மகளிர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய கீழ்கண்ட தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.5/-உதவித்தொகை ரூ.150/- பயிற்சி பெறும் ஒவ்வொரு நபருக்கும் அளிக்கப்படுகிறது.
தொழில் |
தகுதிகள் |
கம்ப்யூட்டர் தட்டச்சு தையல் & எம்ப்ராய்டரிங் மண்கூழ் மூலம் பொம்மை தயாரித்தல் பஞ்சு பொம்மை தயாரித்தல் கிளிஞ்சல் மூலம் கைவினைப் பொருள் தயாரித்தல் பனை ஓலை மூலம் கைவினைப் பொருள் தயாரித்தல் மீன் வலைப் பின்னல் பட்டு நெசவு பாய் பின்னல் |
வயது வரம்பு 18 வயது முதல் 35 வயது வரை பிறப்பு சான்றிதழ் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு +2 படித்து முடித்திருக்க வேண்டும் தட்டச்சு பயிற்சிக்கு 8-ம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க வேண்டும் இதர பயிற்சிகளுக்கு 10-வது படித்திருக்க வேண்டும்
|
இக்கழகத்தின் மூலம் மான்யத்துடன் கூடிய வங்கி கடன் உதவி, கழகத்தின் நேரடி கடன் உதவி மற்றும் ஊனமுற்றோர்கான கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
அ. வங்கி மூலமாக கடன் உதவி :
தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கி மூலமாக ரூ.10,000/- வீதம் கீழ்க்கண்ட தொழிலகளுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 33.3% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10/-
கடன் உதவி பெறும் தொழில்கள் |
தகுதிகள் |
1. பெட்டிக்கடை 2. மளிகைக்கடை 3. பால் பண்ணை 4. தள்ளுவண்டி வியாபாரம் 5. நடமாடும் உணவகம் 6. அடக்க விலை கடை 7. அகர்பத்தி தயாரித்தல் 8. வத்தல் மற்றும் ஊறுகாய் தயாரித்தல் 9. தையலகம் 10. கோழிப்பண்ணை 11. பாய் பின்னல் 12. இட்லி கடை 13. புடவை வியாபாரம் 14. விறகு கடை 15. காய்கறி கடை 16. ஆட்டோ ரிக் ஷா மற்றும் இத சிறிய தொழில்கள் |
வயது வரம்பு 20 முதல் 50 வரை பிறப்பு சான்றிதழ் (அ) வயதை உறுதி செய்யக்கூடிய பிற சான்றிதழ்கள் சாதி சான்றிதழ், கல்விச் சான்றிதழ் மற்றும் குடும்ப வருமானச் சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்குள் இருத்தல் வேண்டும்) குடும்ப அடையாள அட்டை வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஊனமுற்றோர்க்கான அடையாள அட்டை
|
ஆ. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள்:-
தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடமிருந்து மாநில முகமையாக இக்கழகம் நியமிக்கப்பட்டு ஊனமுற்றோர்களுக்காக கீழ்கண்ட தொழிலகளுக்காக கடனுதவி அளிக்கிறது.
கடன் உச்சவரம்பு
1.
2. 3. 4. |
சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்ய சிறு தொழிற்சாலை அமைக்க விவசாய தொழில்கள் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சுய தொழில் செய்ய |
கடன் தொகை ரூ.3.00 லட்சம் வரை
ரூ.5.00 இலட்சம் ரூ.5.00 இலட்சம் ரூ.3.00 இலட்சம் வரை |
பங்கு முறை
கடன் தொகை ரூ.50,000/- குறைவாக |
இல்லை |
ரூ.50,001/-க்கு மேல் ரூ.1,00,000/- வரை |
95% தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழக பங்கு + 5% மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டுக்கழகத்தின் பங்கு |
ரூ.1,00,001/-க்கு மேல் ரூ.5,00,000/- வரை |
90% தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழக பங்கு + 5% மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டுக்கழகத்தின் பங்கு + 5% விண்ணப்பதாரரின் பங்கு |
வட்டி விகிதம் |
ரூ.50,000/- வரை |
5% |
ரூ.50,001/- மேல் ரூ.5,00,000/- வரை |
6% |
வட்டி தள்ளுபடி சலுகை
ஊனமுற்றோர் மகளிர்க்கு 1% கழிவு உண்டு கடனை முழுமையாகவும் உரிய காலத்துடன் செலுத்துபவர்களுக்கு 0.5% கழிவு அளிக்கப்படுகிறது. முறையாக தவணையை செலுத்தாதவர்களுக்கு 3% அபராத வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும் 3 மாதம் கடன் தவணை உரிமை வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்:-
இ. சுயம்சிதா
மகளிர் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தினை மேம்பாடு அடையும் நோக்கோடு “சுயம்சிதா” என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கீழ்கண்ட முக்கிய குறிக்கோளுடன் பலவிதமான பயிற்சிகளும் மற்றும்
விழிப்புணர்ச்சி முகாம்களும் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செயல்முறையில் உள்ள திட்டங்களில் மகளிர் நேரடியாக பங்கு பெறவு, நிலையான வளர்ச்சி பெறவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
நோக்கம்:
அ) சமூக பொருளாதார அந்தஸ்திற்கு ஏற்ப, தேவைக்கேற்ப தன்னம்பிக்கையுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள் நிறுவ ஊக்குவித்தல். அவ்வாறு செய்த பின் இதர குழுக்களுடன் தொடர் அமைப்பு வைத்துக்கொள்ள வழிவகை செய்யப்படுதல்.
ஆ) மகளிரிடையே சுகாதாரம், மகளிர்ன் தகுதி நிலை, ஊட்டச்சது, கல்வி, துப்புரவு மற்றும் தூய்மை, சட்ட உரிமைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டின் செயல்கூறுகலை உருவாக்க தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும் வளர்த்தல்.
இ) கிராம மகளிரிடையே சேமிப்பு பழக்கம், பொருளாதார வாய்ப்பு வளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் முறையும்/திடப்படுத்திடவும், நிலையாக பராமரிக்கும் பழக்கத்தை உருவாக்குதல்.
ஈ) மகளிரிடையே குறுகிய கால கடனை பெற்று பயனடைய அக்கறை காட்டுதல்.
உ) வட்டார அளவு திட்டம் தீட்டுதலில் மகளிர் தம்மை பங்கேற்பினை.
ஊ) ஒரு நோக்கு செயல் திட்டத்தின் மூலம், மகளிருடைய அதிகார வரம்பினையும் ஒருங்கிணைந்த செயல் திட்டங்களிலும் தெரிந்து கொள்ள கூடகை முகமை செயல்படுத்தல்.
எ) மகளிர் அதிகாரத்தை மேம்படுத்தும் வகையில் மானியமற்ற நோக்கினை மனதின் ஆழப்பதிய வைத்தல். சுயம்சிதா திட்டத்தின் மூலம் புதுச்சேரி பகுதியில் 100 சுய உதவிக்குழுக்களும் காரைக்கால் பகுதியில் 100 சுய உதவிக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களுக்கு பெயர் பலகை மேசை மற்றும் கணக்கு பதிவேடுகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதியில் உழவர்கரை நகராட்சி, பாகூர் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூம் மேலும் காரைக்கால் பிராந்தியம் முழுவதும் சுயம்சிதா திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களை இக்கழகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈ. சுய உதவிக்குழு:
இக்கழகமானது பல்வேறுப்பட்ட கிராமங்களில் சுயநிதி உதவிக்குழுக்களை சமூக விழிப்புணர்வுடையவும் தலைமையேற்பு மற்றும் தன்னம்பிக்கை வருவதற்காகவும் குழுக்களை அமைத்துள்ளது. அதுமட்டுமல்லாது சுகாதாரம், சத்துணவு, சட்ட விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, கணக்கு பதிவேடுகளை நிர்வகித்தல், தலைமை வகிக்கும் திறன், மனித நேயம் இன்னும் பல பயிற்சிகள் சுய நிதி உதவிக்குழுக்களுக்கு அளித்து வருகின்றன. சுய நிதி உதவிக்குழுக்களுக்கு ஒரு வருட காலத்திற்கு பிறகு கடன் உதவி அளித்து வருகிறது.
சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை முடுக்கிவிடும் வகையில் வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வகையில் 677 பல்நோக்கு மகளிர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளரும், 677 பல்நோக்கு மகளிர் மேம்பாட்டு உதவியாளர்களையும் இக்கழகம் பணியமர்த்தி உள்ளது. இப்பணியாளர்கள் மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது. சுயம்சிதா திட்டத்தின் மூலமாக குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, ஒருமைப்பாட்டை வளர்த்து வருகிறது. இப்பணியாளர் மூலம், குழுவுக்கு வேண்டிய படிப்பினையும், இக்கழக திட்டத்தின் அம்சங்களையும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. சமுதாய மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் இப்பணியாளர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. மகளிர் மற்றும் ஊனமுற்றோர் மேம்பாட்டுக்கழகத்தின் மூலமும் வங்கியின் மூலமாகவும் கடன் உதவி பெற்ற பயனாளிகளை கடனை திரும்ப செலுத்துவதற்காக ஊக்குவிக்கப்படுகின்றன.
பணிபுரியும் மகளிருக்கு பாதுகாப்பான விடுதி மற்றும் அவர்கள் குழந்தைகள் பாதுகாப்புடன் தங்க குறைந்த கட்டணத்தில் கீழ்கண்ட வசதிகள் செய்து தருகிறது.
பகுதி |
விலாசம் |
தகுதி / கட்டணம் |
மகளிர் தங்கும் விடுதி |
||
புதுச்சேரி |
பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவியர் விடுதி, எண்.77, ஞானப்பிரகாசம் நகர் மெயின் ரோடு, சாரம், புதுச்சேரி-605 013,தொலைபேசி எண்.0413-2244460
பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவியர் விடுதி, எண்: 84,சுந்தரமேஸ்திரி தெரு, குயவர்பாளையம், புதுச்சேரி போன் : 0413-2245773
பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவியர் விடுதி, எண்: 1, முதல் குறுக்குத்தெரு, பெருமாள்ராஜா தோட்டம், ரெட்டியார்பாளையம், புதுச்சேரி போன் : 0413-2291256
|
பணிபுரியும் மகளிர் -- Rs. 600/- மாணவியர் -- Rs. 450/- விண்ணப்ப படிவம் -- Rs. 20/- பணிபுரியும் மகளிராக இருப்பின் வேலைக்கான ஆதாரம் மாணவியராக இருந்தால் படிப்பிற்கான ஆதாரம் முன்பணம் ரூ.1,000/- (திரும்ப பெறக்கூடிய தொகை)
|
|
மகளிர் தங்கும் விடுதி |
|
காரைக்கால்
|
பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவியர் விடுதி, எண். 1, டோமின் தெரு, பயணிகள் மாளிகை, காரைக்கால். போன் : 04368-221550 |
பணிபுரியும் மகளிர் -- Rs. 600/- மாணவியர் -- Rs. 450/- விண்ணப்ப படிவம் -- Rs. 20/- பணிபுரியும் மகளிராக இருப்பின் வேலைக்கான ஆதாரம் மாணவியராக இருந்தால் படிப்பிற்கான ஆதாரம் முன்பணம் ரூ.1,000/- (திரும்ப பெறக்கூடிய தொகை)
|
|
மகளிர் தங்கும் விடுதி |
|
மாகி
|
பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவியர் விடுதி, MMC.5/86, மஞ்சக்கல், மாகி, புதுச்சேரி மாநிலம்
|
பணிபுரியும் மகளிர் -- Rs. 600/- மாணவியர் -- Rs. 450/- விண்ணப்ப படிவம் -- Rs. 20/- பணிபுரியும் மகளிராக இருப்பின் வேலைக்கான ஆதாரம் மாணவியராக இருந்தால் படிப்பிற்கான ஆதாரம் முன்பணம் ரூ.1,000/- (திரும்ப பெறக்கூடிய தொகை) |
ஆதாரம் : புதுச்சேரி அரசு