பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

தூய்மையான இந்தியாவை உருவாக்குதல்

இக்கட்டுரை இரண்டாம் இடத்தைப் பெற்றது.

முன்னுரை

எத்தனையோ வளம் நிறைந்த இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அமைப்பில் பல தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது.

இம்முன்னேற்றமானது நிலையாகவும் தூய்மையாகவும் தொடர்ச்சியாகவும் அமையவேண்டும் என்பதற்காகத் தான் ஐந்தாண்டு திட்டங்கள் பலவற்றை அரசுகள் தீட்டுகின்றது. செயல்படுத்துகின்றது. அவற்றில் ஒன்றுதான் “தூய்மை இந்தியா திட்டம்”.

தூய்மை இல்லாமை

மக்களில் பலர் வசதியாக இருந்தாலும் தூய்மையாக இல்லாததால் தொற்று நோய்களுக்கு ஆட்படுகின்றனர். அதனால் பொது இடங்களில் புகைப்பிடித்தல், குப்பைகளை கண்ட இடங்களில் போடுதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல், கழிப்பறை செல்லுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதால் நம்மைச் சுற்றியுள்ள பகுதி அசுத்தமாக அமைந்து அதனால் நோய்கிருமிகள் உருவாகி மக்களைப் பாதிக்கின்றன.

நோக்கம்

பாரதப் பிரதமர் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உண்மையான திட்டமான “தூய்மை இந்தியா” என்பதை முதன்மை நோக்கமாக கொண்டு “தூய்மை பாரதம்” என்ற பொது இடங்களை தூய்மை செய்தல் என்ற முறையில் செயல் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவலங்களிலும், தன்னார்வ தொண்டு நிறுனங்களிலும், வீடுகளிலும், காடுகளிலும், தெருக்களிலும், பொது இடங்களிலும் அனைத்து மக்களும் தானே இத்திட்டத்தை செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

அதன் விரிவாக்கமாக கிராமப்புற வீடுகளில் கழிவறை, கிராமத்திற்கான பொதுகழிவறை, நகர்ப்புறங்களில் கழிப்பறைகள்,  பள்ளி கல்லூரிகளில் கழிப்பறைகள், பெண்களுக்கான தூய்மை பிராச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும்.

செய்யவேண்டிய கடமைகள்

 • நாம் வசிக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளில் சுத்தமாக வாழ வழிவகை செய்தல்.
 • விலங்கினங்களை  துன்புறுத்தாமலும் அதை இறைச்சிக்காக பயன்படுத்தாமலும் இருக்க நாம் அனைவரும் முன் வரவேண்டும்.
 • காடுகளில் மரத்தையும் விலங்கினங்களையும் அழிக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
 • வீடுகளில் குப்பைகளை தரம்பிரித்து மறுசுழற்சி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
 • பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும்.
 • மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை பெருக்க வீட்டுக்கு ஒரு நீர்த்தொட்டி அமைக்க வேண்டும்.
 • வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். மாடித் தோட்டங்கள் அமைக்க வேண்டும்.
 • வீடுகளில் சமையலறைகளை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும்.
 • அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ கற்றுக்கொள்ளவும். படிப்பறிவு இல்லாத மக்களுக்கு படித்தவர்கள் கல்வியறிவு புகட்டி அவர்களை முன்னேற்ற அனைவரும் பாடுபடவேண்டும்.
 • அரசு பொதுச் சொத்துகளை சேதம் விளைவிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
 • லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
 • அனைவரும் அவரவர் பணிகளை கன்னியமாக செய்து முடிக்க வேண்டும்.
 • வசதிபடைத்தோர்கள் வசதியில்லாதவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும்.

முடிவுரை

இவ்வாறு ஒரு நல்ல செயலைத் தொடங்க எப்போதும் தயாராக இருக்கும் நம் இளைஞர்களின் துணையோடு ஒரு மாபெரும் தேசியத் தூய்மைத் திட்டத்தை நாமும் மேற்கொண்டு தூய்மையான இந்தியாவை உருவாக்கிக் காப்போம்! வாழ்க பாரதம் ! வளர்க தூய்மை இந்தியா!


சுகாதாரம்

ஆதாரம் : மு. மாரியப்பன் (தகவல் பகிர்வாளர்)

3.27604166667
M. Shashmitha May 11, 2020 07:42 AM

It was very nice

Manokaran Mar 14, 2020 06:53 PM

Very very good

மதன்ராஜ் Feb 28, 2020 08:36 PM

சூப்பர்

மதன்ராஜ் Feb 28, 2020 07:04 AM

அற்புதம்

Paramasivam Feb 17, 2020 07:34 PM

Super

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top