பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூட்டுவலி

மூட்டுவலி பற்றிய குறிப்புகள்

மூட்டு வலி எனும் நோயும் மனிதரிடையே மட்டும் பெரும்பாலும் நடுத்தர வயதினரிடமும், வநோதிகரிடமும் காணப்படுகிறது. இதற்குக் காரணம், மூட்டுக்களில் உள்ள ஜவ்வு தேய்ந்துவிட்டது. உடற்பருமன் நிமித்தம் உடல் பாரம் தாங்காது மூட்டுவலி வந்துள்ளது என மருத்துவ உலகம் கூறுகின்றது.

ஆனால், இயற்கை உலகம், மருத்துவ உலகம் கூறும் காரணம் சரியல்ல. மூட்டுவலிக்கும் மெய்யான காரணம், மனிதரிடையே மட்டும் நாளுக்கு நாள் தவறான உணவுப் பழக்கம் அதிகரித்து வருவதேயாகும். மற்றொரு காரணம் மனிதரிடையே மட்டும் நாளுக்கு நாள் காலால் நடப்பது குறைந்து வருவதேயாகும். பெரும்பாலும், இருசக்கர வாகனம், அல்லது நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் தான் பெரும்பாலும் செல்கிறோம். காலால் நடப்பது இல்லையென்றே கூறலாம்.

காரணங்களும், சரிசெய்து கொள்வதன் வழிமுறைகள்

 • மூட்டு வலிக்கான மூல காரணங்களை அறிந்து நமக்கு நாமே சரி செய்து கொள்வது தான் இயற்கை வழியாகும். இதைத் தவிர்த்து, அறியாமையின் நிமித்தம் உலகில் எந்த மருத்துவத்தை நாடினாலும் மூட்டு வலியை நிரந்தரமாக நிறுத்த இயலாது. புலம்பிக் கொண்டிருக்கிறோம். மேலும் மருத்துவச் செலவிற்காக பண விரையமும் கால விரையமும் செய்து கொண்டிருக்கிறோம். தவிரவும் மூட்டு வலிக்காக மருத்துவர்கள் கூறும் மருந்துகள் பயன்படுத்தி, பக்க விளைவின் நிமித்தம் பற்பல நோய்களைப் புதிது புதிதாக வரவழைத்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அறுவை சிகிச்சை செய்து கொள்கிறோம்.
 • இவையெல்லாம் தேவையே இல்லை. உரிய காரணமான தவறான உணவுப் பழக்கத்திலிருந்து சரியான உணவுப் பழக்கத்திற்கு மாறுவதே முதல் இயற்கை வழியாகும்.
 • இதற்காக எந்த மருத்துவரிடமோ, அல்லது சத்துணவு வல்லுநரிடமோ செல்லவும் வேண்டாம்.
 • சிறிது இயற்கையைப் பற்றி ஆழமாக சிந்தித்து, இயற்கையின் அற்புதங்களை அறிந்து, நம்மை நாமே சரி செய்து கொண்டால், நமக்கு மருத்துவமே அவசியமில்லை.
 • கால விரையத்தினையும் பண விரையத்தினையும், பக்க விளைவுகளையும் எளிதில் தவிர்த்து, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வத்தை எளிதில் ஈட்டிவிடலாம்.
 • பற்பல பக்க விளைவுகளால் ஏற்படும் புதுப்புது நோய்களை நம்மிடையே தோற்றுவிப்பதையும் தவிர்த்து விடலாம்.

பயன்படுத்தும் உணவு வகைகள்

 • தேங்காய், பழ வகைகளை நமது உடல் உண்ண உணர்த்தும் போதெல்லாம் உணவாக உன்ணுவோம். அதாவது முதலில் தேவையான தேங்காயை உண்டவுடன், தேவையான கிடைக்கும் பழ வகைகளை ஒன்றன்பின் ஒன்றாக நன்கு மென்று உண்ணுவோம்.
 • நமது உடல் ஏதேனும் அருந்த உணர்த்தும் போது மட்டும், தேவையான பச்சைத் தண்ணீர் அருந்துவோம்.
 • மேலும் தேவைப்பட்டால், தேங்காய் தண்ணீர், பழச்சாறுகள் என இயற்கை பானங்கள் மட்டும் அருந்துவோம்.
 • காபி, டீ, பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் அனைத்து குளிர்பானங்கள், அனைத்து சத்து பானங்களையும் அருந்துவதைத் தவிர்ப்போம். நமது உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்தும் அனைத்து மருந்துகளையும் தவிர்ப்போம்.

உடற்பயிற்சி

நடைப்பயிற்சி, எட்டு நடைப்பயிற்சி செய்வோம்.

யோகாசனம் பயிற்சிகளான சுக ஆசனம், பத்மாசனம், வஜ்ராசனம், உட்கட்டாசனம், யோக முத்ரா, மகா முத்ரா, மஜ்ரி ஆசனம், உஷ்டாசனம் போன்ற அசான பயிற்சிகளையும் மெல்ல மெல்ல சிறிது சிறிதாகப் பழகி, செய்ய முயல்வோம்.

உறுதியாக சில நாட்களிலேயே அல்லது பல நாட்களிலேயே எவ்வித உள் வெளி மருந்தின்றி அறுவைச் சிகிச்சையின்றி எவ்வித எவ்வளவு நாட்பட்ட மூட்டுவலியும் மறைந்து போகும்.


மூட்டுவலிக்கு மருத்துவம்

ஆதாரம் : இயற்கை மருத்துவம்

3.0396039604
venkatesan Apr 13, 2017 10:18 AM

அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top