பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இளநீரின் மருத்துவ பண்புகள்

இளநீரின் மருத்துவ பண்புகள் பற்றிய குறிப்புகள்

  • கோடைகாலம் துவங்கியதுமே, அளவுக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர அஞ்சுகின்றனர். கோடை வெப்பத்தால் உடல் உஷ்ணமடைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
  • கோடைகால சூட்டை தணிக்க மக்கள் பல்வேறு குளிர்பானங்களை அதிகளவு உட்கொள்கின்றனர்.
  • இது போன்ற குளிர்பானங்கள் உடல் வெப்பத்தை சமப்படுத்துவதற்கு பதிலாக நோய்வாய்ப்படுத்துகிறது.
  • மேலும் ஏசி அறையில் இருந்தாலும் உடல் உஷ்ணமடையும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • இதனால் கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
  • இதுகுறித்து அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்கள் கூறுகையில், இளநீர் உடல்சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும்.
  • இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை உள்ளன. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் சரியான தேர்வாகும். இளநீரில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் குறைபாட்டை போக்கி வயிற்றுபோக்கை சரிசெய்ய உதவுகிறது.
  • இதில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.
  • உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தருகிறது. கோடைக்கு ஏற்ற சத்தான பானம். வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாகுவதை கட்டுப்படுத்துகிறது.
  • ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. இரத்தசோகை, உற்சாகமின்மைக்கு நிவாரணம் அளிக்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இருமல் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
  • ஜீரணக் கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் கைகண்ட மருந்தாகும்.
  • உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.
  • வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் இளநீரில் உள்ளன.
  • இளநீர் குடல்புழுக்களை அழிக்கின்றது.
  • காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானம்.
  • சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துகிறது.
  • ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்கின்றது.
  • சிறந்த சிறுநீர் பெருக்கி.
  • சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
  • சிறுநீரக கிருமி நீக்கியாக செயல்படுகின்றது.
  • இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு உதவுகின்றது.

ஆதாரம் - தினகரன் நாளிதழ்

3.24390243902
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top