீடித்த நோய் தாக்குநிலையில் அல்லது நோயில் இருப்பவர்களுக்கு அல்லது குளூக்கோகார்ட்டிகாய்ட்ஸ் போன்ற மருந்துகளை நீண்டநாட்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு (ஊக்கமருந்து அல்லது குளூக்கோகார்ட்டிகாய்ட் தூண்டிய எலும்புப்புரை) உருவாகலாம்.

நோயறிகுறிகள்

எலும்புப்புரை படிப்படியாக பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. சில வேளைகளில், சாதாரணமாகக் கீழே விழும்போது அல்லது சிறு மோதலின்போது எலும்பு முறிவு ஏற்படுகிறது. பொதுவாக எலும்பு பலவீன முறிவு, முதுகுத்தண்டு, விலா, இடுப்பு, மணிக்கட்டு ஆகிய இடங்களில் உண்டாகும். நோயறிகுறிகளில் அடங்குவன:

 • மூட்டு வலி
 • வீக்கம்
 • எடை குறைவும் வளைந்த தோற்றமும்
 • தோற்றச்சிதைவு
 • வளைந்த முதுகு
 • சோர்வு

காரணங்கள்

எலும்பு அடர்த்தி குறைவின் காரணமாக எலும்புப்புரை ஏற்படலாம்.

ஆபத்துக் காரணிகள்

பெண்கள்

ஆண்களை விட பெண்களுக்கே எலும்புப்புரை ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில் இயக்குநீர் மாற்றங்கள் எலும்பு அடர்த்தியைப் பாதிக்கும். பெண்களில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் என்ற இயக்குநீர் எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மாதவிடாய்க்குப் பின் உடலில் எஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. இதனால் எலும்பு அடர்த்தியும் வேகமாகக் குறையலாம்.

ஆண்கள்

எலும்புப்புரை ஏற்படும் ஆண்களில் பலருக்கு அதன் காரணம் அறியப்படவில்லை. இருப்பினும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆண் இயக்குநீரான டெஸ்ட்டோஸ்டெரோனுக்கும் இதற்கும் தொடர்புள்ளது. ஆண் உடலில் இந்த இயக்குநீர் வயதானபோதும் சுரக்கிறது. ஆனால் டெஸ்ட்டோஸ்டெரோன் அளவு குறையும் போது எலும்புப்புரை உண்டாகும் அபாயம் அதிகரிக்கிறது.

இயக்குநீர் சுரப்பி நோய்கள்: இயக்குநீர் தொடர்பான நோய்களால் எலும்புப்புரை உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன: அவற்றில் அடங்குவன:

 • தைராய்ட்மிகை சுரப்பு (தைராய்டு சுரப்பியின் மிகைச்செயல்பாடு)
 • அண்ணீரகச் சுரப்பிக் கோளாறு ( கஷிங்கின் நோய்)
 • இனப்பெருக்க இயக்குநீர் குறைவு (ஈஸ்ட்ரோஜனும் டெஸ்ட்டோஸ்டெரோனும்)
 • பிட்ரியூட்டரி சுரப்பிக் கோளாறு
 • இணைத் தைராய்ட் மிகைச்சுரப்பு (இணைத்தைராய்டு சுரப்பியின் மிகைச்செயல்பாடு). எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவு அபாயத்துக்கான பிற காரணிகளில் அடங்குவன:
 • எலும்புப்புரைநோய் குடும்பத்தில் தொடர்ந்து வருவது
 • உடல் நிறை குறை அளவு-19 அல்லது குறைவு
 • அதிக அளவில் கோர்ட்டிகோஸ்டெராய்ட் (ஆஸ்துமாவுக்கும் கீல்வாதத்துக்கும் பரவலாக பயன்படுவது) நீண்ட நாளுக்கு பயன்படுத்துவது எலும்பின் வலிமையை பாதிக்கும்.
 • அதிகக் குடி அல்லது புகைத்தல்
 • வாத மூட்டழற்சி

நோய்கண்டறிதல்

எலும்பு பலவீனமாகி முறிவு ஏற்பட்ட பிறகே பொதுவாக எலும்புப்புரை கண்டறியப்படுகிறது.

வரன்முறை ஊடுகதிர்படம்

எலும்புப்புரையின் சிக்கல்களைக் கண்டறிய வரன்முறை ஊடுகதிர்ப்படம் தனியாகவோ அல்லது கணினி வரைவிப்படம் மற்றும் காந்த அதிர்வு பிம்பப்படங்களோடு இணைந்தோ பயன்படுத்தப்படுகிறது. கணிசமான அளவுக்கு (30%) எலும்பிழப்பு இருந்தால் மட்டுமே எக்ஸ்-கதிர்ப் படங்களின் மூலம் கண்டறியப்படக் கூடும் ஆதலால் ஆரம்ப கட்டத்திற்கு ஊடுகதிர்ப்படம் உதவுவதில்லை. புறணி மெலிதாவதும் ஊடுகதிரை எளிதாக உள்ளனுமதிப்பதுமே பொதுவான எலும்புப்புரையின் இரு தன்மைகள் ஆகும். பல முள்ளெலும்புகள் பாதிக்கப்படுவதால் மார்பு முதுகெலும்பு வளைந்து கூன் உண்டாகிறது.

இரட்டையாற்றல் எக்ஸ்-கதிர்

எலும்புப்புரையைக் கண்டறிய இரட்டையாற்றல் எக்ஸ்-ரே உறிஞ்சளவியலே (dual-energy X-ray absorptiometry) பொன் அளவாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு மக்கள்தொகுப்பிலுள்ள ஓர் ஆரோக்கியமான இளம்வயது (30-40 ஆண்டுகள்) பெண்ணின் எலும்பு நிறையைவிட, எலும்புத் தாது அடர்த்தி, 2.5 நிலைவிலகலுக்குக் குறைவாக அல்லது சமமாக குறையும்போது எலும்புப் புரை நோய் கண்டறியப்படுகிறது. இது T- கெலிப்பெண் என அழைக்கப்படும்.

உயிர்க்குறியீடு

எலும்புச் சிதைவைக் கண்டறிய வேதிக்குறியீடு பயனுள்ள கருவியாகும். எலும்புகளின் ஒரு முக்கிய அங்கமான வகை-1 கொலாஜன் புரதத்தை , கெத்தெப்சின்  K  நொதி உடைக்கிறது. இதனால் உண்டாகும் நியோஎப்பிடோப் என்ற துணுக்கை எதிர்பொருட்கள் அறிந்துகொள்வதன் மூலம் எலும்புப்புரை கண்டறியப்படுகிறது. சிறுநீரின் மூலம் அதிகமாக வெளியேறும் C-டெலோபெப்டைட்ஸ் என்ற வகை-1 கொலொஜன் உடைபொருளும் எலும்புப்புரைநோயின்  உயிர்க்குறியீடாக பயன்படுகிறது.

தடுப்புமுறை

 • தொடர் உடற்பயிற்சி முக்கியம்.  பெரியவர்கள் வாரத்துக்கு ஐந்து முறை 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அறிவுரை கூறப்படுகிறது.
 • ஆரோக்கியமாக உண்ணுதல்: சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து D ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.
 • புகைகூடாது.
 • அதிகமாக மது அருந்தக் கூடாது.

சிகிச்சை

வாழ்க்கைமுறை

புகையிலைப் புகைத்தலும், அதிகமாக மதுவருந்துதலும் எலும்புப்புரையுடன் தொடர்புடையது. புகைப்பழக்கத்தை விடுதலும் மதுவைக் குறைத்தலும் பரிந்துரைக்கப்படுகிறது.

சத்துணவு

எலும்பு முறிவைத் தடுக்க உயிர்ச்சத்து D-யும் சுண்ணாம்புச்சத்தும் கூடுதலாகக் கொடுக்கலாம். இருப்பினும் இதய நோய்களும் சிறுநீரகக் கல்லும் உண்டாகும் அபாயம் உண்டு.

மருந்து

எலும்புப்புரையால் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மேலும் முறிவு அபாயத்தைக் குறைக்க பிஸ்பாஸ்போனேட்டுகள் (Bisphosphonates) பயனுடையவைகளாக இருக்கும். பின்மாதவிடாய் எலும்புப்புரையுள்ள பெண்களுக்கு மருத்துவம் அளிக்க டெரிபாரடைட் (Teriparatide-இனக்கலப்புடைய பாராதைராய்டு இயக்குநீர்) பயனுள்ளது.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

2.98571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top