பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / மூளை / ஆட்டிசம் – ஓர் கண்ணோட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆட்டிசம் – ஓர் கண்ணோட்டம்

ஆட்டிசம் நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

அறிமுகம்

ஆட்டிசம் என்பது சாதாரணமான மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு, இது ஒருவருடைய தகவல் தொடர்பு, சமூக ஊடாடல், அறிவாற்றல் மற்றும் அவர் நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிக்கிறது. ஆட்டிசத்தைப் பலதரப்பட்ட தன்மையைக்கொண்ட ஒரு குறைபாடு என்பார்கள். காரணம் இதன் அறிகுறிகளும் பண்புகளும் குழந்தைகளில் பலவிதமாகக் காணப்படுகின்றன, அவர்களை வெவ்வேறு வகைகளில் பாதிக்கின்றன.

சில குழந்தைகளுக்கு இதைச் சமாளிப்பதில் பெரிய சவால்கள் ஏற்படக்கூடும், அவர்களுக்குப் பிறருடைய உதவி தேவைப்படும், ஆனால் வேறு சில குழந்தைகள் தங்களுடைய பெரும்பாலான வேலைகளைச் சுதந்தரமாகச் செய்வார்கள், அபூர்வமாகச் சில சிறிய உதவிகள் மட்டுமே இவர்களுக்குத் தேவைப்படும்.

முன்பு இந்த நிலைகள் ஒவ்வொன்றும் (ஆட்டிஸ்டிக் குறைபாடு, வேறு விதத்தில் குறிப்பிடப்படாத, பரவிய வளர்ச்சிக் குறைபாடு (PDD-NOS) மற்றும் ஆஸ்பெர்கர் குறைபாடு) தனித்தனியே குறிப்பிடப்பட்டுவந்தன, ஆனால் இப்போது இந்த நிலைகள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து ஆட்டிசம் வகைக் குறைபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.

உண்மைகள்

 • ஆட்டிசம் என்பது உலகில் அதிகம் காணப்படும் வளர்ச்சிக் குறைபாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 • ஆட்டிசத்துக்கான செயல்பாடு” என்ற குழுவினர் நடத்திய ஒரு நோய் விவர ஆய்வின்படி, தற்போது 1.7 மில்லியன் பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆட்டிசத்தின் அடையாங்கள்

 • ஒரு குழந்தை பிறந்தது முதல் அதற்கு மூன்று வயதாகும்வரை ஆட்டிசத்தின் அடையாளங்களைக் காணலாம்.
 • இந்த அடையாளங்கள் மிதமாக இருக்கலாம், நடுத்தர அளவில் இருக்கலாம், தீவிரமாகவும் இருக்கலாம் அடையாளங்கள் குழந்தைக்குக் குழந்தை மாறிவிடலாம், குழந்தை வளர வளர இந்த அடையாளங்களும் மாறக்கூடும். உதாரணமாக, தீவிர அறிவாற்றல் குறைபாடு மற்றும் இயக்கத் திறன்களில் பிரச்னை கொண்ட ஒரு குழந்தைக்கு வலிப்பு நோய் வரலாம்.
 • அதேசமயம் இந்த நிலையை சுட்டிக்காட்டுவதற்குச் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் உள்ளன.
 • ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக் காலகட்டத்தில் பின்வரும் பண்புகளை அதனிடம் காணலாம்.

ஆட்டிசத்துடன் இருக்கக்கூடிய பிரச்னைகள்

 • மனநிலை பாதிப்பு, அதீத செயல்பாடு, இயக்கவியல் பிரச்னைகள், வலிப்பு, கற்றல் குறைபாடுகள், காதுகேட்டல் அல்லது கண்பார்வைக் குறைபாடுகள் போன்றவையும் ஆட்டிசத்துடன் இருக்கக்கூடும்.
 • ஆட்டிசம் பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குத் தகவல் தொடர்பில் பின்வரும் பிரச்னைகள் இருக்கக்கூடும்
 • இவர்களுக்கு நிறைய சொற்கள் தெரிந்திருக்கும், ஆனால் அர்த்தமுள்ள வாக்கியங்களை அமைக்க இயலாமல் மிகவும் சிரமப்படுவார்கள்
 • இவர்கள் தாங்கள் கேட்கும் சொற்களை அல்லது வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லலாம்
 • சில செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யலாம்
 • பேசும்போது சைகை மொழியைப் பயன்படுத்தலாம்
 • தகவல் தொடர்புக்கான மொழியைக் கற்றுக்கொள்ளலாம் அல்லது கற்றுக்கொள்ளாமல் இருக்கலாம்
 • தங்களுடைய தேவைகள், உணர்வுகள், உணர்ச்சிகளை இவர்களால் விளக்க இயலாமல் போகலாம்
 • உரையாடல்களை, குரல்களை, முகக்குறிப்புகளை, உடல் மொழிகளை இவர்களால் புரிந்துகொள்ள இயலாமல் போகலாம்
 • யாராவது பேசும்போது அவர்களுடைய கண்ணைப் பார்க்க இயலாமல் சிரமப்படலாம்

ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகள் சமூகத்தில் பிறருடன் பழகும்போது பின்வரும் பிரச்னைகளைச் சந்திக்கலாம் :

 • அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும்போது சிரிக்காமல் இருக்கலாம், ஒரு பெரியவர் தன்னருகே வரும்போது, தன்னைத் தூக்கிக்கொள்ளுமாறு எதிர்பார்த்துக் கையை விரித்துக்காட்டாமல் இருக்கலாம்
 • சமூக திறன்களைக் கற்றுக்கொள்ளுதல் அல்லது பிறருடன் உரையாடுதலில் இவர்களுக்குப் பிரச்னைகள் இருக்கலாம்
 • பிறரை நண்பர்களாக்கிக்கொள்ளாமலிருக்கலாம், யாருடனும் சேராமல் தனியே விளையாடலாம்
 • கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசாமல் இருக்கலாம்
 • தன்னை சுற்றியுள்ள பிறருடைய உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள இயலாமல் இருக்கலாம், அதனால் அவர்கள் முறைப்படி பதில் சொல்லாமல் இருக்கலாம்
 • வழக்கமான ஒரு விஷயம் மாறும்போது அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள சிரமப்படலாம்
 • பொருள்களின் வாசனை, சுவை, தோற்றம், உணர்வு அல்லது ஒலிக்கு ஏற்ப எதிர்வினை செய்யாமல், வேறுவிதமாக நடந்துகொள்ளலாம்

ஆட்டிசம் எதனால் ஏற்படுகிறது

 • ஆட்டிசத்துக்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது, பல மரபு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இது நிகழலாம் என தெரியவந்துள்ளது.
 • சுற்றுச்சூழல் காரணிகளுக்கு உதாரணங்களாக, மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய பல்வேறு நிலைகளைக் குறிப்பிடலாம்.
 • இவை பிறப்புக்கு முன்னால் நிகழலாம், பிறப்பின்போது நிகழலாம், அல்லது பிறந்தபிறகு நிகழலாம்.
 • குழந்தைப் பருவத்தில் மைய நரம்பு மண்டலத்துக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு சேதமும் ஆட்டிசத்தை ஏற்படுத்தலாம் என்றும் கண்டறியப்படுள்ளது.

ஆட்டிசத்துக்கான சிகிச்சை வகைகள்

வளர்ச்சி சார்ந்த, தனித்துவமான வித்தியாசங்கள், உறவுகள் அடிப்படையிலான அணுகுமுறை (DIR, இதனை "ஃப்ளோர்டைம்" என்றும் அழைப்பார்கள்): இது உணர்வு மற்றும் உறவு வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது (உணர்வுகள், தன்னைக் கவனித்துக்கொள்ளுவோர கையாள்கிறது என்பதிலும் இந்தச் சிகிச்சை கவனம் செலுத்துகிறது.

செயல் சார்ந்த சிகிச்சை

ஒரு குழந்தை தன்னால் இயன்றவரை சுதந்தரமாக இயங்குவதற்குத் தேவையான திறன்களைக் கற்றுத்தரும் சிகிச்சை இது. உதாரணமாக, தானே உடுத்திக்கொள்ளுதல், சாப்பிடுதல், குளித்தல் மற்றும் பிறருடன் பேசுதல் போன்ற திறன்கள் இதில் சொல்லித்தரப்படும்.

புலன்ஒருங்கிணைப்பு சிகிச்சை

காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்கள் போன்ற புலன் சார்ந்த விவரங்களைக் குழந்தைகள் முறையாகக் கையாள்வதற்கு இந்தச் சிகிச்சை உதவுகிறது. சில குழந்தைகள் ஒரு சில ஒலிகளைக் கேட்டு பயப்படும், அல்லது, பிறர் தன்னைத் தொடுவதற்கு அனுமதிக்காது, அதுபோன்ற குழந்தைகளுக்குப் புலன் ஒருங்கிணைப்புச் சிகிச்சை உதவலாம்.

பேச்சுச் சிகிச்சை

ஒரு குழந்தை தன்னுடைய தகவல் தொடர்பை மேம்படுத்திக்கொள்வதற்குப் பேச்சுச் சிகிச்சைகள் உதவுகின்றன. இந்தச் சிகிச்சைகளில், சைகை காட்டுதல், பட அட்டைகளைப் பயன்படுத்துதல்போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி ஒரு குழந்தை தன்னுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் பிறருக்குத் தெரிவிப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இசைச் சிகிச்சை

இந்த வகைச் சிகிச்சையில் பாடுதல், இசையமைத்தல் மற்றும் மேடையில் இசைத்தல் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

படங்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு (PECS)

தகவல் தொடர்பைக் கற்றுத்தருவதற்குப் படச் சின்னங்களோ அட்டைகளோ பயன்படுத்தப்படுகின்றன.

ஆரம்பத் தலையீடுகள்

ஆட்டிசம் பற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளில், எவ்வளவு சீக்கிரத்தில் குழந்தைக்குச் சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவு பலன் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது இதற்கு ஆரம்பத் தலையீடு பயன்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டவுடனேயே இந்தத் திட்டத்தைத் தொடங்கிவிடலாம். ஆறு மாதக் குழந்தைக்குக்கூட இதனைப் பயன்படுத்தலாம். இந்தத் தலையீட்டுச் சிகிச்சை, ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: சமூகத் திறன்கள், மொழி மற்றும் தகவல் தொடர்பு, போலச்செய்தல், விளையாடும் திறன்கள், தினசரி வாழ்வியல் மற்றும் இயக்கவியல் திறன்கள். இந்தத் திட்டத்தில் பெற்றோர் தொடர்ந்து பங்குபெறுகிறார்கள், தீர்மானம் எடுத்தல், சிகிச்சையை வழங்குதல் என அனைத்திலும் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஆகவே ஒரு குழந்தைக்கு ஆட்டிசமோ வேறு வளர்ச்சி சார்ந்த பிரச்னையோ இருக்கலாம் என்று அதன் பெற்றோர் நினைத்தால், அவர்கள் எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவரிடம் பேசுவது முக்கியம்.

பெற்றோருக்கான பயிற்சி

தங்களுடைய குழந்தைக்கு ஆட்டிசம் வந்திருக்கிறது என்று தெரிந்தவுடன், பல பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகிறார்கள், இவர்களுக்கு ஆதரவும் ஆலோசனையும் தேவை. பழக்க வழக்கங்களை மாற்றும் கொள்கைகளையும் திறன்களையும் பற்றிப் பெற்றோருக்குப் பயிற்சி அளித்தால், அவர்கள் தங்களுடைய குழந்தைகளின் சிகிச்சையில் உதவுவார்கள், அவர்களுடன் இணைந்து பணிபுரிவார்கள். அதைவிட முக்கியமாக, குழந்தைக்குத் தாங்கள் கண்டிப்பாக உதவுவோம் என்று பெற்றோர் காட்டும் உறுதி, அந்தக் குழந்தையின் கல்வி, அறிவாற்றல் திறன்கள் மற்றும் சமூக நடத்தைகளைக் கணிசமாக முன்னேற்றக்கூடும்.

ஆதாரம் : விவேகானந்தா உளவியர் மையம்

Filed under:
3.18918918919
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top