பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாவட்டத் தொழில் மையம்

மாவட்ட வாரியாக தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் மேம்படுத்தும் மாவட்டத் தொழில் மையம் (DISTRICT INDUSTRIES CENTER(DIC)) பற்றிய தகவல்

நோக்கம்

தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர்களை உருவாக்க மற்றும் வளர்க்க அரசு பல உதவிகளை செய்கிறது. தொழில்கள் முன்னேற்றுவதற்கான உதவிகளை வழங்குவதற்காக அரசு பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. இதில் மாவட்ட வாரியாக தொழில்களையும், தொழில் முனைவோர்களையும் மேம்படுத்த மாவட்டத் தொழில் மையம் என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத் தொழில் மையம் எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளது. மாவட்டத் தொழில் மையங்கள் அந்தந்த மாவட்டகளில் உள்ள தொழில்களை வளர்ப்பதற்கும், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறது.

சிறு மற்றும் குறு தொழில்சாலைகள் மூலம், வேலைவாய்ப்பினை அதிகரிப்பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கமாகும். தற்பொழுது, தொழில் சாலைகளை நவீனப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் அதிக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இம்மையம் பல்நோக்கு அடிப்படையில் தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருகிறது.

மாவட்ட தொழில் மையமானது, பொது மேலாளர் தலைமையின் கீழ், செயலாளர் மற்றும் தொழில்நுட்ப அலுவலரின் உதவியோடு இயங்கி வருகிறது. இம்மையத்தில் பொது மேலாளர் புதிய தொழில் முனைவோருக்கு தேவையான வசதிகளோடு ஆலோசனையும் வழங்கி வருகிறார் மட்டுமல்லாது தற்போது இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் தர மேம்பாட்டுக்கான உதவிகளையும் செய்து வருகிறார்.

மாவட்டத் தொழில் மையத்தின் பணிகள்

 • தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குகிறது.
 • நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை புனரமைக்க ஏற்பாடு செய்கிறது.
 • மத்திய, மாநில அரசுகளின் குறு,சிறு மற்றும் நடுத்தர கொள்கையின் படி தொழில் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
 • மத்திய, மாநில அரசுகளின் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் சம்மந்தமான திட்டங்களின் உதவிகளை தொழில் முனைவோர்களுக்கு பெற்றுத் தருகிறது.
 • மத்திய, மாநில அரசுகள் உருவாக்கும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வுச் செய்து அவர்களுக்கு தேவையான கடன் (Loan) வசதிகளை பெற்று தருகிறது.
 • குழுமத் தொழில் வளர்ச்சி திட்டத்தின் (CLUSTER DEVELOPMENT PROGRAMME (MSE-CDP)) அடிப்படையில் தொழில் நிறுவனங்களின் தேவைகளை கண்டறிந்து, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கிறது. ஒப்புதல் வழங்கப்பெற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.
 • மாவட்ட அளவில் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ள பல பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துகிறது.
 • தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் முனைவோர் பதிவறிக்கை (Entrepreneur Memorandum) பகுதி-1 ( EM PART-1 & EM PART-2) மற்றும் பகுதி-2 வழங்குகிறது.
 • குடிசை தொழில் மற்றும் கைவினை சம்மந்தப்பட்ட தொழில்கள் வளர்வதற்கு உதவுகிறது மற்றும் அதற்கான சான்றுகளை வழங்குகிறது.
 • தொழில் முனைவோர்களுக்கு குடிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்றவற்றிடம் சான்றிதழ்களை பெற உதவுகிறது.
 • மத்திய மற்றும் மாநில அரசின் சிறந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்கிறது.
 • புதிய தொழிற்கூட்டுறவு சங்கங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கிறது.
 • மின்சாரம் சம்மந்தப்பட்ட மானியங்களை வழங்குகிறது.
 • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாராக்கடன் பிரச்சனைகளை கண்டறிந்து குழு மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறது.
 • ஒருமுனை தீர்வுக்குழுவின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உரிமங்களை பெற்று தருகிறது.
 • பல்வேறு தொழில் சம்மந்தமான கண்காட்சி மற்றும் ஊக்குவிப்பு முகாம்களை நடத்துகிறது.

மத்திய, மாநில அரசின் பெரும்பாலான தொழில் திட்டங்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலமே செயல்படுத்தப்படுகின்றன. தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பல்வேறு உதவிகளை பெறலாம்.

செயல்பாடுகள்

 • பதிவு செய்யும் முகனம்
 • இணைய தளம் மூலம் பதிவு செய்தல்
 • தொழில் முனைவோருக்கு குறிப்பாணை வழங்குதல்
 • குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்
 • கைத்தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்.
 • தொழில் வளர்ச்சி முகமை
 • வேலை வாய்ப்பினை அதிகரித்தல்
 • தொழில் முனைவோரை ஊக்குவித்து வழிகாட்டுதல்
 • ஒற்றைச் சாளரை முறையில் தொழில் முனைவோருக்கு சேவை அளித்தல்
 • ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துதல்
 • தேர்ந்தாய்வு செய்தல்
 • திட்ட  செயல்பாடுகள்
 • உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல்
 • வங்கிகளில் கடன் பெறுவதற்கு தொழில் ஆதார அறிக்கை அளித்தல்
 • ஏற்றுமதி வழிகாட்டி மையம்
 • சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் வழிகாட்டி கழகம்
 • தொழில் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கமைத்து பதிவு செய்தல்
 • ஒழுங்கு முறை மையம்
 • தரக்கட்டுப்பாடு ஆணையை செயல்முறைப்படுத்துதல்

திட்டங்கள்

 • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்சாலைகள் கொள்கை, 2008.
 • ஒற்றைச் சாளரை தடை நீக்கும் முறை
 • பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம்
 • உதவித் தொகை அளித்தல் பின் முடிவு வட்டி சிறு தொழில் நிறுவனங்களுக்கு
 • தொழில்சாலை உள்ளமைப்பு மேம்படுத்தும் திட்டம்
 • சிறு மற்றும் குறு தொழிற்சாலை கூட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

திறமை வளர்ப்பு மையங்கள்


திறமை மேம்பாட்டு கழகம்

ஆதாரம் : மாவட்டத் தொழில் மையம்

2.98734177215
G.gopal Jun 02, 2020 09:13 AM

நல்ல தகவல் .எந்த ஒரு தொழில் தொடங்குவதற்கும் சான்றிதழ் தேவையா

வியாசர் ரா Apr 29, 2020 02:13 AM

நல்ல தகவல் பதிவு சான்றுக்கு கட்டணம் உண்டா

அபிப் ரஹ்மான் Nov 15, 2019 10:23 AM

சிறு தொழில் தொடங்க மின்சாரம் பெறுவது எப்படி

பிரபு Aug 02, 2019 08:46 AM

சிறு தொழில் ஆலோசனை பெற எங்கு அனுக வேண்டும்

க.பாலா Apr 02, 2018 09:09 AM

நான் செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள கூடுவாஞ்சேரியில் வசிக்கிறேன். குடிசைத்தொழில் அனுமதி பெற வேண்டும் என்றால் அதற்குரிய அலுவலகம் எங்குள்ளது?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top