பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வாசகர் அனுபவங்கள் / சமுதாய வானொலியில் விகாஸ்பீடியாவின் தகவல்கள்
பகிருங்கள்

சமுதாய வானொலியில் விகாஸ்பீடியாவின் தகவல்கள்

திரு. விவேகானந்தன் அவர்கள், சமுதாய வானொலியில் தன் நிகழ்ச்சிகளுக்கு தேவையான தகவல்களை விகாஸ்பீடியாவிலிருந்து எடுத்து பயன்படுத்தி வருவது பற்றிய தன் அனுபவத்தை இங்கு பகிர்ந்துள்ளார்

என் பெயர் விவேகானந்தன். நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிரை FM 90.4 எனும் சமுதாய வானொலியை நடத்தி வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு விகாஸ்பீடியா எனும் வலைதளத்தை விளம்பரம் செய்ய வேண்டி சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம் எங்களை அனுகினர். அப்போது விகாஸ்பீடியாவின் பயன்கள் பற்றியும் அதில் உள்ள தகவல்கள் பற்றியும் அறிந்தேன்.

தற்போது எங்கள் வானொலியின் "ஏரும் ஏற்றமும்" மற்றும் "நம்ம ஊரு நம்ம FM" எனும் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு தேவையான தகவல்களை விகாஸ்பீடியாவின் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் எனும் பகுதியிலிருந்து எடுத்து உபயோகப்படுத்துகிறோம்.

இதன் மூலம் விகாஸ்பீடியா தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள 40 கிராமங்களை அதாவது இரண்டரை லட்சம் மக்களை சென்றடைகிறது.

நன்றி

Back to top