பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பில் ஒரு தாய் பெற்ற அனுபவம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

என் பெயர் ஈஸ்வரி. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு எனும் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் அதிகம் படிக்கவில்லை. எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். என்னுடைய முக்கியமான வேலை என் குழந்தையை வளர்ப்பது தான. ஆனால் அதையே என்னால் சரியாக செய்யமுடியவில்லை. சில சமயங்களில் என்னால் என் குழந்தையின் மனநிலையை புரிந்துகொள்ளவே முடியவில்லை. இதற்காக பல்வேறு வலைதளங்களில் குழந்தை வளர்ப்பு பற்றி தேடி இருக்கிறேன்.

இதற்கிடையில் எங்கள் ஊரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் விகாஸ்பீடியா வலைதளத்தை பற்றி அறிந்தேன். அதில் குழந்தை வளர்ப்பு பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வந்தது.

விகாஸ்பீடியா வலைதளத்தில் குழந்தைகளின் மனநலம் பற்றி Dr. கங்கா, குழந்தைகள் நல மருத்துவர் பல தகவல்கள் எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள தகவல்கள். விகாஸ்பீடியாவில் கொடுக்கப்பட்டுள்ள குழந்தை வளர்ப்பு முறைகளை தவறாமல் பின்பற்றி வருகிறேன். இதைப்பற்றி என் ஊரில் செயல்பட்டு வரும் காமாட்சி பெண்கள் சுய உதவி குழுவில் உள்ள பெண்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

நன்றி

Back to top