অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பிரசவமும் குழந்தையின் வளர்ச்சியும்

பிரசவமும் குழந்தையின் வளர்ச்சியும்

பிரசவம்

 • பிரசவம் என்பது கர்ப்பமுற்ற பெண் தன் வயிற்றுக்குள்ளேயே பத்துமாதங்கள் பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை இப்பூவுலகில் பிரசவித்தல் எனப் பொருள்படும். சில சந்தற்பங்களில் ஒரு தாய் ஒன்றிற்கு பேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதும் உண்டு.
 • ஒரு தாய் தன் யோனிவழியாக குழந்தையை பிரசவித்தல் என்பது மிகவும் வேதனைகளும் சோதனைகளும் நிறைந்த நிகழ்வாகும். "அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்" என்பது பழமொழி. தற்பொழுது வைத்தியசாலைகளில் நவீன வசதிகள் இருப்பதனால் பிரசவத்தின் போது ஏற்படுகின்ற ஆபத்துக்கள் குறைந்துள்ளன.
 • சாதாரணமாக யோனிவழிப் பிரசவம் (normal Vaginal Delivery) என்பது கருப்பைச் சுருக்கத்துடன் (Uterine Contraction) கருப்பைக் கழுத்து திறக்கப்பட்டு (Cervical dilatation) குழந்தை வெளியே வரும் சாதாரண முறையாகும். பிரசவ குத்து வந்தவுடன் பிரசவ அறைக்குள் கற்பிணியை கூட்டிச் சென்று வைத்தியர், தாதிகளின் உதவியுடன் பிள்ளையை பிறக்க வைப்பது என்பதாகும்.
 • சில கர்ப்பவதிகளுக்கு பிரசவ குத்து ஆரம்பமாகியும் பிள்ளை பிறப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. சிலருக்கு பிரசவ அறிகுறிகள் தென்பட்ட போதிலும் பிரசவ குத்து குறைவாக இருக்கும். அப்போது Oxytocin எனப்படுகின்ற ஓமோன் வகை மருந்தை ஊசி மூலம் ஏற்றி பிரசவ குத்தை உண்டு பண்ணி (Induced Labour) குழந்தையைப் பிறக்க செய்கிறார்கள்.
 • பிரசவ வலி எப்போது எடுக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதிகமாக வலி எடுத்தால் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளை குளிப்பாட்டுவர். இளஞ்சூடான நீரில் குளித்தால் ஆரம்பகால பிரசவ வேதனையை சற்று தணிக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள். தாங்க முடியாத வலி ஏற்படும்போது சில குறிப்பிட்ட வலி நிவாரணிகளை மருத்துவர் தருவார்.
 • பிள்ளைப்பேறு காலத்தில் ஏற்படும் வேதனையை நினைத்து கவலைப்படுவதால் வலி அதிகரிக்கும். எனவே, வலியைக் குறைக்க மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சுவாசிக்கும்போது மார்பகச்சுவர் விரிவடைந்து, உதரவி தானம் அதிகளவு கீழ் இறங்குவதுதான் முழுமையான சுவாசம். நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் குழந்தைப்பேற்றின்போது மிகச்சுலபமாக குழந்தை வெளித்தள்ளப்படும்.
 • சாதாரணமாக கருவுற்ற பெண்ணுக்கு 280 நாட்களின் முடிவில் குழந்தை பெறுவதற்கான குத்து ஏற்படலாம். இது இரு வாரங்கள் முன்னால் அல்லது பின்னால் நிகழ்வதும் சாதாரணமானது. கருவுற்ற பின் கருப்பை விரிவடையும் போது தாயானவள் ஒரு சிறு அசௌகரியத்தை உணரக் கூடும். மேலும் கருப்பை விரிய விரிய அங்கே காணப்படும் நரம்புகள் முறுக்கப்பட்டு அழுத்தப்படுவதால் வயிற்று வலி சற்று அதிகமாக நிகழக் கூடும்.
 • கர்ப்பகாலம் 35 வாரங்களை (245-நாட்கள்) அண்மிக்கும் போது (கர்ப்பகாலம், கடைசி முதல் மாதவிடாய்த் திகதியிலிருந்து கணிக்கப்படும்) விட்டு விட்டு ஏற்படும் “பிரக்ஸ்ரஸன் கிரிக்“ எனப்படும் குத்துவலி எழும்பும். இவ்வாறான நோக்கள் பல காணப்படும் போது எவ்வாறு உண்மையான பிரசவ வலியை உணர்வது என்று நீங்கள் கேட்கலாம். பிரசவ வலியின் போது கடுமையான கருப்பைச் சுருக்கத்துடன் வேதனை அதிகரித்துச் செல்வதுடன் இரு குத்து வலிகளுக்கிடையிலான நேர இடைவெளி (The Interval between the contraction) குறைந்து செல்லும்.
 • உதாரணமாக ஒவ்வொரு அரை மணிக்கு ஒரு தடவை வருகின்ற வலி பின்னர் இருபது நிமிடங்களுக்கு ஒரு தடவையாகவும் பதினைந்து தடவைகளுக்கு ஒரு முறையாகவும் ஏற்பட்டு பிரசவகுத்தாக மாறும் போது ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்குள்ளும் மூன்று தடவைகள் “குத்து” எழும்பல் நிகழும்.சாதாரணமாக பிரசவ வலி எழும்பும் போது பன்னீர் குடம் உடைந்து திரவம் வெளியேறும் போது தாயானவள் உடனடியாக பிரசவ விடுதிக்கு அல்லது பிரசவமனைக்கு அனுப்பப்பட வேண்டும்.
 • அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்வார். பிரசவம் ஆரம்ப நிலையிலிருக்கும் போது இனீமா கொடுப்பதன் மூலம் குடலிலிருந்து மலம் அகற்றப்படும் (இல்லாவிட்டால் குழந்தை பிறக்கும் போது தாயின் மலமும் வெளியேறி குழப்பத்தை ஏற்படுத்தி விடும்) இவ்வாறு சுத்தம் செய்த பின் பன்னீர் குடம் உடைக்கப்படும்.
 • இதன் போது வெளியேறும் அம்னியன் பாய்பொருளின் நிறம் அவதானிக்கப்படும். பெரும்பாலும் அம்னியன் பாய்பொருள் நிறமற்றதாக அல்லது மெல்லிய வைக்கோல் நிறமுடையதாக இருக்கும் (உண்மையில் அம்னியன் பாய்பொருள் என்பது மென்சவ்வுகளின் சுரப்புக்களையும் குழந்தை கழித்த சிறுநீரையும் கொண்ட திரவமாகும்).
 • பின்னர் பிரசவத்தை விரைவுபடுத்த சின்ரோசினொன் என்ற ஒக்சிரோசின் ஒமோன் ஊசி மூலம் ஏற்றப்படும். தொடர்ந்து குழந்தையின் இதயத் துடிப்பு அவதானிக்கப்படும். குழந்தையின் இதயத் துடிப்பானது “பனாட்” என்கின்ற உடலொலிபெருக்கி மூலமாகவோ அல்லது இயந்திரத்தின் மூலம் வரைபாகவோ (CTG) பெற்றுக் கொள்ள முடியும்.
 • ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கு ஒரு முறை மருத்துவர் கருப்பைக் கழுத்து விரிவை (Cervical dilatation) அளவிட்டுக் கொண்டிருப்பார். கருப்பைச் சுருக்கம் குழந்தையின் இதயத்துடிப்பு / தாயின் நாடித்துடிப்பு குருதியமுக்கம் என்பன தொடர்ந்து அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். பிரசவவலி உச்சக் கட்டத்தை அடையும் போது வலியைச் சற்றுக் குறைப்பதற்காக பெத்தடீன் போன்ற வலி நிவாரணிகள் தாய்க்கு ஏற்றப்படும்.
 • சாதாரணமாக பிரசவ காலமானது 12-18 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும். இக்காலப் பகுதியில் தாய் உணவு, நீராகாரம் எதுவும்மின்றி (Fasting) வைக்கப்படுவார். குழந்தையைப் பெறும் நோவுடன் இருக்கும் தாயை பட்டினி போடும் கல் நெஞ்சக்காரர்களா மருத்துவர்கள் என நீங்கள் நினைக்கலாம். அதற்கும் காரணம் உண்டு.
 • பிரசவத்தில் ஏதும் சிக்கல் நிகழ்ந்து அறுவைச் சிகிச்சை ஏதாவது செய்யவேண்டி ஏற்பட்டால் அதற்கான தயார் நிலையே இந்த Fasting பட்டினி நிலை. இதன்போது ஊசி வழியாகத் தாய்க்கு தேவையான நீராகாரம் சென்று கொண்டிருக்கும். குழந்தையின் இதயத்துடிப்பு குறையும் பட்சத்தில் (foetal distress) அல்லது குழந்தையின் அம்னியன்பாய் பொருளினுள் மலம் கழிக்கும் பட்சத்தில் அல்லது நீண்ட நேரமாகியும் குழந்தை பெறமுடியாத சந்தர்ப்பத்தில் (Prolong Labour) சிசேரியன் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
 • குழந்தை பிறப்பதற்கு அண்மித்த நிலையில் குழந்தையின் தலை வெளியே வர முயற்சிக்கும் இதன் போது வலி உச்ச நிலையை அடையும். குழந்தையின் தலை இலகுவாக வெளியே வருவதற்காகவும் தாயின் யோனியின் வழியில் கிழிவுகள் ஏற்படாதிருக்கவும் எபிசியோட்டமி (Episiotomy) என்ற சிறு வெட்டு ஒன்று வெட்டப்படும். தொடர்ந்து தலை வேகமாக வந்து மோதுவதைத் தடுக்க கையால் அணை கொடுக்கப்படும்.
 • தலை வெளியே வந்ததும் அந்த நேரம் குழந்தை பெறப்படும் நேரமாகக் குறிக்கப்படும். (உங்கள் சாதகம், கிரகநிலை, செவ்வாய் தோஷம் எனப்படும் இந்த வேளைகளில் சோதிடர்களால் கணிக்கப்படும்.) தலையை தொடர்ந்து தோள்களும் பின்னர் முழுக் குழந்தையும் வெளியே இழுத்தெடுக்கப்படும்.
 • குழந்தை பிறந்தவுடன் தொப்பிள் நாண் கட்டப்பட்டு சூல்வித்தகத்தில் இருந்து குழந்தை பிரிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். குழந்தை பிறந்தவுடன் வீரிட்டு அழ வேண்டும். இதுவே குழந்தையின் சுவாச தூண்டல். அவ்வாறு குழந்தை அழாவிட்டால் நாம் அதனை தூண்ட வேண்டி ஏற்படும். அப்பாடா குழந்தை பிறந்துவிட்டது என்று இருந்துவிட முடியாது. அதன் பிறகும் திக் திக் நிமிடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
 • சூல்வித்தகம் முழுமையாக வெளியேறும் வரை பிரசவம் முடிந்துவிட்டதாக கூற முடியாது. பொதுவாக குழந்தையை தொடர்ந்து சூல்வித்தகமும் வெளியேறிவிடும். ஆனாலும் சிலவேளைகளில் கருப்பையை விட்டு வெளியேற மாட்டேன் என்று நீண்டநேரம் அடம்பிடிக்கும், சில சந்தற்பங்களில் சூல்லித்தகத்தை கருப்பையின் உள்ளே கைவிட்டு மருத்துவர் வெளியே எடுப்பார். பின்னர் எபிசியோட்டமி தைக்கப்படும். இதன் பிறகும் திகில் நிமிடங்கள் முடிவதில்லை.
 • சிலவேளைகளில் கருப்பையிலிருந்து குருதி பெருகுவது நிற்காவிடில் மீண்டும் எல்லோரது நெஞ்சத்திலும் பயம் பற்றிக் கொள்ளும். எனவே குருதிப்பெருக்கை அவதானிப்பதற்காக பிரசவத்தின் பின்னர் ஏறத்தாழ 2 மணித்தியாலங்கள் தாய் கண்காணிப்பின் கீழ் பிரசவ அறையினுள்ளேயே வைத்திருக்கப்படுவார்.
 • இதன்போது குழந்தையை பாலுட்ட தாயிடம் குழந்தை வழங்கப்படும். இவ்வளவு காலமும் சுமந்த வேதனை பெற்றெடுத்த குழந்தையை முத்தமிடும் தாய்க்கு பஞ்சாக பறந்துவிடும். சாதாரணமாக குழந்தை பிறந்து 24 மணித்தியாலங்களின் பின்னர் (வேறு குழப்பங்கள் தாய்க்கோ குழந்தைக்கோ இல்லாதவிடத்து) தாய் சேய் இருவரும் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
 • குழ‌ந்தை‌க்கு பாலூ‌ட்டியது‌ம் செ‌ய்ய வே‌ண்டியது:
 • குழ‌ந்தைக‌ள் பா‌ல் குடி‌க்கு‌ம் போது அது தா‌யி‌ன் மா‌ர்‌பி‌ல் இரு‌ந்து தா‌ய்பாலை‌க் குடி‌த்தாலு‌ம் ச‌ரி, பா‌ல் பு‌ட்டி‌யி‌ல் குடி‌த்தாலு‌ம் ச‌ரி, பாலோடு சே‌ர்‌த்து கா‌ற்றையு‌ம் சே‌ர்‌‌த்து ‌‌‌விழுங்‌கி‌விடு‌ம்.
 • எனவே ஒவ்பவொரு முறையு‌ம் பா‌ல் கொடு‌த்த ‌பிறகு குழ‌ந்தையை தோ‌ளி‌ல் போ‌ட்டு முது‌கி‌ன் ‌மீது லேசாக‌த் த‌ட்டி‌வி‌ட்டா‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது. அப்சபோது அவ‌ர்களு‌க்கு ஏப்‌ப‌ம் போ‌ன்று கா‌ற்று வெ‌ளியே வரு‌ம்.
 • தோ‌ளி‌ல் போ‌ட்டு த‌சட்டுவதை‌ப் போ‌ன்றே, ‌சில‌ர் மடி‌யி‌ல் குழ‌ந்தையை ‌நி‌மி‌ர்‌த்‌தி உட்ுகார வை‌த்து‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். இத‌ன் மூலமாகவு‌ம் வ‌யி‌ற்று‌க்குள்க செ‌ன்ற கா‌ற்று எ‌‌ளிதாக வெ‌ளியே‌றி‌விடு‌ம்.
 • அத‌ன்‌ பிறகு குழ‌ந்தையை ‌கீழே படு‌க்க வை‌க்கலா‌ம். இதனா‌ல் பா‌ல் குடி‌த்தது‌ம் குழ‌ந்தை வா‌ந்‌தி எடு‌ப்பது போ‌ன்ற அசெளக‌ரிய‌ங்க‌ள் த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.
 • இந்ேத ‌விஷய‌த்தை எப் போது‌ம் தவறாம‌ல் செ‌ய்ய வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

பிரசவ நேரத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள்

 • மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் ஊட்ட வசதியாக முன்பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள், காலணிகள், குழந்தைக்குத் தேவையான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண்டுகள் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.
 • அதேபோல் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான உடைகள், சோப்புகள், நாப்பிகள், துப்புரவுத் துணிகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
 • உங்கள் மருத்துவர், மருத்துவமனை, கணவர், நண்பர், அவசரத்திற்கு கூப்பிட்டால் ஓடிவரும் உறவினர்கள் போன்றோரின் செல் நம்பர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நேரத்தில் அவர்களை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். பிரசவத்தின்போது மருத்துவமனைக்குச் செல்லும் வாகன ஏற்பாட்டையும் தயார் செய்து கொள்ளுங்கள்.

குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள்

 • குழந்தை வளர்ச்சி என்பது தொடர்ச்சியான மற்றும் சிரமமான செயலாகும். அவர்கள் குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட வயதுகளில் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சிப்படிநிலைகள் என்கிறோம். ஒரு குழந்தை வளருகின்ற வீதத்திலேயே மற்றொரு குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை என்று பெற்றோர்கள் உணர வேண்டும். பக்கத்து வீட்டு குழந்தையால் செய்ய முடிவதை எல்லாம் நம்முடைய குழந்தையால் செய்ய முடியவில்லை என்று புலம்புவதும் வருத்தப்படுவதும் தேவை அற்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டு அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும்.
 • அந்தந்த காலகட்டத்திற்குள் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை எனில், உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம். குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி/பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ, குழந்தைகளின் செயல்பாட்டிலும் பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் இருக்கலாம்.
 • சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையை விட சில செயல்பாடுகளில் குறைவான வீதத்தில் வளர்ச்சியும், அதேசமயம் வேறு சில செயல்களில் அதிவேகத்தில் நல்ல வளர்ச்சியும் பெற்று இருக்கும். குழந்தை நடப்பதற்குத் தயாராக இல்லாத தருணத்தில், குழந்தையை நடக்கச் சொல்லி வலுக்கட்டாயமாகப் பயிற்சி கொடுத்தல் எந்தவித பலனையும் தராது.

கண்காணிக்கப்பட வேண்டிய வளர்ச்சி நிலைகள்

பிறந்த நாள் முதல் 6 வாரங்கள்

 • தலையை ஒருபுறமாகத் திருப்பியவாறு மல்லார்ந்து படுத்துக்கொண்டு இருக்கும்.
 • திடீரென்று உருவாகும் சத்தம் கேட்டு குழந்தையின் உடல் விறுக்கென்று சிலிர்த்துக் கொள்ளுதல்.
 • கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருத்தல்.
 • குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாகப் பிடித்து வைத்து கொள்ளுதல்.

6 முதல் 12 வாரங்கள்

 • குழந்தை கழுத்தை நன்றாக நிற்க வைக்கப் பழகும்.
 • பொருள்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுப்பார்க்கும்.
 • 2 மாதங்கள் - புன்சிரிப்பு
 • 4 மாதங்கள் - கழுத்து நிற்பது
 • 8 மாதங்கள் - எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காருதல்
 • 12 மாதங்கள் - எழுந்து நிற்பது

3 மாதங்கள்

 • மல்லார்ந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகைச் சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவித சத்தங்கள் போன்றவற்றையும் வெளிப்படுத்தும்.
 • குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிப்படுத்தும்.
 • குழந்தை தனது கை விரல்களை முன்பு போல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக்கொள்ளும்.
 • குழந்தையை நிற்க வைக்கும் பொழுது ஒரு சில வினாடிகளுக்கு மட்டும் கழுத்தை நேராக நிற்க வைக்கும். பிறகு பழைய நிலைமைக்கு கழுத்து வந்து விடும்.

6 மாதங்கள்

 • குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும்.
 • தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டால் சத்தம் வரும் பகுதியை நோக்கி தன்னுடைய தலையைத் திருப்பும்.
 • குழந்தை படுத்தவாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும்.
 • எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும்.
 • குழந்தை நிற்கும் பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
 • குழந்தை குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, தன்னுடைய உடல் எடையை நீட்டிய நிலையில் உள்ள கைகளைக் கொண்டு தாங்கிக்கொள்ளும்.

9 மாதங்கள்

 • கைகளை ஊன்றியோ, எவ்வித பிடிப்போ /உதவியோ இல்லாமலும் உட்காரும்
 • குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும்.

12 மாதங்கள்

 • குழந்தை எழுந்து நிற்கும்
 • 'மாமா' போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
 • வீட்டில் உள்ள பொருட்களையும் சுவரையும் பிடித்துக்கொண்டு நடக்கும்.

18 மாதங்கள்

 • யாருடைய உதவியும் இல்லாமல் டம்ளரைப் பிடித்துக்கொண்டு குடிக்கும். பால் புட்டிகள் ஏதும் இனிமேல் தேவைப்படாது.
 • கீழே விழாமலும் தடுமாறாமலும் வீட்டில் நடை பழகும்.
 • ஓரிரு வார்த்தைகளைப் பேசப்பழகிவிடும்.
 • குழந்தை தானாகவே சாப்பிட ஆரம்பித்துவிடும்.

2 வருடங்கள்

 • கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும்.
 • கீழே விழாமல் ஓடிச் செல்லும்.
 • புத்தகத்தில் உள்ள படங்களைப் பார்க்க ஆர்வப்படும்.
 • தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும்.
 • பிறர் சொல்லுவதைத் திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
 • உடலில் உள்ள சில உறுப்புகளைக் காட்டி அதன் பெயரைக் கேட்டால் பெயர் சொல்லும்.

3 வருடங்கள்

 • தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
 • நீ பையனா? பெண் பிள்ளையா? போன்ற எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
 • பொருட்களை இங்கேயும் அங்கேயும் வைப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் உதவி செய்யும்.
 • குறைந்த பட்சம் ஒரு நிறத்தின் பெயரையாவது சொல்லும்.

4 வருடங்கள்

 • மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும்.
 • புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.

5 வருடங்கள்

 • துணிகளை உடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு சில பட்டன்களையாவது (பொத்தான்களை) போட்டுக்கொள்ளும்.
 • குறைந்த பட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும்
 • படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லும்.
 • குதித்தும் தாண்டியும் செல்லத் தொடங்கும்.

குமர்ப்பருவம்/காளைப்பருவம்

உலக சுகாதார நிறுவனம் விடலைப்பருவத்தினை, 10-19க்கும் இடைப்பட்ட வயது என்றும், இப்பருவத்ததில் உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறது. அவையாவன

 1. அதிவேக வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி.
 2. உடல், சமூக மற்றும் மனரீதியான முதிர்ச்சி ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்படுவதில்லை.
 3. பாலின சம்பந்தமான மற்றும் செய்கையில் முதிர்ச்சி.
 4. எதையும் ஆராய்ந்து பரிசோதித்தல்.
 5. வயது வந்த வாலிபர்/கன்னி என்ற மனநிலையை அடைத்தல், தான் ஒரு வாலிபர்/கன்னி என அடையாளம் கண்டடைதல்.

வளரும் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள்

பருவமடைதல் (பூப்படைதல்) - இது 10லிருந்து 16 வயதிற்குள் ஏற்படுகிறது. அதாவது குழந்தை பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் இந்நிலையை அடைகின்றனர். உடலில், நடத்தையில் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப்பருவத்திற்கு மாறும் போது ஏற்படும் மாற்றங்களாவன

 1. கைகள், கால்கள், புஜம், பாதங்கள், இடுப்பு மற்றும் மார்பு போன்றவை உருவில் பெரிதாக வளர்தல். உடலில் ஹார்மோன்கள் சுரத்தல். ஹார்மோன் என்பது ஒருவகை சிறப்பு இரசாயன தாதுப்பொருளாகும். இவை உடலில் எப்படி என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் உடல் எப்படி வளர வேண்டும் என்பதனை கட்டுப்படுத்துகின்றன.
 2. உடலின் அந்தரங்க உறுப்புகள் (பாலினப் பெருக்க உறுப்புகள் அவை பெரிய அளவில் உருமாறி திரவங்களை உற்பத்தி செய்கின்றன.
 3. தோல் பகுதி அதிக எண்ணையுடன் கூடியதாக மாறும்.
 4. கை, கால்கள் மற்றும் அக்குள் பகுதிகளில் உரோமங்கள் தோன்றும்

கர்ப்பிணிப் பெண்கள்

பாதுகாப்பான தாய்மை அடைவதற்கு அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்

 • கர்ப்பக்கால மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பேறுகாலத்தில் உள்ள கஷ்டங்கள்
 • இந்த காலகட்டத்தில் தேவையான உணவுகள்
 • பேறுகாலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகள்
 • பேறுகாலத்திற்கு தேவையான அவசர வசதிகள்
 • பேறு காலத்திற்கு பின் தேவையான வசதிகள்

பிரசவத்தின் போது தாய்க்கு ஏற்படும் மரணத்திற்கான சில காரணங்கள்

சமுக காரணங்கள்

 • சிறிய வயதிலேயே திருமணம்
 • அடிக்கடி குழந்தை பெறுதல்
 • ஆண்குழந்தை வேண்டுமென இருத்தல்
 • ரத்த சோகை
 • ஆபத்து நிறைந்த அறிகுறிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பது

மருத்துவ காரணம்

 • பிரசவத்தில ஏற்படும் தடைகள்
 • ரத்தபோக்கு அதிகமாகுதல்
 • டாச்சிமியா
 • தொற்றுநோய்கள் தாக்கம்
 • பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இல்லாமை
 • மருத்துவ குழுவின் கவனக்குறைவு
 • மருத்துவ வசதி குறைவுகள்
 • மருத்துவ உதவியில் தாமதம்

பிரசவத்திற்கு தேவையான வசதிகள்

கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை

 • கர்ப்பம் தரித்த நாள் முதல் பிரசவம் வரை பெண்கள் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும். மேலும் ஒரு சில மருந்துகள் இத்தகைய நேரங்களில் உடலுக்கு உகந்தது அல்ல என்பதால் நோய்வாய் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கர்ப்பமான உடனேயே சுகாதார மையத்திற்குச் சென்று பதிவு செய்தல் முக்கியம்.
 • கர்ப்ப நாட்களில் சுகாதார மையத்தில் "ஐந்து முறைப் பரிசோதனை" மிகவும் முக்கியம். எனவே, இப்பரிசோதனைகளுக்கு, கர்ப்பிணி பெண்கள் சுகாதார மையத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் கட்டாயம் செல்ல வேண்டும்.
 • அளவுக்கு அதிகமான ரத்தப் அழுத்தம், சிறுநீரில் உப்புச்சத்து காணப்படுதல், கைகால் மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை ஆபத்தான "டாக்ஸீமியா" வுக்கு அறிகுறிகள்.

சுகாதார பழக்கங்கள்

தினமும் இருமுறை சோப்பு போட்டு குளித்து சுத்தமாக இருப்பதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம். கடினதன்மை உடைய சோப்புகளை உபேயாகிக்க கூடாது. சரியான பொருத்தமான உள் ஆடைகளை அணிய வேண்டும்

பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள்

 • ரத்தம் கலந்த நீர்கசிவு ஏற்படுவது
 • அடிவயிற்றில் வலி ஏற்படுவது
 • தொடர்ந்து நீர் கசிவு ஏற்படுவது

ஆபத்திற்கான அறிகுறிகள்

 • அதிக அளவில் இரத்த போக்கு ஏற்படுவது
 • கடுமையான தலைவலி மற்றும் கண் இருட்டுதல்
 • மயக்கமான உணர்வு அல்லது வலிப்பு
 • 12 மணி நேரம் வலி தொடர்ந்து இருத்தல்
 • பிரசவம் ஆன அரை மணி நேரத்திற்கும் பிறகும் நஞ்சுக் கொடி (பிளசென்டா) வராமல் இருத்தல்
 • குறை பிரசவம் ஏற்படுதல் (10 மாதங்கள் ஆவதற்க்கு முன் குழந்தை பிறப்பது)
 • தொடர்ந்து ஏற்படும் வயிறுவலி

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள்

 • காய்ச்சல் அல்லது வயிறு வலி இருக்கும் போது
 • மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படும்போது
 • கருவின் அசைவு குறைந்து காணப்படும்போது
 • அதிக அளவில் வாந்தி ஏற்பட்டு எதுவும் சாப்பிட முடியாத சூழ்நிலையில்

இரத்தம் தேவைப்படும் போது தயார் நிலையில் இருப்பது

பிரசவ நேரத்தில் அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவது நிகழ்கிறது. இந்த சூழ்நிலையில் இரத்தத்தின் வகை தெரிந்து கொண்டு அதே வகை ரத்தத்தை ஏற்றிக் கொள்வது ஆபத்தை தவிர்க்க உதவும்.

ஆதாரம் : தமிழ் மருத்துவம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate