பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தை திருமணம்

இந்தியாவில் நடக்கும் குழந்தை திருமணம் பற்றிய தகவல்களையும் மற்றும் அதை தடுக்க அரசாங்கம் மற்றும் பிற நிறுவனங்கள் கையாளும் நடவடிக்கைகளையும் இங்கு விளக்கியுள்ளனர்.

அடிப்படை உண்மை

இந்தியாவில் ‘குழந்தைத் திருமணம்’ என்பது சில சமூகங்களில் நடைபெறும் நிகழ்வாகும். பெரும்பாலும் இது 15 வயதுக்கு உட்பட்டச் சிறுமியை, ஒரு வளர்ந்த அல்லது முதிர்ந்த ஆண் ஒருவனுக்குத் திருமணம் செய்வதைக் குறிக்கும். குழந்தைத் திருமணம் என்பதில் இன்னொரு நிகழ்வும் அடங்கும். அதாவது இரு சிறுவர்களின் பெற்றோர் (ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன்) வருங்காலத்தில், அச்சிறுவனுக்கும் சிறுமிக்கும் நடக்க இருக்கும் திருமணத்தைக் குறித்து உடன்படிக்கை செய்துக்கொள்வது.

இந்த வகைத் திருமணத்தில் அச்சிறுவனும் சிறுமியும் திருமண வயது வந்துத் திருமணம் நடக்கும் வரை ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள மாட்டார்கள்.சட்டப்படி, ஆண்களின் திருமண வயது 23 பெண்களின் திருமண வயது 21 ஆகும். சிறுவயதில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு உட்படுத்தப்பட்ட ஆணோ அல்லது பெண்ணோ அத்திருமணத்தை ரத்து செய்யலாம் அல்லது செல்லாதது என்றும் கூறலாம்.

குழந்தைத் திருமணம் குறித்த உண்மைகளும் கருத்துக் கணிப்புகளும்

பல்வேறு மாநிலங்களில், 18 வயது நிரம்புவதற்கு முன் திருமணமாகும் பெண்களின் சதவீதம் அச்சமூட்டும் வகையில் எச்சரிக்கை தருகிறது.

 • மத்தியப்பிரதேசம் - 73%
 • ராஜஸ்தான் - 68%
 • உத்திரப்பிரதேசம் - 64%
 • ஆந்திரப் பிரதேசம் - 71%
 • பீகார் - 67%

யூனிசெப் (UNICEF) நிறுவனம் வழங்கியுள்ள “உலகிலுள்ள சிறுவர்களின் நிலை 2009” என்ற அறிக்கையின்படி, 20 முதல் 24 வயதுடைய இந்தியப் பெண்களில் 18 வயதிற்கு முன்பே திருமணமானவர்கள் 47 சதவீதம் பேர் என்பதும் கிராமப்புறங்களில் 56 சதவீதம் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பே திருமணமாகி விடுகிறது என்ற தகவலும், மேலும் உலகெங்கும் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது என்றும் அறிய முடிகிறது.

குழந்தைத் திருமணத்தால் விளையும் விளைவுகள்

 • சிறுவயதில் திருமணமாகும் பெண்களின் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். உரிய காலத்திற்கு முன்பே ஏற்படும் உடலுறவு, குழந்தைப் பேறு (எச்.ஐ.வி மற்றும் கர்ப்பப்பை புண் உட்பட).
 • சமுதாயத்தில் உரிய அந்தஸ்து, அதிகாரம், அறிவு முதிர்ச்சி போன்றன இல்லாமல் சிறுவயதிலேயே திருமண பந்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும், வீட்டில் வன்முறைக்கு உள்ளாகின்றனர். மேலும் பாலியல் துன்புறுத்தலாலும், சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்பட்டும் வருந்துகின்றனர்.
 • சிறு வயது திருமணத்தால் சிறுமியர்களுக்கு கல்வியும் பொருத்தமான வேலைவாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் தொடர்ந்து வறுமையிலேயே வாடவேண்டிய சூழல் உருவாகிறது.
 • குழந்தைத் திருமணம் தொடர்ந்த, மாறாத, பாலினச் சமமின்மையையும், கூடவே நோய் மற்றும் வறுமையினையும் தருகிறது.
 • சிறுவயதிலேயே முழு உடல் வளர்ச்சி பெறாத நிலையில், பெண்ணுக்கு நடைபெறும் திருமணத்தினால், தாயும் சேயும் மகப்பேறின்போது இறக்கும் சதவிகிதம் மிக அதிகமாகவே உள்ளது.

இளம் வயது / குழந்தைத் திருமணத்திற்கான காரணங்கள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காரணிகள்

 • வறுமை
 • சிறுமியருக்குப் போதிய கல்வி அறிவு இல்லாமை
 • பெண் குழந்தைகளுக்குச் சமுதாயத்தில் உயர்நிலை தராமை; பெண் குழந்தைகளைப் பொருளாதார சுமையாக நினைத்தல்
 • சமுதாய பழக்க வழக்கங்களும், மரபுகளும்

அரசாங்கமும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டுள்ள முயற்சிகள்

 • குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்களை உருவாக்குதல்
 • பெண் கல்வியினை அதிகரிக்க உதவுதல்
 • தீங்கிழைக்கக் கூடிய கலாச்சார விதிகளை மாற்றுதல்
 • சமுதாய நிகழ்ச்சிகளை ஆதரித்தல்
 • வெளிநாட்டு உதவிகளை அதிகரித்தல்
 • பால்ய வயது மணப்பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கு உரிய வாய்ப்பளித்தல்
 • பால்ய வயது மணப்பெண்ணின் தனிப்பட்ட தேவைகள் குறித்து பேசுதல்
 • குழந்தைத் திருமணத்தைத் தடுக்க எந்த நிகழ்ச்சி உதவும் என்று மதிப்பீடு செய்தல்

அரசாங்கத்தின் முயற்சி

 • குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்
 • குழந்தைத் திருமணத்தைத் தடுக்க ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, இமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடக்கும் அனைத்துத் திருமணங்களும் பதிவு செய்யப்படவேண்டும். பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது என ஆணை பிறப்பித்தன.

குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம் 2005ன் படி இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினரால் வெளியிடப்பட்டது. 2010க்குள் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதாக குறிக்கோள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2.90196078431
செ.விந்தியா 8ஆம் வகுப்பு Aug 17, 2018 04:29 PM

பெண்கள் அடிமை இல்லை உணர்ச்சி யை தூண்டு ஒரு சக்தியாகும் அந்தச் சக்தியை தோற்கடித்து பாக்காதிர்


பெண்கள் என்பது சக்தி ஆகும்

Charchil Durai P Apr 11, 2016 05:58 PM

வரவேற்கப்பட வேண்டிய பகிர்வு. நன்றி. குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதாக கூறி இருவரும் திருமண ஏற்ப்பாடு செய்து மண்டபத்தில் சரியாக நல்ல நேரத்தில் தடுப்பது, என்பது உறுத்தலாக உள்ளது. பத்திரிக்கை அடிப்பதற்கே உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே. தற்போது ஹெட்சைவி டெஸ்ட் சான்று பெறுவதுபோல் இதனை செய்வதால் இரு குடும்பங்களின் நல்லுறவுக்கு வித்திடும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top