பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் , அரசாங்க உதவிகள் போன்ற பல்வேறு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மை இசுலாமிய சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் பொருட்டும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், சென்னையில் "முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்" என்ற அமைப்பு 01.10.1892 - ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது. இதே போன்ற சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது. இச்சங்கங்கள் தொண்டு நிறுவனங்களாக (NGO) செயல்பட்டு முஸ்லிம் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன.

மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் எந்தச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படுகின்றது ?

இச்சங்கங்கள் தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

இந்தச் சங்கங்களின் நிர்வாகிகள் யார் ?

மாவட்ட ஆட்சியாளர்

பதவிவழி தலைவர்

திட்ட அலுவலர், மகளிர் திட்டம்

பதவி வழி உபதலைவர்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்

அமைப்பாளர்/பதவி வழி பொருளாளர்

(பி.ப) மற்றும் சிறுபான்மையினர்

நல அலுவலர்

தலைசிறந்த உள்ளுர் முஸ்லிம்களிலிருந்து ஒருவர் கௌரவ செயலாளராகவும், இரண்டு நபர்கள் கௌரவ இணைச் செயலாளர்களாகவும், மூன்று நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாகவும், மாவட்ட ஆட்சியாளர் அவர்களால் ஒரு ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்படுவர். அடுத்த ஆண்டில் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து நபர்களை மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு இச்சங்கத்தின் பொதுக்குழு தேர்வு செய்யும்.

இந்த மாவட்ட முஸ்லிம் உதவும் சங்கங்கள் எந்த அமைப்பின் மேற்பார்வையில் செயல்படுகின்றன ?

இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.

இச்சங்கங்களின் முக்கிய நோக்கங்கள் யாவை ?

அ) ஆதரவற்ற / ஏழை/ வயதான முஸ்லிம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் மற்றும் தேவையான பிற உதவிகள் வழங்குதல் மற்றும் விதவைப் பெண்களில் மறு திருமணத்திற்கு நிதியுதவி செய்தல்.
ஆ) ஆதரவற்ற / ஏழைப் பெண்களுக்கு வியாபாரம், தொழில், கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும் வியாபாரம் தொடங்க (அல்லது) தொழில் செய்ய நிதி உதவி அளித்தல்.
இ) மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் இவர்களுக்கு கிடைக்க உதவி செய்தல். ஈ) முஸ்லிம் மகளிர் மற்றும் குழந்தைகள் கல்வி பயில உதவித் தொகை வழங்குதல் மற்றும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பிற உதவிகள் செய்தல்.
உ) முஸ்லிம் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தி தேவையான பயிற்சிகள் அளித்தல் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பலதரப்பட்ட கடனுதவிகளைப் பெற்றுத் தந்து தொழில்/ வியாபாரம் துவங்;க உதவுதல்.

இந்த மாணவியர் இல்லங்களில் சேர்வதற்கான தகுதிகள் எவை ?

அ)இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவியராக இருத்தல் வேண்டும்.
ஆ)நான்காம் வகுப்பு முதல் முதுகலை வரையில் உள்ள படிப்பில் ஏதேனும் ஒரு படிப்பில் படிப்பவராக இருக்க வேண்டும்.
இ) பெற்றோர்/பாதுகாவலரின் வருட வருமானம் ரூ.1 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இச்சங்கங்களுக்கு அரசு என்ன உதவிகள் செய்கின்றது ?

தமிழக அரசு இச்சங்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் துவங்கப்படுவதற்காக தலா ரூ.1 இலட்சம் வீதம் 30 மாவட்டங்களுக்கு விதைத் தொகையாக ரூ.30 இலட்சம் வழங்கியுள்ளது. மேலும் இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கு இணையான தொகையை (matching grant) ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகின்றது.

இச்சங்கத்தில் உறுப்பினராகச் சேருவதற்கு யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? உறுப்பினர் கட்டணம் எவ்வளவு ?

புரவலர் உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், சாதாரண உறுப்பினர் ஆகிய மூன்று வகை உறுப்பினர்களில் ஏதாவது ஒரு உறுப்பினராகச் சேர இச்சங்கத்தின் செயலாளர் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்; புரவலர் உறுப்பினருக்கு ஒரே ஒருமுறை ரூ.5000/- உறுப்பினர் கட்டணம் செலுத்தவேண்டும். ஆயுள் உறுப்பினராகவும் ஒரே ஒருமுறை ரூ.1,000/- செலுத்தினால் போதுமானது. சாதாரண உறுப்பினராகச் சேர ஆண்டுதோறும் ரூ.500/- உறுப்பினர் சந்தா செலுத்தவேண்டும் இதனைத் தவிர சாதாரண உறுப்பினர்கள் சேர்க்கைக் கட்டணம் ரூ.100/-ம் செலுத்தவேண்டும். தனிநபர்கள் மட்டுமல்லாது நிறுவனங்களும் உறுப்பினராகச் சேரலாம்.

இச்சங்கங்கள் அதன் நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுகின்றன ?

இச்சங்கங்கள் உறுப்பினர் கட்டணம்/சந்தா மற்றும் நன்கொடை வசூல் மூலமாக நிதியைத் திரட்டுகின்றன. தமிழக அரசு முன்னரே குறிப்பிட்டவாறு சங்கங்கள் திரட்டிய நிதிக்கு இணை மான்யமாக ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் ஆண்டுதோறும் வழங்குகின்றது.

எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் ?

சாதாரணமாக மாதம் ஒருமுறை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற வேண்டும். இக்கூட்டங்களுக்கு தலைவர் அவர் வராவிடின் உப-தலைவர்; உப-தலைவர் வராவிடின் பொருளாளர் தலைமை தாங்குவர். இவர்கள் மூவரும் வராவிடின் செயலாளர் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். அவசரக் கூட்டங்களை கௌரவ செயலாளர் தேவையான போது கூட்டலாம்.

இச்சங்கங்களிடம் உதவி பெறுவதற்கான தகுதிகள் என்ன ?

அ) முஸ்லிம் மகளிர் அல்லது பெண் குழந்தையாக இருத்தல் வேண்டும மற்றும்
ஆ) ஆதரவற்றவராக/ ஏழையாக/ முதியவராக/ விதவையாக இருத்தல் வேண்டும்.

இச்சங்கங்களிடம் உதவி பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

உதவி பெற தகுதியுள்ளவர்கள் அவர்களது உதவிக் கோரிக்கையை எழுதி இச்சங்கத்தின் கௌரவச் செயலாளர் (அல்லது) இணைச் செயலாளரிடம் விண்ணப்பிக்கவேண்டும்.

2.9649122807
ஆலம் Dec 07, 2018 01:39 PM

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இச்சங்கம் அமைக்க வேண்டும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top